செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் வைரஸ் சாகுமா?


ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் வைரஸ் சாகுமா? - அறிவியலில் கற்பிதங்கள்

ஆண்டிபயாடிக் மருந்து சாப்பிட்டால் வைரஸ்

கிருமிகள் சாகும் என்ற ஒரு நம்பிக்கை நம்மில் பலரிடையே இருக்கிறது. சளிக்கும் இருமலுக்கும்

மருத்துவரிடம் செல்லாமல் நாமாகவே மருந்து கடைகளுக்கு சென்று ஆண்டிபயாடிக்

மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொள்ளும் ஒரு வழக்கத்தை இந்தியாவில் பார்க்கலாம்.

உண்மையில் ஆண்டிபயாடிக் மருந்துகள் வைரஸ்களைக் கொல்லுமா? பாக்டீரியா என்று

சொல்லப்படுகின்ற நுண்ணுயிரிகளைத்தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொல்லுமே ஒழிய

வைரஸ்களைக் கொல்லாது. ஏனென்றால் வைரஸ்கள் என்பவற்றை ஒரு வகையில் பார்த்தால்

உயிருள்ள வஸ்துக்கள் என்றே சொல்ல இயலாது. எனவே சளி இருமல் எல்லாம் வந்தால்,

ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டு அவற்றை குணப்படுத்த முடியாது. வைரஸ் தொற்றுக்கு

ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் பல சந்தர்ப்பங்களில் பிரச்சினை மோசமாகத்தான் செய்யும், உடலின்

நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துபோகும். எனவே மருத்துவர்கள் சொல்லும்போது மட்டுமே

ஆண்டிபயாடிக் சாப்பிடுங்கள்.


1 கருத்து: