வியாழன், 14 பிப்ரவரி, 2013

எதிலே வெற்றி ?


எதிலே வெற்றி ? 

வெற்றி .........வெற்றி என்று தான் நாம் எந்த வேலையையும் தொடங்குகிறோம் 
வெற்றி சிந்தனை நமக்கு நம்பிக்கை கொடுக்கிறது நம்மை ஆக்கபூர்வமான ஆளாக மாற்றுகிறது .

எதில் இருக்கிறது நமக்கு வெற்றி ?

நமக்கு பொருத்தமான லட்சியத்தை தேர்வு செய்தால் தான் , கிடைக்கும் வெற்றி நமக்கு பொருத்தமானாதாக இருக்கும் இல்லை என்றால் 

எ.கா -ஒருவர் பல வருடங்களாக எதிர் பார்த்த உயர் பொறுப்பு அவருக்கு கிடைத்த போது அவருக்கு அதில் பொருந்தி போக முடியவில்லை மற்றவர்களை பார்த்து அந்த உயர் பொறுப்பு ஆசையை லட்ச்சியமாக கொண்ட அந்த பொறுப்பு அவருக்கு தலைவலியாக இருந்தது நொந்து நூடில்சாகிவிட்டார் இது இதுதான் நம்முடைய பிரச்சனை

நம் தலைக்கு பொருந்தாத பெரியதோ சிறியதோ  கிரீடம் நமக்கு தேவை அற்றது அல்லவா ?

அது முள் கிரீடமாகவும் இருந்துவிட கூடாது 

கிரீடத்திற்கு பொருந்தாத தலையும் தகுதியற்றது அல்லவா?

ஆம் நாம் வெற்றிக்கேற்ற மனிதராக இருப்பது அவசியமாகிறது 

'எடுத்த காரியம்யாவினும் வெற்றி' என்றன் பாரதி 

'வெற்றியை நோக்கி முன்னேறுங்கள் 'என்றான் ஹிட்லர்

இதில் யார் சொல்லவது வெற்றி 
இருவரும் ஒரு விஷயத்தை தான் சொல்கிறார்கள்  

ஆம் வெற்றி என்பது  வெறும் எழுத்துகள் தான் அது அதை பயன் படுத்துபவர்களை பொறுத்து அதன்  அர்த்தம் அமைகிறது 

பாபர் மசூதி இடிபட்டபோது  மதவாதிகள் வெற்றி வெற்றி என்று கூச்சல் இட்டார்கள் அதே  கிரிகெட்டில் உலக  கோப்பையை இந்தியா வெற்றி பெற்ற போதும்  வெற்றி வெற்றி என்று தான் கத்தினோம்

முந்தைய வெற்றி எல்லோரையும் சேர்ந்தது அல்ல சிலருக்கு வெறுபுணர்ச்சிய தூண்டுகிறது பிந்தியது எல்லோரையும் இணைக்கிறது. 

ஆகா சரியான மனிதர்கள் உருவாக்குவதே வெற்றி நல்ல செயல்களின் மூலம் கிடைப்பதே வெற்றி அதனால் வெற்றியை விரும்புகிறவர்கள் அதை நோக்கி பயணிப்பவர்கள் அதற்கான நியாயமான அடிபடைகளை உருவாக்கி கொள்ள வேண்டும் .

அப்பொழுதான் நம்மால் அதை நோக்கி எதிர்நீச்சல் போட முடியும்  முதல் படி என்ன என்று தெரிந்ததா 

2 கருத்துகள்:


  1. நல்ல செயல்களின் மூலம் கிடைப்பதே வெற்றி அதனால் வெற்றியை விரும்புகிறவர்கள் அதை நோக்கி பயணிப்பவர்கள் அதற்கான நியாயமான அடிபடைகளை உருவாக்கி கொள்ள வேண்டும் .//

    நல்லா சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு