ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

விழித்து கொள்ளுங்கள்–விவாகரத்துக்கு விடைகொடுங்கள்




ஆம் நேற்று (SUNDAY 24/2/13)வந்த ஒரு நிகழ்ச்சி என்னை கலங்கடித்து விட்டது இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து எங்கு அதிகம் ?ஏன்? எதற்கு ?காரணம் என்ன ?
என்று அலசிய நிகழ்ச்சி Vijay T.V-யில் காலை10 மணியிலிருந்து 12மணி வரை நடந்த கோபிநாத்-தால் நடத்தபட்ட நிகழ்ச்சி அதில் விவாகரத்து  அதிகம் நடை பெறுவது நம் நாட்டில்- தமிழ்நாட்டிலாம் !!!!!!!!!
புள்ளிவிவரத்தோடோ காட்டபட்டது அதிரிச்சி தகவல் காட்டபட்டது அதை பார்த்தபிறகு என்னால் தூங்க முடியவில்லை என்ன இது என்ன இது என்று மனம் அங்கலாய்த்து போனது  கலங்கிவிட்டது
ஏன் ?இது? எங்கு தவறு நடக்கிறது ?எங்கே விட்டுவிடோம் பதிலை ?

என் பள்ளிபருவத்தில் விளையாட்டாக இந்த பாடலை பாடுவோம்
"நல்லதொரு குடும்பம் .........நாய் போல் புடுங்கும்,
தொல்லை தரும் சுரங்கம் ...."
அநாகரீகமாக நல்ல  பாடலை மாற்றி பாடியதற்கு பின்நாளில் வருத்த பட்டுஇருக்கிறேன்

ஆனால் இன்று நிலைமை இப்படி தான்  நினைத்து கொண்டிருகிறார்களோ இன்றைய தலைமுறை


பெற்றோர்களே விழித்து கொள்ளுங்கள் கஷ்ட்டபட்டு பெற்று கண்ணும் கருத்துமாய் வளர்த்து அவர்கள் வாழ தெரியாமல் விட்டுவிடாதீர்கள் வாழும் கலையை சொல்லி கொடுங்கள் அடிபட்டு திருந்தட்டும் அனுபவம் கிடைக்கும் என்று விட்டு விடாதீர்கள் ?பிள்ளைகள் சந்தோஷமாக வாழ்வதை பார்த்த திருப்தி இல்லாமல் நாம் என்ன செய் போகிறோம் விரக்தியோடு இறப்பதா ?
அவர்களுக்கு அனுபவம் எங்கிருந்து கிடைக்கும் முதலில் நம்மிடமிருந்து தான்
அதனால் வெட்கம் தயக்கம் குறு குறுப்பு போன்ற எல்லாவற்றையும் ஒதுக்குங்கள் நான் நானா நான் எப்படி எல்லாத்தையும் சொல்லிதர முடியும்   என்று பின்வாங்கதீர்கள்

நம் வாழ்கை அனுபவங்களை ,அந்தரங்கங்களை ,(சென்சார் போட்டுதான் )காயங்களை, அடிபட்ட உணர்வுகளை ,சந்தோஷமான நிகழ்வுகளை, எல்லாம் எடுத்து கூறுங்கள் கண் முன்னால் காட்டுங்கள் 
எனக்கு என்னலாம் நடந்தது தெரியுமா? என்று உங்களை முன்னிலை படுத்தி பாடத்தை கொடுப்பதை கற்று கொடுப்பதை அவர்கள் கவனிக்காமல் போய்விட செய்துவிடாதீர்கள் கண்டிப்பாக நமக்கு நடந்த நடக்கும் அனுபவங்களுக்கு நாம் நமக்கு ஒரு பதில் தேடி இருப்போம் நேர்மையான பதில்  கிடைத்திருக்கும் ஆனால் அதை 75% பேர் மறைத்து கொள்வோம் நம் ஆழ் மனதில், வீம்புக்கு இருப்போம் வாழ்கையில். 
நமக்கு நடந்தது எல்லாம் நம்மோடு போகட்டும் இனிவரும் தலை முறைகளுக்கு நாமே நம் அனுபவங்களை மூன்றம் மனிதனாக நின்று அலசி ஆராய்ந்து ஆழ் மனதில் இருக்கும் நேர்மையை வெளியே கொண்டுவந்து  அவர்களை வழிநடத்துங்கள்
அவர்கள் வாழ் ஆரம்பிக்கும் போது வாழும் போது கைவிட்டு விடாதீர்கள் "நாங்கள் என்ன செய்றது அவங்க வாழ்க்கை அவங்க வ்ளர்ந்துடாங்க" என்று ஒதுங்கி கொள்ளாதீர்கள்
பாவம் என் பிள்ளைகள் என்று பேசியும் வாழ்வை சீர் அமைக்காமல் போயிடாதீங்க நடுநிலையில் நின்று யோசியுங்கள் யோசிக்க சொல்லி கொடுங்கள்

இனி வரும் காலத்திற்கு ஒரு விஷயதிற்கு இரண்டு பக்கம்
மட்டும் போதாது யோசிப்பதற்கு 
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு- என்று நான்கு திசையிலும் ,
பக்கத்திலும் ஒரு விஷயத்தை அணுக யோசிக்க பழக்க படுத்துங்கள்

பெற்றோர்களே விழித்து கொள்ளுங்கள் நம் பிள்ளைகளின் நிறை குறைகள் நாம் மட்டுமே நன்கு அறிவோம் அவர்கள் சிறப்பாக சீரோடு வாழ வழி காட்டுவோம் உடைத்தெரியுங்கள் தயக்கத்தை கர்வத்தை நேர்மையின்மையை

இன்னும் இன்றைய  இளைஞ்சர்களுக்கும்  இளைஞ்சிகளுக்கும் சிலதை  சொல்ல விரும்புகிறேன்  ஆனால் பதிவு நீண்டு விட்டது அதனால் தொடர்கிறேன் இதை ........................நாளை 

23 கருத்துகள்:

  1. அவர்கள் சிறப்பாக சீரோடு வாழ வழி காட்டுவோம் உடைத்தெரியுங்கள் தயக்கத்தை கர்வத்தை நேர்மையின்மையை//

    சிறப்பான கட்டுரை.
    எல்லோரும் உடகார்ந்து பேசினால் பிரச்சனைகள் சரியாகிவிடும் உண்மை.
    முதலில் கலந்து பேச நேரம் ஒதுக்க வேண்டும்.
    முதலில் யார் முன்வந்து என்னும் தயக்கம், கர்வத்தை உடைதெறிந்து பேசவேண்டும் மனம் விட்டு உண்மையாய் நீங்கள் சொல்வது போல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கெஞ்சினால் மிஞ்சும் மனோபாவத்தை அந்த நிகழ்ச்சியில் கானமுடிந்தது. அப்புறம் எப்படி? எல்லோரும் உடகார்ந்து பேசினால் பிரச்சனைகள் சரியாகிவிடும்.

      நீக்கு
    2. தமிழரே

      டாக்டர் கிட்ட உங்கள் வலி சொல்லாமல் இருக்க முடியமா தீர்வு காண முடியுமா வலிக்கு
      அது போல் வாழ்கையை ருசிகரமாக வாழ் கொஞ்சம் கெஞ்சினாலும் தவறில்லை கொஞ்சி னாலும் தவறில்லை மிஞ்சினால் மீறினால் அலட்ச்சிய படுத்தினால் தான் தவறாகிவிடும்

      நீக்கு
  2. மனங்கள் எல்லாம் இப்போது சேருவதில்லை... சேர்த்து வைப்பதில்லை...

    பணங்கள் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயிறு சரியில்லாத போது எவ்வளுவு தான் பணம் கொடுத்தாலும் விரும்பியதை உண்ண முடியுமா?
      வாழ்கையும் அப்படிதான் மனம் இறந்துவிட்டால் ?...........

      நீக்கு
  3. அறிவுரைக் கூறுவதை விட தான் வாழ்ந்துக் காட்டுவது தான் அவர்களை எளிதாகப் புரிந்துக் கொள்ள வைக்கும்.

    Practice before you preach என்ற ஆங்கிலப் பழமொழியை கடைப் பிடிப்பது பெற்றோர் கையில் தான் இருக்கிறது. பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதைப் பார்க்கும் இளைய தலைமுறை வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளத் துணிவதில்லை.

    நல்லதொரு பதிவு .
    அடுத்த பகுதியை ஆவலோடு எதிபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பெற்று வளர்க்கும் போதே உடன் வரும் நிழல் போல் விட்டு கொடுக்கும் மனோபவத்தை வளர்க வேண்டும் எப்பாடு பட்டாவது நன்றி

      நீக்கு
  4. கஷ்ட்டபட்டு பெற்று கண்ணும் கருத்துமாய் வளர்த்து அவர்கள் வாழ தெரியாமல் விட்டுவிடாதீர்கள் வாழும் கலையை சொல்லி கொடுங்கள் அடிபட்டு திருந்தட்டும் அனுபவம் கிடைக்கும் என்று விட்டு விடாதீர்கள் ?

    எச்சரிக்கை பாடம் அருமை ..பயன் மிக்கது ...

    பதிலளிநீக்கு
  5. காலத்துக்கு ஏற்ற நல்ல கட்டுரை. நல்ல தூர நோக்கு. அருமை அருமை.

    நன்கு ஆழமாகச் சிந்தித்து விபரமாக அழகாகப் பதிவைப் பகிர்ந்துள்ளீர்கள்.சிறப்பு!
    வாழ்த்துக்கள் மலர் பாலன்!
    தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் இனியும் வாருங்கள்

      நீக்கு
  6. மனம் விட்டு பேசுங்கள் மற்றவரை தள்ளி வையுங்கள் சண்டையிடுங்கள் சமாதானமாய் வாழ்கையை வெல்லுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி
      வெல்வோம் புதிய விதி செய்து

      நீக்கு
  7. காலத்துக்கேற்ற கட்டுரை - சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களும் பெறுமதியானவை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் இனியும் வாருங்கள்

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. இருமுறை விழுந்து விட்டது

      நீக்கு
  8. பரஸ்பரப் புரிதல் ,விட்டுக்கொடுத்தல்,மனம் இட்டுப் பேசுதல் இவையெல்லாம் இருந்தால் மண விலக்குகளைத் தவிர்க்கலாம்தானே!

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு பதிவு. கண்டிப்பாய் தொடருங்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் இனியும் வாருங்கள் கருத்துரைக்க

      நீக்கு
  10. // இனி வரும் காலத்திற்கு ஒரு விஷயதிற்கு இரண்டு பக்கம்
    மட்டும் போதாது யோசிப்பதற்கு
    கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு- என்று நான்கு திசையிலும் ,
    பக்கத்திலும் ஒரு விஷயத்தை அணுக யோசிக்க பழக்க படுத்துங்கள்

    // - சரியாய் சொன்னீர்கள்.. தொடர்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் இனியும் வாருங்கள் கருத்துரைக்க

      நீக்கு