ஞாயிறு, 17 மார்ச், 2013

மூடிய கையில் என்ன இருக்கிறது?


அந்த கல்யாண மண்டபம் பரபரப்புடன் செயல் பட்டு கொண்டிருந்தது
கல்யாணத்தில் ரொம்பவும் முக்கியாமான போட்டோ செச்ஷன் நடந்து கொண்டிருக்கிறது “ஹேலோ ப்ளீஸ் இன்னும்கொஞ்சம் நெருக்கமா நில்லுங்க
நீங்க கொஞ்சம் சைடா நில்லுங்க இப்படி ஒரே பரபரப்பு  
“ஏய் யாருப்பா அது கேமராவை மறைகறது பொண்ணு மாப்ளையும் தள்ளுங்க “
“சரி மச்சி அப்ப நான் கிளம்புரேண்டா என்ஜாய்
“டேய் இருடா ஒரு நிமிஷம் போட்டோ எடுத்துட்டு போகலாம்
“அட எதுக்குடா “?என்றபடியே அவன் தலையை வாரி கொள்கிறான் மடிச்சுவிட்ட சட்டையின் கைகளை எடுத்து சரி செய்து கொண்டு ஒரு முறை தன்னை சரி பார்த்து கொள்கிறான் பரபரன்னு இது தான் நாம்

 ஒரு கல்யாணத்திலோ அல்லது குடும்ப விழாகளிலோ இல்லை பள்ளி விழாக்கள் ,தோழமைகளுடனோ எங்கு நாம் போட்டோ எடுத்து கொண்டாலும் அங்கு நாம் நம்மை வெளிபடுத்த முயல்கிறோம். 
நாம போட்டு கொண்டிருக்கும் உடைகளை சரி செய்து கொள்வோம் இல்லை போட்டிருக்கும் ஆபிரணங்கள் தெரிய வேண்டும் என்று எதாவது செய்வோம் சிலர் தன் அழகிய கூந்தல் தெரிய  வேண்டும்மென்று அதை முன்விட்டு கொள்வார்கள் விரலில் போட்டிருக்கும் மோதிரம் கூட தெரியனும் சில பேர் கையை கட்டி கொண்டு நிற்பார்கள் ஏன் வாண்டுகள் கூட தன்னை  வெளிபடுத்த முட்டி மோதி கொண்டு தலையை நீட்டுங்க போட்டோக்கு போஸ் கொடுப்பதற்கு எல்லோர்க்கும் பிடிக்கும், பிடிக்கவில்லை என்றாலும்

நாம் வந்ததுக்கு ருசு வேண்டும் என்பதற்காகவாவது போட்டோ எடுத்து கொள்வார்கள்

ஏன் இதை எல்லாம் செய்யறோம் நம்மை நாம் அடையாள படுத்த ஆசைபடுவதால் நான்தான் இருக்கிறேன் என்று சொல்லும் ஆவல்
எப்படியாகிலும்  நாம் தனித்து தெரிந்து விட வேண்டும் என்பதே மனிதனின் இயற்கையான ஆவல்

இது போல்தான் சமூகத்தில் எப்படியாகிலும் நாம் நம்மை முன்னிறுத்த  விரும்புகிறோம் அது நம்மை புரிந்து  கொள்கிற மாதிரி தெரிந்து கொள்கிற மாதிரி வெளி படுத்த விரும்புகிறோம்  
அதுல பாருங்க நல்லவனை விட நல்லவன் போல் காட்டிகிறவன் புகழபடுகிறான் இங்கே காட்டி கொள்கிறவர்கள் மட்டுமே கண்டு கொள்ள படுகிறார்கள் தம்மை வெளிபடுத்தாதவர்களை வேஸ்ட் ‘என்று ஒதுக்கி விடுகிறது இந்த உலகம்,
  
மூடின  கையில் என்ன இருக்குனு எப்படிசொல்ல முடியும்?அப்புறம் முரளி நடித்த காதல்படங்கள் போல்  ஆகிவிடும் கடைசிவரை சொல்லாதகாதல்  போல்..........

ஆனால் நம்மை எல்லா இடத்திலும் உடனே அடையாள படுத்திவிட வேண்டும் என்று சிலர் அலைவாங்க அது அவங்களுக்கும் ஆபத்தை கொடுக்கும் சமூகத்துக்கும் நல்லதில்லை

ஹிட்லர் தன்னை அடையாளம் காட்டியதால் அவனுக்கு என்ன லாபம் உலகுக்கு என்ன லாபம் ?

இதோ நம் கவிஞ்சர் வைரமுத்து  வெளிப்படுத்துவதற்கு ஒரு உதாரணமாக அவர் கவிஞ்சர் என்று தெரியும் ஆனால் அவர் எழுதிய மூன்றாம் உலக போர் என்ற நூலுக்குசர்வதேச இலக்கிய விருது கிடைத்துள்ளது இதையொட்டி அவர்  காவிரி டெல்டா பகுதில் விளைவால் தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பத்திற்கு ஒரு லட்சம் என்று  11 லட்சம் கொடுக்க முன்வந்தது இது தான்  நல்ல வெளிபடுதல்.
 .
நம்மை வெளி படுத்துவது தேவை அதைவிட தேவை வெளிபடுத்துவதில் உள்ள நியாயம் இது இதுதான் ரொம்பவே முக்கியம்

கல்யாண வீட்டுக்கு போனா நாமளே மாப்பிளையாக இருக்கனும் சாவு வீட்டுகு போனாலும் நாமலே செத்தவனாக இருக்கனும் நினைக்கிறது வெறி முதன்மை வேண்டும் தான் அதற்கு என்று வரை முறை இருக்கிறது அல்லவா

தன்னையே பார்க்க வேண்டும் தன்னையே புகழ் வேண்டும் என்ற வெறி நிறைய பேருக்கு இருக்குங்க இதுக்கு உதாரணமா பல தலைவர்கள் தலைவிகள் இருக்காங்க பல நடிகருங்க கூட இப்படிதான் உதராணம் உங்க விருப்பத்திற்கு விடுகிறேன்.
 .
வெளிபடுத்துங்கள் இரக்கமும் அன்பும் அன்னைதெரசாவை வெளிபடுத்தியது
பண்பு காமராஜரை வெளிபடுத்தியது அறிவு ஆரியபட்டவை வெளிபடுத்தியது
வள்ளல் தன்மை பாரியை வெளிபடுத்தியது ஏன் இன்று திரு .கருப்பையன்   சமூகத்துக்கும் நன்மை செய்யும் வெளிபடுதலே என்றும் நிலைத்திருக்கும். 

சில நேரத்தில சில இடத்திலே நம்மை வெளிபடுத்த தடைகள் வரும் நம்ம மேல ஒரு பாறாங்கல்லை போட்டு அமுக்கி வைப்பது போல் நம்மை எழவிடாமல் செய்யருத்துக்குனு ஆளுங்க வருவாங்க நாம் சோர்ந்து விட கூடாது தடைகள் உடைஎறிய வழி  கண்டு பிடிக்கனும்

நம்ம சூப்பர்ஸ்டார் பாட்டு போட்டு கேக்கனும் கேட்ட மட்டும் போதாது வாழ்கையில் பயன்படுத்தணும்

  வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா….தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா   
 
சிவகார்த்திகேயனை எல்லோருக்கும் தெரியும் எத்தனையோ கம்பயரிங் பண்றவங்க இருந்தாலும் இவரு தனக்குன்னு  தனி காமெடி பாணியை வெளி படுத்தி இன்று எல்லோரும்க்கும் தெரியும் படியா வெற்றி அடைஞ்சாச்சி   இல்லையா 
தடைகளை உடையுங்கள் உடைக்கும் உளி உங்கள் மனதில் இருக்கிறது
சரி கூடையை  போட்டு மூடிவச்சாலும் சேவல் கூவத்தான் செய்கிறது
கூடை தடையாக இல்லை  உரிய நேரத்தில் கூவினால் சேவல் இருப்பதை மறைக்க முடியமா ?
கட்டான் தரையாக இருந்தாலும் காங்கிரீட் கட்டிடமாக இருந்தாலும் வீரீயமிக்க விதை முட்டி கொண்டு வெளிப்படத்தான் செய்கிறது அது போல் தடை தகர்த்தெறிவோம் சரியான படி வெளிபடுத்துவோம் நாம பெரியவங்க சொல்லிட்டுதான் போயிருகாங்க இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும்    

12 கருத்துகள்:

  1. கவிஞர் வைரமுத்து, சூப்பர்ஸ்டார், சிவகார்த்திகேயன்... என்று உதாரணங்களுடன் நம்பிக்கை தரும் வரிகள் பல... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஊக்கத்திற்கும்

      நீக்கு
  2. பதில்கள்
    1. நான் படித்து உணர்ந்ததை தான் பகிர்ந்து இருக்கிறேன் தோழி எனக்கு புரிந்த அளவு நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  3. மூடிய கையில் என்ன இருக்கின்றது என்ன சொல்ல முடியும்... கரெக்ட்தான்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறியாதது புரியாததாகவும் மாறிவிட வாய்ப்பு வந்துவிடும் தெரியும் போது நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  4. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும்//
    நன்றாக சொன்னீர்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ உண்மைதானே நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  5. வெளிப்படுத்துதல் பற்றி நல்லாவே குவிச்சு கும்மி தொவைச்சி அலசிக் காயப்போட்டுட்டீங்க...:)

    அருமை தோழி! சிந்தனைக்குரிய நல்ல விடயம்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு