வியாழன், 14 மார்ச், 2013

என்ன செய்ய போகிறாய் ?



எல் கெ ஜி சுட்டி அந்த ஒரு ஆள் நிற்க கூடிய பால்கனியில் அதை வைக்க இடம் தேடுகிறான்.

டேய் என்னே பண்ணிடிருக்க நீ,எங்கடா இருக்க ?
ஐயையோ யுனிபாமெல்லாம் கறையாயிட போதுடா,இப்ப உனக்கு இது ரொம்ப முக்கியமாடா?
தம்கொண்டு இருந்துகிட்டு என்ன வேலை செய்து பாரு,நான் கிச்சனில் இடிக்கிற கல்லை(சின்ன உரல்) காணாமேன்னு தேடிகிட்டு இருந்தா நீதான் கொண்டுவந்து இருக்கியா?
அதுலேவேற மண்ணை போட்டு தண்ணியை போட்டு கொழப்பி அதுவும் வாங்கி வச்சிருக்கற தண்ணியை , நானே இன்னிக்கு தண்ணி கேன் போடறவன் வரலேனு கவலை பட்டுகிட்டு இருக்கேன் நீ என்னடானா
என்னடா இது,ஏது இது,எங்கிருந்து எடுத்துகிட்டு வந்த?

அம்மா இது எங்க ஸ்கூல் வாட்ச்மேன் கிட்ட இருந்து கெஞ்சி வாங்கிட்டு வந்தேன் மா பிளீஸ் ப்ளீஸ் வச்சிகலாம்மா

டேய் எங்கடா வைப்ப தண்ணி ஊத்தினா வீடு அசிங்கமாயிடும் டைல்ஸ் தரையெல்லாம் வீணாபோயிடும் இந்த வேலை எல்லாம் யார் சொல்லி கொடுத்தா உனக்கு,இது வேற இடத்தை அடைச்சிகனுமா.நாம ப்ளாட்ல இருக்றவங்க, இதுஎல்லாம் தனி வீடு வச்சி இருக்கரவங்கதான் வளர்க முடியும்

அம்மா ப்ளீஸ் மா இது ஒன்னே ஒன்னேனுதான்மா அட்லீஸ் ஒன்னாவது வளர்கலாம்மா
நேத்திக்கு எங்க மிஸ் சொன்னாங்கமா நம்ம பூமி ரொம்பவும் வெப்பம் ஆயிட்டே  வருதாம் நாமெல்லாம் இருக்க முடியாம எரிஞ்சி போயிடுவோமாம் சன்னுக்கு கோபம் வந்திடுச்சாம் எல்லோரும் கண்டிப்பா பிளான்ட் வளர்கனும்னு கண்டிஷன் போட்டு இருக்காம் இல்லைனா நம்மளை கொன்னுடுமாம் நீ கூட சொல்லியிருக்கிம்மா சாமிக்கு கோபம்வந்தா கண்ணை குத்திடும்னு சன்னு கூட சாமிநு சொன்னியே அதுனாலதான் இந்த சின்ன செடியை கெஞ்சி வாங்கிட்டு வந்து இருகேன் ப்ளீஸ்மா நாம் பூமியை காப்பாத்தலாம்  நீ தானே சொன்னே நான் தனியா இருகேன் என்கூட விளயாட நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு தங்கச்சி பாப்பா கொண்டுவரேன்னு
தங்கச்சி பாப்பா வரத்துக்குள்ள நாம செத்து போய்ட்டா என்ன செய்யறது ?

திகைத்து போகிறாள் அந்த தாய் அவள் கண்ணில் நீர் வழிகிறது பூமி நனையட்டும் குளிரட்டும்

எல்லார் மனதும் விழிக்கட்டும் சூரியனின் கோபத்தை தணிப்போம் வாருங்கள் ஒன்று கூடுங்கள் நம் பூமித்தாய்யை காப்பாற்றுவோம்  நமக்காக
தண்ணீர் தண்ணீர் என்று அலைய வேண்டாம்
சுட்டெரிக்கும் வெயிலில் வேக வேண்டாம்

ஆம் உலகம் முழுவதும் இருக்கும்  73ஆராய்ச்சி நிலையங்கள் சூரியனின்   கோபத்தை வெளிபடுத்தி இருக்கிறது
இது கொடுத்த புள்ளிவிவரங்கள் என்னவென்றால் 11,300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த  வெப்ப அளவைவிட இப்போது 80% அதிக வெப்பத்தை உமிழ்கிறதாம் நம் தயாளபிரபு சூரியன்

நாம் என்ன செய்ய போகிறோம் அவன் கோபத்தை தணிக்க ?
-poovizi





ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 
தோழிவிஜிசுசில்  சிறுகதைகள் சமூகத்தில் நடப்பவைகளை உள்ளடகியது படித்து பாருங்கள் 
நேரம் கிடைக்கும் போது 
நிறை குறைகளை விமர்சிக்கவும் 
http://vijisushil.blogspot.ae/

16 கருத்துகள்:

  1. இருக்கும் மரங்களை விட்டு வைத்து, சாவதற்குள் ஒரு மரமாவது வளர்த்து விட வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நம் வாழ் நாளின் லட்ச்சியமாக கொள்வோம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  2. நீ தானே சொன்னே நான் தனியா இருகேன் என்கூட விளயாட நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு தங்கச்சி பாப்பா கொண்டுவரேன்னு
    தங்கச்சி பாப்பா வரத்துக்குள்ள நாம செத்து போய்ட்டா என்ன செய்யறது ?”
    .பையனின் யோசனை அருமை.நீங்க சொன்னதை அப்படியே சொல்லி உங்களை மடக்கிட்டான் .நல்ல விஷயம் சந்தோசப்படுவோம் .பையனுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பயமுறுத்தும் விஷயம் தான்.
    அதற்காக நாம் ஏதாவது மெனக்கெடுகிறோமா என்றால் இல்லை.
    வரப் போகும் சந்ததியருக்கு என்ன விட்டு வைக்கப் போகிறோம் என்பது மிகப் பெரிய கேள்வியே.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறந்து போன நடைபாதைகளை திறந்து வைப்போம் அவர்கள் நடைபழக பார்ப்போம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிதோழி

      நீக்கு
  4. சூழலுக்கேற்ற விழிப்புணர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. பதிவு அருமையாக இருக்கிறது. குழந்தைகளுக்கு நாம் புத்தி சொல்ல அவசியம் இல்லை. அவர்கள் பேச்சுபடி செடி வளர்ப்போம் , பின் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.சிறு கைகள் சேரட்டும் செடிகள் வளர்ந்து இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நிழல் தரட்டும். நாளை குடிநீர் தட்டுபாடு இல்லாமல் இளைய சமுதாயம் நலம் பெறட்டும்.
    வெப்பம் குறைந்து குளிர்தென்றல் காற்று வீசட்டும்
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக வழி காட்டியாய் இருப்போம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

      நீக்கு
  6. மிக அருமையாக விஷயத்தை கதையாகத் தொகுத்துவிட்டீர்கள். அழகாக கதையை மனதில் பதியும் வண்ணம் பின்னியுள்ளீர்கள். அருமை. மிக மிகச் சிறப்பு!

    நீங்கள் கூறிய விழிப்புணர்வு பெரியவர்கள் அவசியம் தெரிந்துகொண்டு கையாள வேண்டிய ஒன்று.

    பாராட்டுக்கள் தோழி!!

    பதிலளிநீக்கு
  7. அனைவரும் உணர வேண்டிய கருத்து .. நன்றி

    பதிலளிநீக்கு