கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 டிசம்பர், 2017

புத்திசாலி யார்? -நிறைவு பகுதி

புத்திசாலி யார் ? - 1,2,3

போன பதிவில் கதையின் போக்கிற்கு தன் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து கொண்ட தோழமைகள் அனைவருக்கும் நன்றிகள் பல

நம்முடைய ஆழ்ந்த கவனிப்பை நாம்  தளர்த்தும் போது பிள்ளைகளின் போக்கு எவ்வண்ணம் போகிறது எங்கே நாம் தவற விடுகிறோம் என்பதை பார்த்து வருகிறீர்கள் இனியும் இங்கு என்ன பிள்ளைகளின் சமூகம் அவர்களை எப்படி குழப்பியது அவர்கள் எப்படி தடம்மாறி போனார்கள் என்று நிறைவு பகுதியாக பார்ப்போம்


புத்திசாலி யார் ?

 அடுத்தடவை நீ சுமாரா படிச்சிக்கோ இரண்டு பிட்டு முக்கியமான கோஸ்டினுக்கு ரெடி பண்ணி எடுத்துனு போய்ட்டு செம மார்க்க எடுத்துடு. “ 

“எப்படிண்ணா..மாட்டிக்கிட்டா?

“நான் சொல்லித்தரேன் எப்படினு” சொல்லி கட்டிபிடிச்சிகிறான் டைட்டா. நவீனுக்கு சந்தோஷமாய் இருக்கு.

அடுத்த வாரம் கோச்சிங்க முடிந்து மேட்ச் நடக்குது.. முடிந்தவுடன் அபிஷேக் “அலெக்ஸ் நாங்க ஒரு பார்ட்டிக்கு போறோம் வரியா?”

“எங்கேடா அது?”

“ஒரு பிரண்டு வீட்டில்”

“ம்ம் வரேண்டா எவ்வ்ளவு நேரம் ஆகும்?”

“நைட் எட்டு ஆகலாம் வீட்டில் குரூப் ஸ்டெடினு  சொல்லிட்டுவா ஹீ..ஹீ..” அப்பத்தான் அனுப்புவாங்க முடிஞ்சா பணம் எடுத்துகினுவா ஒரு 1000/-துக்கு மேல, “பேய் முழி முழிக்காதடா போற இடம் அந்த மாதிரி சூப்பரா இருக்கும் மச்சி முக்கியமா இந்த அமுல் பேபியை கூட்டிட்டு வராதடா உனக்கு புண்ணியமா போகும்” அபிஷேக்கும் ஹரிஷும் இன்னும் அவன் கூட்டாளிகள் இரண்டு பேர்

“எனர்ஜி பவுடருக்கும் பைசா  கொண்டுவா”

“நீங்க?”

“நீ பார்க் ஸ்டேஷன்கிட்ட வந்துடு அங்கெ ஜாயின்  பண்ணிக்கலாம்”

வீட்டில் ரோஸி “சர்ச்சுக்கு வராம கோச்சிங்கு போவேன்னு அடாவடி.. இப்ப குரூப் ஸ்டெடியா?”

பையில் புக்ஸ்கள் வாரி வைத்து கொள்கிறான் “சும்மா கத்தாதீங்க வேணும்னா நீங்களும் வாங்க பார்க்க”

“டேய் ஈவ்னிங் கெஸ்டு-வேற வராங்கடா.. டாடி எங்கேன்னு கேட்பாரு..கேக்  வேற நான் செய்யணும்..படுத்தாதடா”

“படிக்க போயிருக்கேன்னு சொல்லு.. சரி ஒரு 100/- தா”

“எதுக்குடா படிக்கிறதுக்கு?”

“எல்லோரும் சேர்ந்து ஸ்னேக்ஸ் வாங்கிறோம் பிளான்”

“ஒழுங்கா படி நல்ல மார்க் வரணும் அப்பதான் சயின்ஸ் குரூப் கிடைக்கும்” என்று கொடுத்து அனுப்புகிறார். அலெக்ஸ் போன பிறகு *அட யார் வீட்டில் என்று கேட்க மறந்துட்டேனே*

பார்ட்டிக்கு போய்ட்டு வந்த பிறகு அலெக்ஸ்  இன்னும் மோசமாகிறான். அது போன்ற பார்ட்டி அது…. திரும்பவும் நவீனை கூப்பிட்டு கொண்டு வேறொரு பெண்ணை பின்னால் சுற்றுகிறான். அவன் வயது ஹார்மோன்ஸ் அவனை மிக மோசமாய் ஆட்டி படைக்கிறது. அபி அவனை குழப்புகிறான் பலதும் சொல்லி அபி பெரிய வசதி படைத்தவன் வெளிநாடு பணம்  விளையாடும் வீடு அவனுக்கு ஸ்லாம் போட இந்த மாதிரி அடிமைகள் தேவை என்று பார்த்து வளர்ந்தவன்

“டேய் உன் கூடவே சூப்பர் கழுக்குமொழுக்குன்னு ஆளை வச்சிகிட்டு ஏண்டா வெளியே அலையற”

புரியாமல் முழிக்கிறான் அலெக்ஸ் “உன் கூடவே உன் அடிமையா ஒன்னு சுத்துதே அதுக்கும் கொஞ்சம் லைட்ட வாயில தடவி விடு அப்புறம் நீ சொல்வதையெல்லாம் கேட்பான்”.

அபியால் நவீனின்  சிறு பிராயம் தடம்மாறி போய் விடுகிறது. பணிவு என்பது மருந்துக்குமில்லாமல்பள்ளியில்  மார்கெல்லாம் அலெக்ஸ் ஐடியாவில் நடந்தேறுகிறது அலெக்ஸ் எப்படி வழி  நடத்துகிறானோ அப்படி கேர்புல்லா நடந்து கொள்கிறான். 
சுந்தர் இல்லாதது  அவனுக்கு வசதியாக போய்விடுகிறது ரேணுவை ஈசியாக ஏமாற்ற முடிகிறது.  ரேணுவின் சின்ன சின்ன  நகைகூடகாணாமல் போகிறது. அவள் வேலைக்காரியை  சந்தேகப்பட்டு நிறுத்திவிடுகிறாள், குழம்புகிறாள். நவீனின் மாற்றம் வேறு அவளை குழப்புகிறது.

சுந்தரிடம் போனில் கவலை படுகிறாள் தன்னிடம் அவன் பேசுவது கூட இல்லையென்று  “விடு டீன் ஆரம்பிக்குதில்ல அதனாலயா  இருக்கும் நான் வந்து பார்த்துகிறேன்  அடுத்த வராம் அநேகமா ரிலீவ் ஆயிடுவேன் நினைக்கிறேன்”

இப்பொது புதுவருட ஆரம்பத்திற்க்கு பின் ரோஸிக்கு வேலை பளு இன்னமும் அதிகமாகிறது பள்ளியில் இப்பொழுதெல்லாம் அலெக்சின் மார்க் அவளை நிம்மதி கொள்ள வைக்கிறது அதனால் அவனை எதுவுமே கேட்ப்பதில்லை அவன் ரூமை விட்டு வரவில்லையென்றால் படிக்கிறான் என்று நினைத்து கொள்கிறாள் அலெக்ஸ் போதை, பார்ட்டி, கிரிக்கெட் கோச்சிங்.. என்று தன் நண்பர்களுடன் சுற்றி வருகிறான் படிப்பு என்ற போர்வையில்


 இப்பொழுதெல்லாம் நவீன் யாருடனும் போவதில்லை. பேசுவதில்லை அலெக்ஸை தவிர தனக்குள் ஒடுங்கி போய்விட்டான்.  தனிமையில் அழுகிறான் .அதை பார்த்து அலெக்ஸ் வருந்துகிறான்.. அபியிடம் ஷேர்  செய்கிறான்.நவீனின்  வருத்தத்தை

அபி “அப்படியா விடு அவனை வேற மாதிரி சுறு சுறுப்பாகிடுவோம் என்று சொல்லி இந்த கேமை விளையாட சொல்லு என்ன பண்ணறான் பார்க்கலாம் மீதியெல்லாம் மறந்துடுவான்”.
 “என்ன கேம்டா?”
பாரு அவன் கூடவே இருந்து என்று சொல்லி நவீனுக்கு கேமை விளையாட சொல்லி கொடுத்து போனையும் கொடுக்கிறான்.

அது ஒரு அதிநவீன பயங்கரமான சேலஞ்சிங்  கேம் 50 கட்டளைகளை உள்ளடக்கியது ஒரு ஒரு கட்டளையாக வீழ்த்தி வரவேண்டும். அந்த கட்டளைகள் எப்படி பட்டது  என்றால் ஆபத்தானவை நம்மை நாமே பிளேடால் கிழிப்பது, ஊசியால் குத்திக்கொள்வது, மற்றவரை துன்புறுத்துவது இப்படி பல பயங்கரங்களை  அடுக்கடுக்காய் சொல்லி கொண்டே வரும்  கட்டளைகள் இந்த கேமின் பொறுப்பாளர்கள் மூலம் வழங்கப்படும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஏதாவது திகலை தாங்கியது .

நவீன் இருக்கும் மனநிலைக்கு அந்த பயங்கரங்கள் அவனுக்கு தனக்கு கொடுத்து கொள்ளும் தண்டனையாவே நினைத்து கொள்கிறான். அலெக்ஸை  விட்டு பிரிகிறான்.  அலெக்ஸ் கவனியாமல் அவன் போதை உலகத்தில் இந்த டாஸ்குகளில் வலிகள் கொடுப்பதை மறக்க அலெக்ஸின் மருந்தின் உதவியை நாடுகிறான். 


நடுநடுவே அபி நவீனை பார்க்க வருகிறான் கேமுக்கு உண்டான போன் வசதி செய்து கொடுத்து கேமின் நிலைகளை பார்த்து ரசிக்கிறான். 

ரேணு நவீனின் முகத்தினை பார்த்து “என்னடா ஒரு மாதிரி இருக்க என்ன உடம்பு சரியில்லையா இங்கேவா கையில்  என்ன கட்டு”

 “ஒண்ணுமில்லமம்மி  கோச்ங்கில் கீழே விழுந்துட்டேன் மாஸ்டரே மருந்து போட்டுட்டார்”

“என்ன வா டாக்டர்கிட்ட போலாம்…… 
மம்மி மி மி மி நான் தான் ஒண்ணுமில்ல சொல்றேனில்ல” கத்திவிட்டு உள்ளே போகிறான்
அவன் இரவில்வெளியே செய்ய வரும்  டாஸ்க்கு  ரேணுவிற்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு போகிறான். அலெக்சின் உதவியை பெற்று அலெக்ஸும் கேம் தானே என்று முடிந்தவுடன் எல்லாம் சரியாகிடும் என்று நினைத்து கொள்கிறான். இதன் நடுவே ஒரு தடவை பிட்டு அடிக்கும் போது  மாட்டி கொள்கிறான் ரோஸிக்கு அவனது பள்ளியில் இருந்து அழைத்து சொல்லப்படுகிறது சாமாளித்து விடுகிறான் ‘இல்லமா என் பிரண்டு எடுத்துட்டு வர சொன்னான் அவனுக்காக தான் பாவம்மா அவங்க அப்பா செம அடி அடிபார்மா’

ரேணு சுந்தருக்கு பேசுகிறாள் “என்ன… சுந்தர் இந்த வாரம் வந்துடுவேன் சொன்னிங்க என்னாச்சு?”

“என்னபண்ணறது ரேணு கூட வேலை செய்யறவன் மிஸ்டேக் பண்ணாலும் பிராஜெக்ட் டிலே ஆகுதே”

“போங்க சுந்தர் உங்களை நம்பி நான் பேசாம எங்க அப்பாம்மாவையாவது வரவழைச்சு இருப்பேன் நீங்கதான் உங்க பேர்ன்ஸ் ஏதாவது நினைச்சுக்குவாங்கனு வேண்டாம் சொல்லிட்டீங்க இப்ப உங்க பையனை சமாளிக்கவே முடியலை ஒரே அடம் எப்போதும் அலெக்ஸ் கூட இல்லனா ரூம்குள்ள டல் ஆயிட்டான் சம்திங் ராங் மாதிரி இருக்கு நான் அப்பம்மாவை வர சொல்ல போறேன்”

“சரி சரி புலம்பாதே அவனை கூப்பிட்டு .....
"அவன் எங்கே இங்கே அவங்க வீட்டில் இருக்கான் சரி சீக்கிரம் வர ட்ரை பண்றேன் அவனை ரொம்ப திட்டுரியா  திட்டதே அவனை பிரீயாவிடு”

இரண்டு நாள் கழித்து அப்பார்ட்மெண்டிலிருந்து  அழைப்பு “மேம் நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க கிளம்பி”  “என்ன என்னாச்சு?” 
“நீங்க வாங்க மேம்........... மேல. யாரவது ஏறுங்க குவிக் பையர் இஞ்சனுக்கு போனை போடுங்க” போன் வைக்கப்படுகிறது. .இதெல்லாம் போன் வழியாக கேட்கிறாள் ரேணு ஒன்று புரியவில்லை வீட்டுக்கு விரைகிறாள் எதோ நெருப்பு பிடித்துவிட்டது என்று….. 

இவள் உள்ளே நுழைய மாடியிலிருந்து நவீன் கீழே குதிக்கிறான் “சாரிமா……”
 என்று கத்தி கொண்டே 
எல்லா வீட்டு ஆட்களும் வீல் என்று அலறுகிறார்கள். 
ரேணு அதை பார்த்து ஓடி வருகிறாள் என்ன என்று அங்கெ தன் மகனை ரத்தவெள்ளத்தில் பார்த்து மயங்கி விழுகிறாள். 
அதற்குள் பக்கத்தில் இருந்த ஆஸ்பிடலில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து கீழே விழுந்த நவீனை எடுத்து கொண்டு செல்கிறது. 
எல்லோரும் ரேணுவை தூக்கி மயக்கம் தெளியவைத்து கூப்பிட்டு கொண்டு ஓடுகிறார்கள் ஆஸ்பிடலுக்கு… ரேணு பிரமை பிடித்தவளாய் நிற்கிறாள். 

அவள் அப்பவும்அம்மாவும் அங்கே அப்போது வருகிறார்கள். தலை தலையா அடித்து கொண்டு கதறி கொண்டும் வந்து ரேணுவை பளார் பளாரென்று அறைகிறார் அவள் அம்மா “என்னடி என்னடி ஆச்சு நேற்று தானே போன் பண்ண அவனுக்காக வாம்மா என்று வரத்துக்குள் பிள்ளையை விட்டுட்டியேடி பாவி பாவி”… என்று அடிக்கிறாள்.

ரேணுவின் அப்பா “ஏம்மா ஏன் அவன் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகாம வீட்டில் இருந்தான் ஏன் நீ அவனை விட்டுட்டு ஆபிஸ் போன?”


 “தெரியலையேப்பா….. தெரியலையே ஒன்னும் புரியலையே ஐயோ அவர் வந்து கேட்ட நான் என்ன சொல்லுவேன் நான் அனுப்பினேன் ப்பா எப்படி வீட்டுக்கு வந்தான்”…. 

அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனை நோக்கி ஓடுகிறாள் “அண்ணே  நீங்க காலைல வேன்  வந்தப்ப இவன் பார்கலையா?”

“அவன்தான் வந்து இன்னிக்கு அம்மா கூட போவேன் சொல்லிட்டு போனான்  சரிதான் நானும் நினைச்சுக்கிட்டேன் நீயும் நான் பின்பக்கம் மோட்டார் போட போயிருக்கும் போது  போய்ட்டு இருக்க போல இவன் எங்கே இருந்தான்  எப்ப மொட்டைமாடிக்கு போனான் தெரியலையேமா மேலே ஏறி நிக்கும் போதுதான் பார்த்தேன் என்னடானா நம்ம நவீனு மாதிரி இருக்கேனு பாவி பையன் இப்படி பண்னண்ணிட்டானே ராசாத்தி”….. 

இதற்குள் போலீஸ் வருகிறது விசாரணை நடக்கிறது. 

ஆப்ரேஷன்  ரூமில் இருந்து வரும்   டாக்டர்களை நோக்கி பாய்கிறாள் ரேணு “மேம் பிளேட் ஆரேஞ்சு பண்ணுங்க சீக்கிரம்” என்று ஓடுகிறார்கள். நிற்காமல் …..அப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் உதவுகிறார்கள். ரேணுவை கேள்வி மேல் கேள்வி கெடுக்கிறார்கள் என்ன? ஏன்?.... என்று எல்லாவற்றிற்கும் ரேணு ….புரியலையே என்று தலையில் அடித்து கொள்கிறாள். 

மிக கடுமையான நேரம் நகர்கிறது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆப்பிரேஷ்ன் தியேட்டரில் இருந்து டாக்டர் வெளியே வந்து உயிர் இருக்கிறது ஆனால் கோமாவில் என்று சொல்லி செல்கின்றார். 

இதற்குள் நவீனின் ஸ்கூல் பேக் மாடியில் இருந்து கண்டுபிடிக்கப்படுகிறது அதில் ஒரு உயர்ரக செல்போன் மற்றும் ஸ்கூல்நோட்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  கடிதம்  அதில் விரிவாய் இல்லாமல் தான் இந்த கேமுக்காக இறப்பதாக எழுதி இருக்கிறான்…. அப்போதும் அலெக்ஸை காப்பாற்றுகிறான் அந்த சிறுவன் .

இதற்கு நடுவே இங்கே போதைமருந்து வாங்கும் போது கிரைம் போலீசால் வளைத்து பிடிக்கப்படுகிறார்கள். 
ஹரிஷும்,அலெக்ஸும்….. அபி தப்பித்து கொள்கிறான் இவர்களை முன்னேவிட்டு. க்ரீமும் தப்பித்து ஓடுகிறான் ரோடில் .... பொதுமக்கள் .பிரஸ்காரங்க படம் பிடிக்கிறார்கள். 
தகவல் போகிறது. அலெக்ஸ் வீட்டிற்க்கு….. ஜார்ஜும் ரோஸியும்  போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடுகிறார்கள். 
போலீஸ் இரண்டும் இரண்டும் நாலு என்று கணக்கு போட்டு நடந்தவைகளை கண்டு பிடிக்கிறது. 
பெற்றோர்களை இப்படி எதுவும் கவனிக்காமல் இருப்பீர்களா என்று கண்டிக்கிறது.  
இரு பெற்றோரும் தலை குனிந்து மனம் உடைந்து என்று நிற்கிறார்கள். அப்பார்மெண்டில் எல்லோரும் பாவமாய் பார்கிறார்கள். 

ஒரு சிறுவன் கோமாவில் ,சமூக சீர்திருத்த பள்ளியில் ஒருவன் .காலம் என்ன வைத்திருக்கிறது இவர்களுக்கு வாழ்வுக்கு தெரியாது 

இன்றைய  பெற்றோராகிய நாம் மிகவும் கவனமுடன் பிள்ளைகளை கையாளனும் கவனித்து ஏனென்றால் இன்று இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியினால் அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக ஆகிவிடுகிறார்கள்  அந்த புத்திசாலித்தனம்  நன்மைக்கும் உதவும் தீமைக்கும் உதவும்.



டிஸ்கி --எல்லா பிள்ளைகளும் இப்படியா என்றால் ..........நூற்றில் ஒரு பிள்ளைக்கு இப்படி நடக்க வாய்ப்புகள் வந்துவிடும் .அந்த நூற்றில் ஒரு பிள்ளை நம் பிள்ளையாகாமல் காப்பது பெற்றோரின் கடமை



குறிப்பு - ரேணு செய்யாதவறியவை பிள்ளையின் அளவுக்கு மீறிய நடவடிக்கைளை கவனிக்காமல் விட்டது.... கவலை வந்தும் உடனடி தீர்வு காணாமல் அதை தள்ளி போட்டது. ரேணு சொன்னால் கவலைகளை ஆராயாமல் போனது சுந்தரின் தவறு  பெற்றோர் இருவரும் வேளைக்கு போகும் பட்ச்த்தில் இருவரும் ஒருவர் மாறி ஒருவர் நேரம் அமைத்து கொண்டு பிள்ளைகளின் நடவடிக்கைளை கூர்ந்து கவனித்து வழி நடத்த வேண்டும்
பிள்ளைகளின் வளர்ப்பை பற்றி இவர் கூறுவதையும் கேளுங்கள் நேரம் ஒதுக்கி 




ஞாயிறு, 10 டிசம்பர், 2017

புத்திசாலி யார் ?-3

புத்திசாலி யார் ? 1,2 கதையின் முதல் பதிவுகள் 

போன பதிவில் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டு தங்கள் எண்ணங்களையும் அனுமானங்களையும் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு நன்றிகள் பல

அலெக்சின் மன சுணக்கம் அத்தையை தொடர்ந்து கிரிக்கெட் கிரவுண்டில் நடக்கும் விஷயங்களை பார்த்தோம் மேலும் என்ன நடக்கிறது அவனுக்கு என்று பார்ப்போம்


 புத்திசாலி யார் ? -3


எல்லோரும் அலெக்ஸையே பார்கிறார்கள் அவனுக்கு வெட்கமாய் போயி அழுகை வந்துவிடுகிறது. கிரவுண்டயே விட்டு ஓரமாய் போகிறான் தனியான இடத்திற்கு போயி உட்கார்ந்து அழுகிறான்.
அப்போது அங்கே  வருகிறார்கள் இரண்டு பேர், கரீம் ,கிஷன்சிங் “நல்ல தெரியுமா இங்கதான் வர சொன்னானா அந்த பையன்..? ..ம்ம்.. இது எதோ கிரவுண்டு மாதிரி இருக்கு”
“போன்ல இங்கேதான் இருக்கானு காமிக்குது”
அப்போது அங்கெ ஓடிவருகிறன் அபிஷேக், “பாய் ரெடியா?”

“ஹாங் ரெடி பைசா ரெடியா?”

“எஸ், இந்தாங்க சீக்கிரம்” சொல்லி சில நூறுகளை கொடுக்கிறான் அபி, வாங்கி கொண்டு அவனிடம் இரு சிறிய பாக்கெட்டை கொடுக்கிறான் கரீம், கொடுத்தவுடன் அந்த இடத்தைவிட்டு நகர்கிறான், போகும் போதே சொல்கிறான் “நிம்பள் போன் பண்ண வேணாம் அடுத்து நானே மெசஜ் கொடுக்கான் ஓகே.”

அவர்கள் போன பின் அங்கே ....”கெடச்சிடுச்சாடா?” கேட்டவாறு ஹரிஷ் வருகிறான், 

அபி-“நீயெண்டா இப்போவந்த? மாஸ்டர் பார்த்திட போறான்.”
அப்போ அவர்கள் பேசும் சின்ன மதிலுக்கு பின்புறம் அலெக்ஸ் உட்கார்ந்திருப்பதை பார்க்கிறான் அபி, ஒரு நிமிஷம் திக்கென்று ஆகிறது அவனுக்கு, பிறகு இவன்தான் அழுமூஞ்சி எதுவும் புரியாது என்று 

“டேய் என்னடா அழுமூஞ்சி,  இங்கே உட்கார்ந்து அழுதுனு இருக்கியா?”

“ஹா ஹா டேய் அந்த கிழவன் ரொம்ப தாளிச்சிடான்டா இன்னிக்கு இவன” என்று ஹரிஷ் சிரிக்கிறான் 

அதை பார்த்து அலெக்ஸ் திரும்பவும் காலில் முகத்தை புதைத்து கொள்கிறான். “டேய் சீ! எழும்பிவா அவன் திட்னதுக்கெல்லாம் சோகமாய் ஆயிடுவியா? லூசா விடு” என்கிறான் அபி அதற்குள் 

ஹரிஷ் “அபி எனக்கு எப்படா தருவ? எவ்வளவுடா? சீக்கிரம் சேம்பிள் கொஞ்சம் காட்டேன் மேட்ச் சூப்பரா விளையாடலாம்”

“இர்ரா..அவசரப்படாதே” பாக்கெட்டை பிரித்து ஒரு துளி எடுத்து ஹரிஷ் கையில் வைக்கிறான். 

ஹரிஷ் அதை மோர்ந்து பார்த்து நக்கி எடுக்கிறான் 
அலெக்ஸ் நிமிர்ந்து பார்கிறான். 
அபி-“அழுமூஞ்சி உனக்கு  வேணுமா? எல்லா சோகமும் பறந்து போயிடும் மறந்து போயிடும் ஒருதுளி எடுத்தா” 
ஆர்வமாகிறான் அலெக்ஸ் “என்னது அது?”
“அதுவா  எனர்ஜி பவுடர்”
“இத போட்ட மேட்ச் சூப்பரா ஆடலாம்னு சொல்லறானே… நிஜமாவா?”
“ஆமாண்டா வெண்ண.. பிச்சு உதிரலாம் பிச்சு எகிற இதை போட்டவுடன்”
“ஏ பிளீஸ் டா  எனக்கும் தாடா”
“உனக்கா? வேணாம்பா நீ போய் எல்லார்கிட்டயும் உளறி வச்சனா அவ்வளவுதான்”
“இல்லடா இல்லடா பிளீஸ் சொல்லமாட்டேண்டா”
“தரேன்.. ஆனா யார்கிட்டயும் சொல்லக்கூடாது. இதனாலதான் நாம நல்ல விளையாடுறோம் தெரிந்தா மாஸ்டர் வூட்டுக்கு சொல்லிடுவான்.. தள்ளி வச்சிடுவான்.. அப்புறம் சும்மா தரமுடியாது, விலைக்குத்தான் தருவேன். அவன்கயில குடுத்தேன் பார் ஒரு துளி அது நுறு ரூபா.. இருக்கா?”
“நுறு ரூபாவா?..இன்னிக்கு மேட்சுல தோத்துட்டா பார்ட்டி கொடுக்க காசுபோட தான் எடுத்துட்டுவந்தேன்”
“போடா லூசு இப்ப நீ எங்க டீம் கீழ் வந்துடுவ சோ ஜெயிக்க போறது நாமதான்”
“ஹாங்?!” வாயை பிளக்கிறான் அலெக்ஸ் “நிஜமாவா? உங்க டீம்லயா? அப்ப  சரி இந்தா” என்று நுறு ரூபாய் எடுத்து நீட்டுகிறான். யோசனையோடு பார்கிறான் அபி “டேய் உளறி வச்ச அவ்வளவுதான் அடுத்தவாரம் விளையாட கால் இருக்காது”
“இல்லடா சொல்லமாட்டேன் நீங்களும் நான் வாங்குனதை சொல்லாதிங்கடா”
“சரி கையை காட்டு” என்று அவனுக்கும் தடவுகிறான் ஒரு துளி பிறகு கிரவுண்டுக்குள் போகிறார்கள் 
கிளாஸ் முடிகிறது நவீன் ஓடி வருகிறான் “எங்கண்னா போனீங்க நேத்திக்கும் அந்த பொண்ணால சோகமாயிட்டீங்க இன்னிக்கு மாஸ்டர் திட்டிட்டார்”
“ஹான்?!” என்று இப்போது ஹரிஷும் அபியும் அலெக்ஸை பார்கிறார்கள்  அலெக்ஸ் நெளிகிறான் தலைகுனிந்து கொள்கிறான் “என்னடா விஷயம்” காதை கடிக்கிறார்கள். “சும்மா”.. 
ஹா ஹா ஹா சிரிக்கிறார்கள். 
நவீன் ஒன்றும் புரியாமல் முழிக்கிறான். அதற்க்குள் அலெக்ஸ்க்கு மெல்ல மெல்ல போதை ஏறுகிறது …..அவன் தனனை மிக லேசாக உணர்கிறான் வாய்விட்டு சத்தமாய் சிரிக்கிறான். 
நவினை கட்டி பிடித்து கொள்கிறான் “தேங்க்ஸ்ட்டா தேங்க்ஸ்ட்டா” என்று அபிக்கு கை கொடுக்கிறான். 
நவீன் முக்கியமான குரூப்பு கூட அலெக்ஸ் சேர்ந்துவிட்டதில் மிகவும் உற்சகமாகிறான் அவன் கண்னுக்கு அலெக்ஸ் ஹீரோபோல் தோன்றுகிறான்.

நாட்கள் நகர்கிறது இப்பொழுதெல்லாம் அலெக்ஸ் நடவெடிக்கையில் நிறைய மாற்றம்.. படிப்பில் கவனமற்று போய்விட்டான்.. வீட்டில் கேள்விகேட்டால் சத்தம் போட்டு கத்துகிறான்.. தான் செத்து போகிறேன் என்று பயம்புறுத்துகிறான் ரோஸியை . இதன் காரணமாய் ரோஸி அவனிடம் பேச பயப்படுகிறார்…மார்க் கம்மி என்று கேட்க போயி ஏதாவது செய்து விட போகிறான் என்று பிள்ளை பாசத்தில் மெல்ல மெதுவாய் அட்வைஸ் மட்டும் கூறுகிறார். ‘ஏன் இப்படி திடீரென்று’ என்று யோசிக்க தவறிவிடுகிறார். 
இப்பொழுதெல்லாம் புதிய பிரண்ட்ஸ்களுடன்தான் சுற்றல். எப்போதும் அவர்கள் என்னென்ன சொல்கிறார்களோ அதையெல்லாம் அடிமை போல் செய்கிறான். பதிலுக்கு அவனுடனே சுற்றி கொண்டிருக்கும் நவீனை இவனது அடிமையாய் நடத்தி கொள்கிறான்.

