வியாழன், 28 பிப்ரவரி, 2013

கடவுளுக்கு வருத்தம் எப்போ –ஜோக்

எங்கேயும் லொள்ளு 


ஒரு அம்மா காய்விற்பவனிடம் "ஏன்பா வெங்காயத்தை பொறுக்கி பார்த்து வாங்கினா என்ன விலை ?"

அதுக்கு அந்த பிரகஸ்பதி "பொறுக்கி பார்த்து வாங்கினாலும் நல்லவன் பார்த்து வாங்கினாலும் ஒரே விலைதாம்மா "என்ன கரைட்டு  பாருங்க அவரு
என்னா வில்லத்தனம் பாருங்க 
"நேத்திக்கு என் ஆளு கூட பேச அவங்க வீட்டுக்கு போன் செஞ்சேனா ?அவங்க அண்ணன் வந்து எடுத்துடான் "

அச்சச்சோ என்னடா ஆச்சு ?

"ஹி ஹி ...சாரி மச்சான் ராங் நம்பர்னு சொல்லி வச்சிடேன் "

இந்த வாலுங்க கலாய்கறத்தில்  கடவுளை கூட விட்டு வைக்கமாட்டாங்க போல 

"கடவுள் மனசு எப்ப தெரியுமாடா ரொம்ப வருத்த படும் ?"

"எப்படா ?"

மேரே ஜ்க்கு முன்னாடியே அந்த பொண்ணு கன்சீவ்  ஆயிட்டா அந்த பொண்ணோட அம்மா "ஐயோ கடவுளே இப்படி செஞ்சுடியே ........".னு அலறுவாங்க பாரு அப்பதான் இப்ப இருக்கற பசங்களுக்கு பாடம் எடுப்பதர்க்குள் அப்பப்பா ....

டீச்சர் -ஒரு ஊருல ஒரு வயசான பாட்டி இருந்தாங்க ......

பையன் -போங்க மிஸ்நீங்க பொய் சொல்லரீங்க  எந்த ஊர்லயும் ஒரு வயசுல பாட்டி இருக்கமாட்டாங்க 
படிச்சதுதான்.... 

புதன், 27 பிப்ரவரி, 2013

துப்பறியும் சிசுகள்

சிசுக்களின் காதுகள் 23 வாரம் கர்ப்பத்தில் இருக்கும்போது வளரத்தொடங்குகின்றன

கர்ப்பப்பையில் இருக்கும்போதே சிசுக்களால் ஒலிகளைக் கேட்க முடியும் என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட ஒன்றுதான். ஆனால் கூடுதலாக இப்பொழுது சிசுக்களின் வளர்ச்சியின் மற்றொரு அம்சமாக இவை 

பிக்கார்டி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 'கர்ப்பப்பையில் இருக்கும்போதே குரல்களை உணர முடியும் சிசுக்களால்' என்று கண்டுபிடித்துள்ளனர்

28 வார கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களை ஒளி ஸ்கேன்கள் மூலம் சோதனை செய்ததில், அவைகள் வெவ்வேறு வார்த்தைப் பதங்கள் மற்றும் ஆண் , பெண் குரல்களை, சிசுக்களால் பாகுபடுத்திப் பார்க்க முடிகிறது என்று தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.

தாயின் கருப்பையில் இருக்கும்  போதே சிசுக்கள், பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, வெளியில் இருந்து வரும் பேச்சொலிளிகளில் காணப்படும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்கின்றன என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனித மூளைக்கு பேசப்படும் மொழியைப் புரிந்துகொள்ளத்தேவையான உள்ளார்ந்த அறிவுத்திறன்  அவைகளுக்கு இருப்பதாக தாங்கள் நம்புவதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கூறுகிறது.

இனி யாரிடம் பேசுகிறோம்  என்ன பேசுகிறோம் எந்த தொனியில் பேசுகிறோம் என்பதை கருவுற்றிருக்கும் தாய்மார்கள்  உணர்ந்து  செய்தால் நல்லது 


டீக்கா –டாக்கா ?–பர்சனாலட்டி


டீக்கா –டாக்கா ?–பர்சனாலட்டி வெற்றிக்கு

பர்சனாலட்டி இருந்தால் போதுமா ?

ஆம் பிர்சனால்ட்டி இருந்தால் போதுமா வெற்றிக்கு இன்னைக்கு தேதிக்கு நிறைய இளஞ்சர்கள் இந்த கண்ணோட்டத்தில் தாங்க அலையறாங்க
ப்ர்சனால்ட்டினா என்னங்க அழகாக இருப்பதா ?
இல்ல ரொம்ப முக்கியமானது வெள்ளையாக  இருப்பதா ?
இல்லை உடம்பை டிரிம்மாக பாடி பில்டாக   வைத்து கொள்வதா?
டீக்கா ஸ்டைலா டிரஸ் பண்ணுவதா ?இப்படி குழப்பம் இருக்கு இல்லையா
சரி சொல்லுங்க அன்னை தெரசா சிறந்த அழகியா ?பெரியார் பாடி பில்டரா ?
அண்ணா ட்ரிமானவரா?காமராஜர் டீக்காவா டிரஸ் போட்டிருந்தாரா?
இவங்கலாம் சிறந்த ப்ர்சனால்டிகள் தானே நமக்கு அப்ப ப்ர்சனால்ட்டினா எது ?
ப்ர்சனாலட்டி என்பது கண்ணாடி மாதிரி இருப்பதை காட்டும் இருக்கிற மாதிரி  காட்டும்  ப்ர்சனால்ட்டி என்பது மனித பண்புகளை படம் போட்டு காட்டும் கேமரா உங்கள் அக உணர்வுகளையும் இது காட்டும் எக்ஸ்ரே  கருவி

நீங்க எல்லாம் இந்த விளம்பரத்தை பார்திருக்கீங்களா?ஒரு சிக்னலில் ஒரு
காருக்கு அருகே ஒரு பையன்  சைக்கிளில் வந்து நிற்பான் அவனுடைய டிரஸ்  கசங்கியும் மடித்து விடபட்டும் கொஞ்சம் முகம் சோர்ந்தும்இருப்பான் அப்போ அந்த காரில் இருந்தவர் அவனை கொஞ்சம் அருவருப்போடு பார்ப்பார் உடனே அவன் தன் உடைகளை சரி செய்து கழுத்திலும் ட எடுத்து கட்டி கொள்வான் அப்போது அந்த கார்காரனின் முகம் மாறிவிடும் இந்த கார்காரனை போல் தான் பல பேர் இருக்கிறார்கள் எது உண்மை உடையில் மட்டுமா இருக்கிறது பர்சனாலட்டி  
ப்ர்சனால்ட்டி என்றால் ஆளுமை மூளை சாதிக்க முடியாததை கூட ப்ர்சனால்ட்டி சாதிக்கும் அதற்கு காரணம் ஆளுமை செய்பவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருப்பது அவசியம்
அது எது?
வசீகரமான தோற்ற பொலிவு (காந்தியை போல் )

மக்களை மகிழ்விக்கும் ஆற்றல் (ரஜினியை போல் )

தன் உணர்வுகளோடு தனக்கு தானே நல்லிணக்கம் கொண்டிருத்தல்
 
குறிகோளில் குறியாகவும் நேர்மையாகவும் இருத்தல்

பொருத்தமான முறையில் ஆடை அழகான  உடல் மொழி கொண்டிருப்பது

பேச்சில் நிதானம் கனிவான் குரல் வளர்ப்பது

நகைசுவையும் உணர்வும் ஆக்கபூர்வமான சிந்தனையும்

தன்னலமற தன்மை பிறரை உற்சாகமூட்டும் தன்மை

கற்பனைவளம் ,மற்றவர் பேசுவதை கவனமுடன் கேட்டல்

மிக முக்கியமானது பிறருக்கு நம்பிக்கையூட்டும் செயல்கள்

இது எல்லாவற்றையும்  கொண்டி இருந்தவர்கள் , கொண்டிருப்பவர்கள், கொள்பவர்கள் , சூப்பர் ப்ர்சனால்ட்டியாக பார்க்க படுகிறார்கள் உண்மையான மனிதராக நாம் இருந்தா நம்மளை சுற்றி மற்றவர்களை  இழுக்கும்  நம்ம பேச்சை கேட்கவைக்கும்  நம்ம ப்ர்சனாலட்டி.

இதையெல்லாம் இருப்பதாக காண்பித்து சிலர் இருப்பார்கள் நடிப்பார்கள் அது பாருங்க பல நாள் திருடன் ஒருநாள் அகபட்ட கதையாகிவிடும் அப்புறம் மூன்றாபிறை படத்தில் ஒரு கதை பாட்டு வரும் கமல் ஸ்ரீதேவிக்கு சொல்லுவாரு படம் பார்த்து தெரிஞ்சிகோங்க(ம்க்கும்....... இது வேறயா)

ஒரு  தந்திர நரி நீல சாயத்தில் விழுந்து நீல நரி மாறி  போய் பண்ண அட்டகாசங்கள் ஒரு நாள் மழையில் கொஞ்சம்  நனைத்து , சாயம் வெளுத்து   வேசம் கலைந்து  ஓடிய கதை போல் ஆகிவிடும் 

திங்கள், 25 பிப்ரவரி, 2013

விழித்து கொள்ளுங்கள்–விவாகரத்துக்கு விடைகொடுங்கள்
இளைஞ்சர்களே, இளைஞ்சிகளே நீங்களும் வழி விடுங்கள் உங்கள் வாழ்க்கை நதி தடங்கள் இல்லாமல் ஓட

நான் எந்த பெரிய விஷயங்களையும் அலச போவதில்லை இன்று ஆண் இப்படி ஆயிட்டான் பெண் இப்படி ஆயிட்ட என்றும் குறை சொல்ல குற்றம் தேட விரும்பவில்லை இணைகளுக்கு நடுவே குறுகீடு  செய்பவர்களையோ செய்யும் விஷயதையோ பற்றியும் சொல்ல விரும்பவில்லை அது முடிவு அற்றதாகி விடும்

காதலும் கடவுளும் ஒண்ணு அதற்கு நாம் எப்படி உருவம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்துதான் வாழ்வு அவ்வளவுதாங்க  ரொம்ப சிம்பிள்

என்ன நடக்கிறது நம் வாழ்வில் எப்படி கையாளவேண்டும் என்று உணர்வுகளுடன்........... கலந்து யோசியுங்கள்
நிறை குறையோடு வாழ்வை ஏற்று கொள்ளுங்கள் எந்த விஷயதிற்க்கும் ஒரு மாற்று கருத்து உண்டு அது எது என்ன என்று கேளுங்கள் அட்லீஸ் உங்கள் ஆழ் மனதிடமாவது காது கொடுங்கள்
தவறு நடந்தால் சரி செய்து கொள்ள பாருங்கள் (தவறுக்கு வரை முறைகள் உண்டு கண்ணுங்களா )அதை  விட்டு வெட்டியாக விதண்டாவதாமோ ,தத்துவமோ பேசி வாழ்க்கையை நிர்மூலம் ஆகி கொள்ளாதீர்கள்

இதில் இளைஞ்சர்களின் பிரச்சனை என்ன தெரியுங்களா ?அவங்க பிரைமரி செக்சன்லில் இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியில் வரமாட்டாங்க
எப்போ அவங்க மேல் நிலைபள்ளி(Higher secondary class )  படிப்புக்கு செல்வது ?
எப்போ அவங்க கல்லுரிக்கு செல்வது ?(hello….என்ன விளையாடறீங்களா …. ஏய் யாருப்பா சவுண்டு வுடறதுஇருங்க  பொறுங்க )

நான் சொல்ல வருவது மெச்சுரூட்டி படிப்பை பற்றி......... அவர்களிடம் எப்போதும் ஒரு சிறுபிள்ளைத்தனம் ஒளிந்திருக்கும் இளைஞ்சர்களுக்கு எப்பவும்  தாய்மையின் தேடல் இருக்கும் ஆண் என்பவன் தன் தோழியிடம் தன் மனைவியிடம் ஏன் தான் பெற்ற பெண் குழந்தையிடம் கூட தன் தாயை தேடுவான் அவர்கள் தன்னை வழி நடத்துவதை ஆர்வமுடன் ஏற்று கொள்ளும் ஆழ் மனதை  புறம் தள்ளி விட்டு அடக்குவான்   10 வயது சிறுவனை போல் சிலிர்த்து கொள்வான் இவங்க என்ன என்னை அடக்குவது என்று முரண் பட்டு  நிற்பான் தனக்குள்ளே தான்  ஆண் என்ற ஈகோவையும் கர்வத்தையும் விட ஒழிக்க தெரியாமல் திண்டாடுவான்

ஆனால் பெண்ணோ சீக்கிரம் தன் மன நிலையில் முதிர்ச்சி அடைந்து விடுவாள் தன்னை ஒரு டீச்சர் போல் நினைத்து கொள்வாள் எப்போதும் வழி காட்டுதல் வழி நடத்தல் என்று எப்போதும் கர்ணனின் கவச குண்டலம் போல் மனதில் ஒரு பிரம்பை தூக்கி கொண்டே அலைவாள் இது இதுதான் சிக்கல் இதை உணருங்கள் இதில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாய் சுவாசியுங்கள்

இளைஞ்சர்களே எப்படியாவது நான் உனக்கானவன் ,உன்னுடையவன் ,உனக்கு மட்டுமே சொந்தமானவன் என்ற எண்ணத்தைஉங்கள் துணைக்கு கொடுத்துவிடுங்கள் எப்பாடு பட்டாவது தலையால் தண்ணி குடித்தோ தலை கீழாக நின்றோ அப்புறம் பாருங்கள் நீங்க “நானே ....என்றும் ராஜாஎன்று பாடலாம் அவர்கள் உங்கள் காலடியில் இருக்கும் விசுவாசி போல் இருப்பார்கள்

பெண்களே அவர்கள் காலடியில் கிடக்க வேண்டுமா என்று போர் குரல் எழுப்பாதீர்கள் அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் கால்களை கட்டி போட்டு விடுங்கள் இது ஒரு கண் கட்டு வித்தை இது கைவர பெறுவதற்கு சில பயிற்ச்சிகளை கலந்து நமக்குள் விழுங்கி விட வேண்டும் அது என்னா?

பொறுமை கொஞ்சம் ,இனிமை கொஞ்சம் இரக்கம் கொஞ்சம் தாய்மை கொஞ்சம் ,காதல் கொஞ்சம் இத எல்லாத்தையும் கலந்து உள்ளே போடுவிடுங்கள் இப்போ கண் கட்டு வித்தை கைவரும்

ஒரு மிஷினோ ,இஞ்சீனோ டைட்டாக இருந்தால் எப்பவும் கஷ்டமாக தானே இருக்கும் அதை உபயோகிக்கும் போது சிறு உராய்வுகள் நடந்தால் தான் இயங்குவதற்கு சுலபமாகும் அது போல்தான் வாழ்க்கையில் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வதற்கு சில உராய்வுகள் தேவை படுகிறது அது தான் ஊடல் சிறு சண்டைகள் அப்போதான் வாழ்க்க்கையும் இனிக்கும் இறுக்கம் தளர்ந்து  சண்டையை கூட வெளியே போட முடியும் ஊடலை உரிமை  (தன் துணையிடமட்டுமே) உள்ளவர்களிடம் மட்டுமே காட்ட முடியும்

இளைஞ்சிகளே இப்படி இருக்காதீங்க நினைக்காதீங்க
அடி என்னடி குடும்பம் ,இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்திவலை ,பாசம் என்பது பெரும் கவலை ,
சொந்தம் என்பது சந்தையடி ,இதில் சுற்றம் என்பது மந்தையடி..............

இப்படி பாருங்க
அடி இதுதானடி உலகம் இதில் எத்தனை இன்பம்  
பந்தம் என்பது கடைசிவரை ,பாசமென்பது பரிந்துரை
சொந்தம் என்பது நீ சாகும் வரை ,இதில் சுற்றம் என்பது நீ வாழும் வரை

இளைஞ்சர்களே நீங்களும் இப்படி இருந்து விடாதீர்கள்
என்னடா பொல்லாத வாழ்க...........
யாரை நம்பி பெத்தாலோ அம்மா அட போகும் இடம்
ஒன்று தான் விடுங்கடா சும்மா ,இதுக்கு போய் அலட்டிகலாமா .............

இப்படியும் பாருங்கள் வாழ்வு இனிக்க
  
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில், 
என் காதல் நீயே.........
எனது சொந்தம் நீ, எனது பகையும் நீ
காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ 
பிறந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ 
மரணம் மீண்ட ஜனனம்ம் நீ,
நான் கண்டெடுத்த பூவே, கண்ணில் தேடல் என்ன உயிரே  
எனது செல்வம் நீ, எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ, எழுத்து பிழையும் நீ

இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணீர் நீ 
எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ 
நான் தூக்கி வளர்த்த காதல் நீ 
நான் கண்டெடுத்த பூவே, சிறு ஊடல் என்ன உயிரே  
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே ...
வானும் முடியுமிடம் நீதானே
காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்றாயே ..............


இவ்வளவுதான்  இது தான் நிஜம் இதுபஞ்ச்-; எத்தனை புயல்களை கடந்தாய் என்பது முக்கியமில்லை கரையாய் அடைந்தாயா (காதல்  கடலுனு வைச்சிகோங்களேன் ) 

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

விழித்து கொள்ளுங்கள்–விவாகரத்துக்கு விடைகொடுங்கள்
ஆம் நேற்று (SUNDAY 24/2/13)வந்த ஒரு நிகழ்ச்சி என்னை கலங்கடித்து விட்டது இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து எங்கு அதிகம் ?ஏன்? எதற்கு ?காரணம் என்ன ?
என்று அலசிய நிகழ்ச்சி Vijay T.V-யில் காலை10 மணியிலிருந்து 12மணி வரை நடந்த கோபிநாத்-தால் நடத்தபட்ட நிகழ்ச்சி அதில் விவாகரத்து  அதிகம் நடை பெறுவது நம் நாட்டில்- தமிழ்நாட்டிலாம் !!!!!!!!!
புள்ளிவிவரத்தோடோ காட்டபட்டது அதிரிச்சி தகவல் காட்டபட்டது அதை பார்த்தபிறகு என்னால் தூங்க முடியவில்லை என்ன இது என்ன இது என்று மனம் அங்கலாய்த்து போனது  கலங்கிவிட்டது
ஏன் ?இது? எங்கு தவறு நடக்கிறது ?எங்கே விட்டுவிடோம் பதிலை ?

என் பள்ளிபருவத்தில் விளையாட்டாக இந்த பாடலை பாடுவோம்
"நல்லதொரு குடும்பம் .........நாய் போல் புடுங்கும்,
தொல்லை தரும் சுரங்கம் ...."
அநாகரீகமாக நல்ல  பாடலை மாற்றி பாடியதற்கு பின்நாளில் வருத்த பட்டுஇருக்கிறேன்

ஆனால் இன்று நிலைமை இப்படி தான்  நினைத்து கொண்டிருகிறார்களோ இன்றைய தலைமுறை


பெற்றோர்களே விழித்து கொள்ளுங்கள் கஷ்ட்டபட்டு பெற்று கண்ணும் கருத்துமாய் வளர்த்து அவர்கள் வாழ தெரியாமல் விட்டுவிடாதீர்கள் வாழும் கலையை சொல்லி கொடுங்கள் அடிபட்டு திருந்தட்டும் அனுபவம் கிடைக்கும் என்று விட்டு விடாதீர்கள் ?பிள்ளைகள் சந்தோஷமாக வாழ்வதை பார்த்த திருப்தி இல்லாமல் நாம் என்ன செய் போகிறோம் விரக்தியோடு இறப்பதா ?
அவர்களுக்கு அனுபவம் எங்கிருந்து கிடைக்கும் முதலில் நம்மிடமிருந்து தான்
அதனால் வெட்கம் தயக்கம் குறு குறுப்பு போன்ற எல்லாவற்றையும் ஒதுக்குங்கள் நான் நானா நான் எப்படி எல்லாத்தையும் சொல்லிதர முடியும்   என்று பின்வாங்கதீர்கள்

நம் வாழ்கை அனுபவங்களை ,அந்தரங்கங்களை ,(சென்சார் போட்டுதான் )காயங்களை, அடிபட்ட உணர்வுகளை ,சந்தோஷமான நிகழ்வுகளை, எல்லாம் எடுத்து கூறுங்கள் கண் முன்னால் காட்டுங்கள் 
எனக்கு என்னலாம் நடந்தது தெரியுமா? என்று உங்களை முன்னிலை படுத்தி பாடத்தை கொடுப்பதை கற்று கொடுப்பதை அவர்கள் கவனிக்காமல் போய்விட செய்துவிடாதீர்கள் கண்டிப்பாக நமக்கு நடந்த நடக்கும் அனுபவங்களுக்கு நாம் நமக்கு ஒரு பதில் தேடி இருப்போம் நேர்மையான பதில்  கிடைத்திருக்கும் ஆனால் அதை 75% பேர் மறைத்து கொள்வோம் நம் ஆழ் மனதில், வீம்புக்கு இருப்போம் வாழ்கையில். 
நமக்கு நடந்தது எல்லாம் நம்மோடு போகட்டும் இனிவரும் தலை முறைகளுக்கு நாமே நம் அனுபவங்களை மூன்றம் மனிதனாக நின்று அலசி ஆராய்ந்து ஆழ் மனதில் இருக்கும் நேர்மையை வெளியே கொண்டுவந்து  அவர்களை வழிநடத்துங்கள்
அவர்கள் வாழ் ஆரம்பிக்கும் போது வாழும் போது கைவிட்டு விடாதீர்கள் "நாங்கள் என்ன செய்றது அவங்க வாழ்க்கை அவங்க வ்ளர்ந்துடாங்க" என்று ஒதுங்கி கொள்ளாதீர்கள்
பாவம் என் பிள்ளைகள் என்று பேசியும் வாழ்வை சீர் அமைக்காமல் போயிடாதீங்க நடுநிலையில் நின்று யோசியுங்கள் யோசிக்க சொல்லி கொடுங்கள்

இனி வரும் காலத்திற்கு ஒரு விஷயதிற்கு இரண்டு பக்கம்
மட்டும் போதாது யோசிப்பதற்கு 
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு- என்று நான்கு திசையிலும் ,
பக்கத்திலும் ஒரு விஷயத்தை அணுக யோசிக்க பழக்க படுத்துங்கள்

பெற்றோர்களே விழித்து கொள்ளுங்கள் நம் பிள்ளைகளின் நிறை குறைகள் நாம் மட்டுமே நன்கு அறிவோம் அவர்கள் சிறப்பாக சீரோடு வாழ வழி காட்டுவோம் உடைத்தெரியுங்கள் தயக்கத்தை கர்வத்தை நேர்மையின்மையை

இன்னும் இன்றைய  இளைஞ்சர்களுக்கும்  இளைஞ்சிகளுக்கும் சிலதை  சொல்ல விரும்புகிறேன்  ஆனால் பதிவு நீண்டு விட்டது அதனால் தொடர்கிறேன் இதை ........................நாளை 

புதன், 20 பிப்ரவரி, 2013

கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் -பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன்


காலம் மாற்றதின்  இதோ மற்றோர் உதாரணம்
 
  நம் சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் இருண்ட, ஆனால் முக்கியமான ஒரு நிகழ்வு இது  காலனிய ஆட்சி காலத்தின் போது 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று, ஜாலியன்வாலா பூங்காவில் கூடியிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக் கணக்கானோர் மரணமடைந்தனர்.(வாழனும் என்பதற்க்காக இறந்தவர்கள்)

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கேமரன்-பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் பூங்காவிற்கு சென்ற போது டேவிட் கேமரன் அங்குள்ள வருகையாளர் ஏட்டில் இந்தக் கருத்துக்களை எழுதியுள்ளார்.

இந்தச் சம்பவம் பிரிட்டனின் வரலாற்றில் 'மிகவும் அவமானகரமான ஒன்று' என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.ஜாலியன்வாலா பாக் படுகொலையை மறக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார் .(மறப்போம் மன்னிப்போம் என்ற சொல்லுக்குள் மறைந்து வாழ்பவர்கள் நாங்கள்) 
 
 அதே நேரம் இந்தச் சம்பவம் தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தும் அவர் மன்னிப்பு கோரவில்லை.

பஞ்ச் -( அவங்கல்லாம் அவங்க கிட்டேயே பாவ மன்னிப்பு கேட்டுகிடுவாங்க இல்ல.)

புதனின் புதிர் -வியப்புஆம் புதன் கிரகத்தை பற்றி அறிந்தவைகளை இன்று ம்று ஆலோசனை செய்கிறது அறிவியல் விஞ்ஞானம் 
இதுவரை புதனை சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளாகவே அறியப்பட்டு வந்தது 
தற்பொழுது  அந்தக் கோள்தான் எப்போதுமே சூரியனுக்கு அருகில் இருந்தததாகக் கூறமுடியாது என்று அறிவியலாளர்கள் இப்போது கருத ஆரம்பித்துள்ளார்கள்.
புதனின் தோற்றம் குறித்து இப்போது ஆய்வாளர்கள் மறுஆய்வு  தொடங்கியுள்ளார்கள்.
அந்தக் கோளில் உள்ள சில வேதியல் பொருட்கள் அதீதமான வெப்பத்தில் உருவாகியிருக்க முடியாது என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.
அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பான நாசா புதன் கோளை ஆய்வு செய்ய ஏவிய மெஸஞ்சர் என்ற விண்கலம் எடுத்து அனுப்பியப் படங்களை வைத்தே இப்படியான கருத்துக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
புதன் கோள் நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உருவாகி இருக்கலாம் என்றும், பின்னர் அது மிதந்து வந்து இப்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
பூமியிலிருந்து புதனைப் பார்க்கும்போது மங்கிப் போன பழுப்பு நிற உருண்டையாக தெரியும். ஆனால் அந்தத் தோற்றத்துக்கு மாறாக அதன் மேற்பரப்பு புகைப்படங்களில் வேறு மாதிரியாகக் காணப்படுகிறது என தற்போது கிடைத்துள்ள புகைப்படங்களை பார்த்த பின்னர் நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
புதிய புகைப்படங்களில் புதனின் பரப்பிலுள்ள எரிமலை பள்ளத்தாக்குகள் ஆரஞ்சு வண்ணத்திலும், சில பகுதிகள் ஆழ்- நீல வண்ணத்திலும் இருப்பது தெரிகிறது.
புதனின்  புதிர் -வியப்பு 
ஒளி ஊடுறுவ முடியாத மர்மமான தாதுப் பொருளையே அந்த ஆழ்-நீல வண்ணம் காட்டுகிறது என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் டேவிட் ப்ளீவெட் கூறுகிறார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போதே, புதன் வேறு எங்கோ உருவாகி மெல்ல மெல்ல வான் மண்டலத்தில் மிதந்து நகர்ந்து தற்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பீடாக உள்ளது.
அந்தக் கோளில் இருக்காது என்று கருதப்பட்ட விஷயங்கள் அங்கு உள்ளன என்றும் அது மேலும் தமது கருத்தை வலுப்படுத்துவதாகவும் அமெரிக்க அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
புதனின் நிழல் படிந்த பெரும் பள்ளங்களில் உறைபனி இருப்பதையும்,அதன் துருவப் பகுதியிலும் அதே போன்று காணப்படுவதாகும் கூறும் விஞ்ஞானிகள், சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளில் இப்படி உறைபனி இருப்பது வியக்கத்தக்கதாக உள்ளதாக கூறுகின்றனர் 
அதேபோல விரைவில் ஆவியாகக் கூடிய கந்தகம் மற்றும் பொட்டாஷியம் போன்றத் தனிமங்களும் மிக அதிக அளவில் காணப்படுவதாகவும் புகைப்படங்கள் மூலம் தெரிய வருவதாகவும் கூறும் விஞ்ஞானிகள் இவையெல்லாம் பெரும் புதிராக உள்ளன எனவும் கூறுகிறார்கள்.

நம்ப முடியவில்லை .....
ஆம் நம்ப முடியவில்லை இரட்டைமாடுவண்டி அச்சாணிகள்  கழலாமல் ஒரே விஷயத்தில் ஒத்து போனது 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான விஷயத்தில் நம்முதல்வர் ஜெயலலித்தாவும் முன்னால் முதல்வர்  கலைஞ்சர் கருணாநிதியும்   (எதிர்கட்சி தலைவரும் )ஒத்துமையாய் கருது வெளியிட்டுள்ளது மிகவும் வியப்பு வரவேற்க  தக்கது 
தமிழக முதல்வர் ஜெயலலிதா ,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் புரிந்ததை உறுதிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஐ.நா அவையில் கண்டனத்தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும். அதுகுறித்த அமெரிக்க முயற்சிகளில் இந்தியாவும் ஒத்துழைக்கவேண்டும் மேலும் தமிழர்கள் இலங்கையில் கண்ணியமாக வாழவகைசெய்யப்படும்வரை இலங்கைமீது பொருளாதாரத்தடை விதிக்கப்படவேண்டுமன அவர் இன்று புதன் கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே போன்று திமுக தலைவர் கருணாநிதியும் இலங்கை மீது போர்க்குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்துவரும் முயற்சிகளுக்கு இந்தியா வலு சேர்க்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.(தூங்கறவங்களை எழுப்ப முடியும் தூங்குவது போல் நடிபவனை எப்படி எழுப்புவது விழித்தவர்களே கண்ணைகசச்கி கொண்டு இருக்கும் போது )

பாலகன் பாலச்சந்திரன் சேனல் 4 வெளியிட்டிருப்பதைப் போல, கொடூரமாக கொல்லப்பட்டிருந்தாலும், போரின் போது ராணுவத்தினரால் கொல்லப்பட்டிருந்தாலும் எப்படியும் அது கொலைதான். அப்படி கொலை செய்யப்படும் அளவிற்கு, அந்தப் பாலகன் செய்த குற்றம் என்ன? அதற்கு சிங்கள அரசு உலகத்திற்குப் பதில் சொல்லித் தானே ஆக வேண்டும் என சுட்டிக்காட்டுகிறார் கருணாநிதி.(ஹிட்லரின் வழியை தேர்ந்தெடுத்த பின் பாலகன் என்ன பாரியாள் என்ன) 

கடந்த ஆண்டே, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கை அரசு கடந்த ஓராண்டு காலத்தில் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறைகூறுகிறார் கருணாநிதி.(புகை அடங்க நேரமாகுமோ) 

திங்கள், 18 பிப்ரவரி, 2013

மதில் மேல் பூனையாய்

உலகில் 
மரண தண்டனை இன்று மதில் மேல் பூனையாய் எப்பொழுதும் அல்லாடி 
(இந்த பக்கம் மா அந்த பக்கமா) கொண்டு  இருக்கிறது 
ஆம் உலகில் 140 க்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை முற்றாக ஒழிந்துவிட்டனாவாம்,

இந்தியாவில் ,1455 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி, ஆசிய மனித உரிமைகள் மையம் என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மரண தண்டனைகள் மூலமாக குற்றங்கள் தடுக்கப்படுகின்றன என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் கிடையாது என்றும் அது கூறுகிறது.

 இந்தியா அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனைகளை அளிப்பதாகக் கூறுகிறது. இருந்தும் நாட்டில் மூன்று நாட்களுக்கு ஒருவருக்கு என்ற வகையில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 132 பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது.
மேலும் கடந்த 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 4,321 தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பளிக்கப்பட்டு, அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


மகாத்மா காந்தியை கொன்ற நாத்துராம் கோட்சேவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட போதிலும் அதனால் பிற அரசியல் கொலைகளை தடுத்து நிறுத்தமுடியவில்லை.
இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பஞ்சாபின் முதல்வர் பியாந்த் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் லலித் மாகேன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.


ஆனால் கடந்த 2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் 36,202 பேர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 34,305 ஆக குறைந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 19 கோடியாக உயர்ந்தும் கொலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.(அப்படியானால் நாட்டில் மூன்று நாட்களுக்கு  ஒன்று என்ற மரண தண்டனையை  மாநிலத்திற்கு  ஆறு நாடகளுக்கு  ஒன்று என்று சட்டம் வந்தால் கொடூரகொலைகளின் சாயல் நிற்க்குமோ )

கடந்த 15 ஆண்டுகாலப் பகுதியில் 4 பேர் இந்தியாவில் தூக்கிலிடப்பட்டுள்ளனர் அவர்களில் இருவர் கடந்த நான்கு மாதங்களில் தூக்கிலிடப்பட்டனர்.
கே ஆர் நாராயணன், அப்துல் கலாம், பிரதீபா பாடில் ஆகிய மூன்று ஜனாதிபதிகளும் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.(என்ன செய்யவது குற்றத்தின் கொடூரம் மனித நேயத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறதே )

பிரணாப் முகர்ஜி பதிவியேற்ற 7 மாதங்களில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட 7 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இவர்களில் இருவர் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் 9 பேரின் கருணை மனுக்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதிலும் சில பாரபட்சங்கள் காட்டப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. (குற்றங்களுக்கும் விலை போகும் விமர்சனங்கள் )
மனிதன் அல்லது மனிதர்கள் காட்ட தவறிய தனிமனித ஒழுக்கத்தையும் மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் சட்டம் காட்ட வேண்டுமாம்