வியாழன், 14 பிப்ரவரி, 2013

சந்தனக் கடத்தல் வீரப்பனின் ''வனயுத்தம்''சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட ''வன யுத்தம்'' படத்தின் தயாரிப்பாளர்கள், வீரப்பனின் மனைவிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க ஒத்துக் கொண்டுள்ளனர்.
வீரப்பனின் வாழ்க்கையை பற்றிய வன யுத்தம் என்ற  இந்தப்படம் இன்று முதல் திரையிடப்படுகிறது. இந்தப் படம் வீரப்பனின் குடும்பத்தின் அந்தரங்கத்தை மீறுவதாக இருப்பதுடன் வீரப்பனின் மகள்களின் திருமணத்துக்கும் பிரச்சனைகளைத் தரக்கூடியது என்று கூறி, அவரின் மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

முதலில் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 4 காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட அனுமதி அளித்தது.ஆனால் வீரப்பனின் மனைவி முப்பதுக்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்ட வேண்டும் என்று சொல்லியிருந்தார்.இதன் காரணமாக இவர் மேலும் இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இரு தரப்பும் இந்த விஷயத்தைகுறித்து பேசி ஒரு உடன்பாட்டுக்குவருமாறு சொன்னார்கள். 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டும் பட்சத்தில் வழக்கை திரும்பப் பெறுவது என்று முடிவு எடுக்க பட்டது .

இந்தப் படம் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளவைகள  நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

இந்த படத்தின் இயக்குனர் ரமேஷ், ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள வீரப்பனின் 4 கூட்டாளிகள் உட்பட பலரை நேரில் சந்தித்துப் பேசி இந்தப் படத்தை எடுத்துள்ளதாகக் கூறி நடந்த சம்பவங்களை அப்படியே மக்கள் முன் கொண்டு வருவதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார். மேலும் பணம் பெற மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவதாகக் கூறியுள்ளார் .

2 கருத்துகள்:

  1. யானை இருந்தாலும் ஆயிரம்பொன்
    யானை இறந்தாலும் ஆயிரம் பொன்
    என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு