ஆமாம் இனிமே இந்த இரண்டு விரலில் ஒன்றை தொடு என்ற நகை
சுவைக்கு வேலையில்லையாம்
மழை வருமா வராத ?என்று வானிலை அறிவிப்பாளரை கலாய்க
வேண்டாமாம்.
நாமே கண்டுபிடித்து விடமுடியுமாம் எப்படி ?இப்படிதான்
அதாவது இந்த நத்தை இருக்கு பாருங்க ((நத்தை இனங்களில் பல வகை இருக்கின்றன. அவை தரையிலும், குளம், குட்டைகளிலும், ஆறுகளிலும், கடல் நீரிலும் பார்க்கமுடியும் மேலும் நத்தையின் உடலுக்குள் எலும்புகள் கிடையாது. உடம்பின் பெரும் பகுதி தசையினால் ஆனது. ஆபத்துக் காலத்தின் போது உடற்பகுதியை முதுகில் காணப்படும் திமில் போன்ற ஓட்டினுள் இழுத்துக்கொள்ளும் .
நத்தைகள் தமது வயிற்றுப் பகுதியில் காணப்படும் தசையினாலேயே மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இப்பகுதியே பாதம் எனப்படும்.
நத்தைகள் தமது வாழ்நாளில் பெரும்பகுதியை உணவு தேடுவதிலேயே கழிக்கின்றன. உணவை அவை வானை மூலம் அறிகின்றன.))
அது மழை வருவதை உணர்ந்து கொள்வதில் கண்டு பிடிப்பதில் கில்லாடியாம் இது ((தலைப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு ஜோடி உணர்கொம்புகளைக் கொண்டு இருக்கின்றன.
இந்தக் கொம்புகள் தேவையான போது வெளியே நீட்டவும், உள்ளே இழுக்கவும் ஏற்றவகையில் உள்ளன.))
நத்தை கம்பத்தையோ ,தாவரங்களையோ நோக்கி நடந்தால்
மழை வர போகிறது என்று அர்த்தமாம்.
இனிமே மழை வருமா என்று தெரிஞ்சிக்கணும்னா நத்தை பின்னால் போகவும் குடையுடன்!
நத்தையாரே நத்தையாரே எங்கே போறீங்க ? என்று சின்ன வயதில் பாடுவோம். அது போல் நத்தையாரே நத்தையாரே எப்போ மழை வரும் சொல்லுங்க என்று கேட்க வேண்டும் போல!
பதிலளிநீக்குபதிவு அருமை.
வருகைக்கு நன்றி மேலும் தொடர நன்றி (2 நாட்கள் என் கணணிக்கு உடம்புசரியில்லை ஆகையால் ரிப்ளை தாமதம் )
நீக்கு