வியாழன், 7 பிப்ரவரி, 2013

என் செல்லத்துக்கு ஆப்பு வருமா ?

என் செல்லத்துக்கு ஆப்பு வருமா ?


வரும் பிப்ரவரி 16  தேதி அன்று நம்  வாழும் வீட்டை கடந்து செல்ல ஒரு விருந்தாளி  வர போவதாக விஞ்ஞானிகள் அது நம் வீட்டை உரசி   செல்லும் வாய்ப்பு இருக்கிறதா என்று கணிக்க முயற்சித்ததில் கொஞ்சம் குறைவான வாய்ப்பு தான் என்று சொல்கின்றனர் ஆனால் அது நம் வீட்டை எட்டி பார்ப்பதால் நம் உடலோடு24 மணி நேரமும்  ஒட்டி உறவாடும் செல்லதிற்கு ஆப்பு வருமோ ?

அட புரியலையா ?

விளக்கம் ;-
வரும் பிப்ரவரி16- ம் தேதி அன்று நம் நம் பூமியை கடந்து செல்ல பெரிய  பாறை ஒன்று வர இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்து இருக்கிறார்கள் 
அதன் பெயர் -டி.எ 14
அதன் எடை சுமார் கிட்டதட்ட 30  ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்கின்றனர் .
இது பூமிக்கு அருகே வந்தாலும் பூமியை உரசி செல்லும் வாய்ப்பு மிக குறைவு என்றே கணிகின்றனர்.ஆனால் இது நம் அருகே வருவதனால் நம் செயற்கை கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக நினைகின்றனர் . இதனால் நம் செல்ல போன்களுக்கு ஆப்பு வந்துவிடுமோ ?அன்று சிக்கனலில். 
நல்ல வேளை பிப்ரவரி யை அது பூமியை  தொட விரும்பவில்லை 
காதல் தெய்வீ கமானதுதான் இல்லையா ?

5 கருத்துகள்:

  1. /// நல்ல வேளை பிப்ரவரி யை அது பூமியை தொட விரும்பவில்லை ///

    பிப்ரவரி 14-யை...

    அன்று மட்டும் தான் அன்பா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட வருஷத்தில் ஒரு நாளில்லாவது உண்மையாய் அன்பை பரிமாறபடட்டுமே
      மீதி நாட்களை தான் கணக்கு, காரியம் ,சுயநலம் ,ஈகோ ,கம்பரிசன் ,கவலைகள் இப்படி பல பல விஷயங்கள் அமிழ்த்தி விடுகின்றன

      நீக்கு
  2. செல் போன் இப்படி ஒரு ஆபத்தை எதிகொள்ளப் போகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செயற்கை கோள்களுக்கு வரலாம் சொல்ல பட்டு இருக்கிறது விஞ்ஞானிகளால் பாப்போம் அது எவ்வளவுக்கு உண்மை என்று

      நீக்கு
  3. பிப்ரவரி 16 தேதி அன்று நம் வாழும் வீட்டை கடந்து செல்ல ஒரு விருந்தாளி //

    இவர் நாம் அழையா விருந்தாளி அல்லவா!
    நல்லதை செய்வார் என்றால் வரலாம்.
    செயற்கை கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு