ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

மருந்துVs மனிதன்


மிச்சமிருக்கும் டானிக்,மருந்துகளை பின்னொரு நாளில் பயன்படுத்தலாமா ?

உலகத்திலே 75% மக்களுக்கு தோன்ற சந்தேகம் தாங்க இது ஆனாலும் தோணும் போதே அதை  துருவி பாக்கம அலட்சியமும் படுத்திடுவாங்க

ஏன் மருத்துவர்கள் கூட இந்த விஷயத்தில் தன் சொந்த வாழ்கையில் செய்யரவங்கதான்

அதுவும் நாம மக்கள் இருக்காங்க பாருங்க................. இந்த விஷயத்திலே கஞ்சதனத்திற்கு பெயர்போனவங்க! குண்டக்க மண்டக்க செய்யறதில் பலே கிலாடிங்க  ஒரு பழமொழி இருக்கு 
பூசணி காய் போகிற இடம் தெரியாது கடுகு போகிற இடம் தெரியும்னு
இது மாதிரிதான் நாம
சரி விஷயத்திற்கு போலாம்,

ஒரு நோய்க்கு தரபட்ட மருந்துகளை மீதி இருந்தால் அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னால் பயன்படுத்தலாமா ?

உண்மைதான் .
என்றாலும் எல்லா மருந்துகளையும் இவ்வாறு பயன்படுத்த முடியாது சிலவற்றை மட்டும் பயன்படுத்தலாம்
எடுத்துகாட்டு: காய்ச்சல் மருந்து,வாந்தி மருந்து ,வயிற்றுவலி மருந்து

இந்த மருந்துகளை  வேண்டிய நாட்கள் வரை  கெடாமல் பாதுகாத்து கொள்ளவது என்பதை மருத்துவரிடமே கேட்டு தெரிந்து கொள்வது நல்லது .
பொதுவாக பொடி போன்று இருக்கும் மருந்துகளை தண்ணீரில் கலந்து விட்டால் அதை ஒரு வாரத்திற்க்குள்  உபயோகித்து விடவேண்டும் .
எந்த மருந்தையும் அதன் காலவரையரை(Expiry Date) முடிந்து விட்டால் கண்டிப்பாக உபயோகிக்க கூடாது.... கூடாது.... கூடாது.


சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் (ம்கும் அப்ப பேப்பரு நோட்டு எல்லாம் எதுக்கு) கடவுளே இது பழமொழியுங்கோ அதனால 
முக்கியமா ஆரோக்கியதிற்கு  உண்டான வழி முறைகளை கடை பிடியுங்க.

7 கருத்துகள்:

  1. நல்ல விழிப்புணர்வு பதிவு.
    தொடருங்கள்,

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவையாக சொல்லி இருந்தாலும் நல்ல கருத்து...

    பதிலளிநீக்கு

  3. /// எந்த மருந்தையும் அதன் காலவரையரை(Expiry Date) முடிந்து விட்டால் கண்டிப்பாக உபயோகிக்க கூடாது.... கூடாது.... கூடாது.///

    ஆமாம் இந்தியாவில் உள்ள பார்மஸிகளில் Expiry Date யை அழித்துவிட்டு புதிய Expiry Date யை பதித்துதான் விற்பதாக கேள்விபட்டேன். அதனால் இந்த Expiry Date என்பதே இந்தியாவில் கேலிக்குறியதாக மாறிவிட்டதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கலாம் யாரு ? எரிகல் வருது வந்துடிச்சி சொன்ன கூட எட்ட நின்னு வேடிக்கை பார்ப்போம் .
      தத்துவ பாடல் கேட்டதில்லையா
      என்னடா பொல்லாத வாழ்கை அட என்னடா பொல்லாத வாழ்க்க ........
      சும்மா இதுக்கு போய் !!!!!!!!அலட்டிகலாமா ?

      நீக்கு
  4. நல்ல விழிப்புணர்வு பதிவு.
    நன்றி.

    பதிலளிநீக்கு