ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே


எதிர்நீச்சலில் இப்போ ரொம்ப முக்கியமான படியை பார்க்க போறோம்


"சிரித்து  வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே"

இந்த வரிகளை கேட்கதவர்களே இருக்கமாட்டாங்க இந்த 2 வரியில வாழ்கை தத்துவமே இருக்கு

Social  smile இது தாங்க இப்ப நமக்கு தேவை வெற்றிக்கு

நம்ம  கலைவாணர்  சொல்றாரு
"சிரிப்பு இதன் சிறப்பு -சீர்துக்கி பார்ப்பதே -நமது பொறுப்பாம்
மனித மனசு கறுப்பா வெளுப்பா  என்பதை கூட இந்த சிரிப்பு காட்டிவிடுமாம் கண்ணாடி போல"

மனிதர்களை சிரிக்க தெரிந்த மிருகம் என்று சொல்கிறது உயிரியல்

ஒரு அருமையான பொன்மொழி இருக்கு

“Smile:it will increase your facial value ‘ –
சிரியுங்கள் அது உங்கள் முகமதிப்பை அதிக படுத்துகிறது “

         ஒரு ஜென் துறவியிடம் ஒருவர் அறிவு தீட்சை வாங்க சென்றார் மலையடிவாரத்திலிருந்து மலை உச்சியை அடைந்த போது அவர் கால்வலியால் துவண்டார் துறவி அவரை பார்த்தவுடன் “என்னபா கால்வலி யா?என்று கேட்டதும் அவர் சிரித்து கொண்டே இல்லை என்றாராம் அதனை ரசித்து சிரித்தார் துறவி.

ஆமாங்க “இது களையை நீக்கி கவலையை போக்கி மூளைக்கு தரும் சுறுசுறுப்பு “

வந்தவர் “அய்யா எங்கு அறிவு தீட்சை கொடுங்கள் என்றபோது  துறவி “சிரிக்க தெரிந்தவனுக்கு என்ன தீட்சை வேண்டாம் போ எல்லாம் தானே வரும் என்றாராம்.

எவ்வளவு உண்மை ஆம் நாம் துன்பம் வரும் போதும் சிரிக்க தெரிந்தவர்களாக இருந்தால் துன்பம் நம்மை கண்டு ஒடும்  ஆம் இப்படி பார்க்கலாம் சிரிப்பு என்பது ஹீரோ துன்பம் என்பது வில்லன் ஹீரோவை  வில்லன் ஜெய்க்க  முடியுமா ?

ஆமாம் வெற்றி படியில் ஏறும் போது சில சமயம் சறுக்கும் வழுக்கும் அதனால் வலிக்கும் எதிர் நீச்சல் போடும் போது  மனதும் சோர்வடையும் அப்போ எல்லாம் துன்பத்தை பார்த்து நாம் சிரிக்க  வேண்டும் அது நம்மை ஜெய்க்க  விட கூடாது

"துன்பவாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு
இதை துணையாய் கொள்ளும் நம் மனது
துலங்கிடும் தனி செழிப்பு "
  
சிரித்த முகத்தோடு தொடங்கும் காரியம் எல்லாம் வெற்றி பெறும்

“சிரிப்பு தான் முகத்திற்கு அழகு இல்லை இல்லை சிரித்தால்  தான் முகமே அழகு “

எவ்வளவோ பெரியவங்க விஷயம்  தெரிஞ்ச்வங்க அறிவு கொழுந்துங்க கொள்கை பிடிப்போடு இருந்தவங்க இருப்பவங்க சாதிக்க முடியாததை சிரித்த முகமாய் இருப்பவர்கள் சாதாரணமாக இருபவர்கள் சுலபமாக சாதிச்சிட்டு போயிடுறாங்க

அட வாய்விட்டு சிரிச்ச நோய்விட்டு போகுமாம் அதனால் வெற்றி வாழ்க்கையை சிரிப்பில் தொடங்குவோம் அதுவே எதிர்நீச்ச்லுக்கு வெற்றிக்கு முதல் படி


 ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது

வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்

2 கருத்துகள்:

 1. அதற்குத் தான் துன்பம் வருங்கால் நகுக என்றார்.
  உண்மையே .நம் அழகைக் கூட்டும்.

  வெற்றியின் முதல்படி சிரிப்பு என்று சிறப்பாக சொன்னதற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

   நீக்கு