“நவீன் ஒரு ஹெல்ப்புடா.. என் பாக்கெட் மணி தீர்ந்து  போயிடுச்சிடா ..இந்த தடவை அபிக்கு கப்பம் வைக்கலானா நம்மள மேட்ச்சில் அவங்க சைடில் இருந்து தூக்கிடுவான் டா. ஒரு தீரி ஹன்ரட் எடுத்துட்டுவாடா நீ சின்னப்பையன் உன்ன சேர்த்துக்கமாட்டேன் சொன்னாங்க உனக்காக நான் எவ்வளவு பேசி இருக்கேன்.” 
கிரிக்கெட் ஆசையில் நவீன் வீட்டில் ரேணுவின் ஹன்பேக்கில் இருந்து தெரியாமல் பணத்தை எடுத்து கொண்டு வருகிறான், அலெக்சிடம் தருகிறான். 
“எதுடா? என்ன சொல்லி வாங்கன?” நவீன் மெதுவாய் தெரியாமல் எடுத்து வந்தாய் சொல்கிறான்... 
“டேய் மூஞ்சியை இப்படி வச்சிக்காத மாட்டிக்குவ”
“பயமா இருக்குண்ணா”
“விடுடா  சின்ன அமோன்ட் தானே தெரியாது” மெல்ல மெல்ல இதுபோல் எப்போதும் தொடர்கிறது இருவர் வீட்டிலும் 1,2 நூறுகள் தொலைவது.

இப்படியாக ஒரு நாள் நவீன் பள்ளியில் இருந்து அழைப்பு வருகிறது, “அரையாண்டு முடிந்து என்னடா மார்க் சரியா வாங்கலையா இரு அப்பா போன் வரட்டும் உனக்கு இருக்கு” என்று நவீனிடம் கத்துகிறாள் ரேணு

சுந்தர் பிராஜெக்டுக்காக சிங்கப்பூர் சென்று இருக்கிறான் 2 மாதமாய். பேரண்ட் மீட்டில் நவீனின் கிளாஸ் டீச்சர் அவனுடைய  போரொக்கரசை பற்றி குறை சொல்கிறார். 
படிப்பில் கவனமில்லை என்று  வீட்டுக்கு வந்தவுடன் ரேணு நவீனை திட்டுகிறாள் “இனிமே கிரிக்கெட் அது இதுனு ஏதாவது பார்த்த பாரு.. எப்பப்பாரு கிரிக்கெட்டு… படிப்பு வீணா  போச்சி.. கோச்சிங்கை விட்டு நிறுத்திவிடுகிறேன்.”
நவீன் அழுது கொண்டே சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான் அலெக்சிடம்  போயி சொல்கிறான் அழுது கொண்டே

“டேய் அழாதடா.. நான் வந்து ஆண்டிகிட்ட பேசறேன்… லூசு முதலிலேயே என்கிட்ட சொல்றது தானே.. சரியா படிக்கலைனா வேற ஏற்பாடு பண்ணி இருக்கலாமில்ல ..சரியா படிக்கலைனா இரண்டு  பிட்டு  எடுத்துனு போயிடனும், அப்புறம் பாஸ்தான்.. அடுத்தடவை நீ சுமாரா படிச்சிக்கோ இரண்டு பிட்டு முக்கியமான கோஸ்டினுக்கு ரெடி பண்ணி எடுத்துனு போய்ட்டு செம மார்க்க எடுத்துடு. “

“எப்படிண்ணா..மாட்டிக்கிட்டா?”


தொடரும் ...

அலெக்சின் நடத்தையின் மாற்றம் நவீனை எப்படிஎல்லாம்  ஆட்டி படைக்கிறது என்பதை பார்த்து  கொண்டிருக்கிறோம்... இங்கு யார்? யார்? என்ன செய்திருக்கலாம், யார் மேல் தவறு என்று உங்கள் எண்ணங்களில் தோன்றும் நியாயங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.

பிள்ளை வளர்ப்பை பற்றி இவர் எவ்வளவு  தெளிவாக சொல்கிறார் என்றும் பாருங்கள்



  .



செவ்வாய், 5 டிசம்பர், 2017

புத்திசாலி யார் ?

இன்று கதை ஒன்று 

நடப்பது என்ன ?1,2,3,4,5.6,7 என்ற பதிவுகளை தொடர்ந்து  அந்த விஷயங்களை தாங்கிய கதை பகிர்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . 
சிறு பிள்ளைகளை பற்றியது என்பதால் கொஞ்சம் போர் அடிக்கலாம்..... ஆனால் இதில் யார் பக்கம் தவறு என்று படித்தால் சொல்லமுடியும் உங்கள் கருத்தயும் .... 
அதை இங்கே தொடர்ந்து சிறு பதிவுகளாக கொடுக்கிறேன் இது ஒரு முழு கதை ....படித்து உங்கள் எண்ணங்களையும் கதையின் நிறை குறைகளையும் பகிருங்கள்.



 புத்திசாலி யார் ?  



“நவீன்… நவீன்… கிளம்பிட்டியாடா… வந்து டிபன் சாப்பிடு..பஸ் வந்திடும்.”

நவீன் “ம்ம் இதோ வரேன்”, கண்கள் என்னமோ டீவியில் சுவரசியமாய் நேற்று நடந்த கிரிக்கட் மேட்ச் செய்தி தொகுப்பை பார்த்து கொண்டு, கைகள் சாக்ஸ் அணிகிறது .

“ஓ காட் என்னடா பண்ற இப்பபோயி டிவி பார்த்து கொண்டு”

ஜாகிங் முடித்து உள்ளே வரும் சுந்தரை பார்த்தவுடன் அவசரமாய் எழுந்து ஒடுக்கிறான் டைனிங் டேபிளுக்கு சாப்பிட .

“ஸ்ஸ் அப்பாடா கொஞ்சம் சீக்கிரம் வாங்கனு டெயிலி சொல்லறேன் காதில் வாங்கறிங்களா..உங்க தலை பார்த்தா ஒழுங்கு அப்படியே வந்து குவிஞ்சிடும் ராசாக்கு..என்னைய பார்த்தா திமிரு..முளைத்து மூணு இல்லை விடல” புலம்பி கொண்டே கிச்சனுக்குள் நுழைந்து கொள்ளும் ரேணு
 
“டேய் என்.ஸி.ஸி கேம்புல சேர்ந்துட்டியா..?” சோபாவில் இருந்து குரல் வருகிறது

நவீனுக்கு விக்கல் எடுக்கிறது, கேள்வியில் கிச்சனில் இருந்து எட்டி  பார்கிறாள், அம்மாவை பார்த்து வாயசைக்கிறான் “பிலீஸ்மா..”

“துரைக்கு என்.ஸி.ஸி வேண்டாமாம்.. கிரிக்கெட் கிளாஸ்ல சேரணுமாம்..”

முறைக்கிறான் சுந்தர் “நான் என்ன சொன்னேன் கொஞ்சம் பெரியவனாகு சேர்ந்துக்கலாம், இப்ப யாராவது உன்னை கொண்டு போயி கூட்டிட்டு வரணும், எங்க ரெண்டு பேருக்கும் டைமில்ல, 12 வயசுக்கு பிறகு சேர்ந்தினா நீயே போயி நீயே வரலாம் இன்னும் ஒரு 2 வருஷம் போகட்டும்.”

“இல்ல அப்பா நம்ம அப்பார்ட்மென்டுலியே பக்கத்து பிளாக்ல இருக்கற அலெக்ஸ் அண்ணா போறான் பா நான் அவங்க போற டைம்ல போறேன் பா அவங்க கூட, பிளீஸ் பா நீங்க சொன்னா அந்த அண்ணா கூட்டிட்டு போவான் பா.”

சுந்தர் ரேணுவை பார்கிறான் என்ன சொல்ற என்பது போல்.. “நான் கேட்டு பார்கிறேன் முதலில், அதாங்க ஜார்ஜ் சாரோட பையன்”

“தேங்க்யூ மா……” என்று சத்தமாய் சத்தம் நவீன்.

மாலை மணி 7 மெயின்கேட்டிலேயே காத்திருக்கும் நவீன்,ரேணுவின் வருகையை பார்த்து.

வாசலில் கேப் வந்து நிற்கிறது ரேணு ‘பை’ சொல்லி இறங்கி திரும்பினாள் நவீன்…. “என்னடா இங்கே நிக்கற ஹோம் வொர்க் முடிச்சிட்டியா?...”

 “முடிச்சிட்டேன்…சரிவா..அம்மாஆஆஆஆ”.... “ஏண்டா இப்படி கத்தற..?”

“நீ அந்த அண்ணா கிட்ட கோச்சிங் பத்தி கேட்கிறேன் சொன்ன…?”

“விடமாட்டியே இப்பதானே வந்தேன் இரு முகமாவது கழுவிட்டு வரேன்”

“சரி நான் கீழயே இருக்கேன் நீங்க வாங்க”

ரேணு வருகிறாள் “வாடா” இருவரும் அலெக்ஸ் வீட்டு கதவின் முன்,காலிங் பெல் அடிக்கிறாள் அலெக்சின் அம்மா ரோஸ்மேரி வெளியே எட்டி பார்கிறார், “ஹேய் ரேணு வா வா.. என்ன அதிசியம்”

“ஹாய் ஆண்டி, இதோ இந்த வாலு இழுத்துட்டு வந்து இருக்கு”

“அப்படியா வெரிகுட்.. டா பையா , சரி உட்காருங்க ,என்ன விஷயம், முதலில் என்ன சாப்பிடற காபி டீ..?”

“அத்தலம் வேண்ணாம் ஆண்டி
ஸ்கூல் ஒர்க் எல்லாம் எப்படி போகுது..?”

“ம்ம் இன்னும் எக்ஸாம் வரும் போது தான் வேலை பெண்டை  கழட்டும்

"உங்க சன்னும்  10th ஆச்சே..”

“எப்போ சமசீர் சிலபஸ் வந்ததோ அப்பதிலிருந்து எல்லாத்துக்கும் குளிர்விட்டு போயிடுச்சி ஈஸி ஈஸி-னு, கிரிக்கெட் கோச்சிங்கில் இருந்தே இன்னும் வரவில்லை..கேட்ட நான் படிச்சுக்குவேன் நீ கவலை படாதேனு சொல்லவேண்டியது..எனக்கும் 12th போர்ஷ்ன் சீவியரா  ஆரம்பிச்சசுனா வீட்டுக்கு கூட வர லேட் ஆயிடும், என்ன பண்ண போறேன் தெரியலை ரேணு.. அங்கிள் தான் பார்க்கணும் சொல்லி இருக்கேன்”

ரேணு மணியை பார்க்கிறாள் 8 “இவ்வளவு நேரம் ஆகுமா ஆன்டி கிளாஸ் முடிய..?”

”கோச்சிங் செய்யறவரை  பொறுத்துனு சொல்லுறான் ..இப்ப வேண்டாமென்றாலும் கேட்காமல் கிரிக்கெட் பைத்தியம் பிடிச்சி ஆட்டுது”

“ம்ம் இதோ இந்த வாலையும் தான்.. இப்பவே இவருக்கு கோச்சிங்கில்  சேரணுமாம்.. அதான் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்”

“ஓ.. அதன் இந்த பக்கமா..”

“ஆமாம் ஆன்டி நாங்க  இரண்டு பேரும்  வர இவ்வளவு லேட் ஆகிடும் சில நேரம் கூப்பிட்டு போயி கூப்பிட்டு வர முடியாது.. சொன்னா கேக்க மாட்டறான் அடம்புடிக்கிறான் அதான் உங்க பையன் போகும் நேரத்தில் சேர்த்துவிட்டா அவன் கூப்பிட்டு போயி வருவானா ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன்”

“அதுக்கென்ன ரேணு இப்ப வந்திருவான் கேட்கலாம்.... இதோ வந்திட்டானே..  வாடா உனக்காதான் ஆண்டி காத்திருக்காங்க”

“ஹாய்”,

நவீன் எழுந்து ஓடி போயி அவன் கையைப்பிடித்து கொள்கிறான். “என்னடா..?”
 
“ஹாய்ண்ணா”..

“ஹாய் அலெக்ஸ், கோச்சிங் எப்படி போகுது..?”

“அங் சூப்பர் ஆன்டி”

“இவனுக்கும்  சேரணுமாம்  என்னாலயும் அவங்க அப்பாவாலையும் முடியாது சோ அதனாலதான் உன்கிட்ட  ஹெல்ப் கேட்கவந்தேன், நீ போகும்நேரம் இவனையும் கூப்பிட்டு போயி சேர்த்து டெயிலி  கூப்பிட்டுடு போயி வர முடியுமா..?” என்று தயங்கி கேட்கிறாள்.

”ஓ ஸூர்! நோ பிராப்ளம் ஆன்டி.”

“ஆனா இவ்வளவு லேட் ஆகும் அதுதான் யோசனையா இருக்கு.. இவன் ஹோம்வொர்க் பண்ணனும்..படிப்பு பாதிச்சா அங்கிள் வேற திட்டுவாங்க”

“அம்மா அம்மா பிளீஸ் மா நான் ஸ்கூல் விட்டு வந்தவுடன் செஞ்சு  வச்சிடறேன்”

“ஸ்கூல் வொர்க்ல ஏதாவது பிராப்ளம் வந்துச்சி.. உங்கப்பா அவ்வளவு தான்.”

“விடு ரேணு அவன்தான் செஞ்சு வச்சிடுறேன் சொல்றானே இப்ப 5th தானே எதுக்கு இப்பவே புடிச்சி பயப்படுற” யோசித்து கொண்டே ஓகே சொல்கிறாள்.

ஜார்ஜ் வருகிறார் “வாம்மா..”

“ஹாய் அங்கிள்” மணியை பார்கிறாள் 8.45 போன் .எடுத்து பார்கிறாள் நிறைய மிஸ்டு கால்ஸ் சுந்தரிடமிருந்து “ஓகே ஆன்டி வரேன்… அங்கிளும் இப்பதான் வந்திருக்கார் கவனிங்க ..நிறைய நேரம் ஆகிவிட்டது ..அலெக்ஸ் நாளைக்கு கூப்பிட்டுட்டு போறியா..?”

“ஓகே ஆன்டி… ஈவ்னிங் 5'க்கு ரெடியா இருடா”

“ஓகேன்னா பாய்,..... பாய்”

அடுத்த நாள் ஈவ்னிங் 5'ஓ கிளாக் நவீன் குதித்து கொண்டு அலெக்ஸை தேடி வருகிறான்.

“வாடா வந்துட்டியா இரு போகலாம் உட்கார் இதோ வரேன்” என்று உள்ளே போகிறான்.

ரோஸி வேலையில்இருந்து வருகிறார் “ஹாய் நவீன் கிளம்பிட்டியா பால் குடிச்சி சாப்பிட்டியா ஏதாவது..?” என்று கேட்டு கொண்டே உள்ளே போகிறார்.

“மாம் நான் கிளம்பறேன்.. வாடா”

“அலெக்ஸ் டிபன் வச்சிருத்தேனே சாப்பிட்டியா..?”

“அதுவேண்டாம் நான் ஜூஸ் குடிச்சிட்டேன்..பை!”

பெஸ்ட் காஸ்ட்லீ ஹீரோ சைக்கிள் அவனிடமிருக்கிறது அதனால் அவனுக்கு நவீனை  கூப்பிட்டு போவது சிரமமாக தெரியவில்லை.

கிளம்பி இரண்டு ரோட் கிராஸ் செய்த்தவுடன் அலெக்ஸ் சைக்கிளை நிறுத்திவிடுகிறான்.

“எண்ணா இங்கே நிறுத்திட்டீங்க..?”

“கொஞ்சம் இருடா ஒரு 5 மினிட்ஸ்” என்று ஒரு புக்கை எடுத்து பார்த்து கொண்டிருப்பது போல் பாவலா செய்கிறான், 
நவீனுக்கு ஒன்றும் புரியவில்லை முழித்து கொண்டு நிற்கிறான், 

அப்போது ஒரு 13 வயது பெண் அவர்களை கிராஸ் செய்து நடக்கிறாள் இவர்களை பார்த்த்து கொண்டே.. அலெக்ஸ் நவீனை பார்த்து “டேய் இப்ப போச்சே அந்த கேர்ள் திரும்பி பார்க்க்கிறாளா பாரு சீக்கிரம் ஜல்தி” 
நவீனும் புரியாமல் பார்த்து கொண்டே இருக்கிறான்.

“ஆமாம்ண்ணா பார்க்கிறாங்க ஆனா போயிட்டாங்க.. யாருண்ணா அவங்க?”

“அதுவா..என் டாவு”

“டாவா..?” !!!!!

தொடரும் .....
நவீனுக்கு எவ்வளவு  புரிகிறது என்று பார்ப்போம் இனி....... 
இங்கு நடப்பது என்ன யார் என்ன செய்கிறார்கள்? 

சனி, 4 நவம்பர், 2017

பாரிஸ் கார்னர்

மழையின் தாக்கம் பாரிஸ் கார்னர்  பூக்கடையின் பிளாட்பாரங்களில் அவர்கள் மொழியில் கோபத்தில் என்ன நடக்குது பார்ப்போம் முகம் சுளிக்கவைக்கும் சில இடங்கள் தவிர்க்க முடியாதவை இங்கே மன்னிக்கவும் படிப்பவர்கள் என்னடா இது இப்படி எழுதபட்டு இருக்கு  நினைக்க வேண்டாம் அவர்களின் வழியில் வலியில் ஓரு கற்பனை

பாரிஸ் கார்னர்


காலை ஏழு மணி பாரிஸ் கார்னர் பூக்கடையை அருகில்.......

என்ன சோறு ஆக்கிட்டியா  ?

வாய்யா  எங்கிருதுனு வரே…..

இங்கித பக்கத்து ஸ்டேஷன்ல  இருந்தேன்……..

நேத்திக்கு வுடலைனு சொன்ன…….
 
செக் பண்ண வரும் போது போக்கிகாட்டிட்டு எப்படியோ  ராவியை ஒட்டிட்டேன்…….

அமைதியாக  தொடர்கிறாள் முத்து அவள் வேலையே, வைத்திருக்கும் ஸ்டவ்வை பம்பண்ணி கொண்டு இருக்கிறாள். அந்த பிளாட்பாரம் ஓரத்தில் உள்ள ஷீட்களால்  செய்த டெண்டுக்கள் லைனில் முதல் அந்த டெண்டுக்குள் மூன்று  பிள்ளைகள் ஒரு கிழவி ஒரு ஓரமாய் ஷீட்டை  விரித்து மேலே ஷீட்டை போர்த்தி உட்கார்ந்த நிலையில் உறங்கி கொண்டு ஒருவர்மேல் ஒருவர்  சாய்ந்து.

உள்ளே அங்கங்கே மழை நீர்  ஒழுகி கொண்டு இருக்கிறது .

என்னையா இந்த சனியன்  புடிச்ச மழை நிக்கே மாட்டேங்குது இந்த தபாவும்  மாட்டிக்குவோமா ?

என்ன புரியலமே..... பஸாண்டு கிட்டயெல்லாம் தண்ணி எரிகினே போகுதுதான் பாப்போம்.... இந்த  வளவு கொஞ்சம் மேடு  பஸாண்டு கிட்ட தண்ணி வலிக்கிட்டு போயிடுச்ச்னா இங்கே ஏறாது.....

எங்கே பஸான்டைகூட  சரி பண்ணமாட்டாங்க  களவாணி நாயிங்க …..

இப்பதிக்கு மைய வுடறமாதிரி தெரியலையா……வுடாம  கொட்டிக்கினு இருக்கு உன்னைய ஷீட்டு  வாங்கியா மேல போடுவோம் ரொம்ப ஒயிவுதுனு சொன்னேனில்ல......

க்கும் உங்க ஆத்தா கடவச்கினு இருக்கு பாரு நீயி கேட்டவுடனே குடுக்க அந்த பாயி அத்த பழசையே எழுநூறு, எட்டுநூறு  சொல்லுவான் போனதபா வாங்கின காசையே முழுசா குடுக்கல......

பாவம்யா புள்ளைங்க  கால நீட்டக்கூட முடியமா குறுகினு கிடக்குதுங்க....

பீடியை இழுத்து கொண்டே தலையில் பிளாஸ்டிக் கவரை போடு உட்க்கார்ந்து
வெறித்து பார்க்கிறான்.

முத்து ஸ்டேஷனாண்ட ஒருத்தன் சொன்னா அண்ணா நகர் ஸ்டேஷன் சும்மா காலியாதான் இருக்காங அங்கெ போய்டு நாலு நாளுனு…… என்ன சொல்லுற.....

யோவ் வியாவரத்த பார்கிளனா சோத்துக்கு என்ன பண்ணுவ அந்த பெரிய  கடையாண்ட போயி குந்திக்குவோம்  போனவாட்டி மாதிரி  அவனே எம் எல் எக்கு போனபோட்டு வழி பண்ணவுடுவான்..... நாம சொன்னாதான் கழிச்சட நாயிங்க  ஒன்னு கேக்காதுங்க....  அவனுக்கெல்லாம் கேட்ட, பிரச்சனைனா உடனே செய்யுங்க......

எங்கே அவனிங்க இந்த தடவ யாரையோ ஆளுங்களையெல்லாம் நிறுத்தவச்சு இருக்கானுங்க வரும்போது  பார்த்துட்டு வரேன்...

நீயி லோடு ஏத்த போவேனவா.....

எங்க மைய பெய்துன்னு சரக்கு நனைஞ்சிடுமுன்னு இப்பவேணா நிறுத்தி வச்சிருக்கானுங்க....

அதற்குள் அங்கு .........யக்கா………..

வா ரசியா என்னா எங்க கிளம்பிட்டா ரேஷனுக்கா இந்த தடவ போடுவான இல்ல நிறுத்தி  வச்சிட்டானுகளா
ம்க்கும் எதோ அத்வச்சி கொஞ்சம் பொழப்பு ஒடுக்கினு இருந்தது அத்தையும் பொறுக்கல இவனுங்களுக்கு என்ன இழவுக்கு அவன் வந்தான் தெரியல்ல இப்படி போட்டு சாவடிச்சிகினு இருக்கான் எதுனா ஒன்னு போயி ஒன்னு  கொண்டு வந்துகினு……….

பிளாட்பாரம்  சுவரில் பிரதமர் அழகாய் புன்னைகையுடன் கையாட்டுகிறார்.

அத்த சொல்லு......

நாங்க  எங்க ஆளுங்க கொஞ்சம் பேர மசூதிக்கு போறோம் உள்ளே இருக்க விட்டு இருக்காங்க மழவுடவரை......

அப்படியா போ...... உங்க ஆளுங்க இந்த வசதியாவது டக்குனு செய்றாங்க எங்குளுக்கு எந்த கோயில துறந்துவிடுவாங்க ஸ்கொல தான் திறக்கணும் இன்னும் எதுவும் சேதி வரல்ல…… சோறு……..

ஆங் மொத்தமா ஒரு வேளைக்கு  ஆக்கிக்க சொல்லி  இருக்காங்க இந்த மழ கொஞ்சகூட குறையாம பெஞ்சிக்கினே இருக்கே புள்ளைங்க பாவம் இப்படி சுருண்டு கிடக்கு நீயெனக்கா பண்ண போற……..

இந்தாளு என்னமோ அண்ணாநகரு ஸ்டேஷன்னு காலி அங்க போலாம் சொல்லுது

பார்த்துக்கா   போனவாட்டி மாதிரி ஆயிட்ட போது....

அதுதான் எனக்கும் பயமா இருக்கு ரசி..... போனவாட்டி மேல ஸ்டேசனு  காலி இப்பதான் கட்டினு இருக்கானுங்க தங்க போயிடலாம் வெள்ளம் போன பெறவு வரலாம் இஸ்துகினு போச்சி ஒரு புள்ளய தூக்கி கொடுத்தாச்சு லோல்பட்டு....

இப்பொது பிடியை கீழே போட்டுவிட்டு மணி ஏய்........  அங்க  வந்த போலீஸ்கார நாயிங்க இப்படி தொல்ல பண்ணுவாய்ங்கனு   நான் கண்டேனா தே......பசங்க  என்று கத்துகிறான்.

ம்ம்  இப்ப கத்து உனக்கென்னயா அந்த புள்ள எவ்வ்ளவு சீக்காயி போச்சு ஒருவேளை சோத்துக்குக்கூட வழியில்லாத இடத்தில உட்டுபுட்டு வந்து இருக்கேன் ஊருல அங்கெ வேற தண்ணியில மருந்து கலந்து போயிடுச்ச்சாம் சனங்க சீக்குஆயி செத்து போதுங்கலாம்

ஐயோ ஏன்கா?

அதென்ன இழவோ எதோ மீத்தேனு ஒன்னு எடுக்குறாங்களாம் அத்த எடுக்கும் போது நல்லதண்ணி கெட்டு  போகுதாம் மருந்து தண்ணி நல்லதண்ணியில கலக்குதாம் பேசிக்குதுங்க சனங்க  அதனால ஊருக்குள்ள தண்ணியே எடுக்க முடியாம சனங்க தவிக்குதாம் என்னமமோ போ  மனுசனுக்கு நல்லது செய்யமுடியாடியும்   இந்த கவருமெண்டு இப்படி போட்டு சாவடிக்கமலாச்சும் இருக்கலாம் பணம்தின்னி கழுங்க அவனுக்கென்ன அவன் நிம்மதியா சொகுசா வாழறான் திருட்டு கமனாட்டிங்க அவன் வீட்டு புள்ளங்களாம் வாந்தி பேதி வந்து சாவட்டும் இப்படி கஸ்டப்படறோம் ரவ யோசிச்சி பாக்கிறானா.......

 தே சும்மா கூவிக்கினு வேலைய பாரு யார்ட்டு  பக்கம் போயி கண்டுக்கினு வரேன் வேல எத்ன இருக்கானு....... பெரிசா படிச்சவனுங்களும் விஷயம் தெரிஞ்சுச்சு கத்தரவானுங்களே  பல்புவாங்கினு இருக்கானுக நாம பேசித்தான் தீர போதா ???

சரியாய் சொண்ணேனே ஆனா பார்த்து இத தடவையும்  எங்கனாச்சும் போயி மாட்டிக்கிடாதீங்க.......யக்கா எல்லோரும் கெட்டவாய்ங்களா இல்லக்கா ..... இங்கே வருவாரே ஏட்டு எவ்வ்ளவு உதவி பண்ணுவாரு நமக்கெல்லாம்.....

நான் எங்கயும் வரமாட்டேன் என்று எழுத்து கத்துகிறாள் 12 வயது ஜோதி

எல்லவரையும்  கேட்டுக்கொண்டு  இருந்திருக்க வேண்டும்
பெரியவர்கள் எல்லோரும்  அமைதியாய் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள்.

மழை தாக்கம் அதிகரிக்கிறது.

ஏன்டி  எரும  உன்ன இந்த அரசிய நல்ல இரண்டு கவரு போடு சுத்தி வாயினு சொல்லிட்டுதானே போனேன் எப்படி நனைச்சி போச்சி பாரு இத்த  வச்சி எப்படி நாளைக்குள்லாம் ஒடடறது

சரி ரசியா நீ கிளம்பு மழலை நின்னுகினு

யம்மா நிசமாலும் சொல்லிட்டேன் நான் எங்கேயும் வரமாட்டேன் யக்காக்கு ஆனா மாதிரி எனக்கும்  ஆவணுமா நான் முதலியார் அம்மாவீட்டு கார் ஷ்ட்டுல  இடம் கேட்டு உக்கார்ந்துக்குறேன் என்னவுட்டுட்டு இந்த ஆள நம்பி நான் எங்கேயும் வரமாட்டேன் …….உன்னையும்……..  என்று வீறிட்டு கத்துகிறாள்.

இத கேட்டு மணி தலை தலையாய் அடிச்சிக்கிறான்.

யோவ்……. என்று முத்துவின் குரலடைக்க குரல்....

சோதி சரிதப்புள்ள சரி   பாரு அப்பாரு எவ்வ்ளவு கஸ்டப்படறாரு வேணுமின்னா நடந்தது அந்த சாக்கடைப்பயலுவங்க அப்படி செய்வாங்கனு தெரியாத போச்சுதேடா ஐயே யக்கா  அயிவாத நடந்து முடிஞ்சி போச்சி அல்லா  நல்ல கூலித்தரட்டும் அந்த பன்னாடைங்களுக்கு......

 என்னத்த கூலி தருவாரு போ ரசி....... எம்புள்ள நொந்தது நொந்ததுதானே அந்த ராவிலவானம் பொத்துக்கிட்டு  கொட்டுது ரவுண்டு வந்தவனுங்க ஸ்டேஷனுல இருக்க கூடாதுனு சட்டம் பேசிக்குனு  இந்தாள புடிச்சி வச்கிட்டு அடி அடின்னு போடு தள்ளனானுக …….விடுறேன்.... அந்த புள்ளையை  அனுப்புனு ரவுசு  பண்ணி  அட்டகாசம் பன்னானுங்க,  நான் வரேண்டா என்று சொன்னாலும் கெக்கலியே அந்த பிஞ்சை கேட்டானுங்களே…….  அந்த 11 வயசு  சின்ன புள்ளைகிட்ட  என்னத்த கண்டானுங்க......

ம்ம் நீயி பெத்து இறக்கி துறந்து கிடக்க அது துறக்காத பையி  வெறி நாயிங்களுக்கு பேராசை என்று கிழவி எழுந்து நீட்டி மொழக்கி புலம்புது

தே ச்சீ சும்மாகிட்ட பொணமே சின்ன புள்ளைங்க இருகோசொல்ல என்னத்த பேசற……

அடி போடி………

ரசியா கண்ணதுடைத்து கொள்கிறாள். மணி எழுந்து கொட்டும் மழையில் நடக்கிறான் .வெறுத்து போயி

அப்போ ஒரு 10 வயது சிறுவன் டேய் பலனி……… எங்கக்கா பலனி மாதா கோயில பிரட்டு, பாலு, கேக்கு த்ரங்களாம் மையைக்கு  காளி கோயிலையும் வெளியே சாம்பார்  சோறு கொடுக்க  போறாங்களாம் .....
அப்புறம் ஸுகூளையும் திறந்துவிட சொல்லிட்டாங்களாம் சோத்து பொட்டலத்தோட வந்து சொல்லிட்டு போயிக்கினு இருக்காங்க கிளம்பிடலாமா அம்மா கேக்க சொல்லிச்சி….

யா அல்லா ஸலாம்  நல்லது நடக்கட்டும்சரியக்கா  நானும் கிளம்புறேன் நீயும் கிளம்பு  தண்ணி பாரு எறிகினே போது இத தடவையும் பெரிசா ஆவம அல்லா காப்பாத்தட்டும்……… 



                                                                                                                                       by-  பூவிழி