கவிதைகள்
மும்மாரி பொழிந்து உச்சி முகர்ந்த மழையோ !
இன்று முன்னறிவிப்பில்லாமல் முகம் திருப்புகிறது

முன் தலைமுறைக்கு முகம் கொடுத்த உழவா !
என் தலைமுறைக்கு வாசல் திறக்க மறுக்கலாமா ?

காவேரி பாய்ந்து குளித்து குளிர்ந்த உழவு(பூமி)த்தாய் !
இன்று கட்டிடத்தின் கீழ் சமாதி நிலையில் !

இயற்கை எல்லாம் செயற்கை பூச்சிகொல்லியாய் !
மனிதனின் மரண முகவரிக்கு ஓலை விதைக்கின்றன !

மரித்து போன உழவனின் மானத்தை
விலை கொடுத்து வாங்கும் அரசு

வரலாற்றின் பொற்காலங்களாய் இருந்துவிட்டு
வழிதுணைக்கு கூட வரலாற்றில் இல்லாமல் போய்விடுமோ !

கற்பம் சுமந்த பெண்ணை போல் பூமித்தாயை காத்த
உழவனின் நிலை கழனிவிட்டு பழனி போகும்படி

காற்றாடும் வயல்வெளிகள் எல்லாம்
தார் சாலையாய் மாறும் காலம் வந்ததோ !

நடவு பாடல்கள் எல்லாம் ஒப்பாரி பாடல்களாய்
வயல்வெளியின் வெட்ட வெளியை நோக்கி

இயந்திரத்தின்  உதவியால் உருமாரிய உழவு
முன் தலைமுறையின் ஆரோக்கியத்தை இழந்து

உழவனின் வியர்வைக்கு முன்னே !
உலகத்தின் உயர்வை நிறுத்த முடியுமோ ?

உயர்வு கொடுக்கும் உழவை மறந்தோம் மறுத்தோம்
உயிரை காக்கும் உணவை மறப்போமா? மறுப்போமா? 

2 கருத்துகள்: