திங்கள், 25 பிப்ரவரி, 2013

விழித்து கொள்ளுங்கள்–விவாகரத்துக்கு விடைகொடுங்கள்




இளைஞ்சர்களே, இளைஞ்சிகளே நீங்களும் வழி விடுங்கள் உங்கள் வாழ்க்கை நதி தடங்கள் இல்லாமல் ஓட

நான் எந்த பெரிய விஷயங்களையும் அலச போவதில்லை இன்று ஆண் இப்படி ஆயிட்டான் பெண் இப்படி ஆயிட்ட என்றும் குறை சொல்ல குற்றம் தேட விரும்பவில்லை இணைகளுக்கு நடுவே குறுகீடு  செய்பவர்களையோ செய்யும் விஷயதையோ பற்றியும் சொல்ல விரும்பவில்லை அது முடிவு அற்றதாகி விடும்

காதலும் கடவுளும் ஒண்ணு அதற்கு நாம் எப்படி உருவம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்துதான் வாழ்வு அவ்வளவுதாங்க  ரொம்ப சிம்பிள்

என்ன நடக்கிறது நம் வாழ்வில் எப்படி கையாளவேண்டும் என்று உணர்வுகளுடன்........... கலந்து யோசியுங்கள்
நிறை குறையோடு வாழ்வை ஏற்று கொள்ளுங்கள் எந்த விஷயதிற்க்கும் ஒரு மாற்று கருத்து உண்டு அது எது என்ன என்று கேளுங்கள் அட்லீஸ் உங்கள் ஆழ் மனதிடமாவது காது கொடுங்கள்
தவறு நடந்தால் சரி செய்து கொள்ள பாருங்கள் (தவறுக்கு வரை முறைகள் உண்டு கண்ணுங்களா )அதை  விட்டு வெட்டியாக விதண்டாவதாமோ ,தத்துவமோ பேசி வாழ்க்கையை நிர்மூலம் ஆகி கொள்ளாதீர்கள்

இதில் இளைஞ்சர்களின் பிரச்சனை என்ன தெரியுங்களா ?அவங்க பிரைமரி செக்சன்லில் இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியில் வரமாட்டாங்க
எப்போ அவங்க மேல் நிலைபள்ளி(Higher secondary class )  படிப்புக்கு செல்வது ?
எப்போ அவங்க கல்லுரிக்கு செல்வது ?(hello….என்ன விளையாடறீங்களா …. ஏய் யாருப்பா சவுண்டு வுடறதுஇருங்க  பொறுங்க )

நான் சொல்ல வருவது மெச்சுரூட்டி படிப்பை பற்றி......... அவர்களிடம் எப்போதும் ஒரு சிறுபிள்ளைத்தனம் ஒளிந்திருக்கும் இளைஞ்சர்களுக்கு எப்பவும்  தாய்மையின் தேடல் இருக்கும் ஆண் என்பவன் தன் தோழியிடம் தன் மனைவியிடம் ஏன் தான் பெற்ற பெண் குழந்தையிடம் கூட தன் தாயை தேடுவான் அவர்கள் தன்னை வழி நடத்துவதை ஆர்வமுடன் ஏற்று கொள்ளும் ஆழ் மனதை  புறம் தள்ளி விட்டு அடக்குவான்   10 வயது சிறுவனை போல் சிலிர்த்து கொள்வான் இவங்க என்ன என்னை அடக்குவது என்று முரண் பட்டு  நிற்பான் தனக்குள்ளே தான்  ஆண் என்ற ஈகோவையும் கர்வத்தையும் விட ஒழிக்க தெரியாமல் திண்டாடுவான்

ஆனால் பெண்ணோ சீக்கிரம் தன் மன நிலையில் முதிர்ச்சி அடைந்து விடுவாள் தன்னை ஒரு டீச்சர் போல் நினைத்து கொள்வாள் எப்போதும் வழி காட்டுதல் வழி நடத்தல் என்று எப்போதும் கர்ணனின் கவச குண்டலம் போல் மனதில் ஒரு பிரம்பை தூக்கி கொண்டே அலைவாள் இது இதுதான் சிக்கல் இதை உணருங்கள் இதில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாய் சுவாசியுங்கள்

இளைஞ்சர்களே எப்படியாவது நான் உனக்கானவன் ,உன்னுடையவன் ,உனக்கு மட்டுமே சொந்தமானவன் என்ற எண்ணத்தைஉங்கள் துணைக்கு கொடுத்துவிடுங்கள் எப்பாடு பட்டாவது தலையால் தண்ணி குடித்தோ தலை கீழாக நின்றோ அப்புறம் பாருங்கள் நீங்க “நானே ....என்றும் ராஜாஎன்று பாடலாம் அவர்கள் உங்கள் காலடியில் இருக்கும் விசுவாசி போல் இருப்பார்கள்

பெண்களே அவர்கள் காலடியில் கிடக்க வேண்டுமா என்று போர் குரல் எழுப்பாதீர்கள் அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் கால்களை கட்டி போட்டு விடுங்கள் இது ஒரு கண் கட்டு வித்தை இது கைவர பெறுவதற்கு சில பயிற்ச்சிகளை கலந்து நமக்குள் விழுங்கி விட வேண்டும் அது என்னா?

பொறுமை கொஞ்சம் ,இனிமை கொஞ்சம் இரக்கம் கொஞ்சம் தாய்மை கொஞ்சம் ,காதல் கொஞ்சம் இத எல்லாத்தையும் கலந்து உள்ளே போடுவிடுங்கள் இப்போ கண் கட்டு வித்தை கைவரும்

ஒரு மிஷினோ ,இஞ்சீனோ டைட்டாக இருந்தால் எப்பவும் கஷ்டமாக தானே இருக்கும் அதை உபயோகிக்கும் போது சிறு உராய்வுகள் நடந்தால் தான் இயங்குவதற்கு சுலபமாகும் அது போல்தான் வாழ்க்கையில் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வதற்கு சில உராய்வுகள் தேவை படுகிறது அது தான் ஊடல் சிறு சண்டைகள் அப்போதான் வாழ்க்க்கையும் இனிக்கும் இறுக்கம் தளர்ந்து  சண்டையை கூட வெளியே போட முடியும் ஊடலை உரிமை  (தன் துணையிடமட்டுமே) உள்ளவர்களிடம் மட்டுமே காட்ட முடியும்

இளைஞ்சிகளே இப்படி இருக்காதீங்க நினைக்காதீங்க
அடி என்னடி குடும்பம் ,இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்திவலை ,பாசம் என்பது பெரும் கவலை ,
சொந்தம் என்பது சந்தையடி ,இதில் சுற்றம் என்பது மந்தையடி..............

இப்படி பாருங்க
அடி இதுதானடி உலகம் இதில் எத்தனை இன்பம்  
பந்தம் என்பது கடைசிவரை ,பாசமென்பது பரிந்துரை
சொந்தம் என்பது நீ சாகும் வரை ,இதில் சுற்றம் என்பது நீ வாழும் வரை

இளைஞ்சர்களே நீங்களும் இப்படி இருந்து விடாதீர்கள்
என்னடா பொல்லாத வாழ்க...........
யாரை நம்பி பெத்தாலோ அம்மா அட போகும் இடம்
ஒன்று தான் விடுங்கடா சும்மா ,இதுக்கு போய் அலட்டிகலாமா .............

இப்படியும் பாருங்கள் வாழ்வு இனிக்க
  
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில், 
என் காதல் நீயே.........
எனது சொந்தம் நீ, எனது பகையும் நீ
காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ 
பிறந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ 
மரணம் மீண்ட ஜனனம்ம் நீ,
நான் கண்டெடுத்த பூவே, கண்ணில் தேடல் என்ன உயிரே  
எனது செல்வம் நீ, எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ, எழுத்து பிழையும் நீ

இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணீர் நீ 
எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ 
நான் தூக்கி வளர்த்த காதல் நீ 
நான் கண்டெடுத்த பூவே, சிறு ஊடல் என்ன உயிரே  
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே ...
வானும் முடியுமிடம் நீதானே
காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்றாயே ..............


இவ்வளவுதான்  இது தான் நிஜம் இது



பஞ்ச்-; எத்தனை புயல்களை கடந்தாய் என்பது முக்கியமில்லை கரையாய் அடைந்தாயா (காதல்  கடலுனு வைச்சிகோங்களேன் ) 

15 கருத்துகள்:

  1. காலடியில் கிடக்கவும் சொல்லிட்டு இந்த பக்கம் காலை கட்டிப்போடவும் சொல்லி நல்ல பேலன்ஸ்தான்.. வாழ்க்கை இப்ப ஒரே சீரா ஓடும். பஞ்ச் வேற சொல்லிட்டிங்க... சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான சொல்லாடல்! சிறப்பான கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பாடல்கள் எல்லாம் பழையவைதான் நான் அதை சிறிது மட்டுமே மாறி காண்பித்தேன்

      நீக்கு
  3. அன்புத்தோழி.... அசத்திட்டீங்க...:) அருமையா இரண்டுபக்க வாதவிவாதங்களை அழகுற ஒழுங்குபடுத்தி.... இரண்டுதரப்பையும் சமாதானப்படுத்தி.... சொல்ல வார்த்தையே இல்லை... எங்கோ போயிட்டீங்க...;)

    வெகு சிறப்பு. அருமை. எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தல்போல் அந்த பஞ்ச் சூப்பர்...:)

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல இருந்ததா தோழி எதோ என் மனிதில் இருக்கும் விஷயத்தை சொல்லிவிடேனே என்று நினத்திருந்தேன் நன்றி உங்கள் ஊக்கத்திற்கு

      நீக்கு
  4. அருமையான தத்துவங்களின் தொகுப்பு சகோ! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பெரிய வார்த்தை சொல்லிடீங்க தத்துவ ம் எல்லாமில்ல என் மனதில் இதை பற்றி தோன்றியதை பிதற்றி இருக்கிறேன் அவ்வளவே

      நீக்கு
  5. ஆண், பெண் மன நிலை பக்குவம் குறித்து வித்தியாசமாக சிந்தித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  6. அட.. அருமையா இருக்குங்க.. ! இது மாதிரியான பதிவுகள் நீங்கள் எழுதுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..!

    நல்லதொரு சிறந்த பணி.. தொடர்ந்து எழுதுங்கள்.!!! வாழ்த்துகள்..!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளே இருந்தது .முதலில்பின்னுடம் இடுவதற்கு கூட தயங்கி கொண்டிருந்திருக்கிறேன் கொஞ்சம் கொடுக்கலாமா இப்படி என்று தடுமாறம் இப்போ கொஞ்சம் தைரியம் எழதமுடியும் என்ற நம்பிகை உங்களை போல் உள்ளவர் களின் ஊக்கம் ஆர்வத்தை தூண்டுகிறது நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மேலும் வாருங்கள் கருத்துரைக்க

      நீக்கு

  7. வணக்கம்!

    பூவிழி வலையைக் கண்டு
    புலவன்யான் சொக்கிப் போனேன்!
    மாமொழித் தமிழை இங்கு
    மதுமொழி யாக உண்டேன்!
    நாமொழி மணக்கும் வண்ணம்
    நன்னெறி இனிக்கும் வண்ணம்
    பாமொழி பாடும் பாவை!
    பனிமலா் பாலன் வாழ்க!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயா தாங்கள் இட்ட மறு மொழி என்னை மிகவும் உற்சாகம் கொள்ளசெய்கிறது உங்களின் ஊக்கபடுதுதல் எனக்கு மன திருப்திகொடுத்தது இதை பரிசாகவே உணர்கிறேன்
      நவில நினைக்கும் நன்றிகள்
      நழுவி போகின்றன...
      என் மன நெகிழ்வில்

      நீக்கு


  8. வணக்கம்!

    பூவிழி வலையைக் கண்டு
    புலவன்யான் சொக்கிப் போனேன்!
    மாமொழித் தமிழை இங்கு
    மதுமொழி யாக உண்டேன்!
    நாமொழி மணக்கும் வண்ணம்
    நன்னெறி இனிக்கும் வண்ணம்
    பாமொழி பாடும் பாவை!
    பனிமலா் பாலன் வாழ்க!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    பதிலளிநீக்கு