செவ்வாய், 19 மார்ச், 2013

என் தமிழ்ச்சிட்டுகள்


என் தமிழ்ச்சிட்டுகள்

பச்சை களிமண்ணாய்
நாகரீகத்தின் பிடியில்
நாற்றாங்கால் நட்டு
செக்குமாடாய் உழ நினைத்து
கலாசாரத்தை கால்சாராயாய்
மாட்டிதிரிந்த என் தமிழ்சிட்டுகள்

தன்னை வெளிப்படுத்தியதே வெள்ளாந்தியாய் !

வேகமான உணவினை வேகாமல் உண்டு
வெட்டியாய் சிரித்து விளையாட்டாய்
வரம்பு மீற துடித்த என் செல்ல சிட்டுகள்
இன்று காற்சிலம்பை எடுத்து நியாயம் கோரிய
கண்ணகியின் மைந்தர்களாகிய விந்தை என்ன?

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழித்திடடா என்று
பாரதி வழிவந்த என் குல சிட்டுகள்
தடம் மாறியதோ!.. தவிக்கையில்
தாவி குதித்து கலமிறங்கியதே
பாரதியின் கற்பனைக்கு வடிவம் கொடுக்க

காட்டு பூக்களாய் மனம் பரப்பிய
என் தமிழ்ச்சிட்டுகள்
காவல் பூக்களாய் உருமாறிய விந்தை என்ன?
திரிந்த பாலாய் போய் விடுவார்களோ
என்ற எண்ணத்தை
திருத்தி எழுத தூண்டுகிறதே

என்ன தவம் யான் செய்தேன்
யான் இவனை பெற்றிடவே
என்று என் சித்தம் துடிக்கிறதே
பசியால் சோர்ந்த உன் முகம் கண்டு

மனிதசங்கிலியாய் பூகுவியல்கள்
மாலையாய்.. எங்கள்
மனதை கட்டி போடுகிறதே
இந்த மாலைகள் குரங்குகள் கையில் மாட்டிய 
பூமாலையாய் ஆகிவிடாமல்
காத்திடம்மா தமிழ்த்தாயே...
எல்லைகாளியாய் நின்று
உன்னை மறவாமல் என்றும்
படைக்கிறேன் அமுது
என் தமிழ்சிட்டுகளுக்கு பசி துடைக்க வா...   

24 கருத்துகள்:

  1. சிட்டுக் குருவிகள் தினத்தன்று தமிழ் சிட்டு கவிதை அருமையாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. வரிகள் அருமை... உண்மை வரிகள் பல...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. மாணவர் போராட்டத்தை மனதிலிருத்திப் படைத்திட்ட கவி அருமை. வாழ்த்துக்கள் தோழி!

    மாணவச் சிட்டுக்களை மனதார வாழ்த்தி
    மாண்புடன் படைத்த மகிழ்வான கவிகண்டு
    தாய்த்தமிழ் உயர்வைத் தரணியிலே உரைக்கும்
    சேய்களுக்கும் உமக்கும் சேர்திட்டேன் வாழ்த்திதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் அனைவரையும் இணைக்கட்டும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. காவல் பூக்களாய் உருமாறிய விந்தை என்ன?

    பதிலளிநீக்கு
  5. இனிய தமிழ்ச் சிட்டு உங்களுடனும் இன்று நான்
    இணைகின்றேன் அரிய கவிதைகளை அகம் மகிழ
    எந்நாளும் கண்டு ரசிப்பேன் .வாழ்த்துக்கள் தோழி
    வளமான கவிதைகள் என்றும் உனதாகட்டும் !....

    பதிலளிநீக்கு
  6. கவிதை சூப்பர் மலர்பாலன். இன்று மாணவர் நிலையை அழகாக சொல்லிட்டீங்க

    பதிலளிநீக்கு
  7. // இந்த மாலைகள் குரங்குகள் கையில் மாட்டிய
    பூமாலையாய் ஆகிவிடாமல்
    காத்திடம்மா//- அதுவே நாங்களும் எண்ணுவது..!

    பதிலளிநீக்கு
  8. வலைசர பாராட்டிற்கு பாராட்டுக்கள் மலர்

    பதிலளிநீக்கு
  9. மாணவர் எழுச்சியை மான்போடு பாடும் கவிதை வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  10. எழுச்சியூட்டும் வரிகளால் இணைந்தோம் வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் தோழி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  11. மாணவச்சிட்டுகள் பற்றிய மனக்கலக்கத்தை எல்லைக்காளியாய் தமிழ்த்தாயை வரித்து வேண்டிய விதம் மனந்தொட்டுக் கிளர்ந்தது. பாராட்டுகள் பூவிழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் தோழி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு