நடப்பது என்ன ?
மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 28 நவம்பர், 2017
தேவதை என்னும் அரக்கன்-நிஜம்
தேவதை என்னும் அரக்கன் செய்யும் விபரீதத்தை பாருங்க இந்த செல்போன் என்னும் அரக்கன் செய்யும் அட்டுழியங்கள் பல என்று முன்பே பதிவு போட்டு இருக்கிறேன் கொஞ்சம் கவன குறைவாய் இருந்தாலும் சரி நம் இழப்பை ஈடு செய்ய முடியாமல் போய்விடும்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கருப்பையா நகரைச் சேர்ந்தவர் ஜெயம்.இவர் ஒரு ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை, இவருடைய மகன் செந்தில், டிகிரி முடித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக. செந்திலின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. நாள் செல்ல செல்ல, பெற்ற தாய் என்றும் பாராமல் ஜெயத்தை அடித்து துன்புறத்தத் துவங்கியுள்ளார்.காரணம் புரியாமல் அந்த தாய் தவித்துள்ளார்
செந்திலின் கொடுமை உச்சக்கட்டம் அடைய, வேறு வழி அற்று ஜெயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் .
செந்திலிடம் போலீசார் விசாரிக்கையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில், கடந்த சில தினங்களாக புளூவேல் விளையாட்டை விளையாடியதாகவும், விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்ததாகவும் செந்தில் கூறினார்.
இவனை போல் மாக்கான்கள் இருக்கும் வரை சைக்கோ தனமாய் விளையாட்டுகளை உற்பத்தி பண்ணும் சைக்கோக்களுக்கு வசதிதான்......
செவ்வாய், 14 நவம்பர், 2017
கேட்டிங்களா கேட்டிங்களா கதையை
மகாத்மா காந்தினாலே அவர் கண்ணாடியை தாம் முதலில் நினைவு கொள்வோம் ஏதாவது புதிர் காம்படீஷன் வந்தால் கூட அந்த கண்ணாடியை வைத்தே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு மகத்துவம் பெற்ற அவர் கண்ணாடி அடையாள சின்னம்- இது தூய்மை இந்தியாவின் அடையாள சின்னமாக உள்ளது.
சரித்திரம் படைத்த இந்த கண்ணாடியை மாற்ற சொல்லி இந்தியாவிற்கு பயணம் வந்த ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி லியோ ஹெல்லர் சொல்லிட்டார் எப்படின்னா "தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமான மகாத்மா காந்தியின் கண்ணாடியைப் பார்த்தேன். இது மோசமான நிலைமை. விரைவில் காந்தியின் கண்ணாடியில் மனித நேயத்தின் லென்ஸை மாட்ட வேண்டும்"
தூய்மை படுத்த ஐடியா கொடுப்பாங்கனு பார்த்தா இவங்க கண்ணாடியை மாற்று வேஷ்டியை மாற்று என்று டிரெஸ் சென்ஸ்க்கு சொல்விட்டு போயிருக்காரு ...
இது பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது நாமதான் சர்ச்சயை கொண்டாடுவதில் வல்லவர்கள் ஆச்சே
அரசு தரப்பில் இருந்து "மகாத்மா காந்தி மனித உரிமைகளுக்கு(இதபாருங்க ஜோக்கு மனித உரிமையாம் இதுதான் புரியமாட்டேங்குது இதெல்லாம் நல்ல சொல்றாங்க ஆனா பின்பற்றுகிறார்களா இதைமட்டும் கேட்க கூடாது ) முன்னுரிமை அளித்தவர் என்பது உலகத்தில் அனைவருக்கும் தெரியும். சுகாதாரதைப் பேண தனி கவனம் செலுத்தினார். தூய்மை இந்தியா திட்டத்திற்கு அவரது கண்ணாடி மிகவும் பொருத்தமானது" என்று பதிலை கொடுத்து இருக்கிறது. இதுமாதிரி ஒண்ணுமில்லாத விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லனும்னா தெளிவா உடனே சொல்லுவோமில்ல
ஞாயிறு, 12 நவம்பர், 2017
புதுமை என்பது இதுதான்
புதுமை என்பது இதுதானா .....
அது என்னவென்றால் இங்கு படிப்பை மட்டும் அடிப்படையாக கொண்டு தங்கப்பதக்கம் இனி வழங்கப்படமாட்டாது
பின்னர் எப்படி தங்க பதக்கம் வாங்குவது ?
தங்க பதக்கத்தை விரும்பும் மாணவர்கள், படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாதாம்...... அவர்கள் அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டுமமாம் ...... அதுமட்டுமில்லை மிக முக்கியமான புதுமை , மாணவர்கள் மது அருந்தாமல் டீடோட்டலர்களாக இருக்க வேண்டும் என்றும் புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாம் இப்படித்தாங்க மாற்றத்தை கொண்டுவரனும் .ஆனா அப்படி மதுவே அருந்தவர்கள் எப்படி கண்டுபிடிப்பாங்க மருத்தவம் காண்பிக்குமோ?
இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலை கழகங்களில் ஒன்று பூனே பல்கலை கழகம் இங்கு நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். திடிரென்று இந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்க, பல்கலைக்கழக நிர்வாகம் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளதாம் .
அது என்னவென்றால் இங்கு படிப்பை மட்டும் அடிப்படையாக கொண்டு தங்கப்பதக்கம் இனி வழங்கப்படமாட்டாது
பின்னர் எப்படி தங்க பதக்கம் வாங்குவது ?
தங்க பதக்கத்தை விரும்பும் மாணவர்கள், படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாதாம்...... அவர்கள் அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டுமமாம் ...... அதுமட்டுமில்லை மிக முக்கியமான புதுமை , மாணவர்கள் மது அருந்தாமல் டீடோட்டலர்களாக இருக்க வேண்டும் என்றும் புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாம் இப்படித்தாங்க மாற்றத்தை கொண்டுவரனும் .ஆனா அப்படி மதுவே அருந்தவர்கள் எப்படி கண்டுபிடிப்பாங்க மருத்தவம் காண்பிக்குமோ?
மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தங்கப்பதக்கம் வழங்கப்படாது என்றும் மாணவர்களின் பழக்க வழக்கங்களை பொறுத்தே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதால் பழக்கவழக்கம் என்பது நெறிமுறை படுத்தபடுமா? இப்பொழுதே அங்கே போயி இதை பற்றி ஆராயவேண்டுமென்று வேகம் வருகிறதே....... எப்படி இதை கண்காணிக்க போகிறர்கள் என்று ...
இதுமட்டுமல்ல பதக்கம் வாங்கும் மாணவர்கள் ஷெலர் மாமா.! என்று பட்டபெயரும் கொடுக்கப்படுமாம் இந்த விதிகளுக்கு உட்படடவர்கள் இங்கு சேர்வதற்க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 15ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறதாம் ஏன் இப்படி திடீரென்ற முடிவு குற்றங்களை குறைக்கவா ?மாமிசம் என்பது மதுவுடன் சம்பந்த படுகிறது என்ற நோக்கத்திற்காகவே இப்படி மாமிசத்தையும் சேர்த்து தடை செய்திருக்கிறார்களா??
இதை பெற்றோர்களே வரவேற்பார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது ஏனென்றால் மாமிசம் மட்டுமே சாப்பிட்டு வாழும் சமூகதினரிடமிருந்து இதற்கு வரேவேற்பு நிச்சியம் இருக்காது.
புனே பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியிருக்கிறதாம் . மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல் என்று பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உணவு என்பது பிளவை கொடுக்குமா?
நீங்களும் சொல்லுங்களேன்.........
வெள்ளி, 3 நவம்பர், 2017
தன் இருப்பிடங்களை தேடி..
மழை தன் இருப்பிடங்களை தேடி அலைகிறது .....
எங்கேடா??? என் குளங்கள்.......
எங்கேடா???? என் ஏரிகள் ......
தன் இருப்பிடம் கிடைக்காத சோகத்தில்.......
தெருக்களில் அலைந்து கொண்டு இருக்கிறது ........
யாரோ நம்மை போல் இதை பகிர்ந்திருந்தார் முகநூலில் கவிதையாய் பெயரை படிக்காமல் விட்டுவிட்டேன் .....எவ்வ்ளவு உண்மை இந்த வரிகளில் ....
அந்த சோகமே கோபமாய் தாக்கிடுமோ என்பது போல் கண்ணுர்றேன் இன்று
மழையின் போக்குவரத்து இன்று சென்னையில் இன்று நான் காலையில் பிராட்வே வரை செல்ல வேண்டி வந்தது போகும் போது கண்டது மழையின் தாண்டவம் என்று சொன்னால் கடவுள் இறங்கி வந்து பளாரென்று அறைந்துவிடுவார்...... மக்களின் மேம்போக்குத்தனம் ஆடுகிறது ஆடிவிட்டது எல்லா பக்கமும் இரண்டு மாதத்துக்கு முன் தண்ணீருக்கு காக்காயை போல் பறந்தது பறந்து ஆடியது கொடுமையை அனுபவித்தது ....இன்று தண்ணீரை கண்டு பயந்து நடுங்குகிறது எங்கே செல்கிறோம் சரி செய்யமுடியாத இடத்தை நோக்கி நகர்ந்துவிட்டோமோ என்று பயம் வருகிறது.
மழை நீர் சேகரிப்பு நல்ல திட்டம் ஆனால் அது முழுவதும் எல்லா இடத்திலும் சரியாக பராமரிக்க படவில்லை என்பது தான் கண்முன் பார்க்கும் உண்மை நிலவரம் இதற்கு யார் காரணம்? மக்களாகிய நாம் தான் நாமே நம்மை கவலைக்கிடமாக வைத்து கொள்கிறோம் ஆக்கிவிட்டோம். மேலும் அதில் முழுவதும்மண் சேர்ந்து அடைத்து கொள்கிறது கடலில் போயி சேர்வதற்கு பதிலாய் ஒவ்வொரு நகரிலும் பொதுவாய் ஒரு அல்லது இரு பொது இடத்தை தேர்ந்தெடுத்து பெரிய அளவில் மழை நீர் சேகரிப்பு கட்டி பராமரிக்கலாம் என்று தோன்றுகிறது .தண்ணீர் கஷ்டமும் கொஞ்சம் குறையும்
இன்னுமொன்று குப்பை அதுவும் மார்கெட் என்று ஒன்று இருக்கும் இடங்களில் நடக்கும் அடடாகாசம் தாங்கவில்லை எவ்வ்ளவு தான் இடங்களை அவர்களுக்க ஒதுக்கி வைத்தாலும் அவர்கள் அந்த இடத்தை சரிவர பயன் படுத்துவதில்லை நடை பாதையிலேயே போட்டுவிடுவதில் அவர்களுக்கு என்ன சந்தோசம் வருகிறது என்று புரியவில்லை குப்பை லாரிகள் வரவில்லையென்றால் அந்த இடத்து மக்கள் படும் அவதி சொல்லி வடிக்க முடியாதவையாக இருக்கிறது ஒழுங்கீனம் ஒழுங்கீனம் என்பதை வாசல்களாக ஆகி கொண்டோம் இதற்கு சப்பைக்கட்டாய் அரசியல் சூதாடங்கள் மேற்கோள்கள்
அடுத்து அவர் அவர்கள் வீட்டு வேலைகளுக்கு நோண்டப்படும் ரோடுகளை திரும்பவும் செப்பனிட மெனக்கெடுவதில்லை இது சுயநலம் தானே ஒவ்வொருவருக்கும் தோன்ற வேண்டும். தன் வீடு இருக்கும் ரோட் நல்ல இருக்க வேண்டுமென்று. வீட்டினுள்ளே மட்டும் சுத்தம் பத்தம் வெளியே நாற்றம் பற்றி கவலையில்லை வெறுமனே புலம்பல் நாட்டை குறை கூறி அடுத்தவரை குறை கூறி ....
மேம்பாலங்கள் கட்டி போக்குவரத்தை வழிநடத்தப்பட்டது பலன்களுக்கு பாலத்தின் அடியில் என்ன நிலை இன்று எல்லோருமே பாலத்திலே செல்ல முடியுமா ? நாம் புலம்பும் புலம்பல் எல்லாத்துக்கும் வரிகட்டுறேனே அப்புறம் திரும்பவும் நானே என்னை பார்த்து கொள்வதா ? என்ற கோபமான அலட்சியம்....... சரி இதற்கு முடிவு இப்படித்தான் ஒன்று கூடி அனுபவிப்போம்..... ஆனால் ஒன்று கூடி போராடமாட்டோம் நிற்கமாட் டோம் உண்மையாக.... யாரவது பார்த்து கொள்ளட்டும் நான் கை மட்டும் தூங்குகிறேன் எனக்கு நேரமில்லை என்று ஒதுங்கி ஓடுவோம். ஆம்உங்களுக்கு நேரமில்லை வாழ........ உன்னை நோக்கி நோயிகளின் அணிவகுப்பு உன் நேரமின்மைக்கு பரிசாய்
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
நானும் ஒதுக்கிட்டு வழிவிட வேண்டும்
என்ற நிலை இனி வருமா .................
சிறுவயதில் மழை வந்தால் குதித்து நனைந்து காகித கப்பல்விட்டு மகிழ்ந்த காலமெல்லாம் போய்விட்டது....... இன்று மழை வந்தால் ஐயோ! மழை நீர் வடியாதே..... அதனுடன் எந்த சாக்கடை நீர் கலக்கிறதோ பயம் ஐயோ கூரையில்லாத மக்கள் என்ன செய்கிறார்களோ...... என்ற பயம் மட்டுமே இன்று சென்னைவாசியாய் ஆகி போனதில் பலபேருடைய ஆதங்கம் ,ஏக்கம் .....மழை புலம்பலில் இருந்து விடிவு வருமா....... யார்? தரவேண்டும் என்ற கேள்வியை தாங்கி நானும்.......
திங்கள், 30 அக்டோபர், 2017
டெடிக்கேஷன் (Dedication) வேண்டும் .
நடப்பது என்ன? -7
அறியாத வயதில் டீன் ஏஜ் நட்பு எப்படி பட்டதாக அமைந்துவிடுகிறது அது எம்மாதிரியான பிரச்னைகளை கொண்டு வந்துவிடுகிறது என்பதனை பார்த்து வருகிறோம் போன பதிவில் நடப்பது என்ன ?-பகுதி 6ஒரு நிஜமாய் நடந்த சம்பவத்தை பகிர்ந்து இருந்தேன் அதை படித்து கருத்துகள் பகிர்ந்த அனைத்து தோழமைகளுக்கு நன்றி..... டீன் ஏஜில் செய்யும் தவறுகள் வெளிச்சத்துக்கு வரும்போது தான் குடும்பத்தையே தலைகுனிய வைத்துவிடுகிறது .
ஏன் இப்படி நடந்திருக்க வேண்டும் .கட்டுப்பாட்டுடன் வளர்ந்திருந்தாலும் வளர்த்திருந்தாலும் எங்கே தவறிவிடுகிறோம் நாம்...... அது நம் மேல் நாமே சில நேரம் கொண்டுள்ள நம்பிக்கை நான் சரியாக வளர்கிறோம் கண்டிப்புடன் அதனால் தவறு ஏற்பட வாய்ப்பு வராது என்று நினைத்து கொள்கிறோம். ஆனால் டின் ஏஜ் என்பது எல்லாவற்றுக்கும் அப்பாற் பட்டது அது எந்த நேரம் எதை செய்யும் என்று நம்மால் கணிக்கவே முடியாது.
டீன் ஏஜ் என்பது ஒரு புது உலகம் புரியாத வயது அங்கு பார்க்க படுவதெல்லாம் அவர்களுக்கு பிரமிப்பும் இனம் புரியாத மகிழ்ச்சியையும் கொடுக்கும் வயது .படிப்பை வைத்து புத்திசாலி என்று இனம்காணப்படும் பிள்ளைகளிடமும் திமிராய் இருக்கும் அறிவுத்தனம் ,அறிவுத்தனமாய் இருக்கும் அசட்டுத்தனம் இருக்கும்.
நாம் செய்ய வேண்டியது என்ன கண்காணிப்பு... கண்காணிப்பு ....கண்காணிப்பு பிள்ளை என்று பெற்றுவிட்டோம் அதுவே நம் வாழ்வின் முதல் கடமை எல்லாவற்றயும் விட என்ற மனநிலை வரவேண்டும். கொஞ்சம் சோம்பலோ இல்லை வேறு காரணங்கலோ இந்தவிஷயத்தில் தடுப்பாக வர விட கூடாது.
பிள்ளைகள் யாரிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்.... . அவர்களின் பின்னனி எங்கு செல்கிறார்கள்? யாருடன் செல்கிறார்கள்? உங்களிடம் சொல்விட்டு சென்றாலும் சொன்ன இடத்திற்கு தான் சென்று வருகிறார்கள் என்பதயும்.... சில பல முறை கண் காணிப்பில் வையுங்கள். பழக்க வழக்கத்தில் சின்ன மாறுதல் வந்தாலும் உஷாராகுங்கள் அவர்களின் உடல் மொழியையும் கவனியுங்கள். திடிரென்று பணம் கேட்டால் எதற்கு என்று நன்றாக விசாரித்த பின் தேவையானவற்றிற்கு மட்டும் கொடுங்கள்.
படிப்பில் கவனம் குறைந்தால் வயது என்று காரணம் சொல்லி தள்ளி போட்டு விடாதீர்கள்.... என்னவாக காரணம் இருக்கலாம் என்று துப்பறியுங்கள். கூடா நட்பு வந்துவிட்டால் பதட்டப்பட்டு திட்டி வேறு நிலைக்கு நீங்கள் போகாமல் நாசுக்காக அவர்களை உங்களின் பால் திருப்ப நடவெடிக்கை எடுங்கள். முக்கியமாய் செல்போன் ரகசியமாய் பேசப்படுகிறதா..... கணனி ரகசியமாய் கையாளப்படுகிறதா .......என்பதை கூர்ந்து கவனியுங்கள். நான் தான் வாங்கி வைத்துவிட்டேனே என்று சமாதானம் படுத்தி கொள்ளாதீர்கள் இந்த வயது நம்மை ஏமாற சொல்லும் வயது.
பல பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு முன் உங்கள் பிள்ளைகளின் தவறு பெரிதில்லை என்று ஓப்பிட்டு செய்து தவற விட்டு விடாதீர்கள். தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகிவிடும் நாம் கண்டிக்கும் போது அவர்கள் மனஅழுத்தத்திற்கு போவார்கள் இப்பொழுது அவர்களுக்கு நாம் கொடுக்க கூடியது அதிகமான கொஞ்சல் இல்லாமல் உனக்கு நான் இருக்கிறேன் என்ற தாக்கத்தை கொடுக்கும் அரவணைப்பு.
முக்கியமாய் தாய் கண்டிக்கும் போது தந்தை அதற்க்கு எதிரான கருத்துக்கள் கூறுவது தந்தை கண்டிக்கும் போது தாய் எதிரான பாசதையும் தயவையும் குறிப்பால் உணர்த்துவது போன்ற செயல்கள் அவர்களுக்கு சாதகமாய் போய்விடும். இரண்டு பேருக்குமிடையே சண்டையை மூட்டிவிட்டு அவர்கள் குளிர் காய்ந்து கொள்வார்கள் அதில் தங்களுக்கு ஆதாயமாய்... கவனம்.
எல்லாத்தயும் விட காதல் என்ற இப்பெயரில் நடக்கும் கூத்துக்களின் விளைவால் நிறைய பிள்ளைகள் தங்கள் உயிரை துச்சமென நினைக்கும் மடையர்களாக இருப்பார்கள் இல்லை இச்சை என்ற மாயைகுள் சிக்கி கொள்வார்கள் இது மிக பெரிய சங்கிலி தொடர் போல் தவறுகளை உருவாக்கி விடும்.
நம் வாழ்க்கையில் பிள்ளைகளை வளர்ப்பதில் டெடிகேஷனாக(அர்ப்பணிப்பு )இருக்க வேண்டும். எப்படி கடவுளிடம் இருக்கிறோமோ? அப்படி அவர் நம்மை அறிய வேண்டும் நம் வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று இருக்கிறோம் அல்லவா டெடிகேஷனோடு அப்படி பிள்ளைகளின் மேலும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் உடல், உள்ளம் இரண்டு அலைவரிசையையும் நம்மால் உணரமுடியும் . வழிகாட்ட முடியும் தவறுகள் நேரும் முன் காக்கவும் முடியும்
நாம் நாம்மட்டுமே அவர்களை காக்கும் கரங்களாக இருப்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.நாமுடைய டெடிகேஷன் அவர்களுடைய உள் உணர்வு அறிய வேண்டும் அவர்கள் செய்யும் எல்லாமும், எண்ணங்களும் உணரப்படுகிறது என்று அவர்கள் உணர வேண்டும். அப்போது அவர்களின் செயல்களில் ஒரு கட்டுக்கோப்பு வர வாய்ப்பு இருக்கிறது . .
இந்த தொடரில் நான் ஆண் பிள்ளைகள் வளர்ப்பை பற்றி மட்டுமே அலசி உள்ளேன் அவர்கள் செய்யும் தவறுகளின் அதீதத்தை தொடவில்லை ஏன் என்றால் அது முடிவற்றதாக இருக்கும். இன்று செய்தி என்று ஒன்றை கேட்க படிக்க போனால் நாம் பார்ப்பது எல்லாம் கதிகலங்க வைக்கும் விஷயங்களே இன்னறய இளைய தலைமுறை எதை நோக்கி போகிறது? யார் காரணம்? நாமாக வேண்டாம்........ தவறுகளின் விகிதத்தை குறைக்க நம்மால் ஆனா முயற்சிகளை எடுப்போம்.
எனக்கு மனதில் தோன்றியதை இதுவரை பதித்து வருகிறேன் தவறுகள் இருப்பின் எனக்கு புரிய வையுங்கள் நானும் இன்னமும் பிள்ளை வளர்ப்பை பற்றி கருத்துக்கள் கற்று கொள்ள உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன் . இதை தொடர்ந்து ஒரு சிறு கதையை பதிக்கிறேன் ஒரே டிரையா போகுதே கதை வழியாக சொல்லலாமென்று அடுத்து வரும் பதிவுகளில் அதற்க்கும் பின்னர் பெண் பிள்ளைகளின் டீன் ஏஜ்ஜை பற்றி பார்க்கலாம்.
தொடரும் ....
சனி, 28 அக்டோபர், 2017
நடப்பது என்ன ?-பகுதி 6
நடப்பது என்ன ?-பகுதி 6
போன பதிவில் டீன் ஏஜ் நட்பு பற்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி
நட்பு என்பதை பற்றி ஒரு நிஜ சம்பவம் பகிர்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அது.......
அவர்கள் மிக பாரம்பரியம் மிக்கவர்கள் அந்த வீட்டின் பெரியவர் வயது தற்பொழுது 80 தை கடந்திருக்கும் எல்லோருக்கும் அதாவது அந்த ஏரியாவில் இருக்கும் எல்லோருக்கும் பெரியவராய் இருந்து வருபவர் மதிப்பாய் நல்லது கெட்டதுக்கு முன்னே நின்று பார்வார் அவர் பஞ்சாயத்தாக இருந்தாலும் அவரை அணுகாமல் நடக்காது .... மொத்தத்தில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதோடு வாழ்பவர். குடும்பத்தை கட்டுக்கோப்பாய் நடத்துபவர். .அவருக்கு ஏற்ற துணைவியும், வீட்டில் இருப்போரையும் மேலே சொன்ன க க க வை பின்பற்ற வைப்பவர் உணவு விஷயத்தில் கூட தமிழ் பராம்பரிய உணவை தினமும் எடுப்பவர் காலையில் களி சாப்பிடுவாங்க வீட்டில் உள்ளோர் அநேகமான நாட்கள்....... வீட்டில் தோட்டம் போட்டு கீரைகள் வளர்ப்பார்கள்,மற்றவருக்கும் கொடுப்பார் .தேடிவந்து ....
அந்த ஏரியா சொந்தமாய் ஒரே ஊரிலிருந்து வந்து ஒரே இடத்தில பணிக்கு சேர்ந்து ஒன்றாய் வீடுகள் வாங்கி வசிக்கும் ஒரு மிடில்கிளாஸ் ஏரியா....... இப்படி பட்டவருக்கு அவருக்கு ஒரு மகன் திருமணமாகி 2 பேரன்கள் எல்லோரும் ஒன்றாய் வசிப்பவர்கள் .இரண்டு பசங்களும் வளர்கிறார்கள் மிகவும் மரியாதையுடன் அந்த தெருவில் உள்ளோர்களிடம் அவர்கள் பேசும் போது பேச்சில் அவ்வளவு பணிவு மரியாதை தென்படும் அந்த பிள்ளைங்களை பார்த்து கற்றுக்கொள் அக்கம் பக்கமுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கூறுவார்கள்.
அதிகம் அந்த பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாட மாடடார்கள் சிறுவயதில்........... டீன் ஏஜ் எட்டி பார்த்தவுடன் விளையாட மற்ற்வர்களுடன் வெளியே தலையை காண்பித்தாயிற்று......... இதில் முதல் பேரன் கொஞ்சம் கலகல டைப்பு வளவளவென்று பேசுவான் கொஞ்சம் வாலு அதிகமாய் திட்டுவாங்குபவன் படிப்புக்காகவும் , இரண்டாவது பையன் ரொம்ப சூட்டிகை ,அழகும் கூட, திருத்தமாய் பேசும், நல்ல படிப்பவன் அவர்கள் வீட்டின் செல்லப்பிள்ளை... தாத்தாவால் பாட்டியால் பெருமை பேசப்பட்டவன். இப்படி பட்ட பையன் நட்பினால் எப்படி வாழ்வை சிக்கலாகி கொண்டான் என்று இன்று வரை புரியவில்லை இது எங்களை பொறுத்த வரை பெற்றோரின் கவனகுறைவு என்றே நினைக்கிறேன் சம்பவம் நடந்து பேப்பரில் வந்த பின்பும் கூட நம்ப முடியவில்லை
யாரால் எப்படி இந்த மாதிரி நட்பை பழகி கொண்டான் என்று புரியவில்லை படிக்க டியூஷன் அனுப்பி இருக்காங்க பத்தாவது என்று அங்கெ பழக்கம் வந்து இருக்கிறது...... போதை வஸ்துவை எடுக்கும் நான்கு பிள்ளைகளுடன் கூடாநட்பு அங்கெ பிடித்தது ஏழரைநாட்டு சனி...... இவனுக்கும் அந்த பழக்கம் தொற்றி கொண்டுள்ளது. அவனுடைய நடத்தையில் மாற்றம் வந்திருக்கிறது படிப்பில் நேரம் கழித்து விட்டு திரும்பல் படிப்பை காரணம் காட்டுதல் இப்படி நடந்து இருக்கிறது. இங்கு அவனின் அம்மா, பாட்டி அதை பெரியவரை கவனத்திற்கு கொண்டு போகாமல் சமாளித்து இருந்திருக்கிறார் .இவர்களுக்குள் கண்டித்து இருக்கிறார்கள். முக்கியமாய் வெளியே தெரியாமல் இவனோ அந்த நட்புகளுடன் ஐக்கியம் ஆக்கிவிட்டு இருக்கிறான் .
பணம் தேவைபட்டு இருக்கிறது போதை வாங்க சின்ன பணதிருட்டு நடந்து இருக்கிறது பணம் பற்றவில்லை இதில் அந்த நட்புக்குள் ஒரு பையனுடைய ஒன்னுவிட்ட தாத்தா தனியாக வசிப்பவர் அந்த பையனின் வீடு தான் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து வருபவர்கள் இவனும் அவருக்கு துணையாக இருப்பவன் அப்போ அப்போ அவரின் பணவரவு வீட்டில் பணமிருக்குமிடம் என்ன பொருட்கள் உள்ளது என்பதையெல்லாம் அறிந்தவன் அங்கெ இருந்து பணத்தை திருடி இருக்கிறான் சில சமயம் இருந்தும் அவர் ரொம்ப உஷார் போல ஏதோ மோப்பம் பிடித்து விட்டு இருக்கிறார் இதனால் இந்த பிள்ளைகள் கூட்டு சேர்ந்து அவர் வீட்டில் திருடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டதுங்க இரவில்....... பிளான் போட்டு போயிருக்குதுங்க எல்லாமும் சேர்ந்து அங்கெ சத்தம் கேட்டு அவர் முழித்துவிட்டார் பார்த்துவிட்டு இருக்கிறார் சத்தமிட்டு இருக்கிறார் அவரை இந்த பிள்ளைகள் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து தலையணை வைத்து அழுத்தி கொன்றுவிட்டதுகள் ஒட்டியும் விட்டார்கள்
மறுநாள் போலிசாரால் கண்டு பிடுக்கப்படுகிறது யாரென்றும் விதி வலியது இங்கு இந்த தெருவிற்கு போலீஸ் விசாரணைக்கு வந்துவிட்டது கைதும் செய்தாகிவிட்டது கூடா நட்பு என்ன கொடுத்துவிட்டது...... இன்றுவரை அந்த குடும்ப உறுப்பினர்களை அதிகம் வெளியே பார்க்க முடியவில்லை.... பேச்சில்லை பாவம் அந்த பெரியவர் ஒடுங்கி போய்விட்டார். அவரின் மனைவியை பார்த்தே வருடங்கள் கடந்துவிட்டது. மகன் ரொம்ப சாது 40 வயதிலேயே கிழவனாய் தோற்றம் அடைந்துவிட்டார் பிள்ளையை ஜாமினில் எடுக்க அள்ளும் பகலும் புழலின் வாசலில் என்ன செய்ய பாசம் கொல்கிறதே ...........
கண்ணால் பார்த்து வளர்ந்த பிள்ளையின் வாழ்வில் வந்த கூடா நட்பு அவன் வாழ்வை கேள்விக்குறியாய் ,கேலியாக ஆகியதை யோசித்ததில் மனம் கனக்கிறது .இன்றைய கால பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கம்பி மேல் நடக்கும் பயணம் போல் இருக்கிறது மிகவும் கவனமுடன் நடக்க வேண்டும் இல்லை கீழே தான் விழ வேண்டும் என்பதை காட்டுகிறது இந்த சம்பவம்
தொடர்கிறேன்.....
புதன், 25 அக்டோபர், 2017
நடப்பது என்ன ?--பகுதி 5
நடப்பது என்ன ?--பகுதி 5
செல்போன் என்னும் தேவதை என்னும் அரக்கன் பற்றி சில விஷயங்களை அலசினோம் முந்திய பதிவில் அதற்கு பின்னுடத்தில் தோழமைகளுடைய கருத்துக்களையும் நானும் தெரிந்து... புரிந்து கொண்டேன் நன்றி...... இன்று பிள்ளைகளின் நட்பு பற்றி கொஞ்சம் அலசலாம் அதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன என்று பார்ப்போம் ..
நடப்பது என்ன என்பதில் மிக முக்கியமான விஷயம் டீன் ஏஜ் நட்பு ....
டீன் ஏஜில் வரும் நட்பு அது வகைதொகை இல்லாததாக தான் இருக்கும். நட்பை ஆராய்ந்து தான் வைக்கணும் என்ற விஷயம் அவர்களுக்கு சிரிப்பையும் எரிச்சலையும் கொடுக்கும் .அவர்களை பொறுத்தவரை இந்த வயதில் நட்பு புனிதமானது என்று ஒரு மாயைக்குள் இருப்பார்கள். நட்புக்காக எதையும் செய்ய துணிவார்கள் .தன்னால் முடிந்தது, முடியாது அதை பற்றினா பெருமை, தாழ்வுமனப்பான்மை இதை பற்றி கூட்டாக பேசி கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பதாக எண்ணி கொள்கிறார்கள். இது பெரியவர்கள் நமக்குமே பொருந்தும் ...
பெற்றோரின் அரவணைப்பை இழக்கும் பிள்ளைகள் நட்பில் மிக இறுக்கமாய் பலமாய் பொருந்தி போவார்கள்.அவர்களுக்கு வேண்டிய அரவணைப்பு என்பது வேறு பாதுகாப்பு என்பது வேறு இங்கு பாதுகாப்பையும் சில நேரம் பெற்றோராகி நாம் ஆண்பிள்ளைகள் விஷயத்தில் தளர்த்துகிறோம்... இது மிகவும் தவறு பல பெற்றோர்கள் இந்த வயதுக்கு இருக்கும் முக்கிய தகுதியாக நினைப்பது எதிர்பாலினத்தின் மேல் ஆர்வம் கொள்ளாமல் இருப்பதைத்தான் மீதி எல்லாவற்றையும் புறம் தள்ளிவிடுகிறார்கள். ஆண்பிள்ளை ஆண்பிள்ளை கூடத்தானே நட்பாய் இருக்கான் கொஞ்சம் முன்னாபின்ன இருந்தாலும் பரவா இல்லை என்று பல பேர் இந்த இடத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் .
இந்த வயதில் அவர்கள் உடலில் வரும் ஹார்மோன்ஸ் செயல்பாடுகளினால் தோன்றும் உணர்வுகளை.... நட்புகளுடன் ஈஷி கொள்வதிலும், முறைதவறி பேசி கொள்வதிலும், இணைந்து சுற்றுவதிலும் தீர்த்து கொள்வதாக இருக்கிறது. நண்பன் என்ன உடை உடுத்துகிறானோ அதற்கேற்றாற் போல் தன்னையும் மாற்றி கொள்வது பிடிக்கவில்லையென்றாலும் ரசனைகளை மாற்றி கொள்வது என்பது போன்ற செய்கைகள் ஆரம்பிப்பது இந்த நேரத்தில் தான் சில பிள்ளைகள் வயது ஏற ஏற திரும்பவும் தான் குழந்தையில் இருந்து வழிநடத்தப்பட்ட ரசனைக்கு திரும்பி வந்துவிடுவார்கள். சில பிள்ளை அப்படி வருவதை தன்னுடைய ஈகோ அடிபடுவதாக நினைத்து கொள்வார்கள் தாமாகவே ஒரு அரணை அமைத்து கொள்வது.புகுந்து கொள்வது .
ஒரு சொல் வழக்கு இருக்கிறது உன் நட்பை காண்பி உன்னை அறிந்து கொள்ளமுடியுமென்று....... இதை நாம் ஆராயாமல் எடுத்து கொள்வோம் நாம் மிக அறிவாளிகள் நடை உடை பாவனைகள் மட்டுமே முக்கியமானது நிர்ணயித்து கொள்வோம் நல்லது என்பதை அளக்க... இதுதான் பல தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
டீக்கா டிரெஸ் செய்து கொண்டு இருந்தால் அவன் நல்லவன் தப்புதண்டா அதுவும் செய்யமாட்டான் என்று அவன் கூட பழகினால் பிரச்னை எதுவுமில்லை அப்படி இல்லாமல் இருப்பவன் செய்தாலும் செய்வான் என்று நினைத்துகொள்ளும் அறிவாளிகள் நாம். இரண்டாவது படிப்பு நல்ல மார்க் எடுப்பவன் தவறே செய்யமாட்டான் என்னும் குருட்டாம் போக்கு எண்ணம் கொண்டு உள்ளோம் இன்று விஞ்ஞானம் அதிகம் கற்று கொண்டவன் தான் அதைவைத்து தீமையையும் செய்கிறான் .இன்று நவீன கருவிகளை கையாளும் திறமை கொண்டு பல கொடுமைகள் நடந்தேறுகிறது .
நாம் ஆண்பிள்ளைகளின் இந்த வயதில் அவர்கள் யாரிடம்? எப்படி? எவ்வளவு? நட்பு வைத்திருக்கிறார்கள் என்பதை கவனிக்காமல் விடுவதால் மிக பல இழப்புகளை சந்தித்து கொண்டு இருக்கிறோம். நிறைய இடத்தில் 'பெண்பிள்ளைகள்நட்பு சோகத்தை கொடுக்கிறது ஆண்பிள்ளைகளின் நட்பு ஆபத்தை கொடுக்கிறது '.
டீன் ஏஜ் பிள்ளைகளின் நட்பு என்பது என்பதை பற்றி தொடந்து பார்ப்போம் ..... இந்த நட்பினால் ஏற்பட்ட ஒரு உண்மை சம்பவம் பகிர்கிறேன் என்று சொன்னேன் அதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம் தோழமைகள் உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ள கற்று கொள்ள காத்திருக்கிறேன்......
தொடரும் .............
திங்கள், 16 அக்டோபர், 2017
இனிய தீப ஒளி நாள் மலரட்டும்
இனிய நண்பர்களே, நல்லோர்களே....
தீப திருநாளில்
ஒளியே திக்விஜயம் செய்திடு
தரணியெங்கும்
நல்லோர் வாழ்வில் இருளை ஒழித்திடு
திணறுகிறது தினவெடுத்து
தீமைகளின் விகிதம்
தின்றே தீருவேன் என்று
கொக்கரிக்கிறது பூமிதாயையை
ஆயிரமாயிரம் நரகாசுரங்களை
நால்திக்குமிருந்து
தடம் தெரியாமல் அழித்திடு
ஒளியின் ஒளியே முழுவீச்சில் வந்திட்டு
உன் உண்மை வெப்பத்தில்
பஸ்மாம்மாக்கட்டும்
தீமைகளின் தினவுகள் நல்லோர் நினைவில் நடனமாடிடு
இனிய தீப ஒளி நாள் மலரட்டும்


