வெள்ளி, 17 நவம்பர், 2017

நான்தான் கொசுடா கொசு

நான்தான் கொசுடா கொசு ஹா ஹா என்னை பார்த்தியா நான் எங்கே இருக்கேனு 


இப்ப இருப்பதிலேயே மனிதனை சித்திரவதை செய்ய அனுப்பட்ட மிகச்சிறிய ராட்ஷசன் ஏழை பணக்காரன் நல்லவன், கெட்டவன், கொள்ளைக்காரன் கொலைகாரன் என்று பாகுபாடு இல்லாமல் எல்லாரையும் ஒன்றாகவே   பார்ப்பேன் 

எல்லா  இடத்துக்கும் போவேன் என்னை உன்னால் தடுக்கமுடியாது மனிதா நீ வாழும் போதே  அந்நியன் படத்தில் வருமே கருட  புராணத்தில் கூறிய எல்லவிதமான கொடுமையும் நான் உனக்கு  இங்கேயே காட்டுறேண்டா நீ பய பட  வேண்டியது எனக்கு எனக்கு   மட்டும் தான் என்னை  பார்த்து பயந்து எல்லா பிகாஷ்னும் நீ செய்துக்கணும் உன்னை ஒளிச்சிக்கணும்......


நீ எங்க? எப்படி? இருக்கேனுயெல்லாம்  பார்க்கமாட்டேன் நீ கொஞ்சிகிட்டு இருந்தாலும் சரி புலம்பிகிட்டு இருந்தாலும் சரி எனக்கு அதை பற்றியெல்லாம் கவலையில்லை ....பிரச்சனையில்லை..... ஐயோ! பாவம் என்றெல்லாம் பார்க்கமாட்டேன் அடங்காபிடாரியாய் ஆடவே வந்துள்ளேன்.


ராட்ஷன் என் வாழ்வு நிலை கம்மிதான் ஆனால் போவதற்க்கு முன் உன்னை டம்மியாகம போகமாட்டேன் என்ற  சாபத்துடனே பிறப்பெடுக்கிறேன் நீயென்னடா மமமதையோடு  அலைவது உன் மயிர்கால்களையும் தாண்டி உன் உயிருக்கும் உலைவைத்திடுவேன். 


என்னை வைத்து எத்தனை கிண்டலாய் மீமிஸ்போட்டுக்கோ ஜோக் போட்டுக்கோ  எல்லாம் போட்டு கொண்டாலும் உன் மாமிசத்தையே உருக்க வைக்கும் திறமை  எனக்கு இருக்குடா சொடுக்கு போடும் நேரத்தில் செய்திடுவேன் ஹா ஹா என்று கொக்கரிக்கும்.
  

வேப்பிலை போட்டாலும்சரி  சுத்தினாலும் சரி சுட்டாலும் சரி  அப்பிடியா என்று  பதுங்கிக்கொள்கிறது எவ்வளவு  நேரம் இது உனக்கு துணையிருக்கும் நீ வெளியில வந்துதான் ஆக்கணும் மச்சி என்னாலதாண்டா உன் நேரத்தை ஒதுக்கி நீயிதையெல்லாம்  செய்துகிட்டு இருக்கே என்கிட்ட இருந்து தப்பிக்க நீ கசப்பை முகர்வ உனக்கு ஆகாததையெல்லாம் செய்து பார்ப்ப ......நக்கலாய்  கொக்கரிக்கிறதே 



இப்படியாக  பயமுறுத்தி அலையும் சிறிய ராட்ஷனுக்கு பயந்து உலகின்  வல்லரசு அமெரிக்க கூட பயந்துடுச்சினா பார்த்துக்கோங்க  எதை எதையோ கண்டுபிடிக்கும் நேரத்தில் இதனுடைய டிஸ்ரேபென்ஸ்  தாங்கலையாம் அதுக்குன்னு உடனே நீயென்ன ஆடுவது  உனக்கு  ஒரு எதிரியை  உன்னை போல் ஒருவனை உருவாகிறேன் பாருன்னு சாவல் போட்டு கொண்டதுதாம் 
களத்தில் இறங்கியதாம் அது என்னனா .....


அமெரிக்க விஞ்ஞானிகள் மரபணு மாற்றத்தின் மூலம் மூன்று கண்களுடன்(நெற்றி கண் திறப்பினும் குற்றமே என்று இதுவும் அதுகூட ஒத்துழைக்க போயிட போகுதய்யா  பார்த்து கோங்க)  இறக்கை இல்லாத கொசுவை உருவாக்கியுள்ளனர்.



அமெரிக்காவின் கலிஃபோர்னிநா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பறக்க முடியாத, மூன்று கண்கள் கொண்ட கொசுவை உருவாக்கியுள்ளனர். இந்த கொசுக்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளன.
        eferve

CRISPR/Cas9 என்ற மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த கொசுவின் மரபணுக்களில் மாற்றம் செய்துள்ளனர். இவ்வாறு கொசுக்கள் உருவாக்கப்படுவது ஏன் என்று கேட்டால் அதற்கு சற்றும் யூகிக்க முடியாத பதில் அவர்களிடம் உள்ளது.
                                         

இந்த மாதிரி கொசுக்களை உற்பத்தி செய்தால் அவற்றின் மூலம் பெருகும் கொசுக்களும் இதேபோல குறைபாடு உள்ளவையாக இருக்கும் என்றும் உயிரைப் பறிக்கும் பயங்கர நோய்களைப் பரப்பும் கொசுக்களின் பெருக்கத்தை இது கட்டுப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.(ஹா ஹா ஹா  தலையை சுற்றி மூக்கை  தொட்டிடுவோமில்ல )



என்னடா இவளுக்கு  இவ்வளவு சந்தோஷமா இதை பார்த்து  என்னை  கோபத்தில் இப்போதும் வந்து பதம் பார்த்துவிட்டு போகிறது என் ரத்தத்தில் உப்பு இருக்கா ,கரி இருக்கா, சுகர் இருக்கா என்று ???
                                                             என் நாட்டுக்கு 
                                                             உன் நாட்டுக்கு 
                                                             எதிரி நாட்டுக்கு 
                                                             எல்லா நாட்டுக்கும் 
                                                             இருக்கும் 
                                                             ஒரே போராளி 

18 கருத்துகள்:

  1. ரொம்பவே தொல்லை செய்து விட்டதோ கொசு! யாராலும் அழிக்க முடியாதது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கநண்பா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  2. அமெரிக்ககாரனை நம்ம வேண்டாம் இப்படி ஒன்றை புதுசா கண்டுபிடிச்சு அதன் மூலம் ஒரு புது நோயை உருவாக்கி அதற்கு மருந்து கண்டுபிடிச்சு அதிக வியலை வைச்சு சம்பாதீப்பானுங்க படுபாவிங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க truth சரியா புடிச்சீங்க பாயிண்டை உண்மைதான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. ஒரே போராளியை பற்றிய விஷயம் அருமை.
    கொசுவுக்கு மரபணு மாற்றம் !
    பாம்பின் தலையில் கொசு படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சிஸ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  4. ஹா ஹா ஹா என்ன கொசுத்தொல்லை ஆரம்பித்து விட்டதோ ஒரே புலம்பல்ஸ்ஸ்:) ஆ இருக்கே..

    நம் நாட்டு நுளம்புகள் பெரிதாக இருக்கும்... மொஸ்கிட்டோஸ்.

    இங்கே இருக்கிறது, வீட்டுக்குள் வரவே வராது, ஆனா கோடை காலத்தில் மட்டும் மாலை 7..8 மணிக்குப் பின் வெளியே நுளம்புகள்.. பிச்சுச் சாப்பிட்டு விடும்.. குழந்தைகள் நின்றிட்டால் அவ்ளோதான்ன்ன் கடிச்சு ஒரு வழிப்பண்ணிடும்... இவை மிச்சீஸ் எனப்படும் இனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா ஆமாம்பா ரொம்ப ஜாஸ்தி மழை முடிந்து ஆமாம் நுளம்புகள் என்று கொசுக்கு சொல்விர்களா உங்கள் ஊரில் புதிய வார்த்தை நாங்களும் உங்களால் தெரிந்து கொள்கிறோம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  5. ஊருக்கு சென்று இருந்தேன் ஆகவே இணைய வரவுகள் குறைவு.

    கொசுவை வைத்து சொன்ன விடயங்கள் அணைத்தும் பிரமிக்க வைக்கிறது இந்தப்பதிவை நகைச்சுவையாக பார்க்க முடியாது.

    மனிதம் இல்லா ஜடங்கள் மனித உருவில் வாழ்க்கின்றார்கள். அவர்களுக்கு பிறக்கும் மக்களுக்கும் இந்த அறிவுதானே வரும் ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கொசுவை போல் சிலவற்றை தடுக்கமுடியாமல் தீமையின் கை ஓங்கி கொண்டே போகிறது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  6. கடைசி நீல வரிகள் உண்மையே பூவிழி! யாரையும் விட்டுவைக்காது..இந்தக் கொசு. கொசுவை அழிக்க முடியாதாம். அமெரிககவில் குறைவுதான் என்றால் ஆப்பிரிக்காவில் ஒரு சில நாடுகளில் அதிகம் அதுவும் ராட்ச கொசுக்கள்தாம் அனக்கோண்டா போல்!!! அதன் மூலம் நோய்கள் பரவும் அதுவும் விசித்திரமான நோய்கள்..

    இப்படிப் பதிவு போட்டு கொசுவை பயமுறுத்தினா உங்களைக் கடிக்காம விடுமா??!!! ஹா ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சிஸ் ரொம்ப கோவம் எனக்குதான் எதையும் எழுத கூடவிடாமல்தொல்லை செய்கிறது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  7. ஆஹா... கொசு பேசுவது போல சொன்னது சிறப்பு. அத்தனை சிறிய உருவம் கொண்டதைப் பார்த்து மக்களுக்கு எத்தனை பயம்...

    பதிலளிநீக்கு
  8. ஆமாம் சகோ புரத்தை கொடுக்கிறது ஐயோ இந்த ஜுரமா அந்த ஜுரமா என்று வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  9. ஊழலும் கொசுவும் ஒழிக்க முடியாதன!நன்றி பூவிழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ரொம்ப சரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  10. ஹையோ கொசுவா !!! நினைச்சாலே நடுங்குது நம்ம ஊருக்கு வந்து திரும்பினா அதுங்க கடிச்ச மார்க்ஸ் 5/6 மாசத்துக்கு இருக்கும் ..எனக்கு முகம் கையெல்லாம் வீங்கும் ,பாவம் என் மகளுக்கு தேடி வந்து கடிக்குங்க கொசுங்க .
    அதுவும் இதுங்க நானா சென்னைல இருந்தப்போ கூட கடிக்கலை இப்படி ..வெளிநாட்டுக்கு போயிட்டு வந்ததும் NRI ரத்தம் பிடிச்சிபோச்சோ தெரில ..ரணகளமாக்கிடுங்க எங்க குடும்பத்தையே ..

    அப்புறம் அமெரிக்க கொசுவை நம்பவே முடியாது அவனே உற்பத்தி செஞ்சி அதுக்கு மருந்தையும் அவனே தயாரிச்சு இந்தியா ஆப்பிரிக்கான்னு லாபம் பார்ப்பான் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அஞ்சு கொசு ராக்ஷன் கிட்ட மாட்டிகிட்டீங்களா என்னடா இது குடித்த ரத்தையே எவ்வ்ளவு நாள் டெஸ்ட் பார்ப்பது வெளியேயில் இருந்து வந்துருக்காங்க நமக்காக விருந்தாளி அவங்களை கொஞ்சம் கவனிப்போம் என்று நினச்சியிருக்கும் போல வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு