செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

பிறந்தநாளாம்

1947.... பிறப்பு 

.சுகவீனத்தில் பிறந்த 
குழந்தை 
இன்றுவரை 
முடமாய் 
முழுமதி தெளியாமல் 
போராடி கொண்டிருக்கிறது 
மூச்சுகாற்றிக்கு  

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

நாம ரொம்ப கில்லாடி

பாம்பு பால் குடிக்கும் ......
நினைச்சுகிட்டு இன்னைக்கும் பால் ஊத்திட்டு வரும் அன்பர்களுக்கெல்லாம் ஒரு தகவல் பகிர்ந்து கொள்ளிகிறேன்ங்க......
யாரும் சாபம் கொடுத்திடாதீங்க உன் கனவுல பாம்பு வந்து பயம் புறுத்தட்டும்னு மீ பாவம் 
காலம்காலமா நம்மவங்க பாம்புக்கு  வந்து முட்டைப்பால் வைத்து கொண்டு வ்ரோமில்லைங்களா அது எதுக்கு அதோட ஸ்ட்ரென்த்கா .......இரண்டையும் கலந்து குடிச்சிட்டு நல்ல வளரடுமுனுஆ ......
பாம்பு பால் குடிச்சி யாருங்க பார்த்திருக்க அப்படினா நம்ம அடுப்படிவரை  வந்துடு போகாதா பூனை மாதிரி ...
பாம்பு பால் எல்லாம் குடிக்காதுங்க அது என்ன சாப்பிடும் நமக்கெல்லாம் தெரியும் தெரிஞ்சும் ஏன் இப்படி பாம்பு புற்றுக்கு பாலும் முடடையும்   வைக்கும் பழக்கம் வந்தது
ஆதிகாலத்தில் மனுஷனுக்கு கான்கிரீட் வீடு வாசல் கதவு இல்லாத அப்ப இந்த பாம்புங்க அவர்கள் வாழ்வாதரத்திற்கு பெரும் பிரச்சனையா இருந்திருக்குங்க
பாம்பை தேடி தேடி கொல்ல  மனுஷனுக்கு போரடிச்சு இருக்கு ....அப்ப அவன் கண்டுபிடிப்பு ஒண்ணுதான் பாம்புக்கு பால் வார்ப்பது
பாம்போட இன பெருக்கத்தை குறைப்பதற்காகவாம்...... அதாவது பெண் பாம்பு தன் உடலில்  ஒரு வித வாசனை திரவத்தை அனுப்பிவிடுமாம்  குறிப்புக்கு அதை நுகரும் ஆண்  பாம்பு தன் இணையை தேடி வருமாம்
அதனால் அது உடம்பு வாசனையை தடுப்பதற்கு இப்படி ஒரு பாயிண்டடை கண்டு பிடிச்சி இருக்கான்........ பால் முடடை அதன் வாசனையை கட்டுப்படுத்துகிறது ......இன  பெருக்கம் குறைவதற்கு வழி முறையாக கடைபிடிக்க பட்டது.......... என்று இது   மூடநம்பிக்கையாய் மாறியது யார் அறிவார் பராபரமே  

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

10 ஆண்டுக்கு பின்

                புதன் கோள் சூரியனை கடந்து போக போகிறதாம்....
ஒரு  நூற்றாண்டுக்கு 8 முறைதான் புதன் கோள் சூரியனை கடந்து செல்லும் . புதன் சூரியனைவிட சிறிய வட்டம் என்பதால் இது ஒரு சிறு கரும் புள்ளியாக மட்டுமே தெரிய உள்ளது
ஆனாலும் இந்த நிகழ்வை வெறும் கண்களால்பார்க்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
               இந்த நிகழ்வு 9 -8-2017தேதி அன்று மாலை 4.15 மணியிலிருந்து மாலை 6.20 வானில் பார்க்கலாம் என்று சென்னை  பிர்லா கோளரங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
               இதை வடமெரிக்கா ,தென்மெரிக்கா ,ஆஸ்ரேலியா ,ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்கள்

புதன், 2 ஆகஸ்ட், 2017

பழ ஜோசியம் பழக்க ஜோசியம்

எல்லாவற்றிலும் ஜோசியம் பார்த்தாச்சு  பழத்தை வைத்து பார்த்திருக்கீங்களா இப்ப பார்த்திடுவோம்
ரொம்ப பிடிச்ச பழம் பயபுள்ள குணத்தை  புட்டு புட்டு வைத்திடுமாம்
அப்ப நாம என்ன பழம் சாப்பிடறமோ அதை பார்க்கிறவங்க நம்மை எடை போட்டுவார்களா ம்ம் .'பழசை எடைக்கு போட்டு பழம் வாங்கி சாப்பிட்டது' போய் பழம் வாங்கி சாப்பிட்டா நம்மையே எடை போட முடியுமாம்
மாம்பழம் 
 Image result for alphonso mangoமாம்பழம் பிரியரா நீங்கள் ..
1. நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள்.
2.உங்கள் மனம் மாற்றுவது என்பது மிகவும் கடினமானது.
3.எல்லாரையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க முயல்வீர்கள்.
4.க்ரியேட்டிவான விடயங்களை சாதரணமாக செய்யக் கூடியவராக இருப்பீர்கள்.
உள்ளே இருக்கும் கொட்டையை வைத்து கணித்து இருப்பார்களோ

பப்பாளி
Image result for papaya and passion fruitபப்பாளி பிரியராக நீங்கள் .  ,
1.நீங்கள் மனதளவில் நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். ஆனால் மனம் வைப்பது என்பது தான் மிகவும் கடினம்.
2.எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும், அதில் உடனடியாகப் பலன் கிடைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.
இதற்கு கம்மியான பாயிண்டுங்க தான்
வாழைப்பழம்
Image result for myth bananas are the most fattening fruitsவாழைப்பழம் பிரியராக நீங்கள் ,
1.நீங்கள் மிகவும் மென்மையானவராக, பிறருடன் இரக்கத்துடன் பழகுவீர்கள். ஆனால் உங்களுக்குக் கூச்ச சுபாவம் அதிகம் இருக்கும். அதனால் பிறருடன் கலந்து பழக மாட்டீர்கள்.
2.உங்களுக்கு தன்னம்பிக்கையும் மிகவும் குறைவு. அதனால் உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.
என்னடா இது குழந்தைகளுக்கும் வயதினவர்களுக்கும் ஏற்ற பழம் என்ற பெயர் பெற்றதினால் இப்படியா  கடவுளின் அருளை பெற்றதுமான பழத்திற்கு இப்படியொரு நிலைமை
ஆரஞ்சு
Image result for mandarin orangesஆரஞ்சுப் பழம் பிரியராக நீங்கள் ,
1.நீங்கள் அதிக அளவு பொறுமையும் அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவராக இருப்பீர்கள்.
2.கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும்.
3.நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள்.
4.சண்டை சச்சரவை விரும்பாத நீங்கள் மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர்.
5.உங்கள் வாழ்க்கைத் துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்.
கண்ணை கவரும் ஆரஞ்சு கருத்தையும் கவரும் போல இருக்கே ...
அன்னாசி
Image result for play & learn english screenshot 5அன்னாசிப் பழம் பிரியராக நீங்கள்,
1.நீங்கள் எந்த விடயத்தையும் ஆலோசித்து நிதானமாக செயல்படுத்துவீர்கள். லாபம் ஏற்படும் தொழிலாக இருந்தால்,அதில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை மாற்றிக் கொள்வீர்கள்.
2.தன்னிறைவு, நேர்மையை கொண்ட நீங்கள் எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள்.
3.அன்பை வெளிக்காட்டத் தெரியாததால், வெறுப்பிற்கு ஆளாகுவீர்கள்.
முரட்டு தனமான பழம் என்பதால் இருக்குமோ
திராட்சை
திராட்சை பிரியராக நீங்கள், ,
Image result for esperanza rising las uvas
1.உங்களுக்கு அதிக் கோபம் வரும். ஆனால் அதே வேகத்தில் போய்விடும்.
2.உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும் உங்களுடையா நட்பு பலராலும் விரும்பப்படும்.
3.நீங்கள் செய்யும் எந்தவொரு விடயத்தையும் அதிக ரசனையுடன் செய்வீர்கள்.
உலகத்தில் முக்கியமான இடத்தை பிடித்தது மயக்கத்தை தரவல்லத்தின் குணம் ஓரளவுக்கு மேட்ச் ஆகுது பழத்திற்கு
செர்ரி
செர்ரி பழத்தின் பிரியராக நீங்கள் ,
Related image
1.உங்களுக்குப் பிடித்த இடம் உங்கள் வீடு மட்டுமே. குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே நீங்கள் அதிகம் விரும்புவீர்கள்.
2.ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க இயலாது.
3.தொழிலில் எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும்.
4உங்களுக்குக் கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு. ஆனால் ஒரே மாதிரியான சலிப்பான வேலைகளை விரும்ப மாட்டீர்கள்.
பார்றா பெண்களின் வர்ணனைக்கு உவமேயமாக உபயோக படுத்தப்படும் பழமும் பெண்ணின் இயல்பை கொண்டே இருக்கிறது
சீதாப்பழம்
Image result for सीता फलசீதாப்பழம் பிரியராக ,
1.நீங்கள் எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவு செய்வீர்கள். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள்.
2.விரிவான விளக்கம் அல்லது புள்ளி விவரங்கள் தொடர்பான பணி உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். புற அழகு, குணங்களை விட அறிவுத்திறன் வாய்ந்த துணையை மட்டும் விரும்புவீர்கள்.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தின் பிரியராக ,
Image result for fruits for increase blood in body
1.நீங்கள் எந்தவொரு செலவுகளையும் தாராளமாக செய்ய விரும்புவீர்கள். ஒரு குழுவை வழி நடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
2.மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் உங்களுக்கு உணர்சிகளை கட்டுப்படுத்த தெரியாது.
3.எந்த வேலையைக் கொடுத்தாலும் அதீத ஆர்வத்துடன் எடுத்து செய்வீர்கள்.
ராஜா பழத்தின் அம்சமும் ராஜாவை போல்
மாதுளம்பழம்
மாதுளம் பழத்தின் பிரியராக நீங்கள் ,
Image result for fresh pomegranate
1.நீங்கள் ஒரு சிறிய விடயத்திற்கு கூட டென்ஷன் ஆகுவீர்கள்.
2.நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் கச்சிதமாக நேர்த்தியாக இருப்பது போல் பிறரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அதனால் அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம் கண்டுபிடிப்பீர்கள். அதுவே உங்கள் குறைபாடாகும்.
உரித்து சாப்பிடுவதற்கு தான் தொல்லையாக இருக்குமென்றால் அம்சத்திலுமா

தர்பூசணி
தர்பூசணி பழத்தின் பிரியராக ,
Image result for Watermelon
1.நீங்கள் மிகவும் எளிமையானவராக இருப்பீர்கள்.
2.விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் உங்கள் மீது ஏதேனும் தவறு இருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்க தயங்க மாட்டீர்கள்.
எல்லோராலும் ஈஸியா வாங்க கூடியதும் ஈஸியா சாப்பிட கூடியதும் பிரதிபலிப்பதும் அதையே

பழ ஜோசியத்திற்கு இங்கே முற்று புள்ளி வைத்துவிடலாமா இனிமே  பழங்களை சாப்பிடும் போது   யோசனையோடவே பார்ப்போமா
தெரிந்ததை சுவரசியமாய தோன்றியதை பகிர்ந்து கொண்டேன் ........அட  கிரகமே சொல்லப்படாது 

சாப்பிடுவதற்கு இப்படி

மனுஷன் வகைதொகையா சாப்பிடுவதற்கு என்றே பண்டிகைகள் பூஜைகள் ஏற்படுத்தி இருக்க வேண்டும் அதற்கு என்று ஏதாவது காரணங்களை கொண்டு வருவதில் கில்லாடி
இங்கு இப்படி ஒரு காரணம்
நாமகிரி பேட்டையில், 250 ஆண்டுகளுக்கு முன் பொங்களாயி என்ற பெண்ணுக்கு, பெண்கள் யாரும் உதவி செய்யாததால், இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனால், அந்த பெண் விட்ட சாபத்தால், இப்பகுதியில் பஞ்சம், பட்டினி ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டும், தவறுக்கு மன்னிப்பு கேட்டதுடன், அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த ஆண்கள் மட்டும் விழா எடுப்பதாக கேட்டுக்கொண்டதால், விழா கொண்டாடப்படுகிறது
ஒவ்வொரு ஆண்டும் ஆடி18க்கு முன்பாக கிடா வெட்டி பூஜை நடக்கும். இந்த விழாவில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.
அதே போன்று இந்த ஆண்டும் ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது.
இவ்விழாவில், மொத்தம், 145 கிடாக்கள் பலியிடப்பட்டன. நேற்று அதிகாலை, சமைக்கப்பட்டு, 3,000த்துக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பரிமாறப்பட்டன.
மனுஷன் மட்டும் தான் ஆண்டவன் படைப்பா ....
அந்த ஆடு கோழி பன்றி எல்லாம் சாபம்விட்டா ......அதற்கு என்ன .இன்னொரு பூஜை சாப்பிடுவதற்கு ஏதுவாக .....

விந்தை திருவிழா

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்லுக்கு  எதிர்ப்பதமாய் ஒரு சடங்கு
விந்தையாக இருக்கிறது பயம் என்ற உணர்வுக்கு அப்பாற்படடவர்களா இவர்கள்
பாம்பு திருவிழா  பிகாரின் சமஸ்திபூரில் நடை  பெறுகிறது ஒவ்வொரு ஆண்டும் நாகபஞ்சமியின்போது, பாம்புகளை கையில் ஏந்தியபடி மக்கள் ஊர்வலமாக செல்கின்றனர் மகிழ்ச்சியாக கொண்டாடி .சின்னசிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்கிறார்கள்
இதற்காக இவர்கள் ஒரு மாத்திற்கு முன்பே இருந்து பாம்புகளை பிடிக்கின்றனர், பாதுகாக்கின்றனர்.... அவற்றின்  நச்சுக்கள் நீக்கப்படுகின்றன
நாகபஞ்சமியின்போது போது  பாம்புகளுக்கு பால் கொடுக்க வேண்டும் என்னும்  சடங்கு ,நம்பிக்கை
பார்வதி அம்மனை வணங்கி..... பாம்புகளுடன் நதிக்கு சென்று பூஜை செய்து அங்கிருந்து காட்டுக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள் இந்த பாம்புகளை.....
பூஜையில் பாம்புகளுக்கு பாலும் பொரியும் கொடுக்கப்படுகிறது ....
பாம்புகளை வாழ்வில் ஒரு அங்கமாய் இவர்கள் உணர்கிறார்கள் .....இயற்கைக்கும் தமக்குமிடையே இருக்கும் நெருங்கிய சொந்தமாகவே இதை அவர்கள் பார்க்கிறார்கள் ....
Image result for பாம்பு திருவிழா

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இதோ ஒரு காதல் மன்னன்

பணக்காரன் காதல் எல்லாம் காதலா என்று புறம் பேசும் மனங்களிடையே இதோ ஒரு சினிமாவை மிஞ்சும் நிஜக்காதல்
முகேஷ் அம்பானி  தெரியாதவர் யாராவது இருக்க முடியுமா இன்று ......இந்தியா மட்டுமின்றி, உலகளவில் சிறந்த தொழிலதிபராக திகழும் நபர். ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போனவர் முகேஷ் அம்பானி தான் எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் வென்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
வியாபாரத்தில் மட்டுமல்ல, காதலிலும் இவர் கெட்டி தானாம் . தனது காதல் மனைவிக்கு ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் யோசிக்க முடியாத அளவில் ஒரு வியக்கத்தக்க பரிசை கொடுத்து அசத்தும் சூப்பர் காதலனுமாம் நம்ப முடிகிறதா.....
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் பிறந்த நீத்தா அம்பானி ஒரு பரத நாட்டிய தாரகை  ஒருசமயம் ஒரு விழாவில் நாட்டியம் நிகழ்ச்சியை வழங்கும்போது  முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி அவரின் நாட்டிய  திறமை கண்டு தன் மகனுக்கு மணமுடிக்க கேட்டாராம்
இது தொடர்பாக  முகேஷ் அம்பானியும் நீத்தாவும் சந்தித்து பேச்சுக்கள் நடந்ததாம் ஒருமுறை இருவரும் காரில் சென்றுக் கொண்டிருந்த போது. ட்ராபிக் சிக்னலில் கார் நின்றுக் கொண்டிருக்கையில், "நீத்தா நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாயா?” என கேட்டுள்ளார் முகேஷ். இதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்ற பிடிவாதம் தோன்றியுள்ளது
சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. பின்னடி நின்ற அனைவரும் ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தனர். நீத்தா நீ பதில் கூறாமல் நான் வண்டியை எடுக்க மாட்டேன் என அடம் பிடித்துள்ளார் முகேஷ். ....... மணிரத்தனத்திற்கே டிப்ஸ் கொடுப்பார் போல இருக்கே
"எஸ். நான் உன்னை திருமணம் செய்துக் கொள்வேன்" என நீத்தா கூறிய பின்பு தான் வண்டியை எடுத்துள்ளார் முகேஷ்.
இனிதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது காதல் பயணம் இன்றுவரை தன் காதல் மனைவிக்கு அவர் வியக்கும் வண்ணம் பரிசுகள் வழங்குவதில் கில்லாடியாம் பணமிருந்தாலும்  அதிலும் காதலை தனித்துவமாக நிரூபிக்க திறமை வேண்டுமே முகேஷ்  அம்பானி தன்வியாபாரத்தில் மட்டுமல்ல தன் காதலிலும் கிரியேட்டிவ் மைன்ட்  உபயோகித்து சாதிக்கிறாராம்
 நீங்கள்  கேள்வி பட்ட  கதையாக இருக்கலாம்

கூகுள் வரம்

                       கூகுளுடன் வேலை செய்ய நான்..... நீ என்று போட்டி  இருக்க கூகிள் வரம் ஒரு 16 வயது பருவத்திற்கு பட்டு சாமரம் விரித்துள்ளது. இந்திய சிறுவர்கள் இன்னும் முழுமதியுடன் இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு இளம் குருத்து இங்கே தன் வெற்றியை முழங்கி இருக்கிறது அரசு பள்ளியில் படித்த கல்வியும் உயர்ந்தவை என்று மீண்டும் நிரூபணம் .
                       சண்டிகர் மாநிலத்தின் செக்டார் 33 பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் ஹர்ஷித் சர்மா அடுத்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் இருக்கும் கூகிள் நிறுவனத்தின் பணியாற்ற உள்ளார்.
தன் திறமையை கிராபிக்ஸில் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்   இந்த இளம் வாலிபன்  அதற்கு அவன் வாங்க போகும் சம்பளம் பயிற்சி காலத்தில் 1 வருடத்திற்கு 4 லட்ச்மும் பயிற்சி முடிந்த பின் மாதம்ம்ம்ம்ம்ம்ம்ம் 12 லட்சம் வழங்கப்படவுள்ளது .

விடா  முயற்சி விஸ்வரூப வெற்றி தரும் என்ற வாக்குகேற்றப  10 வருடகாலம் கிராபிக்ஸ் டிசைனில் தேர்ச்சி  பெற்று தன் திறமையை வெளிப்படுத்தி கூகிள் இணைத்துவிட்டார்..... இதை தவிர கற்க்கும் காலத்திலேயே போஸ்டர்கள் தயாரித்து பாலிவுட் மற்றும் ஹாலிவுடில்  விற்று தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ....இவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள்..... ஆசிரியர் பிள்ளை மக்கு என்ற வாக்கை பொய்யாகியவர் ஹர்ஷித் சர்மா!

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.என்பதை நிரூபித்துள்ள இந்த இளம் குருத்தை பாராட்டுவோம்