புதன், 20 பிப்ரவரி, 2013

கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் -பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன்


காலம் மாற்றதின்  இதோ மற்றோர் உதாரணம்
 
  நம் சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் இருண்ட, ஆனால் முக்கியமான ஒரு நிகழ்வு இது  காலனிய ஆட்சி காலத்தின் போது 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று, ஜாலியன்வாலா பூங்காவில் கூடியிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக் கணக்கானோர் மரணமடைந்தனர்.(வாழனும் என்பதற்க்காக இறந்தவர்கள்)

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கேமரன்-பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் பூங்காவிற்கு சென்ற போது டேவிட் கேமரன் அங்குள்ள வருகையாளர் ஏட்டில் இந்தக் கருத்துக்களை எழுதியுள்ளார்.

இந்தச் சம்பவம் பிரிட்டனின் வரலாற்றில் 'மிகவும் அவமானகரமான ஒன்று' என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.ஜாலியன்வாலா பாக் படுகொலையை மறக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார் .(மறப்போம் மன்னிப்போம் என்ற சொல்லுக்குள் மறைந்து வாழ்பவர்கள் நாங்கள்) 
 
 அதே நேரம் இந்தச் சம்பவம் தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தும் அவர் மன்னிப்பு கோரவில்லை.

பஞ்ச் -( அவங்கல்லாம் அவங்க கிட்டேயே பாவ மன்னிப்பு கேட்டுகிடுவாங்க இல்ல.)

15 கருத்துகள்:

  1. ஏதோ இதுவரைக்கும் அவர்கள் செய்தது தப்பு தான் என்கிற மாதிரியாவது எழுதினாரே என்று திருப்தியடைவது தான் நம்மால் முடியம்.
    வேறென்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  2. தவறு செய்தவன் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
    ஏதோ இந்த அளவிற்கு மனிதாபத்தோடு
    நடந்து கொண்டதற்கே நாம் அவரை மதிக்க வேண்டும்.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி தொடர்ந்து கருத்துகள் கூறுங்கள்

      நீக்கு
  3. ராஜலக்ஷ்மி சொன்னது மிகச் சரியே!
    மூன்று மாதத்தில் 60 பதிவுகள் எழுதி விட்டீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி தேர்ச்சி பெற்ற நீங்கள் எல்லாம் தொடரந்து வர வழியும் கருத்துகள் கூறுங்கள்

      நீக்கு
  4. அவரது நேர்மை பிடித்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கு நல்லது கண்டாலும்கவிஞ்சர்கள் வாழ்த்த விரும்புவார்கள் உங்கள் கூற்று உண்மை

      நீக்கு
  5. மன்னிப்பும் கேட்டு உயர்ந்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  6. இப்பவாச்சும் உணர்ந்தார்களே நண்பா!

    பதிலளிநீக்கு

  7. வணக்கம்!

    வரலாறு

    வருகின்ற தலைமுறைக்கு வாழ்க்கைப்பாடம்

    வரலாறு கண்ட வழிகள்நம் வாழ்வின்
    அரண்என எண்ணுக ஆய்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி ஆம் வரும் தலைமுறைகள் கண்டிப்பாக இந்த வரலாறுகள் அறிவது அவசியம்
      மேலும் வந்து கருத்துகள் கூறுங்கள் வழி நடத்துங்கள்

      நீக்கு
  8. இன்றைய செய்தியில் ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியின்போது இருந்த - தற்சமய வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் - 98 வயது - அப்போது அவர் 4 வயதுச் சிறுவனாம் - இந்த மன்னிப்புக் கேட்ட சடங்கை வரவேற்றிருப்பதாக படித்தேன். நீங்கள் படித்தீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அப்படியா எதில் இருந்து அந்த செய்தி
      மேலும் வந்து கருத்துகள் கூறுங்கள் வழி நடத்துங்கள்

      நீக்கு