வியாழன், 28 மார்ச், 2013

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது


ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வாழ்க்கையில் உபயோகப்படுத்த முடியுதான்னு பார்த்தா முடியாமலே இருக்குங்க

அட எதோ படிச்சோமா வேலைக்கு போனோமா நாலு காசு அப்புறம் நிறைய காசு சொத்துன்னு பார்த்தோமா போயிடு இருக்கிறத விட்டுபுட்டு அட போங்க இப்படி ஒரு ரகம்னா

முதல் ரேங்க் எடுக்கறவன் எல்லாம் புத்திசாலின்னு சொல்ல முடியலை  இன்னிக்கு தேதிக்கு முக்காவாசி பேர் மனபாடம் பண்ணி படிச்சதை எதோ  ஜீரணம் ஆகாமல் சாப்பிட்ட உணவை வாந்தி எடுப்பது  போல் போய் பரிட்சையில் போய் எழுதிட்டு வந்துடுவாங்க மார்க்கையும் அள்ளிடுவாங்க

 ஆனா அவங்களை பிறகு அவங்க எழுதியதையே பத்தி எதாவது கேள்வி கேட்டு பாருங்க புரிந்து கொள்ள அவங்க முழி முழி முழிப்பாங்க எதோ புது கிரகத்தை பற்றி கேட்டு விட்டது போல் இவங்களை எல்லாம் என்ன செய்வது அதைவிட இன்னிக்குதலைமுறையில்  படிகிறவங்க எல்லாம் எதோ அவங்கதான் ரொம்ப அதிக அறிவாளி மாதிரியும் போன தலைமுறையில் இருக்கும்  அவங்க படித்த பெறோர்கள் கூட ஒன்னும் தெரியாதவங்க அப்படின்னு ஒரு இமேஜை கொடுப்பாங்க அதுதாங் கொஞ்சம் கர்வம் கர்வம் சொல்லுவோமே அது புடிச்சி ஆட்டுது இன்றைய  தலை முறையை, அதுக்குதான் இது ......

ஒரு முனிவர் இருந்தாராம் அவருக்கு ஒரு மகன் இருந்தான் அவன் முறைபடி வேதங்களை கத்துக்க ஆசைப்பட்டானாம் தன் அப்பா கிட்ட சொல்றான் நீங்களே எனக்கு குருவா இருந்து எல்லாத்தையும் சொல்லித்தாங்க சொல்றான். 
அந்த முனிவர் அதுக்கு மறுத்து விடுகிறார் ஏன்னா குருவா இருந்தா கத்து கொள்ள வருகிறவனிடம் கண்டிப்பாக இருக்கனும் அப்பத்தான் முறைப்படி கல்வியை போதிக்க முடியும் கத்துக்க வரவனும் அந்த கண்டிப்புக்கு பணிந்து  கல்வியை ஒழுங்க கத்துகனும்.
மகனிடம் கண்டிப்பு செய்ய முடியாமல் போகலாம் என்று அவர் வேறு ஒரு முனிவரிடம் அவனை கற்று கொள்ள அனுப்பினார்.

சர்தான் நம் அப்பாக்கு கூறு கொஞ்சம் கம்மி போல இருக்கு அதன் வேற இடத்துக்கு அனுப்பரார்னு நினைச்சிகிட்டான் பிள்ளை சில  ஆண்டுகள் பிறகு குருகுல வாசம் முடிந்து அவன் திரும்பிவரான்.

ஆ ஒஊனு உதார் காண்பிக்கிறான் அப்பா அவனிடம் நீ என்ன கற்று கொண்டாய் ?என்னென முறைகளை  தெரிந்து கொண்டாய்? இறைவனை பற்றி தெரிந்து கொண்டாயா அவன் இருப்பதை விளக்க முடியுமா ? இப்படியெல்லாம் சரமாரியா கேள்வியை அடுக்குறார்.

ஆரம்பிச்சிட்டார்யா ஆரம்பிச்சிட்டார் நொந்துகிறான்  நம் புள்ளைக்கு எதுக்கும் பதில் சொல்ல வரவில்லை ஆனா எல்லாம் தெரிந்தவன் போலவே ஆக்டிங்கு கொடுக்கிறான்
அவருக்கு புரியாத மாதரி எல்லாம் பதில் சொல்லி வைக்கிறான் அப்படியா? சரி நீ சொன்னதை நிருபிக்க முடியுமா? அப்படினு ஒரு புரோஜக்டை கேக்கறாரு நம்ம புள்ளையாண்டான் இப்ப முழிக்க ஆரம்பிச்சிடான்
அப்பா முனிவர் ஒரு பாத்திரத்தை எடுத்து  தண்ணீரை நிரப்பினார். மகனிடம் இரண்டு கை நிறைய உப்பு கொண்டு வரசொல்லி அந்த தண்ணியில் அதை போட்டு கலக்க சொல்லறாரு கொஞ்ச நேரம் கழித்து நீ கொண்டு வந்த உப்பு இப்ப எங்கே? என்று கேட்கிறார். 
என் கையில இருந்தது இப்ப பாத்திரத்தில் இருக்கு  அப்படின்னு பிள்ளை சொல்றான். 
அதில் கொஞ்சம் எடுத்து கொடுக்க முடியுமா? என்று கேட்கிறார்.
.
லூசாப்பா நீ என்பது போல்  லுக்கு விடறான் மகன் 
கொஞ்சம்  தண்ணியை எடுத்து அவன் வாயில் ஊற்ரி விட்டு இப்ப உப்பு எங்க இருக்கு னு? மறுபடியும் கேக்கறார் .
அது இந்த தண்ணியில் கலந்திருக்கு ஆனா காட்ட முடியாது உணரத்தான் முடியும் மகன் சொல்லறான்.
இப்ப முனிவர் சிரித்து கொண்டே அவரு புரோஜக்டை பத்தி சொல்றாரு, 'தண்ணியில் அது ஒவ்வொரு துளியிலும் சமமா கலந்திருக்கு நீ பார்க்க முடியாததை உணர முடியும் அது போல்தான் கடவுளும்  கடவுள் படைப்பில் உள்ள எல்லாவற்றிலும் எல்லா ஜீவராசியிலும் அது கலந்திருக்கிறது நீ உன் கண்களால் பார்க்க முடியாது உணர வேண்டும் என்று விரும்பினால் எல்லாவற்றிலும் அதை  நீ காண்பாய்'
இப்ப புள்ளைக்கு உண்மை புரியுது அப்பாவின் திறமையும் புரியுது கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்று புரியுது அடக்கமாய் வாழ கற்று கொண்டான்.



ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்றால் என்னனு இப்ப தெரிஞ்சுதா

வெறும் ஏட்டு கல்வி வாழ்க்கைக்கு உதவாது. அனுபவ படிப்பே வாழ்க்கையை மேம்படுத்தும் . கல்வியினால் அறிவு பெருகும். அறிவை பயன்படுத்தி அனுபவத்தை பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் . பட்டத்தை வைத்துகொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை. குளத்தில் இறங்கினால்தான் நீச்சல் அடிக்க முடியும். அனுபவம்தான் மனிதனின் ஏணிப்படி.  


11 கருத்துகள்:

  1. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுதான்...முனிவர் கதையை சூப்பரா சொல்லி இருக்கிங்க..

    பதிலளிநீக்கு
  2. திமிர்ந்த ஞான செருக்கு என்பது இதுதானா?
    நிறைய நடக்கிறது இந்த மாதிரி.
    ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை அழகான கதை வாயிலாக விளக்கி விட்டீர்கள் மலர்.

    பதிலளிநீக்கு
  3. அருமை தோழரே!
    தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஆற்றிய இந்த பணியானது இந்திய திருநாட்டின் மனித வளம் மேம்பட உதவும், வாழ்த்துகிறேன்! தோழரே தொடரட்டும் உங்கள் பணி
    இந்த பதிவை பகிர்வதன் மூலம் நானும் எனக்கு வாய்ப்பளித்த நாட்டுக்கு எனக்களித்ததின் ஒரு பகுதியை திருப்பித் தந்துவிட்டேன் என்ற மனநிறைவு அடைகின்றேன்

    பதிலளிநீக்கு
  4. பதிவும் அருமை சொன்ன கதையும் அருமை ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவுமோ இல்லையோ ஆனா ஒரு நல்ல பதிவு போட உங்களுக்கு உதவி இருக்குது

    பதிலளிநீக்கு
  5. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை அழகான கதை மூலம் அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. இன்று தான் உங்கள் தளத்தில் நுழைகிறேன். அடிக்கடி குட்டிக் கதை சொல்வீர்களோ?

    பதிலளிநீக்கு
  7. குளத்தில் இறங்கினால்தான் நீச்சல் அடிக்க முடியும். அனுபவம்தான் மனிதனின் ஏணிப்படி.

    அருமையான அனுபவப்பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் அனுபவம் தான் சிறந்த கல்வி!

    பதிலளிநீக்கு
  9. அனுபவத்தின் பெருமையை அருமையான கதை மூலம் உணர்த்தியமைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு