வெள்ளி, 28 டிசம்பர், 2012

ஒரு மெண்டல்

ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில் எல்லா பைத்தியங்களும் அழுத வண்ணம் இருக்கிறார்கள் .
ஒரே ஒரு பைத்தியம் மட்டும் தூங்குது

டாக்டர்க்கு ஒரே ஆச்சிரியமா இருக்கு

டாக்டர் அந்த பைத்தியத்திடம் போய் பார்த்து கேட்கிறார்

டாக்டர் :-ஆமா நீ மட்டும் எப்படி? இப்படி? அமைதியா தூங்கற ? எல்லாம்
அழும்போது  !

அதற்கு அந்த பைத்தியம் கெத்தா சொல்லுது ,

பைத்தியம் :-அதுவா நான் தான் செத்து போயிடேனே அதற்க்குதான் அவங்க எல்லாம் அழறாங்க  !!!!!!!!!!!!!!!


வியாழன், 27 டிசம்பர், 2012

சமைத்த உணவை


சமைத்த உணவை சுடவைத்தால் சத்து குறையுமா?

இது உண்மைதான் .

எந்த உணவையும் முதல் சுடு ஆறுவதற்கு முன்பே சாப்பிடுவதால் அதிலிருக்கும்  முழுசத்தின் பலனும் நமக்கு கிடைக்கும் .

புதன், 26 டிசம்பர், 2012

சமைத்தால் சத்து போகுமா?


மருத்துவ அறிவியில்  விளக்கங்கள்
Tell  Me Why‘எப்போர்ருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொரு காண்பது அறிவு ‘
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெய்வப்புலவர் சொல்லிச்சென்ற இக்கருத்தை இன்னும் நாம் முழுமையாக கடைபிடிக்கவில்லை ,
எந்தவொரு நோய் வந்தாலும் அது எதனால் வந்தது அதன் தீவிரம் என்ன,
என்ன சிகிச்சை மேற்கொள்வது எப்படி போன்றவற்றை அறிந்து கொள்ள அறிவியல் பூர்வமான அணுகுமுறை தேவை

திங்கள், 24 டிசம்பர், 2012

அவலம் அவலம் அவலம் யார் காரணம் ?


அவலம் அவலம் அவலம் யார் காரணம் ?


          காலம் காலமாக  பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள்/கொடூரம் இவை பற்றி நாம் புதிதாய் பார்கவில்லை என்று ஜடம்  ஆகிவிட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களா? புரியவில்லை
 இந்த தாய்(சொல்லி கொள்ளவோம் பெருமையாக ) திரு நாட்டில் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னாலும் சுதந்திரம் வாங்கி பின்பும் பெண்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் 

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

A Horse Or Two Bags?


Re-Use Of Waste Materials In An Innovative Way


You Cant Beat The Power Of Nature


பரிட்சை வந்தா இப்படியில .....

"ஏ ......சாமியோய்  வாங்க வாங்க .........."  

"ஏலே யார இப்படி கூவினு இருக்க"?

"இங்கினதான் நம் ப்ளாகை பாக்கதேன் எல்லோரையும் கூப்பிடுறேன் "

"என்னது இதையா ?ஏலே  என்ன இது? இப்படி ?????????"


 பரிட்சை வந்தா  இப்படியில இருக்கனும் 


அப்பா : ஏன்டாஉனக்கு இன்னைகி பரீட்சை ஆச்சே   நீ பரீட்சை எழுத போல ?

மகன் :ஆமாம்பா இன்னைக்கு பேப்பர்  ரொம்ப கஷ்ட்டம்பா !

அப்பா : அது எப்படிடா பரீட்சைக்கு போகமலேயே நீ சொல்லற ?

மகன்: பேப்பர் இரண்டு நாளைக்கு முன்னாடியே அவுட் ஆயிடிச்சிபா
சனி, 22 டிசம்பர், 2012

படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)இந்தியாவிலேயே உணவுகள் மிக மலிவான விலையில் கிடைக்குமிடம்
உணவுப் பொருட்களின் விலைப்பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். முதலில் அதை உற்றுப்பாருங்கள்.தேநீர் - ரூ.1.00
சூப் - ரூ. 5.50
பருப்பு - ரூ.1.50
சாப்பாடு ரூ.2.00                                     
சப்பாத்தி - ரூ.1.00
கோழி - ரூ.24.50
தோசை - ரூ.4.00
வெஜ். பிரியாணி - ரூ.8.00
மீன் - ரூ.13.00


விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் இவ்வளவு "மலிவான விலையில்" எங்கே உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான்.

ஏழை - எளிய மக்களுக்காக இவ்வளவு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விற்பனைசெய்யப்படுகின்றன. நமது எம்.பி.க்கள் தான் இந்த ஏழை - எளிய மக்கள் ஆவர். நம் நாடாளுமன்றத்தின் உணவகத்தில் தான் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக அரசு கோடிக்கணக்கில் மானியம் அளித்து வருகிறது.

எம்.பி.க்கள் மாதந்தோறும் சம்பளமாக ரூ.80,000/- பெறுகிறார்கள். இதுபோக படிகள் மற்றும் சலுகைகள் என சில லட்சங்களைப் பெறுகிறார்கள். எம்.பிக்களுக்கு இப்படி வாரி வழங்கப்படுகின்ற பணம் எங்கிருந்து வருகிறது? நாம் செலுத்தும் வரியிலிருந்து தன் இவை யாவும் வழங்கப்படுகின்றன.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

காதல் படுத்தும்பாடு

உன் வீட்டு 
மொட்டைமாடி 
கொளுத்தும் வெயில் 
உன் வீட்டு 
துணிகள் மட்டும் 
ஈரம் சொட்ட சொட்ட 
இரவு வரை 
எனக்கான ........................உன் 
தேடல்களை 
அறிவிக்கின்றன 

சிக்கனமாய் 
சிரிகிறாய் 
உன் துப்படாவின் 
காற்று கூட 
படாமல் தள்ளி 
நிற்கிறாய் 
விரோதியிடம் 
பேசுவது போல்
பேச மறுக்கிறாய் 
வெறுத்து போய் 
விலக நினைகிறேன் 
கட்டி போடுகிறது 
உன் கண்ணின் 
காதல் ................

அலைகள் வந்து 
பரிகாசிகின்றன 
பல்இளித்து 
சுண்டல்காரன் 
சுனங்கிவிட்டு 
போகிறான் 
பலூன்காரன் 
பாவமென்று பார்கிறான் 
மணலை இறைத்து 
நககண்ணில வலி 
வருவார் போவார் 
காசு இட நினைகின்றனர் 
பிச்சைகாரனோ என்று 
அலை மோதும் 
கோபத்தில் நான் 
திரும்பினால் 
நீ .........
முச்சிரைப்போடு 
நான் துளைந்து போனேன் 
உன் 
உடல் மொழியில் 

புதன், 19 டிசம்பர், 2012

காதல் கிச்சி கிச்சி

செம்மொழி 
என்னை 
சாடவில்லை 
இலக்கணமில்லை
என்று ..........
உனக்கு 
சமரம் வீச 
எம் மொழியை 
விசிறியாகிவிட்டேன் 
கவிதை 
கட்டிலில் 
நீ ...........
படுத்துறங்க 
காதல் 
என்றால் ................
கரப்பாம்பூச்சி 
கூட 
காப்பாற்ற
வரும் .

காதல் கிச்சி கிச்சி

இது வரை ..................
என் உயிர் 
காதலி 
உன் 
ஒளி சிந்தும் முகத்தை 
ஓவியம் தீட்டவில்லை 

உன் 
புன்னகை முகத்தை 
புகைப்படம் எடுக்கவில்லை 

உன்னை
வாழ வைக்க 
மாளிகை கட்டவில்லை 

அட !
காதல் காய்ச்சலில் 
அனைவரும் 
உளரும்
கவிதையை கூட
புனையவில்லை 
என்ன செய்ய ???????????

உன்னை 
என்
முன்னே 
பார்த்தபடியிருந்தால் 
ஓவியம் தீட்டியிருப்பேன் 

உன்னை 
நினைவாயாக்க 
நினைத்திருந்தால் ...........
புகைப்படம் எடுத்திருப்பேன் 

உன்னை 
என்னிலிருந்து 
தூரமாய்
வைக்கவேண்டுமெனில் 
மாளிகை எழுப்பிருப்பேன் 

நீயோ 
என் 
நெஞ்சினில் 
உயிரினில் 
ஒலிந்து கொண்டாய்
ஓவியம் வரைய 
முடியாமல் 
உன் 
புன்னகையை 
பொக்கிஷமாகினேன் 
என் 
இதயவீட்டின் 
ராணியாகிவிட்ட 
பின்பு உனகெதற்க்கு 
மாளிகை !!
சரி போகட்டும் 
நானும் 
உளற முயற்ச்சிகிறேன் 
இனியாகிலும் ...............

என் வீட்டு தெருவில் ........

என் வீட்டு 
தெருவில் ........

என் அன்பு
காதலா!!


உன்னை கண்டவுடன் 
சிந்திக்க மறந்து 
சிக்கி கொண்டது 
என் சிரம் 

காற்று மட்டும் 
உள்வாங்கி 
காய்ந்து 
போனது 
என் தொண்டை ........

திருவிழாவில் 
தொலைந்து போன 
குழந்தை போல் ...............
திரு திருவென 
வழிகின்றன 
என் கண்கள் 

கசக்கி போடும் 
காகிதத்தை கூட
அறிந்திடும் காதுகள் 
காலுகடியில் 
இருக்கும் 
ஆட்டோபாம்மை கூட................
அறிய மறுகிறது 

வீசி நடந்த 
என் கைகள் ........
ஒன்றை ஒன்று 
காப்பாற்றி கொள்ள 
கோர்த்துகொண்டன .

திக்கு தெரியாத 
காட்டில்............. 
நடப்பது போல் 
என் கால்கள் 
பின்னி பின்னி 
நடகின்றன 

உன்னுடன் 
வாழாமல் 
போவேனோ.............
என............ 
பயபடுகிறேன் 
முச்சு விட 
மறகின்றன.................
என் 
மூக்கு

சீராய் 
துடித்த என் 
இதயமோ ................
சிவதாண்டவம் 
ஆடுகின்றன 

என் 
அவயங்கள் 
அவதியுறுகின்றன 
அனாசியமாய்
நீ ...........................
என் தெருவில் 
நடந்தபோது
என்னை 
கடந்தபோது ..........

காதல் கிச்சி கிச்சி

சுடும் வெயிலில் 
நீ .................
குடை பிடித்து 
நடந்து வரும் அழகை ..............
பார்த்து ரசித்தேன் 
பஸ் ஸ்டாண்டில் ...........
தொப்பிலாய்
நனைந்த வியர்வையில் ....
காதல் கிச்சி கிச்சி

காதல் வந்தால் ........................


காதலியுடன் 
நான் 
இருக்கும் போது
கடவுள் வந்து
வரம் கொடுத்தலும்
.உனக்கென வேண்டும்.................
என்பேன் ............
சிரித்து கொண்டே .

த்யேட்டரில் 
என் நண்பர்கள் 
மொத்து மொத்து .......
என்று மொத்தினார்கள் !
இரண்டு சீட் தள்ளி இருந்த 
என் காதலி 
என்னை முறைத்தால் !
ஏன் என்றேன் ?
நண்பன் .............
“நீ காதலி இறக்கும் போது
சிரித்தாயடா “
நான் எங்கே 
படம் பார்த்தேன் !!!!!!

என் அம்மா
என்னை பார்த்து 
அழுகிறாள் 
ஏன்??????
நான் தட்டில் 
உள்ள கறியை 
விட்டு 
மற்றவர்கள் போட்ட 
எலும்புகளை 
கடித்து கொண்டிருந்தேன் 
என்னை மறந்து !

என் தங்கை 
என்னை மரமண்டை..............
என்று குட்டிவிட்டு 
அவள் சைக்கிளை
தள்ளி கொண்டு போனாள்
சைக்கிளுக்கு காத்தடிக்காமல் 
பக்கத்து மரத்துக்கு 
காத்தடிகிறேன் !

என் அண்ணன் 
என்னுடன் 
படுக்க பயபடுகிறான் 
எங்கே 
நடு இரவில் 
நான் அவனை 
முத்தமிட்டுவிடுவேனோ!

காலை புலர்ந்தது ..
என்னை சுற்றி .................
என் வீட்டில்
உள்ளோர் கால்கள் ..............
பதறி எழுந்தேன் 
பாவமென பார்த்தார்கள் 
ஏன்?????/
நான் கட்டிலின் 
கீழே என்று !

என் அப்பா 
என்னை பர்ர்க்கும்போதேல்லாம் 
வீட்டை விட்டு 
தூரத்திடுவேன் 
என்று மிரட்டுகிறார் 
ஏன்???????
அவர் அழகாய் கட்டிய 
காம்பவுண்ட் சுவரில் 
என் காதாலியின் 
பெயர் எழுதிவிட்டேன் 
என்று .............திங்கள், 17 டிசம்பர், 2012

நினைவு குறிப்புகள்
கொஞ்சி கொஞ்சி 
கதைகள் பேசிய ....
காலம் 

கொட்டும் மழையையும் 
ரசித்து ....
நனைந்த காலம் 

கொசு கடியும் 
மறந்து கோலமிட்ட ....
காலம் 
பொல்லாங்கு 
சொன்னவரையும் ...
பார்த்து 
சிரித்த காலம் ,

படிப்பில் ...
பல்லாங்குழியும் 
பரமபதமும் 
ஆடிய காலம் ,

அம்மாவின் 
ஆ க்டோபஸ் 
அறிவுரையை 
துறந்த காலம் 

பட்டு பாவாடை கட்டி 
பாதங்கள் அதிர 
குஞ்சலங்கள் துள்ள 
குதித்தோடிய காலம் 

அந் 
நினைவுகள் பல 
உண்டு 

ஓ ....................
வருமோ !
என் வாழ்வின் 
பொற்காலம் 
எப்போது வரும் ?
அடுத்த பிறவி !