செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா


தில்லி பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகளை 

மறுத்துள்ளனர்  

( அப்படி போடு இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா) 


இந்தியாவை உலுக்கிய தில்லி பாலியல் வல்லுறவு சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர் நீதிமன்றத்தில் தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை முறைப்படி மறுத்துள்ளனர்
 குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட வாகனம் (கோப்புப் படம்)                                                                        
23 வயது மாணவியை ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர் மீது இந்த வழக்கை விசாரிப்பதற்கென்று விசேடமாக உருவாக்கப்பட்டுள்ள விரைவு விசாரணை நீதிமன்றம், முறைப்படி குற்றப் பத்திரிகையை வாசித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட வாகனம் நீதிமன்றம் வந்து குற்றச்சாட்டுகளைக் கேட்ட ஐந்து பேரும் தாம் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.(பின்ன காந்தி சொல்லிடாரு இல்ல அதை யாருனா கடை பிடிக்கிறோமா மூன்று  குரங்கு பொம்மையை காமிச்சி கண்ணை காது  வாயை முடிக்கனும் எப்பவோ சொல்லி கொடுத்துடாரே இனியாவது பின்பற்றுங்கள் நாடு சுபிட்சம் அடைய )

இந்திய குற்றவியல் சட்டத்தின் 13 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஐந்து பேர் மீதும் நீதிபதி யோகேந்திர கன்னா வாசித்தார்.

கொலைசெய்தது, ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவு செய்தது, தடயங்களை அழித்தது, ஆளைக் கடத்தியது, கொள்ளையில் ஈடுபட்டது, குற்றச்செயலுக்காக சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றங்களும் இதில் அடங்கும்.(அட நாங்க அதை பெண்ணே இல்லையின்னு வாதாடுவோம்  எல்லாம் பிரம்மைன்னு கூட சொல்லுவோம் கிருஷ்ண பரமாத்மாவின் வார்ருப்புள்ள  நாங்க கண்ணை காட்டிவிடுவோம் இல்ல  கண்ணுக்கு தெரியாமல் )

பேருந்து ஓட்டுநரான ராம் சிங், அவருடைய சகோதரர் முகேஷ், பழக்கடை வைத்துள்ள பவன் குப்தா, உடற்பயிற்சி பயிற்றுநரான வினய் ஷர்மா, பேருந்து கிளீனரான அக்ஷய் டாகுர் ஆகிய குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைதாகியுள்ள ஆறாவது நபர் வயது வராதவராகக் கருதப்பட்டு இளம்பிராயத்தினருக்கான நீதிமன்றத்தில் அவர் விசாரிக்கப்படவிருக்கிறார்.(சம  உரிமை வேணுமில்ல )

வழக்கை எதிர்கொள்ளும் ஐந்து பேருக்கும் எதிராக மரபணுத் தடயங்கள், கைத்தொலைபேசி பதிவுத் தகவல்கள் போன்ற வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.(கூறுங்கள் கூறுங்கள் கூறி கொண்டே  இருங்கள் அடுத்த ஜென்மம் எடுத்து அந்த பெண் வரும் வரை சாட்சி சொல்ல )

வழக்கு ஆரம்பித்தவுடன் முதல்கட்டமாக மூன்று சாட்சிகள் அரசு தரப்பில் அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு தில்லியில் தனது நண்பர் ஒருவருடன் சென்றுகொண்டிருந்த வேளையில், அந்த இளம் பெண்ணையும் அவரது நண்பரையும் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஒருபேருந்தில் வைத்து தாக்கி, பலரும் பெண்ணை வன்புணர்ச்சி செய்து பேருந்தில் இருந்து தூக்கி எறிந்திருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

பலத்த காயங்களுக்குள்ளாகியிருந்த இந்தப் பெண் சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் நாட்டில் பெண்களது பாதுகாப்பு தொடர்பில் பெரும் உணர்வலைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் உருவாக்கியிருந்தது.(பார்தீங்களா விஷயம் இறந்தகாலமாகிவிட்டது இதுவும் கடந்து போகும் நாம் பிணம் தின்னும் கழுகாகிவிடுவோம் எல்லோரும் சமம் )

6 கருத்துகள்:

  1. ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013
    பெண்ணே என் கண்ணே கண்ணின் மணியே

    முகத்தில் அமிலம்
    ஊற்றப்பட்ட பெண் மரணம்
    செய்தி?


    செய்தி கேட்டதும் நெஞ்சம்
    பதை பதைக்கிறது

    இறைவா ஏன் இந்த சோதனை?
    ஏன் தொடருகிறது
    இது போன்ற வேதனை. ?

    பெண்ணே என் கண்ணே
    கண்ணின் மணியே



    சிவனில் பாதியாய்
    உன்னை மனிதர் வணங்குகிறார்
    கோயிலில் சூடம் ஏற்றி

    தெருவிலோ உன் அழகு முகத்தை
    கண்டால் உன்னை சுவைக்க
    நினைக்கின்றார் சில பாதகர்கள்

    ஒரே பார்வையால்
    உன்னை புணருவதாக
    கற்பனையில் படம்
    ஓட்டுகிறார்கள் தங்கள் மனதில்
    சிலர் புண்ணாக்குகள்
    உன் உடலை புண்ணாக்குகின்றன

    தகுதியற்ற அக்கருங்காலிகளை
    நீ ஏற்க மறுத்தால் அமிலம்
    ஊற்றி சிதைக்கின்றார் இந்நாட்டில்

    நெஞ்சை உருக்கும்
    இந்த கோர சம்பவங்கள்
    நாள்தோறும் தொடருகிறதே
    இந்திய திருநாட்டினிலே

    இதை தடுப்பாருமில்லை
    பாதகம் செய்தவருக்கு
    தண்டனை கொடுப்பாருமில்லை.

    பெண்ணே நீ இல்லாது
    இந்த உலகம் இயங்கிடுமோ?
    பெண்ணே நீ இல்லாது உயிர்கள்தான்
    இவ்வுலகில் தோன்றி பெருகிடுமோ?

    அறிவு தெய்வம் நீ கோயிலில்
    கலைகளை அள்ளித்தரும் கலைவாணி நீ
    அரக்கர்களை அழிக்கும் காளியும் நீ
    பண்டிகை நாட்களில் மட்டும்

    செல்வதை தரும் இலக்குமியும் நீ
    இந்த உலக மாந்தர்களின் இலக்கும் நீ

    நீயும் அவர்களின் பேச்சை நம்பி
    அவர்களிடம் தங்குகிறாய்
    அவர்கள் செய்யும் அநீதிகளுக்கு
    துணையாயும் இருக்கிற்றாய்

    என்னே உன் தத்துவம்
    எனக்கு புரியவில்லை?

    அழகு பெட்டகமே உன்னை ரசிக்க
    இந்த மானிடர்க்கு மனதில்லை

    உன்னை வேட்டையாடி புசிக்க
    மட்டுமே விரும்புகிறது வயது
    வேறுபாடு காணாமல்

    பெண்ணிற்கு பெற்றோர் காவல்
    பருவ வயது வரும் வரை

    பருவம் வந்து மணந்தபின்
    கணவன் காவல்

    வயதான பின் தன்
    குழந்தைகள் காவல்

    திக்கற்றோர்ர்க்கு தெய்வமே துணை
    என்று வகுத்து தந்தனர் நம் முன்னோர்.

    காலம் மாறியது. களங்களும் மாறியது.

    பெண்ணே இன்று உனக்கு
    வீட்டிலும் பாதுகாப்பில்லை

    வெளியிலும் பாதுகாப்பில்லை

    யார் மூலம் நீ நிர்மூலம் ஆவாயோ
    அந்த இறைவனே அறிவான்.


    தவறு செய்பவர்களை
    தடுத்து காப்பு போட
    காவல் துறை இருந்தும்

    சட்ட புத்தகங்களை
    மேற்கோள் காட்டி நீதிபதிகளும் உண்டு
    தண்டனை தர நீதிமன்றங்களும் உண்டு

    அரக்க மனம் கொண்ட
    மனித மிருகங்களை சிறையில் அடைக்க
    சிறைசாலைகளும் உண்டு இந்நாட்டில்
    இருந்தும் என்ன செய்ய ?

    சிறையில் உள்ளோரை விட சிறைக்கு செல்லாமல்
    பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்க
    வாய்ப்பை நாடி சுற்றி திரியும் பாதகர்கள் நிறைந்த
    நாடாகிவிட்டது இன்றைய பாரதம்

    பள்ளியில் கல்வி பெற ஆசிரியர்களிடம்
    பெண்ணை அனுப்பினால் அங்கும் பாதகர்கள்
    சிலர் கலவியை பற்றி போதிக்கிறார்
    போதிசத்துவன் உதித்த இந்நாட்டில்

    அன்று பாஞ்சாலிக்கு ஏற்பட்ட கதி இன்றும் தொடருகிறது.
    அவளை கண்ணன் வந்து காப்பாற்றியதாக
    இன்னும் கதை விட்டுகொண்டிருக்கிறது
    உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறது
    இந்த ஒழுக்கம் கேட்ட சமூகம்.

    பஞ்சமா பாதகத்தில் ஈடுபடுகிறார்கள் பாதகர்கள்
    எழுத்தில் மட்டும் அரங்கேறிய இந்த வன்முறைகள்
    பெண்களை துன்புறுத்தும் காட்சிகள் அதிலும்
    பெண்களே பெண்களை இழிவு செய்யும் காட்சிகள்
    இன்று படமாய் ஒலி ஒளி காட்சிகளாக தினமும்
    மக்கள் மத்தியில் 24 மணி நேரமும்
    வலம் வருகின்றன கைபேசியில்,
    மக்கள் ஒழுக்கத்திற்கு உலை வைக்கும்
    தொலை காட்சிகளில்

    மரத்து போன மனித உள்ளம் கண்டு ரசிக்கிறது
    தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே
    என்று மனதிற்குள்

    நடிகர்களும் நடிகைகளும்
    போட்டி போட்டு நடிக்கின்றார் அக்காட்சிகளில்
    வெட்கமில்லாமல். கோடி கோடியாய் காசை அள்ள

    இன்று எல்லாம் நடிப்பாய் போய் விட்டது
    நடிப்பவர்கள் நாடாளுகிறார்கள்.நடிப்பவர்கள்
    சமூகத்தில் மெச்சப்படுகிறார்கள்.

    ஆனால் பாதிக்கபடுபவர்களோ துன்பத்திலும்
    துயரத்திலும் துடிக்கிறார்கள்.மடிகிறார்கள்.

    சம்பவம் நடந்த பின்
    ஆறுதலும் தேறுதலும்
    சொல்ல கூட்டம்
    அலை மோதுகிறது

    ஆர்பாட்டங்கள் அனுதினமும்
    அது பாட்டிற்கு நடைபெறுகிறது.

    காவல் துறையும் ஊடகங்களும்
    ஆளும் அரசுகளும் அளவளாவி
    அறிக்கை விட்டுவிட்டு
    அடுத்த செய்திக்காக
    காத்திருக்கின்றன

    அவலங்களை தடுக்க எதையும்
    செய்ய இயலாமல் வேடிக்கை
    பார்க்கும் இந்த மனித சமூகமும்கூடத்தான்

    இறைவா என்று மாறும்
    இந்த அவல நிலை?
    உன் படைப்புகள் படும் துன்பங்களை
    நீ காணுகிறாய் அனுதினம்

    ஆனால் மௌனம் சாதிக்கிறாய்
    அது ஏன்?
    அதுதான்
    எனக்கு புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இது? என்ன இது? நல்ல எழுத்துகளையும் என் எண்ணங்களின் பிரதிபலிப்பை காணும் போதெல்லாம் நான் தூக்கமின்றி போவேன் அந்த எழுத்துகள் என் மனத்திரையில் ஒடிகொண்டிருக்கும் இப்பொழுது அந்த நிலையை உங்கள் இந்த கவிதை எனக்கு கொடுத்துவிட்டது என் மனகோ பங்களைஎல்லாம் என் குமுறல்கள் எல்லாம் உங்கள் கவிதையில் கண்டுவிட் டு துக்கமும் நன்றியும் ஒருங்கே எழுகிறது இதற்கு நன்றி சொல்ல மாட்டேன் சகோதரா இந்த தாக்கம் எப்பொழுதும் எப்பொழுதும் உங்களுக்குள் பொங்கட்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்

      நீக்கு
    2. நன்றிக்கு வித்தாகும்
      நல்லொழுக்கம்
      தீயொழுக்கம்
      என்றும் இடும்பை தரும்

      இன்று நல்லொழுக்கம்
      நாட்டினிலும் இல்லை
      வீட்டினிலும் இல்லை

      மனிதர்கள் மனத்தினிலும்
      (இனி )இல்லை
      இந்த உலகம்
      இனி இப்படிதான் இருக்கும்.

      தீமைகளை கண்டு கூடி
      கூச்சல் போட்டு கலைந்து போகும்
      கூட்டங்கள்தான் இந்த உலக மக்கள்.

      காற்றால் கலைந்து
      போகும் மேகங்கள் போல.

      சில மேகங்கள் மழையை சிந்துவதுபோல
      சில மனிதர்களிலிருந்து சிந்தப்படும்
      கண்ணீரை போல.
      ஆறுதல் வார்த்தைகள் வெளிப்படும்
      சம்பவங்கள் நேரும்போது.
      அவ்வளவுதான்.

      ஒரு பெண் சுதந்திரமாக
      வாழ வேண்டுமென்றால் அவள்
      தந்திரமாக வாழ
      கற்றுக்கொள்ளவேண்டும்
      /கற்று கொடுக்கப்படவேண்டும்

      உணர்ச்சிகளை
      கட்டுப்படுத்திக்கொள்ள
      பயிலவேண்டும்.
      எல்லை மீறினால்
      தொல்லைகளை சந்தித்துதான்
      ஆகவேண்டும்.

      காவல் துறையும் சட்டங்களும்
      உணர்சியற்றவை.
      அவைகள் சாட்சிகளை
      மட்டும் பார்க்கும்

      மன சாட்சியை பார்க்காது
      என்பதை இந்த நாடு
      எப்போது புரிந்துகொள்ள போகிறதோ
      அப்போதுதான்
      இந்த நாடு உருப்படும்.

      நீக்கு
    3. நன்றிக்கு வித்தாகும்
      நல்லொழுக்கம்
      தீயொழுக்கம்
      என்றும் இடும்பை தரும்

      இன்று நல்லொழுக்கம்
      நாட்டினிலும் இல்லை
      வீட்டினிலும் இல்லை

      மனிதர்கள் மனத்தினிலும்
      (இனி )இல்லை
      இந்த உலகம் இனி
      இப்படிதான் இருக்கும்.

      தீமைகளை கண்டு கூடி
      கூச்சல் போட்டு கலைந்து
      போகும் கூட்டங்கள்தான்
      இந்த உலக மக்கள்.
      காற்றால் கலைந்து
      போகும் மேகங்கள் போல.

      சில மேகங்கள் மழையை சிந்துவதுபோல
      சில மனிதர்களிலிருந்து சிந்தப்படும்கண்ணீரை போல.ஆறுதல் வார்த்தைகள் வெளிப்படும்
      சம்பவங்கள் நேரும்போது. அவ்வளவுதான்.

      ஒரு பெண் சுதந்திரமாக
      வாழ வேண்டுமென்றால்
      அவள்
      தந்திரமாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும்
      /கற்று கொடுக்கப்படவேண்டும்
      உணர்ச்சிகளை
      கட்டுப்படுத்திக்கொள்ள
      பயிலவேண்டும்.

      எல்லை மீறினால்
      தொல்லைகளை
      சந்தித்துதான்
      ஆகவேண்டும்
      .
      காவல் துறையும் சட்டங்களும்
      உணர்சியற்றவை.

      அவைகள் சாட்சிகளை
      மட்டும் பார்க்கும்
      மன சாட்சியை பார்க்காது
      என்பதை இந்த நாடு
      எப்போது புரிந்துகொள்ள போகிறதோ
      அப்போதுதான் இந்த நாடு உருப்படும்.

      நீக்கு
    4. எல்லை மீறினால்
      தொல்லைகளை
      சந்தித்துதான்
      ஆகவேண்டும்//



      உண்மைதான் இந்த பாட்டு போல் இல்லையா
      பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
      கருடா சொக்கியமா ??????
      யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சொக்கியமே என்று கருடன் சொன்னது
      அதில் அர்த்தம் உள்ளது
      .

      நீக்கு
    5. ஆம் நிச்சயம் அர்த்தம் உள்ளது.

      கண்ணதாசனின் வரிகள்
      அனுபவத்தில் விளைந்தவை

      அது என்றும் வாடா மலர்கள்
      எத்தனை காலம் ஆனாலும்
      அதன் தாக்கம்
      என்றும் மாறாது
      நம் மனங்களை விட்டு.


      யாரும் இருக்கும்
      இடத்தை பொருத்தது.

      இருக்கும் இடத்திலிருந்து
      சேரும் இடத்தையும்
      பொருத்தது

      அதுதான் விதி என்பது.
      அதுதான் வினைப்பயன்.

      நல்ல எண்ணங்களோடு
      நல்ல வினைகளை செய்து
      நல்லவர்களோடு இருந்தால்
      நன்மைகள் விளையும்

      தீயவர்களை கண்டால்
      தீ போல் விலகிக் கொள்ளவேண்டும்

      நிலையின் திரியாது
      அடங்கி இருத்தல் வேண்டும்
      என்பது வள்ளுவர் குறள்

      பால்திரிந்தால்.
      தயிர் ஆவதை தவிர்க்க முடியாது

      நீக்கு