ஞாயிறு, 31 மார்ச், 2013

இதுவும் நல்ல தான் இருக்கு !!!


புதிய கீதை
எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்
எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?
எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!
கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!
ஆகவே கேட்காமல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!
இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!
சம்பவாமி யுகே! யுகே!

வியாழன், 28 மார்ச், 2013

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது


ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வாழ்க்கையில் உபயோகப்படுத்த முடியுதான்னு பார்த்தா முடியாமலே இருக்குங்க

அட எதோ படிச்சோமா வேலைக்கு போனோமா நாலு காசு அப்புறம் நிறைய காசு சொத்துன்னு பார்த்தோமா போயிடு இருக்கிறத விட்டுபுட்டு அட போங்க இப்படி ஒரு ரகம்னா

முதல் ரேங்க் எடுக்கறவன் எல்லாம் புத்திசாலின்னு சொல்ல முடியலை  இன்னிக்கு தேதிக்கு முக்காவாசி பேர் மனபாடம் பண்ணி படிச்சதை எதோ  ஜீரணம் ஆகாமல் சாப்பிட்ட உணவை வாந்தி எடுப்பது  போல் போய் பரிட்சையில் போய் எழுதிட்டு வந்துடுவாங்க மார்க்கையும் அள்ளிடுவாங்க

 ஆனா அவங்களை பிறகு அவங்க எழுதியதையே பத்தி எதாவது கேள்வி கேட்டு பாருங்க புரிந்து கொள்ள அவங்க முழி முழி முழிப்பாங்க எதோ புது கிரகத்தை பற்றி கேட்டு விட்டது போல் இவங்களை எல்லாம் என்ன செய்வது அதைவிட இன்னிக்குதலைமுறையில்  படிகிறவங்க எல்லாம் எதோ அவங்கதான் ரொம்ப அதிக அறிவாளி மாதிரியும் போன தலைமுறையில் இருக்கும்  அவங்க படித்த பெறோர்கள் கூட ஒன்னும் தெரியாதவங்க அப்படின்னு ஒரு இமேஜை கொடுப்பாங்க அதுதாங் கொஞ்சம் கர்வம் கர்வம் சொல்லுவோமே அது புடிச்சி ஆட்டுது இன்றைய  தலை முறையை, அதுக்குதான் இது ......

ஒரு முனிவர் இருந்தாராம் அவருக்கு ஒரு மகன் இருந்தான் அவன் முறைபடி வேதங்களை கத்துக்க ஆசைப்பட்டானாம் தன் அப்பா கிட்ட சொல்றான் நீங்களே எனக்கு குருவா இருந்து எல்லாத்தையும் சொல்லித்தாங்க சொல்றான். 
அந்த முனிவர் அதுக்கு மறுத்து விடுகிறார் ஏன்னா குருவா இருந்தா கத்து கொள்ள வருகிறவனிடம் கண்டிப்பாக இருக்கனும் அப்பத்தான் முறைப்படி கல்வியை போதிக்க முடியும் கத்துக்க வரவனும் அந்த கண்டிப்புக்கு பணிந்து  கல்வியை ஒழுங்க கத்துகனும்.
மகனிடம் கண்டிப்பு செய்ய முடியாமல் போகலாம் என்று அவர் வேறு ஒரு முனிவரிடம் அவனை கற்று கொள்ள அனுப்பினார்.

சர்தான் நம் அப்பாக்கு கூறு கொஞ்சம் கம்மி போல இருக்கு அதன் வேற இடத்துக்கு அனுப்பரார்னு நினைச்சிகிட்டான் பிள்ளை சில  ஆண்டுகள் பிறகு குருகுல வாசம் முடிந்து அவன் திரும்பிவரான்.

ஆ ஒஊனு உதார் காண்பிக்கிறான் அப்பா அவனிடம் நீ என்ன கற்று கொண்டாய் ?என்னென முறைகளை  தெரிந்து கொண்டாய்? இறைவனை பற்றி தெரிந்து கொண்டாயா அவன் இருப்பதை விளக்க முடியுமா ? இப்படியெல்லாம் சரமாரியா கேள்வியை அடுக்குறார்.

ஆரம்பிச்சிட்டார்யா ஆரம்பிச்சிட்டார் நொந்துகிறான்  நம் புள்ளைக்கு எதுக்கும் பதில் சொல்ல வரவில்லை ஆனா எல்லாம் தெரிந்தவன் போலவே ஆக்டிங்கு கொடுக்கிறான்
அவருக்கு புரியாத மாதரி எல்லாம் பதில் சொல்லி வைக்கிறான் அப்படியா? சரி நீ சொன்னதை நிருபிக்க முடியுமா? அப்படினு ஒரு புரோஜக்டை கேக்கறாரு நம்ம புள்ளையாண்டான் இப்ப முழிக்க ஆரம்பிச்சிடான்
அப்பா முனிவர் ஒரு பாத்திரத்தை எடுத்து  தண்ணீரை நிரப்பினார். மகனிடம் இரண்டு கை நிறைய உப்பு கொண்டு வரசொல்லி அந்த தண்ணியில் அதை போட்டு கலக்க சொல்லறாரு கொஞ்ச நேரம் கழித்து நீ கொண்டு வந்த உப்பு இப்ப எங்கே? என்று கேட்கிறார். 
என் கையில இருந்தது இப்ப பாத்திரத்தில் இருக்கு  அப்படின்னு பிள்ளை சொல்றான். 
அதில் கொஞ்சம் எடுத்து கொடுக்க முடியுமா? என்று கேட்கிறார்.
.
லூசாப்பா நீ என்பது போல்  லுக்கு விடறான் மகன் 
கொஞ்சம்  தண்ணியை எடுத்து அவன் வாயில் ஊற்ரி விட்டு இப்ப உப்பு எங்க இருக்கு னு? மறுபடியும் கேக்கறார் .
அது இந்த தண்ணியில் கலந்திருக்கு ஆனா காட்ட முடியாது உணரத்தான் முடியும் மகன் சொல்லறான்.
இப்ப முனிவர் சிரித்து கொண்டே அவரு புரோஜக்டை பத்தி சொல்றாரு, 'தண்ணியில் அது ஒவ்வொரு துளியிலும் சமமா கலந்திருக்கு நீ பார்க்க முடியாததை உணர முடியும் அது போல்தான் கடவுளும்  கடவுள் படைப்பில் உள்ள எல்லாவற்றிலும் எல்லா ஜீவராசியிலும் அது கலந்திருக்கிறது நீ உன் கண்களால் பார்க்க முடியாது உணர வேண்டும் என்று விரும்பினால் எல்லாவற்றிலும் அதை  நீ காண்பாய்'
இப்ப புள்ளைக்கு உண்மை புரியுது அப்பாவின் திறமையும் புரியுது கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்று புரியுது அடக்கமாய் வாழ கற்று கொண்டான்.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்றால் என்னனு இப்ப தெரிஞ்சுதா

வெறும் ஏட்டு கல்வி வாழ்க்கைக்கு உதவாது. அனுபவ படிப்பே வாழ்க்கையை மேம்படுத்தும் . கல்வியினால் அறிவு பெருகும். அறிவை பயன்படுத்தி அனுபவத்தை பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் . பட்டத்தை வைத்துகொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை. குளத்தில் இறங்கினால்தான் நீச்சல் அடிக்க முடியும். அனுபவம்தான் மனிதனின் ஏணிப்படி.  


ஞாயிறு, 24 மார்ச், 2013

என்றும் பாயி-பாயி ஆகவெற்றிக்கு வேண்டும் மறுபரிசீலனை

இது என்ன புதுசா இருக்கே அப்படினு நினைக்கிறது புரியுது

ஆமாங்க ஆமாம் எந்த சூழ்நிலையிலும் எந்த முடிவு எடுத்தாலும் அந்த சூழ்நிலையிலிருந்து சிறிது விலகி இருந்து அந்த முடிவை மறு பரிசீலனை செய்வது அவசியம் அப்பதான் அந்த முடிவு சரியான பாதை நோக்கியபடி இருக்கும் வெற்றியை அறிமுக படுத்தும்.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிட்டால் எப்படிங்க சில நேரம் நாலுகால் என்று  சொல்லும் போது யார் கண்ட அது நாயாகவும் புலியாகவும் கூட இருக்கலாம் முடிவை மறு பரிசீலனை செய்யுங்க நம்மை காப்பாற்றி கொள்ள.

அன்று மறுபரிசீலனைக்கு  உட்பட்டு இருந்தால் இன்று வரை நடக்கும் பெரிய தொடர் வரலாற்று வன்முறையை  தடுத்து இருக்கலாமோ? அது தான் நாம் சுதந்திரம் அடைந்த போது எடுத்த மாபெரும் முடிவு இந்திய பிரிவினை அன்றே காங்கிரஸ் தலைவர்கள் அனனவரும் ,ஜின்னாவும் தங்களால் எடுக்க பட்ட முடிவை மறுபரிசீலனை செய்திருந்தால் இன்று நாம் என்றும் பாயி-பாயி ஆக இருந்து இருக்கலாம் ஒரு துணைக்கண்டத்தையே உருவாக்கி இருக்கலாம்  உலகத்திலேயே ஆளுமை நிறைந்ததாக இருந்திருக்கலாம்  யார் கண்டா  இந்திஸ்தான்? அல்லது  பாக்ந்தியா ? கூட பேர் வந்திருக்கலாம்.

ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் உள்ள சாதக பாதகங்கள் அலசி ஆராயணும் முதலியே சொல்லிவிட்டோமே எப்படி பின்வாங்குவது என்று ஈகோவோடு இருந்தால் எப்படி ?


இன்றைய பவர் பொதிந்த நீண்ட ஆயுளை கொண்ட கட்சிகள் அனனத்தும் தன் கட்சி நீண்ட நாள் வாழ முடிவை மறு பரிசீலனை செய்ததால் தான் இன்றும் இருக்கிறது சரி நம்ம கண்ணகி  கதையே எடுத்துகோங்க மன்னன் நெடுஞ்செழியன் கோவலனை குற்றவாளி என்ற முடிவை கொஞ்சமே கொஞ்சம் மறுபரிசீலனை  செய்து இருந்தால் இன்னைக்கு கண்ணகி சிலையும்  வந்து இருக்காது  அன்னைக்கு மதுரையும் எரிஞ்சிருக்காது உணர்ச்சிவசப்படும் போது எடுக்கப்படும் முடிவுகள் எல்லாம்  புத்தியை மழுங்க அடித்துவிடும்.

ஒரு முடிவில் பிடிவாதமாக இருப்பது சில நேரம் சரியானதாக இருக்காது தேவை பட்டால் அந்த முடிவை மறுபரிசீலனை செய்வது தவறானதாகவும் இருக்காது இந்த முறையை கடை பிடிக்காத்தால் தான் சரித்திரத்தில் பல கருப்பு பக்கங்களை நாம் பார்க்க முடிகிறது ஹிரோஷிமாவின் தாக்குதல் போன்று.

சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றிக் கொள்வதாலேயே உயிரினங்கள் இன்னுமும் உலகத்தில் நீடித்து வாழ்கின்றன ஒரு முடிவெடுக்கும் போது அது நமக்கு வெற்றி வாகை கொண்டுவருமா ?என்று அந்த முடிவை மறுபரிசீலனை செய்வதால் நமக்கு வளர்ச்சியை கொடுக்கும்இல்லாவிட்டால் சில நேரம் நம் முடிவுகள் நமக்கு தேக்க நிலையையும் உண்டாக்க வாய்ப்பு இருக்கிறது .

ஆகையால் நம் வாழ்வு தொடர்ந்து நீடிக்க நாம் ஏற்கனவே எடுத்த முடிவுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழ்நிலை வந்தால் அதை மாற்றி அமைக்க  வேண்டிய மனநிலை துணிச்சல் வளர்த்து கொள்ள வேண்டும் .       


ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு...


செவ்வாய், 19 மார்ச், 2013

என் தமிழ்ச்சிட்டுகள்


என் தமிழ்ச்சிட்டுகள்

பச்சை களிமண்ணாய்
நாகரீகத்தின் பிடியில்
நாற்றாங்கால் நட்டு
செக்குமாடாய் உழ நினைத்து
கலாசாரத்தை கால்சாராயாய்
மாட்டிதிரிந்த என் தமிழ்சிட்டுகள்

தன்னை வெளிப்படுத்தியதே வெள்ளாந்தியாய் !

வேகமான உணவினை வேகாமல் உண்டு
வெட்டியாய் சிரித்து விளையாட்டாய்
வரம்பு மீற துடித்த என் செல்ல சிட்டுகள்
இன்று காற்சிலம்பை எடுத்து நியாயம் கோரிய
கண்ணகியின் மைந்தர்களாகிய விந்தை என்ன?

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழித்திடடா என்று
பாரதி வழிவந்த என் குல சிட்டுகள்
தடம் மாறியதோ!.. தவிக்கையில்
தாவி குதித்து கலமிறங்கியதே
பாரதியின் கற்பனைக்கு வடிவம் கொடுக்க

காட்டு பூக்களாய் மனம் பரப்பிய
என் தமிழ்ச்சிட்டுகள்
காவல் பூக்களாய் உருமாறிய விந்தை என்ன?
திரிந்த பாலாய் போய் விடுவார்களோ
என்ற எண்ணத்தை
திருத்தி எழுத தூண்டுகிறதே

என்ன தவம் யான் செய்தேன்
யான் இவனை பெற்றிடவே
என்று என் சித்தம் துடிக்கிறதே
பசியால் சோர்ந்த உன் முகம் கண்டு

மனிதசங்கிலியாய் பூகுவியல்கள்
மாலையாய்.. எங்கள்
மனதை கட்டி போடுகிறதே
இந்த மாலைகள் குரங்குகள் கையில் மாட்டிய 
பூமாலையாய் ஆகிவிடாமல்
காத்திடம்மா தமிழ்த்தாயே...
எல்லைகாளியாய் நின்று
உன்னை மறவாமல் என்றும்
படைக்கிறேன் அமுது
என் தமிழ்சிட்டுகளுக்கு பசி துடைக்க வா...   

திங்கள், 18 மார்ச், 2013

மீண்டும் வலைச்சரத்தில்.....என்னை சகோ திரு அரசன் சே  அறிமுகபடுத்தி இருந்தார் நான் எதிர் பாராமல் அங்கு பார்வையிட (தோழி அருணா அவர்களின் வராம் தொடங்கி விடாதா என்று அறிய ) சென்றபோது இனிய அதிர்ச்சி எனக்கு அரசன் அவர்களின் பற்றி முன்பே தெரியும் அவர் வலைப்பூவை பல தடவைகள் பார்வயிட்டு இருக்கிறேன் எப்படி இவர்கள் எல்லாம் இவ்வளவு அழகாக பதிவுகள் கொடுக்க முடிகிறது என்று ஆச்சிரியபட்டு இருக்கிறேன் ஏன் நண்பர் வட்டத்தில் சேர கூட  தயங்கி இருந்தேன் இவர்கள் எல்லாம் மிகவும் திறமையுடன் எழுதுபவர்கள் நம்ம பதிவையெல்லாம் இவர்கள் பார்பார்களா என்று நேரம் இருக்குமா என்று யோசித்திருக்கிறேன் ஆனால் என் பதிவை பார்வை இட்டு அதை சிறப்பாக இருக்கிறது என்று சொல்லியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி 
என் பதிவுகளுக்கு கருத்து சொல்லும் திரு திண்டுகல் தனபாலன் மற்றும்ஊக்கம் கொடுக்கும் நண்பர்கள்  தோழிகள் அனைவருக்கும் நன்றி என்னை வலைச்சரத்தில் முன்பே அறிமுகபடுத்திய நண்பர் ரியாஸ் அவர்களுக்கும் நன்றி .

நான் போட்டோ ஷாப் என்பதை தேட போய் கற்று(இதை இப்போ அம்போன்னு விட்டுவச்சிருக்கேன் ) கொண்டது தான் ப்ளாக் என்றால் என்ன? சொன்னால் நம்பமாடீங்க இதை பற்றி 1 மாதம் விடாமல் படித்திருப்பேன் திரும்ப திரும்ப தினமும் வீட்டில் எல்லாம் திட்டவே ஆரம்பித்து  விடார்கள்' எதனா பிடிச்சா விடவே மாட்டியே' என்று அவ்ங்களிடம் வேற டிஸ்கஷன் செய்யறேன்னு அவ்ங்களுக்கு ஒரே கடுப்பு கணனியையும் நானே அதிக நேரம் குத்தகை எடுத்து கொண்டேன்னு என்னுடைய எண்ணமெல்லாம் இதை சுற்றியே வந்தது ஒருவழியா ப்ளாக் ஓபன் பண்ணிடேன் 
எழுத்து எனக்கு  பழக்கம் தான் அப்போ சில  பெண்கள் வலைதளங்களில் உறுப்பினராக இருந்தேன் அங்கு குறிப்புகள் கொடுப்பேன் கட்டுரைகள் எழுதுவேன் பெண்மை தளத்தில் பரிசு கூட வாங்கி இருந்தேன்(வைரமுத்துவின் தண்ணீர் தேசம் என்ற நூல் வீட்டிற்க்கு பரிசாக வந்தது ) 
அந்த தைரியத்தில் ப்ளாக் தொடங்கி எழுத ஆரம்பித்து விட்டேன் நான் எல்லா இடத்திலும் பின்னுடமிடல்லாம் என்று தெரிந்து கொள்ளவே சில நாட்கள் ஆயிற்று நண்பர் வட்டத்துள் சேர்ந்தால் தான் அவர்கள் பதிவுகளை உடனுகுடன் படிக்க முடியும் என்பதை எல்லாம் அறிய சில பல நாட்கள் ஆனது ஏன் இப்பொழுது கூட  வலைச்சரத்தில் இவ்வளவு நாள் சேர வேண்டும் அப்பொழுதான் அதை பற்றி உடனுகுடன் தெரிந்து கொள்ளாலாம் என்று கூறு இல்லாமல் இருந்திருகிறேனா பாருங்களேன் நேற்று தான் சேர்ந்தேன் வெட்கமாகத்தான் இருக்கு இது எதோ சைட் மொத்தமாக பதிபவர்கள் பற்றி குறிப்பு கொடுக்கும் இடம் என்று நினைத்திருந்தேன பார்த்துகோங்க நான் எவ்வளவு பேக்கு என்று என் மகன் வேறு பயப்படுத்தி கொண்டே இருப்பான் நீங்க வேற எடக்கு முடக்க திங் பண்றவங்க நேர்மை நியாயமுனு  இங்க பண்ற அட்டகாசத்தை எல்லாம் அங்க காமிச்சிடாதிங்க இப்பெல்லாம் ஒரு லைக் கொடுத்தாகூட பிரச்னை வருது  உள்ளர போடுறவாங்க வேண்டாம் என்று எப்போதும் கண்காணிக்கும் குடும்பம் நான் கங்கா டு வால்கவும் படிப்தேன் ஜே கிருஷ்ண முர்த்திதியையும்படிப்பதேன் வியாசர் விருந்துயையும் படிப்தேன் ரமணி சந்திரனையும்  விட்டதிலை ஜெயமோகனையும் விட்டதிலை பாலகுமாரனையும் விட்டதில்லை என் வீட்டில்உள்ளவர்கள்  என்னை மறைகழண்ட கேசு  என்றுகூட சொல்வார்கள்.படிக்கும் ரசனையில் எல்லைகோடு போடதில்லை.
  என்னை நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது லைப்ரரியில் கொண்டு போய் சேர்த்தார் என்அப்பா ரொம்பவே அடவடியானவர் முதலில் அவர் எடுத்து கொடுத்த புத்தகமே வியாசர் விருந்து இதை புரிந்து கொள்வதற்க்காக பல முறை படித்துள்ளேன் இன்னும் அதன் தாகம் தீரவில்லை 

 
இந்த பதிவுலகில் நான் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது இது ஒரு தனி உலகமாக தெரிகிறது
எனக்கு மிகவும் ஆச்சரியம் கொடுக்கும் விஷயம் என்வென்றால் பதிவில் கூட ஆண் பெண் என்ற வித்யாசம் இருப்பது தெரிவது தான் ஆக்கங்களுக்கு வரைமுறை வேண்டும் தான் அனைவருக்கும் இது பொருந்தும் இங்கு பலதரபட்ட மக்கள் உணர்வுகள் எப்படி இருகின்றன எதை அவர்கள் ரசிக்கிறார்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க படுக்கிறது எதற்கு அதிகம் கருத்து  இடப்படுகிறது என்றெலாம் சிறிது சிறிதாக அறிந்து வருகிறேன் .சுவாரசியம் நிறைந்த்தாகவே உள்ளது.  இந்த கணணி பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது
கற்றது கை அளவு கூட இன்னும் எட்டவில்லை பயணிக்கவேண்டும்        

ஞாயிறு, 17 மார்ச், 2013

மூடிய கையில் என்ன இருக்கிறது?


அந்த கல்யாண மண்டபம் பரபரப்புடன் செயல் பட்டு கொண்டிருந்தது
கல்யாணத்தில் ரொம்பவும் முக்கியாமான போட்டோ செச்ஷன் நடந்து கொண்டிருக்கிறது “ஹேலோ ப்ளீஸ் இன்னும்கொஞ்சம் நெருக்கமா நில்லுங்க
நீங்க கொஞ்சம் சைடா நில்லுங்க இப்படி ஒரே பரபரப்பு  
“ஏய் யாருப்பா அது கேமராவை மறைகறது பொண்ணு மாப்ளையும் தள்ளுங்க “
“சரி மச்சி அப்ப நான் கிளம்புரேண்டா என்ஜாய்
“டேய் இருடா ஒரு நிமிஷம் போட்டோ எடுத்துட்டு போகலாம்
“அட எதுக்குடா “?என்றபடியே அவன் தலையை வாரி கொள்கிறான் மடிச்சுவிட்ட சட்டையின் கைகளை எடுத்து சரி செய்து கொண்டு ஒரு முறை தன்னை சரி பார்த்து கொள்கிறான் பரபரன்னு இது தான் நாம்

 ஒரு கல்யாணத்திலோ அல்லது குடும்ப விழாகளிலோ இல்லை பள்ளி விழாக்கள் ,தோழமைகளுடனோ எங்கு நாம் போட்டோ எடுத்து கொண்டாலும் அங்கு நாம் நம்மை வெளிபடுத்த முயல்கிறோம். 
நாம போட்டு கொண்டிருக்கும் உடைகளை சரி செய்து கொள்வோம் இல்லை போட்டிருக்கும் ஆபிரணங்கள் தெரிய வேண்டும் என்று எதாவது செய்வோம் சிலர் தன் அழகிய கூந்தல் தெரிய  வேண்டும்மென்று அதை முன்விட்டு கொள்வார்கள் விரலில் போட்டிருக்கும் மோதிரம் கூட தெரியனும் சில பேர் கையை கட்டி கொண்டு நிற்பார்கள் ஏன் வாண்டுகள் கூட தன்னை  வெளிபடுத்த முட்டி மோதி கொண்டு தலையை நீட்டுங்க போட்டோக்கு போஸ் கொடுப்பதற்கு எல்லோர்க்கும் பிடிக்கும், பிடிக்கவில்லை என்றாலும்

நாம் வந்ததுக்கு ருசு வேண்டும் என்பதற்காகவாவது போட்டோ எடுத்து கொள்வார்கள்

ஏன் இதை எல்லாம் செய்யறோம் நம்மை நாம் அடையாள படுத்த ஆசைபடுவதால் நான்தான் இருக்கிறேன் என்று சொல்லும் ஆவல்
எப்படியாகிலும்  நாம் தனித்து தெரிந்து விட வேண்டும் என்பதே மனிதனின் இயற்கையான ஆவல்

இது போல்தான் சமூகத்தில் எப்படியாகிலும் நாம் நம்மை முன்னிறுத்த  விரும்புகிறோம் அது நம்மை புரிந்து  கொள்கிற மாதிரி தெரிந்து கொள்கிற மாதிரி வெளி படுத்த விரும்புகிறோம்  
அதுல பாருங்க நல்லவனை விட நல்லவன் போல் காட்டிகிறவன் புகழபடுகிறான் இங்கே காட்டி கொள்கிறவர்கள் மட்டுமே கண்டு கொள்ள படுகிறார்கள் தம்மை வெளிபடுத்தாதவர்களை வேஸ்ட் ‘என்று ஒதுக்கி விடுகிறது இந்த உலகம்,
  
மூடின  கையில் என்ன இருக்குனு எப்படிசொல்ல முடியும்?அப்புறம் முரளி நடித்த காதல்படங்கள் போல்  ஆகிவிடும் கடைசிவரை சொல்லாதகாதல்  போல்..........

ஆனால் நம்மை எல்லா இடத்திலும் உடனே அடையாள படுத்திவிட வேண்டும் என்று சிலர் அலைவாங்க அது அவங்களுக்கும் ஆபத்தை கொடுக்கும் சமூகத்துக்கும் நல்லதில்லை

ஹிட்லர் தன்னை அடையாளம் காட்டியதால் அவனுக்கு என்ன லாபம் உலகுக்கு என்ன லாபம் ?

இதோ நம் கவிஞ்சர் வைரமுத்து  வெளிப்படுத்துவதற்கு ஒரு உதாரணமாக அவர் கவிஞ்சர் என்று தெரியும் ஆனால் அவர் எழுதிய மூன்றாம் உலக போர் என்ற நூலுக்குசர்வதேச இலக்கிய விருது கிடைத்துள்ளது இதையொட்டி அவர்  காவிரி டெல்டா பகுதில் விளைவால் தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பத்திற்கு ஒரு லட்சம் என்று  11 லட்சம் கொடுக்க முன்வந்தது இது தான்  நல்ல வெளிபடுதல்.
 .
நம்மை வெளி படுத்துவது தேவை அதைவிட தேவை வெளிபடுத்துவதில் உள்ள நியாயம் இது இதுதான் ரொம்பவே முக்கியம்

கல்யாண வீட்டுக்கு போனா நாமளே மாப்பிளையாக இருக்கனும் சாவு வீட்டுகு போனாலும் நாமலே செத்தவனாக இருக்கனும் நினைக்கிறது வெறி முதன்மை வேண்டும் தான் அதற்கு என்று வரை முறை இருக்கிறது அல்லவா

தன்னையே பார்க்க வேண்டும் தன்னையே புகழ் வேண்டும் என்ற வெறி நிறைய பேருக்கு இருக்குங்க இதுக்கு உதாரணமா பல தலைவர்கள் தலைவிகள் இருக்காங்க பல நடிகருங்க கூட இப்படிதான் உதராணம் உங்க விருப்பத்திற்கு விடுகிறேன்.
 .
வெளிபடுத்துங்கள் இரக்கமும் அன்பும் அன்னைதெரசாவை வெளிபடுத்தியது
பண்பு காமராஜரை வெளிபடுத்தியது அறிவு ஆரியபட்டவை வெளிபடுத்தியது
வள்ளல் தன்மை பாரியை வெளிபடுத்தியது ஏன் இன்று திரு .கருப்பையன்   சமூகத்துக்கும் நன்மை செய்யும் வெளிபடுதலே என்றும் நிலைத்திருக்கும். 

சில நேரத்தில சில இடத்திலே நம்மை வெளிபடுத்த தடைகள் வரும் நம்ம மேல ஒரு பாறாங்கல்லை போட்டு அமுக்கி வைப்பது போல் நம்மை எழவிடாமல் செய்யருத்துக்குனு ஆளுங்க வருவாங்க நாம் சோர்ந்து விட கூடாது தடைகள் உடைஎறிய வழி  கண்டு பிடிக்கனும்

நம்ம சூப்பர்ஸ்டார் பாட்டு போட்டு கேக்கனும் கேட்ட மட்டும் போதாது வாழ்கையில் பயன்படுத்தணும்

  வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா….தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா   
 
சிவகார்த்திகேயனை எல்லோருக்கும் தெரியும் எத்தனையோ கம்பயரிங் பண்றவங்க இருந்தாலும் இவரு தனக்குன்னு  தனி காமெடி பாணியை வெளி படுத்தி இன்று எல்லோரும்க்கும் தெரியும் படியா வெற்றி அடைஞ்சாச்சி   இல்லையா 
தடைகளை உடையுங்கள் உடைக்கும் உளி உங்கள் மனதில் இருக்கிறது
சரி கூடையை  போட்டு மூடிவச்சாலும் சேவல் கூவத்தான் செய்கிறது
கூடை தடையாக இல்லை  உரிய நேரத்தில் கூவினால் சேவல் இருப்பதை மறைக்க முடியமா ?
கட்டான் தரையாக இருந்தாலும் காங்கிரீட் கட்டிடமாக இருந்தாலும் வீரீயமிக்க விதை முட்டி கொண்டு வெளிப்படத்தான் செய்கிறது அது போல் தடை தகர்த்தெறிவோம் சரியான படி வெளிபடுத்துவோம் நாம பெரியவங்க சொல்லிட்டுதான் போயிருகாங்க இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும்    

வியாழன், 14 மார்ச், 2013

என்ன செய்ய போகிறாய் ?எல் கெ ஜி சுட்டி அந்த ஒரு ஆள் நிற்க கூடிய பால்கனியில் அதை வைக்க இடம் தேடுகிறான்.

டேய் என்னே பண்ணிடிருக்க நீ,எங்கடா இருக்க ?
ஐயையோ யுனிபாமெல்லாம் கறையாயிட போதுடா,இப்ப உனக்கு இது ரொம்ப முக்கியமாடா?
தம்கொண்டு இருந்துகிட்டு என்ன வேலை செய்து பாரு,நான் கிச்சனில் இடிக்கிற கல்லை(சின்ன உரல்) காணாமேன்னு தேடிகிட்டு இருந்தா நீதான் கொண்டுவந்து இருக்கியா?
அதுலேவேற மண்ணை போட்டு தண்ணியை போட்டு கொழப்பி அதுவும் வாங்கி வச்சிருக்கற தண்ணியை , நானே இன்னிக்கு தண்ணி கேன் போடறவன் வரலேனு கவலை பட்டுகிட்டு இருக்கேன் நீ என்னடானா
என்னடா இது,ஏது இது,எங்கிருந்து எடுத்துகிட்டு வந்த?

அம்மா இது எங்க ஸ்கூல் வாட்ச்மேன் கிட்ட இருந்து கெஞ்சி வாங்கிட்டு வந்தேன் மா பிளீஸ் ப்ளீஸ் வச்சிகலாம்மா

டேய் எங்கடா வைப்ப தண்ணி ஊத்தினா வீடு அசிங்கமாயிடும் டைல்ஸ் தரையெல்லாம் வீணாபோயிடும் இந்த வேலை எல்லாம் யார் சொல்லி கொடுத்தா உனக்கு,இது வேற இடத்தை அடைச்சிகனுமா.நாம ப்ளாட்ல இருக்றவங்க, இதுஎல்லாம் தனி வீடு வச்சி இருக்கரவங்கதான் வளர்க முடியும்

அம்மா ப்ளீஸ் மா இது ஒன்னே ஒன்னேனுதான்மா அட்லீஸ் ஒன்னாவது வளர்கலாம்மா
நேத்திக்கு எங்க மிஸ் சொன்னாங்கமா நம்ம பூமி ரொம்பவும் வெப்பம் ஆயிட்டே  வருதாம் நாமெல்லாம் இருக்க முடியாம எரிஞ்சி போயிடுவோமாம் சன்னுக்கு கோபம் வந்திடுச்சாம் எல்லோரும் கண்டிப்பா பிளான்ட் வளர்கனும்னு கண்டிஷன் போட்டு இருக்காம் இல்லைனா நம்மளை கொன்னுடுமாம் நீ கூட சொல்லியிருக்கிம்மா சாமிக்கு கோபம்வந்தா கண்ணை குத்திடும்னு சன்னு கூட சாமிநு சொன்னியே அதுனாலதான் இந்த சின்ன செடியை கெஞ்சி வாங்கிட்டு வந்து இருகேன் ப்ளீஸ்மா நாம் பூமியை காப்பாத்தலாம்  நீ தானே சொன்னே நான் தனியா இருகேன் என்கூட விளயாட நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு தங்கச்சி பாப்பா கொண்டுவரேன்னு
தங்கச்சி பாப்பா வரத்துக்குள்ள நாம செத்து போய்ட்டா என்ன செய்யறது ?

திகைத்து போகிறாள் அந்த தாய் அவள் கண்ணில் நீர் வழிகிறது பூமி நனையட்டும் குளிரட்டும்

எல்லார் மனதும் விழிக்கட்டும் சூரியனின் கோபத்தை தணிப்போம் வாருங்கள் ஒன்று கூடுங்கள் நம் பூமித்தாய்யை காப்பாற்றுவோம்  நமக்காக
தண்ணீர் தண்ணீர் என்று அலைய வேண்டாம்
சுட்டெரிக்கும் வெயிலில் வேக வேண்டாம்

ஆம் உலகம் முழுவதும் இருக்கும்  73ஆராய்ச்சி நிலையங்கள் சூரியனின்   கோபத்தை வெளிபடுத்தி இருக்கிறது
இது கொடுத்த புள்ளிவிவரங்கள் என்னவென்றால் 11,300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த  வெப்ப அளவைவிட இப்போது 80% அதிக வெப்பத்தை உமிழ்கிறதாம் நம் தயாளபிரபு சூரியன்

நாம் என்ன செய்ய போகிறோம் அவன் கோபத்தை தணிக்க ?
-poovizi

ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 
தோழிவிஜிசுசில்  சிறுகதைகள் சமூகத்தில் நடப்பவைகளை உள்ளடகியது படித்து பாருங்கள் 
நேரம் கிடைக்கும் போது 
நிறை குறைகளை விமர்சிக்கவும் 
http://vijisushil.blogspot.ae/

செவ்வாய், 12 மார்ச், 2013

என் வீட்டு சுவர் போல் வருமா ?உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் 
இருந்தாலும்........
என் வீட்டுசுவர்  போலவருமா ?
என் சுவாசக்  காற்றை 
முழுதாய் உள்வாங்கி 
திரும்பி உரசிச் செல்லும்
என் நவரசத்தை 
நான்கு பக்கமும் நடுவராய் 
எடிட் செய்யாமல்  பார்க்கும் 

சுத்தி நின்ற எத்தனையோ சொந்தங்கள் 
தராத ஆறுதலை தோல் கொடுத்து 
தாங்கி நிற்க்கும் தோழன் 
யாரும் அறியா 
என் ஆழ்மனதின் 
நிர்வாணத்தை பொக்கிஷமாய் ............
பாதுகாக்கும் பெட்டகம் 

என் காதலின் நேசமுத்தத்தை 
முதலில் அனுபவித்த 
என் செல்ல சுவர்கள் 

பகிரமுடியா குமுறல்களை 
அள்ளி வைத்திருக்கும் அலங்காரப்பெட்டி 

என் சந்தோஷ சிரிப்பலைகளை 
எதிரொலிக்கும் என்னிடம் பிரதிபலிக்கும் 

என் வாழ்க்கை நாடகத்தை 
அமைதியாய் பார்க்கும் 
அரங்கம் 
மூன்றாம் கண்ணாய் 
என் மனதை ஊடுருவும் 
மனசாட்சி 

என் வலிகளை எல்லாம் 
வழக்காடாமல் வாங்கி நிற்கும் வங்கி
என் பச்சைரணங்களுக்கு இளைப்பாறும் 
போதிமரமாய் என்வீட்டு சுவர்கள் 

என் ஏக்கங்களை எல்லாம் 
ஏளனம் செய்யாமல் ஏந்தி நிற்கும் 

என் மன விகாரங்களுக்கு 
பாவமன்னிப்பு  வழங்கும் 
பாதிரியார் 

இறைவா........
நீ இருப்பது உண்மையானால் 
உன்னிடம் எனக்கோர் வேண்டுதல் 
உயிர் தா ........ 
என் வீடு சுவர்களுக்கு 
என் உணர்வோடு உறவாட 
என் விருப்பத்தையும் விருப்பமின்மையும் 
விவாதிக்க விமர்சிக்க 
அதற்க்கான கடவுச்  சொல்லை 
என்னிடம் மட்டும் தா 

என் ரகசியங்களை தாங்கிய தாரகை 
என் வீட்டு சுவர்கள் 
ஈடாகுமா ?எதற்கேனும் இந்த உலகத்தில் 

உங்களுக்கும் தானே ??????????????