பொன்மொழிகள்


வாழ்கை
1.முட்டாளின் முழு  வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம் ,
                                                  அரேபிய பழமொழி
2.வாழ்க்கை பல கேள்விகளையும் பதில்களையும் கொண்டது : எப்பொழுதும் அது பௌர்ணமியாக இருப்பதில்லை ,அமாவாசையும் வரத்தான் செய்யும் .
                                                        ஹோமர்
3.வாழத் தெரிந்தவர்கள் உலகத்தோடு ஒட்டி வாழக் கற்று கொண்டு விடுகிறார்கள்                     
                                                          பெர்னாட்ஷா
4.நாளுக்கொரு பாடத்தை வெல்லாதவன் ,
வாழ்கையின் முதல் பாடத்தையே கல்லாதவன்
                                                         எமர்சன்

மனிதன்
மனிதனின் வலிமையை அழிப்பவை மூன்று அவை அச்சம் ,தேவையில்லாத பிரயாணம், பாவம் என்பனவாகும்
                                                      ஹீப்ரு பழமொழி

நல்லவனாக இருப்பது எளிது, நேர்மையானவனாக இருப்பது கடினம்
                                                       பிரஞ்சு அறிஞர்

பணிவுடன் பழகாதவனும் ,நானத்த்கும் செயல்களிலிருந்து விலகிக் கொள்ளாதவனும் உண்மையான மனிதனாக மாட்டான் .
                                                    நபிகள் நாயகம்

எதையும் எதிர்பாராதவன் ஞானி :ஏனெனில் அவனுக்கு ஏமாற்றம் இல்லை
                                                 வில்லியம் கெளப்பர்


அறிவுரை
புத்திமதி விளக்கெண்ணெய்போன்றது அதை கொடுப்பது சுலபம்,குடிப்பது மிகவும் கஷ்டம்.
                                                  ஜோஷ் பில்லிங்ஸ்
நரைக்கத் தொடங்கும் போதாவது உன் ஆன்மா ஈடேறும் நெறியில் செல்.
                                          கிருபானந்த வாரியார்.
இருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள் .
                                             கண்ப்பூஷியஸ். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக