என்னனமோ எதைஎதையோ
கண்டுபிடித்து கொண்டேதான் இருக்கிறான் மனிதன் தோன்றின காலம் தொட்டு இன்னிக்கு தேதியில்
உடலை கச்சிதமாய் வைத்து கொள்வதுதாங்க பெரிய பிரச்சனை 'ஓபிசிட்டி' என்று உலகமே அலறுது
உடல் இளைக்க என்ன என்ன மருந்துங்க தினமும்
ஒரு கண்டு பிடிப்பு நித்தம் ஒரு விளம்பரம்
அதுக்குன்னு
ஜிம்முக்கு போறது கடுமையான உடற்பயிற்சி வாக்கிங்கு ரன்னிங்கு இப்படி
அடுக்கிட்டே போகலாம் உடல் பருமன் குறைய
அதற்கான அறுவை சிகிச்சையும் கூட மக்கள் செய்து கொள்கிறார்கள்
இங்க பாருங் எப்படி
இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனம் போல் விசனம் சரி இதுகெல்லாம் எது காரணம் பசி சில பேர்
உண்மையில் பசிக்காக சாபிட்டால் சில பேர் ருசிகாகவே பசியை வளர்ப்பவங்க இப்படி சாப்பிடால்
வயிறு பெருத்துதான் விடும்
அவ்வையும் கூட இதை பற்றி இப்படி பாடி இருக்கிறார் 'உண்டி
சுருங்கினால் அழகு' என்றும் சொல்லிருக்கிறார் 'உண்டி' என்றால் 'உணவு'
இப்படியான நிலைமையில் இப்படி ஒரு கண்டு பிடிப்பு
பசியையே கட்டுபடுத்த ஒரு மைக்ரோசிப் ஒன்றை கண்டு பிடித்து இருகிறார்களாம் ஒரு
சிறிய சிப் மூலம் நாம வயிற்று பசிக்கு மூடு விழ கொடுக்கமுடியுமா? முடியும் என்று கண்டுபிடித்து
இருக்காங்களாம் உடல் இளைக்க உதவும் விதமான உடலில் பொருத்தவல்ல மைக்ரோச்சிப் மின்னனுக் கணினிச் சில்லு
ஒன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாக ஐக்கிய ராஜ்ஜியத்தில்
இருந்து
ஆய்வுகளை மேற்கொள்ளும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மூளைக்கு பசியை உணர்த்துவதிலும் உடலின் வேறு பல வேலைகளைக்
கட்டுப்படுத்துவதிலும் உதவுகின்ற வேகஸ் நவ்ர்ஸ் எனப்படும் நரம்பிலே
சேர்ந்து இருப்பதுபோல இந்தச் சில்லு உடலில்பொருத்தப்படும்
'.
இன்னமும் இது விலங்குகள் மேல் பரிசோதித்து பார்க்க
படவில்லை
என்றும் கூறி அதன் பின்னரே மனிதர்களிடத்தில்
பரிசோதித்து பார்க்கபடும் என்று
கூறுகின்றனர்
மேலும் வேகஸ் நரம்புகளில்
பொருத்தப்பட்ட இந்தச் சில்லுகள் பசி
தொடர்பான இரசாயன அறிகுறிகளை புரிந்துகொள்ளும்
என்றும்,
அதிகமான
பசியை உணர்த்தாத வகையில் மூளைக்கு மின்னனு
சமிக்ஞைகளை அனுப்பும் என்றும்
தெரிவிக்கப்படுகிறது.சரி தான்
அப்பவும் இதை யாருங்க வாங்க முடியும்? யாருங்க அதை
பொருத்திக்க
முடியும் இவங்கலாலேயா?
சீக்கீரம் கண்டு பிடிசசி நம்ம ஊர் ரேஷனில்
இலவச அரசி மற்ற பொருட்களுக்கு பதிலா இதை
கொடுத்தால் எப்படி ?



