சனி, 5 ஜனவரி, 2013

தாவர எண்ணைய்கள் கொழுப்பு


தாவர எண்ணைய்கள்  கொழுப்பு அற்றவையா ?
இது உண்மையா ?


முழு உண்மையில்லை

பாதி உண்மை

தாவர எண்ணைய்கள் எல்லாமே உடல் நலத்திற்கு நல்லது  என்று கூறிவிட முடியாது அதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.

நம் சாப்பிடும் உணவிலிருந்து பெறப்படும்  கொலஸ்டிரால் இரத்தத்தில் தனியாக இயங்குவதில்லை புரத்தத்துடன் இணைந்தே செயல்படுகிறது .
இது 2 வகை படும்.

1 குறை அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதம் (Low Density Lipoprotein) LDL.

2 அதிக அடர்த்துய் கொண்ட கொழுப்பு புரதம் (High Density Lipopprotein)HDL.

       இவற்றில்  LDL கல்லீரலில் இருந்து இதயத்திற்கு கொழுப்பை எடுத்து செல்வதால் இது இதய நோய்க்கு வழிவகுக்கிறது இது  தீய கொலஸ்டிரால்(Bad cholesterol) என்று சொல்லப்படுகிறது.

        மாறாக அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதம் HDL இதயத்தில் இருந்து கொழுப்பை விடுவித்து கல்லீரலுக்கு கொண்டு சென்று உடம்பில் தேவைக்கேற்ப  பயன் படுகிறது அதனால் இது நல்ல கொலாஸ்டிரால் .

        நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணையில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள்(Saturated Fatty Acids) குறைவாகவும்,

ஒரு நிலை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்(MonoUnsaturated Fatty Acids)( (MUFA)  மற்றும்

பல நிலை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்(Poly Unsaturated Fatty Acids)(PUFA) இவை 2-ம் அதிகமாகவும் இருந்தால் தான் உடல் ஆரோகியதிற்க்கு நல்லது.

தாவர எண்ணைய்களில் –
நல்லெண்ணெய் ,கடலைஎண்ணெய் சூரியகாந்தி ,சப்போலா போன்ற எண்ணெய்யில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் MUFA மற்றும் PUFA கொழுப்பு அமிலங்கள் மிகையாகவும் இருக்கின்றன ஆகையால் இந்த எண்ணெய்கள் உடல் நலத்திற்கு ஏற்றவை.

அதே நேரத்தில் தேங்காய் எண்ணெய் ,பாம் ஆயில் போன்றவற்றில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் மிகுதியாக உள்ளன ஆகவே இந்த தாவர எண்ணெய்கள் உடல்நலதிற்க்கு நல்லதில்லை .

எந்த எண்ணெய் எடுத்து கொண்டாலும் அதில் இதயத்திற்கு தீமை செய்யும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் குறிப்பிட்ட அளவு இருக்கத்தான் செய்யும் ஆகையால் எந்த எண்ணெய்யையும் அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு நல்லது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக