ஞாயிறு, 10 மார்ச், 2013

குப்பையும் கோபுரம் ஆகுதாம்

உலகத்து சுற்றுசுழலுக்கு   பெரிய பிரச்சனை இந்த பிளாஸ்டிக் குப்பைதாங்க இதை ஒழிக்க ரொம்பவே முயற்சி நடக்குது 

நம்ம நாட்டை  பற்றி  இருக்கற பிரச்சனையில் இது ரொம்பவே முக்கிய இடம் பிடிச்சி இருக்கு நாம் நாட்டிற்க்கு வர வெளி நாட்டு டூரிஸ்ட் -ங்க வந்து போன பிறகு சொல்லற முக்கிய குறையே இது தாங்க எங்கு பார்த்தாலும் அங்கு குப்பை  இதை  சரி பண்ண முடியுமா ?

இதோ இந்த விஷயத்தில் ஐடியா திலகமா திகழுதாம் தைவான் நாடு எப்படினா?   மனிதர்கள் உருவாக்கும் பல்வேறுவகையான கழிவுகள், மனிதர்களுக்கு மாபெரும் தலைவலியாக மாறியிருக்கிறது இல்லையா . இந்த தலைவலி, தைவான் நாட்டை கடுமையாக பாதித்ததன் விளைவு, 

அந்த நாட்டு அரசாங்கம் அந்த கழிவுகளையே தங்களின் தேவைகளுக்கான மூலப்பொருளாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருகாம் உலக புகழ்பெற்ற மின்னணு தொழில் நிறுவனங்கள் பலவும் தங்களின் உற்பத்தி நிலையங்களை தைவான் நாட்டில் வைத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், தைவான் நாட்டு மக்கள், உலக அளவில் மின்னணு சாதனங்களை அதிகம் உபயோகிப்பவர்களாம் இதன்  காரணமாக ஏற்படும் கழிவுகளை எல்லாம்   வெறுமனே நிலத்தின் மிகப்பெரிய பள்ளங்களில் இட்டு நிரப்பிவந்த தைவான் நாட்டு அரசுக்கு கடந்த சில ஆண்டுகளாக அதில் பெரும் சிக்கல் உருவானது. இருக்கும் பள்ளங்களையெல்லாம் நிரப்பிவிட்ட நிலையில், இந்த குப்பைகளை கொட்டுவதற்கு தைவானில் புதிய நிலமோ பள்ளங்களோ இல்லை.எவ்வளவுதான் பள்ளம் தோண்டுவது இதுவோ ஒரு குட்டித்தீவு
 
எனவே 2010 ஆம் ஆண்டு முதல் தைவானில் உருவாகும் குப்பைகளை நிலத்தில் புதைக்கும் பழக்கத்தை அந்நாட்டின் அரசாங்கம் முற்றாக தடை செய்து உத்தரவிட்டது. அன்று முதல் தைவானில் உருவாகும் மின்னணு குப்பைகளும் முழுமையாக மறுசுழற்சி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படி பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்களின் இருக்கைகள் என்று பல உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் உச்சகட்டமாக, துணிகள் கூட மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய துணிவகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 வாவ் !!வாட் அன்  கிரெட் ஐடியா சர்ஜி 

இது மட்டுமா இதோட அடுத்த கட்டத்தையும் பாருங்க ........
மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டே கட்டும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறதாம் . இதில் மறுசுழற்சி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு ஒட்டுமொத்த கட்டிடமும் கட்டப்பட இருப்பதாக கூறுகிறார் இந்த கட்டிட வடிவமைப்பில் ஈடுபட்டிருக்கும் தைவானின் பிரபல கட்டிடகலைஞர் ஆர்தர் ஹவுங்.
இந்த கட்டிடத்தின் சுவர்கள் வெளியில் இருக்கும் சூரியஒளியை உள்ளே விடும்படியானதாக இருக்கும் மேலும் இந்த கட்டிடம் கடும்புயலை தாங்கும் அளவுக்கு உறுதியாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

எவ்வளவு முக்கியாமான கண்டுபிடிப்புங்க இது மட்டும் சக்சஸ் ஆயிடுச்சின்னு வச்சிகோங்க குப்பை கூட தங்கம் விலைக்கு விக்கற நிலைமை வரலாம் நாம அப்பவும் முன்னேறுவோமா நம்ம நாட்டின் அழகை பாதுகாத்து பணம்  பார்ப்போமா  இல்லை குப்பையை ஏற்றுமதி செய்துகிட்டு  இருப்போமா தெரியாது ?

16 கருத்துகள்:

 1. நல்ல செய்தி. மற்ற நாட்டுக்காரங்க அவங்க நாட்டுக் குப்பையை நம்ம நாட்டுல கொட்ட செய்துகிட்டு இருக்காங்கன்னு வயத்தெரிச்சல் நியூஸ்லாம் படிச்சுருக்கேன். இது பெட்டர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வருகைக்கு நம்ம நாட்டு பிட்டர் எல்லாம் பெட்டர் ஆனா நல்லதா இருக்கும்

   நீக்கு

 2. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டே கட்டும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறதாம் . இதில் மறுசுழற்சி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு ஒட்டுமொத்த கட்டிடமும் கட்டப்பட இருப்பதாக கூறுகிறார் இந்த கட்டிட வடிவமைப்பில் ஈடுபட்டிருக்கும் தைவானின் பிரபல கட்டிடகலைஞர் ஆர்தர் ஹவுங்.
  இந்த கட்டிடத்தின் சுவர்கள் வெளியில் இருக்கும் சூரியஒளியை உள்ளே விடும்படியானதாக இருக்கும் மேலும் இந்த கட்டிடம் கடும்புயலை தாங்கும் அளவுக்கு உறுதியாக இருக்கும் என்றும் கூறுகிறார்.//

  நல்ல செய்தி சொன்னீர்கள் நம் நாடும் தைவானை பின் பற்றலாம்.
  கழிவுகள் கட்டிடம் ஆவது மகிழ்ச்சி அல்லவா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சி ஒண்ணா இரண்டா அவ்வளவோ இருக்குங்க இந்த விஷயத்தில்

   நீக்கு
 3. அருமையான முயற்சி இப்படி அடுத்தவங்க செய்யறதை பாத்து ஆஹான்னு சொல்றது மட்டும்தானே நம்ப பழக்கம் ...

  பதிலளிநீக்கு
 4. இது எந்த காலத்துக்கு வருமோ............

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல்வாதிங்க நினைசிடாங்கனா பணம் பண்ண இதுவும் நடக்கும்

   நீக்கு
 5. நம்மூருக்கு இது எந்த காலத்துக்கு வருமோ............

  பதிலளிநீக்கு
 6. எவ்வளவு முக்கியாமான கண்டுபிடிப்புங்க --பகிர்வுக்குப் பாராட்டுக்கள்,,,

  பதிலளிநீக்கு
 7. நம்ம ஊருக்கு எப்பொழுது வருவது? எப்பொழுது குப்பைகள் அகலுவது?

  பதிலளிநீக்கு