ஞாயிறு, 24 மார்ச், 2013

என்றும் பாயி-பாயி ஆக



வெற்றிக்கு வேண்டும் மறுபரிசீலனை

இது என்ன புதுசா இருக்கே அப்படினு நினைக்கிறது புரியுது

ஆமாங்க ஆமாம் எந்த சூழ்நிலையிலும் எந்த முடிவு எடுத்தாலும் அந்த சூழ்நிலையிலிருந்து சிறிது விலகி இருந்து அந்த முடிவை மறு பரிசீலனை செய்வது அவசியம் அப்பதான் அந்த முடிவு சரியான பாதை நோக்கியபடி இருக்கும் வெற்றியை அறிமுக படுத்தும்.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிட்டால் எப்படிங்க சில நேரம் நாலுகால் என்று  சொல்லும் போது யார் கண்ட அது நாயாகவும் புலியாகவும் கூட இருக்கலாம் முடிவை மறு பரிசீலனை செய்யுங்க நம்மை காப்பாற்றி கொள்ள.

அன்று மறுபரிசீலனைக்கு  உட்பட்டு இருந்தால் இன்று வரை நடக்கும் பெரிய தொடர் வரலாற்று வன்முறையை  தடுத்து இருக்கலாமோ? அது தான் நாம் சுதந்திரம் அடைந்த போது எடுத்த மாபெரும் முடிவு இந்திய பிரிவினை அன்றே காங்கிரஸ் தலைவர்கள் அனனவரும் ,ஜின்னாவும் தங்களால் எடுக்க பட்ட முடிவை மறுபரிசீலனை செய்திருந்தால் இன்று நாம் என்றும் பாயி-பாயி ஆக இருந்து இருக்கலாம் ஒரு துணைக்கண்டத்தையே உருவாக்கி இருக்கலாம்  உலகத்திலேயே ஆளுமை நிறைந்ததாக இருந்திருக்கலாம்  யார் கண்டா  இந்திஸ்தான்? அல்லது  பாக்ந்தியா ? கூட பேர் வந்திருக்கலாம்.

ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் உள்ள சாதக பாதகங்கள் அலசி ஆராயணும் முதலியே சொல்லிவிட்டோமே எப்படி பின்வாங்குவது என்று ஈகோவோடு இருந்தால் எப்படி ?


இன்றைய பவர் பொதிந்த நீண்ட ஆயுளை கொண்ட கட்சிகள் அனனத்தும் தன் கட்சி நீண்ட நாள் வாழ முடிவை மறு பரிசீலனை செய்ததால் தான் இன்றும் இருக்கிறது 



சரி நம்ம கண்ணகி  கதையே எடுத்துகோங்க மன்னன் நெடுஞ்செழியன் கோவலனை குற்றவாளி என்ற முடிவை கொஞ்சமே கொஞ்சம் மறுபரிசீலனை  செய்து இருந்தால் இன்னைக்கு கண்ணகி சிலையும்  வந்து இருக்காது  அன்னைக்கு மதுரையும் எரிஞ்சிருக்காது உணர்ச்சிவசப்படும் போது எடுக்கப்படும் முடிவுகள் எல்லாம்  புத்தியை மழுங்க அடித்துவிடும்.

ஒரு முடிவில் பிடிவாதமாக இருப்பது சில நேரம் சரியானதாக இருக்காது தேவை பட்டால் அந்த முடிவை மறுபரிசீலனை செய்வது தவறானதாகவும் இருக்காது இந்த முறையை கடை பிடிக்காத்தால் தான் சரித்திரத்தில் பல கருப்பு பக்கங்களை நாம் பார்க்க முடிகிறது ஹிரோஷிமாவின் தாக்குதல் போன்று.

சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றிக் கொள்வதாலேயே உயிரினங்கள் இன்னுமும் உலகத்தில் நீடித்து வாழ்கின்றன ஒரு முடிவெடுக்கும் போது அது நமக்கு வெற்றி வாகை கொண்டுவருமா ?என்று அந்த முடிவை மறுபரிசீலனை செய்வதால் நமக்கு வளர்ச்சியை கொடுக்கும்இல்லாவிட்டால் சில நேரம் நம் முடிவுகள் நமக்கு தேக்க நிலையையும் உண்டாக்க வாய்ப்பு இருக்கிறது .

ஆகையால் நம் வாழ்வு தொடர்ந்து நீடிக்க நாம் ஏற்கனவே எடுத்த முடிவுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழ்நிலை வந்தால் அதை மாற்றி அமைக்க  வேண்டிய மனநிலை துணிச்சல் வளர்த்து கொள்ள வேண்டும் .       






ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு...


15 கருத்துகள்:

  1. எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதனை உடனே அமுல் படுத்தாமல் சில நாட்கள் கழித்து மறுபரிசிலனை செய்து பார்த்து செய்யதால் மிக நல்ல முடிவு எடுக்க முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மைதான் நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

      நீக்கு
  2. அப்படிச் சொல்லுங்க...! எதையும் தாங்கும் இதயமும், தளராத மனஉறுதியும் தன்னம்பிக்கையோடு வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப சந்தோஷமா இருக்கு பெரிய அளவில் வழி காட்டியாக இருக்கும் நீங்கள் இதை பற்றி கருத்துரைத்தது நன்றி

      நீக்கு
  3. அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள் முடிவுகளின் முக்கியத்துவத்தை. நல்ல நல்ல உதாரணங்கள் .
    அருமையான பதிவு.
    ஒரு சின்ன சந்தேகம். " மகளிர் கடல் " என்ற வலைத்தளத்தில் எப்படி நம் பதிவை/தளத்தை இணைப்பது. நான் இணைத்துப் பார்த்தேன் . இரண்டு நாட்களாகிவிட்டன. ஆனாலும் என் பதிவை அங்கு பார்க்க முடியவில்லை. என்ன தவறு செய்கிறேன் தெரியவில்லை.உதவினால் நலம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு பதில் கொடுத்திருகிறேன் தோழி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  4. சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றிக் கொள்வதாலேயே உயிரினங்கள் இன்னுமும் உலகத்தில் நீடித்து வாழ்கின்றன ஒரு முடிவெடுக்கும் போது அது நமக்கு வெற்றி வாகை கொண்டுவருமா ?என்று அந்த முடிவை மறுபரிசீலனை செய்வதால் நமக்கு வளர்ச்சியை கொடுக்கும்இல்லாவிட்டால் சில நேரம் நம் முடிவுகள் நமக்கு தேக்க நிலையையும் உண்டாக்க வாய்ப்பு இருக்கிறது .

    ரொம்ப சரியா சொன்னீங்க.பகிர்வு நல்லா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க தோழி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  5. பாயின்னா என்ன? முதல்ல அத சொல்லுங்க.
    நல்ல கருத்துக்கள்! சில முடிவுகளை சிறிது தள்ளிபோட்டால் சில சமயங்களில் நன்மை விளையக் கூடும். உண்மைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடஎன்ன சகோ இந்தியாவின் ஸ்பெஷல் வார்த்தையான பாயி -பாயி தெரியலன்னு சொல்லிடீங்க ம்ம்ம்ம்
      பாயினா சகோ -சகோ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  6. பதறாதகாரியம் சிதறாது என்பார்கள்.
    கோபத்தில் எடுக்கும் முடிவு சரி இருக்காது.
    நின்று நிதானமாய் யோசித்து செய்தால் அல்லது கொஞ்சம் ஒத்திப்போட்டால் நல்ல முடிவு கிடைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. வெற்றிக்கு வேண்டும் மறுபரிசீலனை

    ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
    அந்த வானம் வசமாகும்

    மனமே ஓ மனமே நீ மாறிவிடு
    மலையோ அது பனியோ நீ மோதி விடு...//

    சிறப்பான சிந்தனைப் பகிர்வுகள்...

    பதிலளிநீக்கு