புதுக்கோட்டையை அடுத்த நெடுவாசல் வடக்குப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கருப்பையன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது முதல் சமூக சேவைக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். சமூக சேவை..? கருப்பையன் மாற்றியிருப்பது ஒரு பள்ளியை மட்டுமல்ல... ஒரு கிராமத்தை, ஒரு சமூகத்தை!
ஆம் வியப்பாக இருக்கிறது இப்படியெல்லாம் மனிதன் நினைக்கிறானா ,இருக்கிறானா ?இவரு சொல்லறாரு நம்ம அரசாங்கம்,
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைவான ஊதியம், ஒரு மாதம் வரலைன்னாலும் சம்பளம், மழை பெய்தால் விடுமுறை, சம்பளத்துடன் கூடிய பயிற்சி, பெண் ஆசிரியர்களுக்குப் பேறுகால விடுமுறை ஆறு மாதம்... இவ்வளவும் கொடுக்குது. அது போக, மாணவர்களுக்கு நாலு முறை சீருடை, பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், காலணினு படிப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செஞ்சு கொடுக்குது. இவ்வளவு சலுகை, வசதிகளுக்குப் பிறகும் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கலைன்னா, தப்பு அரசாங்கம் மேல இல்லை. நம்ம மேலதான்!'
எப்படி இப்படியெல்லாம் உண்மைய் உரைக்க முடியுமா? இதோ ஒரு சாட்ச்சி நம்ம நாட்டுமேலே பற்று வர வைக்கிறார் கல்வி மட்டுமல்ல சாப்பாடு துணி இலவச அரிசி இப்படி எத்தனையோ தரும்அரசாங்கம் மேல நல்லதை நினக்க வைக்க கூட இந்த மாதிரி வள்ளல்கள் தேவைபடுகிறார்கள்
இவரும் கஷ்ட்டபட்டு படித்து முன்னேறியவர் முதலில் அரசு ஆசிரியாராக இருந்து செய்ய நினைத்ததை செய்ய மற்றவர் களிடமிருந்து ஒத்தொழைப்பு கிடைக்கவில்லையாம் உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்ய முதலில் நிற்பார்கள்
தலைமை ஆசிரியாராக பொறுப்பேற்றவுடன் இந்த கிராமத்திற்கு பணி செய்ய இவரே கேட்டு வந்திருக்கிறார் முதல்நாளே இவருக்கு ஒரு சினிமா காட்ச்சியை காட்டி இருகங்க இவருக்குன்னு இருகிற நார்காலியைதான் செத்து போனவங்களை ஊட்காரவைக்க பயன் படுத்திவந்தங்கலாம் அங்குள்ளவர்கள் அட தெய்வமே !
பிறகு அங்குள்ளவர்களுக்கு மெல்ல விழிப்புணர்வை கொண்டுவர முயற்சி செய்து வெற்றியும் கண்டுவிட்டார்
இங்கேயும் நம் அரசாங்கம் இவருக்கு கை கொடுத்துள்ளது ஒரு கிராமம் சுகாதாரமாக இருந்தால் அந்த கிராமத்திற்கு 3 லட்ச்ச பணம் கிராம வளர்ச்சிகாக கொடுகிறதாம் வாழ்வியலில் முக்கிய விஷயமான கழிபறை வசதிக்கு 2000 ரூபாய் வழங்குகிறதாம் இவர் அரசாங்கத்தின் பல நல்ல திட்டங்களை பயன் படுத்தி அங்கு மறு மலர்ச்சியை கொண்டுவந்து இருக்கிறார்
வாழ்க நம் அரசாங்கம் வாழ்க நல்லவைகள் செழிதொங்கட்டும்
இவரல்லவோ மனிதன் வாங்கி தான் ஏப்பம் விடாலாம் என்று நினைக்கும் மனித கூட்டத்தில் நடுவே
நல்லவர்கெல்லாம் சாட்ச்சிகள் 2 ஒன்று மனசாட்ச்சி
ஒன்று தெய்வத்தின் சாட்ச்சியம்மா
இது தான் உள்ளத்தின் சாட்சி உண்மையின் சாட்சி
இவர் சொல்லறதே கேட்கும் போது மனம் சிலிர்கிறது
"படிப்பு வராத மாணவன்னு யாருமே இல்லை. ஒரு ஆசிரியருக்கு விவரம் தெரியாம இருந்தால், அவருடைய மாணவர்களுக்கும் எதுவும் தெரியாது. கற்பிக்கும் முறை மூலமா எந்த மாணவனையும் வல்லவனா, நல்லவனா மாத்தலாம். அதைத்தான் நான் பண்றேன்."அரசாங்கம் எல்லா வசதிகளும் தந்திருக்கு. அதை மாணவர்களுக்கு வாங்கித் தரும் பொறுப்பு மட்டுமே நம்முடையதுனு ஒவ்வோர் ஆசிரியரும் உணர்ந்தாலே, அடுத்த தலைமுறை கம்பீரமாக நிமிரும்!''
இப்படியும் மனிதன் வாழத்தான் செய்கிறான் நாம் வாழும் காலத்திலேயே
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
ஊரவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்
ஊரவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையைய் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையைய் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்
பகிர்வு சிறப்பு...
பதிலளிநீக்குஅருமையான... மிகவும் பிடித்த பாடல்கள்...
கருப்பையன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் உங்கள் ஊக்கத்திற்கும்
நீக்குஇந்தப் பதிவைப் படிக்கும் போது நிஜமாகவே அந்த ஆசிரியருக்கு ஒரு போன் போட்டு நன்றி சொல்லலாமா? என்று தோன்றியது.
பதிலளிநீக்குஇந்த மாதிரி ஒரு சமூக சிந்தனையாளரை வெளிச்சம் பொட்டு காட்டிய உங்களுக்கு நன்றி.
அருமையான விழிப்புணர்வு பதிவு.
நானும் ஒரு ஆசிரியை திரு கருப்பையனின் கொள்கையின் அளவுக்கு எல்லாம் என்னால் முடியாது ஆனால் அந்த என்னகளை மட்டும் என்னால் விதைக்கவிழைந்து இருக்கிறேன் கொண்டுமிருக்கிறேன் உடன்பாடு உண்டு
நீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குதிரு. கருப்பையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
மாணவர்களை நல்லவர்களாய், வல்லவராய் ஆக்கும் பணிக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பாடல் பகிர்வு அருமை.
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஆம் சகோ இதை விட சிறந்தது எதிர் கால சந்ததியருக்கு என்ன இருக்கு
நீக்குஎல்லோரும் பாராட்டும்படி செய்யும் திருவாளர்.கருப்பையன் அவர்களின் பணி வாழ்த்துக்குரியது,இதைப் பகிர்ந்தமை பாராட்டுக்குரியது
பதிலளிநீக்குநன்றி வருகைக்கும் கருத்துக்கும்
நீக்குஇது போன்ற பகிர்வுகள் இந்த சமுதாயத்துக்கு நல்ல முன்னுதாரணங்கள் பகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்கு