செவ்வாய், 16 ஜனவரி, 2018

பொங்கியதை ................

காணும் பொங்கலாம் பதிவுகள் காண வந்துவிட்டேன்
போகி  என்று போகிளால்
புகையின் புலம்பல் பாடி பொங்கிட 
பொங்கல் வந்தது இங்கு ....
பொங்கிய மக்கள் எல்லாம்
சுவைக்க பட்டார்களா, உணரப்பட்டார்களா 
யாம் அறியோம் பராபரமே ....
பொங்கிட அரிசியும் 
சுவைத்திட கரும்பையும்  
கொடுத்தவர்கள் சுகப்பட்டார்களா  
யாம் அறியோம்  பராபரமே 
கட்டிய சுவருக்குள் வைத்திட்ட பொங்கலின் வாசம் 
அடுத்தவர் வீட்டின் சுவர் நுகர்ந்ததா 
யாம் அறியோம் பராபரமே
தை வரும்  , பொங்கல் வரும், தொடர் விடுமுறை வரும் 
தொல்லை செய்யும்  தொலைக்காட்சி முன் 
பல்லிளித்து ,முன் நெற்றி சுருங்கி, 
வாய் குவித்து, கண்விரித்து , தலையாட்டி
நடு நடுவே  அலங்காரமாய் 
பொங்கல் வாழ்த்து 
கைபேசியில் கலைநயத்துடன் 
பொங்கல் ருசித்து, கரும்பு சக்கை குவித்து 
பொழுது முடிந்தது பராபரமே 

செவ்வாய், 9 ஜனவரி, 2018

மழை ஆடிய மங்காத்தா


மழை ஆடிய மங்காத்தா என் வீட்டுடன் 
தோற்று போயி முகம் தூக்கி 
முகாந்திரம் பாடி  கொண்டிருந்தது 
என் வீடு

முகாரியுடன் என்னை பார்த்து 
வரும் பண்டிகையெல்லாம் கொண்டாடுகிறாயே............
என் சுகவீனத்திற்கு மருத்துவம்  பார்த்தாயா ????
இண்டு ஈடுக்கெல்லம் என்னுள்ளே உன் செல்ல மழை 
தன் சிங்காரத்தை காண்பித்திருக்கிறது..... 
நான் ஈர சட்டையுடன் சளி பிடித்து ஒழுகினேனே
இனியும் என்னை நீ கவனிக்காமல் இருந்தால் 
அதிக தும்மல் வந்து  ஆபத்தை கொடுத்துவிடும் எச்சரிகிறேன் 
பயந்து மருத்துவம் துவங்கினால்...

வீடு வாசல் கதவு கோபித்து கொண்டது
என்ன ???என் மேல் மரியாதையில்லையா ......
என்னை மூட கஷ்டப்பட்டது  மறந்துவிட்டதா? 
நான் உனக்கு காவல்காரனாய் உழைக்கிறேன்
என்னையும் கவனி என்று 
சரி தான் இங்கும் கோபத்தை குறைக்க ஆயுதமானால்...

வீடு சுவர்கள் நீ மட்டும் புதுசு புதுசாய் போட்டு அலைவாய் 
நான் மழையில் நனைந்து  நனைந்து 
நயந்த துணியுடுத்தி இருப்பது 
உன்கண்ணுக்கு குளிர்ச்சையாய் இருக்கிறதோ 
என்று அதுவும் முகாரி  பாடுகிறது ...

இதோ என் நேரங்களையெல்லாம் 
தனதாக்கி கொண்டு தன் சுகாதாரத்தை நோக்கி 
வீறு நடை நடந்து கொண்டிருக்கிறது .....
என் சுகவீனத்திற்கு ஆப்பு வைத்து 
இடையறா வேலையின் தயவை கொடுத்து 

வலைபூவின் வாசல் கதவை கூட திறக்கமுடியவில்லை
வலைப்பூ நண்பர்களின் வாசலையும் எட்டி  பார்கவில்லை இன்னும் 
தொடரும் பணிமழையால்
                                                                                                                      பூவிழி 

படம் கூகிள்