திங்கள், 18 மார்ச், 2013

மீண்டும் வலைச்சரத்தில்.....



என்னை சகோ திரு அரசன் சே  அறிமுகபடுத்தி இருந்தார் நான் எதிர் பாராமல் அங்கு பார்வையிட (தோழி அருணா அவர்களின் வராம் தொடங்கி விடாதா என்று அறிய ) சென்றபோது இனிய அதிர்ச்சி எனக்கு அரசன் அவர்களின் பற்றி முன்பே தெரியும் அவர் வலைப்பூவை பல தடவைகள் பார்வயிட்டு இருக்கிறேன் எப்படி இவர்கள் எல்லாம் இவ்வளவு அழகாக பதிவுகள் கொடுக்க முடிகிறது என்று ஆச்சிரியபட்டு இருக்கிறேன் ஏன் நண்பர் வட்டத்தில் சேர கூட  தயங்கி இருந்தேன் இவர்கள் எல்லாம் மிகவும் திறமையுடன் எழுதுபவர்கள் நம்ம பதிவையெல்லாம் இவர்கள் பார்பார்களா என்று நேரம் இருக்குமா என்று யோசித்திருக்கிறேன் ஆனால் என் பதிவை பார்வை இட்டு அதை சிறப்பாக இருக்கிறது என்று சொல்லியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி 
என் பதிவுகளுக்கு கருத்து சொல்லும் திரு திண்டுகல் தனபாலன் மற்றும்ஊக்கம் கொடுக்கும் நண்பர்கள்  தோழிகள் அனைவருக்கும் நன்றி என்னை வலைச்சரத்தில் முன்பே அறிமுகபடுத்திய நண்பர் ரியாஸ் அவர்களுக்கும் நன்றி .

நான் போட்டோ ஷாப் என்பதை தேட போய் கற்று(இதை இப்போ அம்போன்னு விட்டுவச்சிருக்கேன் ) கொண்டது தான் ப்ளாக் என்றால் என்ன? சொன்னால் நம்பமாடீங்க இதை பற்றி 1 மாதம் விடாமல் படித்திருப்பேன் திரும்ப திரும்ப தினமும் வீட்டில் எல்லாம் திட்டவே ஆரம்பித்து  விடார்கள்' எதனா பிடிச்சா விடவே மாட்டியே' என்று அவ்ங்களிடம் வேற டிஸ்கஷன் செய்யறேன்னு அவ்ங்களுக்கு ஒரே கடுப்பு கணனியையும் நானே அதிக நேரம் குத்தகை எடுத்து கொண்டேன்னு என்னுடைய எண்ணமெல்லாம் இதை சுற்றியே வந்தது ஒருவழியா ப்ளாக் ஓபன் பண்ணிடேன் 
எழுத்து எனக்கு  பழக்கம் தான் அப்போ சில  பெண்கள் வலைதளங்களில் உறுப்பினராக இருந்தேன் அங்கு குறிப்புகள் கொடுப்பேன் கட்டுரைகள் எழுதுவேன் பெண்மை தளத்தில் பரிசு கூட வாங்கி இருந்தேன்(வைரமுத்துவின் தண்ணீர் தேசம் என்ற நூல் வீட்டிற்க்கு பரிசாக வந்தது ) 
அந்த தைரியத்தில் ப்ளாக் தொடங்கி எழுத ஆரம்பித்து விட்டேன் நான் எல்லா இடத்திலும் பின்னுடமிடல்லாம் என்று தெரிந்து கொள்ளவே சில நாட்கள் ஆயிற்று நண்பர் வட்டத்துள் சேர்ந்தால் தான் அவர்கள் பதிவுகளை உடனுகுடன் படிக்க முடியும் என்பதை எல்லாம் அறிய சில பல நாட்கள் ஆனது ஏன் இப்பொழுது கூட  வலைச்சரத்தில் இவ்வளவு நாள் சேர வேண்டும் அப்பொழுதான் அதை பற்றி உடனுகுடன் தெரிந்து கொள்ளாலாம் என்று கூறு இல்லாமல் இருந்திருகிறேனா பாருங்களேன் நேற்று தான் சேர்ந்தேன் வெட்கமாகத்தான் இருக்கு இது எதோ சைட் மொத்தமாக பதிபவர்கள் பற்றி குறிப்பு கொடுக்கும் இடம் என்று நினைத்திருந்தேன பார்த்துகோங்க நான் எவ்வளவு பேக்கு என்று என் மகன் வேறு பயப்படுத்தி கொண்டே இருப்பான் நீங்க வேற எடக்கு முடக்க திங் பண்றவங்க நேர்மை நியாயமுனு  இங்க பண்ற அட்டகாசத்தை எல்லாம் அங்க காமிச்சிடாதிங்க இப்பெல்லாம் ஒரு லைக் கொடுத்தாகூட பிரச்னை வருது  உள்ளர போடுறவாங்க வேண்டாம் என்று எப்போதும் கண்காணிக்கும் குடும்பம் நான் கங்கா டு வால்கவும் படிப்தேன் ஜே கிருஷ்ண முர்த்திதியையும்படிப்பதேன் வியாசர் விருந்துயையும் படிப்தேன் ரமணி சந்திரனையும்  விட்டதிலை ஜெயமோகனையும் விட்டதிலை பாலகுமாரனையும் விட்டதில்லை என் வீட்டில்உள்ளவர்கள்  என்னை மறைகழண்ட கேசு  என்றுகூட சொல்வார்கள்.படிக்கும் ரசனையில் எல்லைகோடு போடதில்லை.
  என்னை நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது லைப்ரரியில் கொண்டு போய் சேர்த்தார் என்அப்பா ரொம்பவே அடவடியானவர் முதலில் அவர் எடுத்து கொடுத்த புத்தகமே வியாசர் விருந்து இதை புரிந்து கொள்வதற்க்காக பல முறை படித்துள்ளேன் இன்னும் அதன் தாகம் தீரவில்லை 

 
இந்த பதிவுலகில் நான் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது இது ஒரு தனி உலகமாக தெரிகிறது
எனக்கு மிகவும் ஆச்சரியம் கொடுக்கும் விஷயம் என்வென்றால் பதிவில் கூட ஆண் பெண் என்ற வித்யாசம் இருப்பது தெரிவது தான் ஆக்கங்களுக்கு வரைமுறை வேண்டும் தான் அனைவருக்கும் இது பொருந்தும் இங்கு பலதரபட்ட மக்கள் உணர்வுகள் எப்படி இருகின்றன எதை அவர்கள் ரசிக்கிறார்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க படுக்கிறது எதற்கு அதிகம் கருத்து  இடப்படுகிறது என்றெலாம் சிறிது சிறிதாக அறிந்து வருகிறேன் .சுவாரசியம் நிறைந்த்தாகவே உள்ளது.  இந்த கணணி பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது
கற்றது கை அளவு கூட இன்னும் எட்டவில்லை பயணிக்கவேண்டும்        

21 கருத்துகள்:

  1. மலர்,
    நான் நினைப்பதை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
    முதலில் எழுத் வேண்டும் என்ற ஆவல் அவ்வளவு தான். ப்ளாக் ஆரம்பித்த பிறகு தான் நான் நிறைய
    கற்றுக் கொண்டேன், கற்றுக் கொண்டிருக்கிறேன்.
    போதும் என் சுய புராணம்.

    உங்கள் வலைச்சர அறிமுகத்திற்கு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா இருவரும் ஒரே மாதிரி கப்பலில் பயணிக்கிறோமோ தோழி நன்றி வருகைக்கு

      நீக்கு
  2. மீண்டும் வலைச்சரத்தில்-வாழ்த்துக்கள்...

    வலைச்சர அறிமுகத்தை அரசன் சே அவர்கள் தங்களுக்கு தெரிவித்து இருப்பார் என்று தான் நினைத்தேன்... அன்று அறியாத தளங்களுக்கு மட்டும் தான் சென்று வந்தேன்...

    பயணம் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்... நம்பிக்கையோடு தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழி நடத்தவும் நம்பிகை கொடுக்கவும் உங்களை போல் நட்பு கிடைத்து அல்லவா மகிழ்ச்சி நான் தான் உங்களை பாராட்டவேண்டும்

      நீக்கு
  3. பதிவுலகம் ஒரு பரந்த வியாபித்த பேருலகம் ...
    தொடர்ந்து எழுதுங்கள்...
    நன்றியுணர்வுடன் உங்களை அறிமுகப்படுத்தியவர்கள்
    ஊக்கப்படுத்தியவர்கள் என நினைவில் என்றும்
    வைத்திருங்கள்...
    புதிதாய் வலையுலகில் காலடி எடுத்து வைக்கும் பலர்..
    அதரவு கிடைக்காததால் விட்டுவிட்டு போனவர்கள் ஏராளம்...
    அதையும் மீறி வென்று வந்தவர்களும் ஏராளம்....
    உங்களின் தூரிகை பொன்னெழுத்துக்கள் படைக்கட்டும்...
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ' நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று'
      நல்ல விஷயங்கள் பசுமரத்தாணி போல் பதிந்து விடும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  4. வணக்கம் நண்பரே ....

    முதலில் உங்களின் தயக்கங்களை உடைத்தெறியுங்கள் ...
    வலைப்பக்கம் என்பது உங்களுக்கான மின் டைரி என்று மனதில் கொண்டு
    உங்களின் மனதில் உதிப்பவைகளை எழுதி வாருங்கள்! நிச்சயம் நண்பர்கள் வந்து படிப்பார்கள்!

    ஆரம்பத்தில் எனக்கும் உங்களை போன்ற தயக்கம் நிறைய இருந்தது .. போக போக நிறைய உறவுகள் என்னை அரவணைத்து கொண்டன! மேலும் சந்தேகம் இருப்பின் என்னை அழையுங்கள் என்னோட அலைபேசி 9952967645 .. எனக்கு தெரிந்த விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ என்ன சொல்வது தங்கள் நட்பு கரத்துக்கும் வழி காட்டுதலுக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி கண்டிப்பாக உதவி வேண்டுமெனில் தங்களை அனுகுகிறேன்

      நீக்கு
  5. வாழ்த்துக்கள்... பயணம் சிறப்பாக தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  6. இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது
    இதுதான் தன்னடக்கம்

    பதிலளிநீக்கு
  7. மலர்பாலன் நானும் உங்களைத் தொடர்ந்து கொண்டும் உங்கள் எழுத்துக்களை படித்து கொண்டும்தான் இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனிக்கபடுகிறேனா இனி என்ன வழி நடத்த பல ஆசிரியர்கள் இருக்கும் போது நன்றி நன்றி

      நீக்கு
  8. கருத்து எதுக்கு அதிகம் போடுகிறார்கள் என்று பார்த்து அதற்காக எழுதாதீர்கள். உங்களுக்கு தோன்றுவதை படித்ததை பார்த்ததை ரசித்ததை உங்கள் மனதிற்குள் வாங்கி அதை உங்கள் எழுத்துக்களால் வெளிப்படுத்துங்கள்.. ஆரம்பத்தில் உங்கள் தளத்திர்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும் ஆனால் அது மெதுவாக அதிகரித்து கொண்டே வரும். தப்பு தவறி காப்பி பேஸ்ட் பதிவாளராக மாறி விடாதீர்கள். எந்தவித குருப்புகளில் சேராமல் எவரின் எழுத்துக்கள் நன்றாக இருகிறதோ அதை பாராட்டி "உங்களுக்கு நேரம் கிடைக்கும்" போது மட்டும் எழுதுங்கள் நிச்சயம் நீங்கள் எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அட... இதுக்கெல்லாம் பீல் பண்ணா எப்படி சகோதரி..... நீங்க தொடர்ந்துகொண்டே இருங்க... நாங்க பாத்துக்கறோம்...

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. கற்றது கை அளவு கூட இன்னும் எட்டவில்லை பயணிக்கவேண்டும் /// தன்னடக்கம்

    பதிலளிநீக்கு
  12. இன்னும் பயணியுங்கள் பல புதியவர்கள் நட்பும் கூடிவரும் தயக்கம் வேண்டாம்!

    பதிலளிநீக்கு