கொழுப்புசத்தில் நன்மை,தீமை உண்டா?
அதுதாங்க நாம் அடிகடி சொல்வோமே மத்தவங்களை
பார்த்து சில சமயம் நம்ம மனசாட்சி கூட நாமளை பார்த்து சொல்லுமே!!!!!!!!!!!!
ரொம்பதான்
கொழுப்பு; கொழுப்பு ஏறி போயிடுச்சி ;கொழுப்பு புடிச்சி இருக்கு இப்படி பல
பல
கொழுப்பு சத்தில் நன்மை செய்யும் கொழுப்பு, தீமை செய்யும் கொழுப்பு என்று உள்ளதா ?
இது உண்மைதான் .
நாம் சாப்பிடும் உணவிலிருந்து பெறப்படும் கொலச்றால் எனும் கொழுப்பு இரத்தில் நேரடியாக கரைவதில்லை குமிழ் போல் மிதந்து கொண்டிருக்கும்.
உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இதனால் தனியாக செல்ல இயலாது புரதங்களுடன் இணைந்து தான் செல்ல இயலும் இதற்கு கொழுப்பு புரதம் என்று பெயர்
இதில் மூன்று வகைகள் உண்டு
குறை அடர்வு கொழுப்புபுரதம் –LOW DENSITY
LIPOPROTEIN -LDL
மிகை அடர்வு கொழுப்புப்ரதம் –HIGH DENSITY
LIPOPROTEIN –HDL
மிகக்குறை அடர்வு கொழுப்புபுரதம் -VERY LOE DENSITY LIPOPROTEIN –VLDL
இவற்றுள் LDL மற்றும் VLDL கல்லீரளிருந்து கொழுப்பை இதயத்திற்கு எடுத்து செல்வதால் இவை இதயத்திற்கு தீங்கு செய்யும் கொழப்பு என்று சொல்லபடுகிறது (Bad Cholesterol)
HDL இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து கல்லீரலுக்கு எடுத்து செல்வதால் இது இதயத்திற்கு நன்மை செய்யும் கொழுப்பு என்று சொல்லபடுகிறது (Good Cholesterol).
கொழுப்புபுரதங்களின் இயல்பு அளவுகள் :-
பெண்கள் / ஆண்கள்
LDL- 135 மி.கி% /
130 மி.கி%
HDL- 35 மி.கி% /
30 மி.கி%
VLDL- <30 மி.கி% /
<25 மி.கி%
பார்த்துகோங்க பார்த்துகோங்க குறைந்த
கொழுப்பு தான் பெண்களுக்கு அதிகமா இருக்கு ஆனா, ஆனானப்பட்ட கொழுப்பெல்லாம்
யாருக்கு இருக்கு இப்ப புரியுதா ? பாவங்க பெண்கள் !
அறிந்து கொள்ள வேண்டிய தகவல்... நன்றி...
பதிலளிநீக்குthank u
நீக்குஉபயோகமான பகிர்வு.
பதிலளிநீக்குthank u
நீக்கு