எதிர்நீச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர்நீச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 அக்டோபர், 2017

உப்பு பெறாத கோபமா ?

  உப்பில்லாத கோபமா???  Image result for stiker angry face di line
     கோப படாதே.... இன்னெரு  பக்கம் ரௌத்திரம் பழகு இப்படியும் சொல்லுறாங்க ..இது என்னங்க இரண்டும் ஒண்ணுதானே ஆமாம்ங்க ஆமாம். கோபம்  என்பது  ரௌத்திரம் என்பதின் சாதரண சொல் அதாவது பேச்சு மொழியில் சொல்வது அது செந்தமிழ் சொல்(ஹீ ... ஹீ... உன்னை அப்படினு பல்லை  கடிக்க கூடாது பல் வீணா  போயிடும் நான் பொறுப்பில்லைஅப்படினா இதுவே சொல்லுது விஷயத்தை சாதாரணமான விஷயத்திற்கு கோபபடாதே ......இன்னொரு சொல் வழக்கும் இருக்குங்க அது
                               Image result for big baby boss baby 
‘உப்பு பெறாத விஷயதிற்க்கு  எல்லாம் கோபப்படாதே’
 அப்படினு சொல்லறாங்க இது என்னங்க நியாயம்..    ஒரு நாள் உப்பு கொஞ்சம் கம்மியா  இல்லை போட மறந்து சமைச்சி வச்சிருந்தா 'என்னது இது? சே மனுஷன் திம்பான இந்த சாப்பாடை நாயி கூட சாப்பிடாது ' அப்படினு கோப கல்லு வந்து உழும் . அதில் கண்ணுல இருந்து உடனே உப்பு வரவப்பாங்க அதாங்க கண்ணீர் .. ஸ்வீடவா இருக்கு  கூடவே மைண்ட்  வாய்ஸ் ஓடும் 
( நாய்க்கு உப்பு போட்டு சாப்பாடு போட கூடாதுனு கூடவா தெரியாது இந்த மனுஷனுக்கு )   சரி உப்பு பெறாத விஷயம் சொல்லிட்டு கூடவே இப்படியும் வருது ' உப்பிட்டவரை உள்ளவும் நினை',(நேத்து உப்பு போட்டு சமைச்சி வச்சிருந்தேன் நினைச்சி எங்கே பாக்கிறாங்க.. அதுக்கும் தான் பேச்சி வந்துச்சு இப்படியா உப்ப கொட்டுவனு )' உப்பில்லா பண்டம் குப்பையிலே',(இது உடனே தலையாடுவாங்க) .இப்படி பல வகையா  உப்புக்கு  டெவெனிஷின் வச்சி  குழப்பி வச்சி இருக்காங்க நம்ம ஆளுங்க ....அடக்கடவுளே டிராக் எங்கேயோ போதே வாங்க நாம விஷயத்திற்கு போவோம்.
                                Related image                       
                    நியாமான  விஷயத்திற்கு தான் ரௌத்திரம் பழகணும்ங்க..... அநீதியை பார்த்து கோபப்படணும். அநீதி னாஅப்டினா ருசு இல்லாம செய்யற அந்நியத்திற்கு கோப படவேண்டாமா? நீதி மறுத்தாலும் என்ற  கேள்வி எழுப்ப கூடாது....  விடுங்க அது வேற டிராக் நாம அந்த பக்கம் போக வேண்டாம் .
என்ன ,என்ன? சொல்ல வர நாட்டுல நடக்கிற மக்களுக்கு எதிரான  அநீதி அரசியல் பிரச்னையில் தலையிட்டு போலீஸ்கிட்ட மாத்து வாங்க சொல்லுறியா? அப்படினு பிலு  பிலுன்னு புடிக்காதிங்க.. கோபத்தை  நாட்டுல நடக்கற அரசியல் விஷயத்தில் மட்டும் தான் காண்பிக்குனும்  இல்லைங்க .....
அட்லீஸ்ட் உங்க பக்கத்தில் என்ன அநியாயம் நடக்குதுன்னு பாருங்க ரேஷன் கடையில் நிக்கறீங்க உங்களை இடிச்சி தாண்டி கொண்டு போயி நிக்கரவனை  தட்டி கேளுங்க இல்லை யாருக்காவது  அது நடந்தாலும் நமக்கில்லையினு திரும்பி நிற்காதீங்க....

நீங்க பயணிக்கும் போது உங்களுடன் பயணிக்கும் பெண்ணுக்கு பிரச்சனையோ, வம்பு செய்ப்பவர்கள் இருந்தால் என்னனு கவனிங்க எதிர்த்து குரல் கொடுங்கள் ...இதற்க்கு  முதலில் நீங்க உங்க கண்ணை  போனில் இருந்து எடுக்கணும்ங்க  அப்பத்தான் உங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியும். இன்று மிக  பெரிய டிராபெக்கே இது தான் .......இப்ப இருக்கிறவங்க பயணிக்கும் போது போனில் பாட்டுகேட்டிறேன்னு ஒன்னு காதில் மாட்டி கண்ணை  முடிக்கிறாங்க, இல்ல தலையை அதில் புதைச்சிக்கிறாங்க......... அப்புறம் எப்படி பக்கத்தில் நடக்கும்  ரகசிய சிலுமிஷன்கள் கண்னுக்கு தெரியும்.. இந்த கண்ராவியை பார்கணுமா ?அப்படி னு கேட்காதீங்க.. கொழுப்பெடுத்ததை விட்டு விடுங்கள் .......சொல்லமுடியாமல் தவிப்பவருக்கு உதவுங்கள்.

அப்புறம் பக்கத்துக்கு வீட்டுல நடக்குற திருட்டுக்கு உடைந்தையா  ஆகாம ஆயிடாதீங்க .  நீங்க உங்க விட்டு டீவி சௌண்டயை உங்க வீட்டுக்கு அந்த ரூமுக்கு மட்டும் வச்சி கேளுங்க அப்ப அப்ப டீவியை விட்டு எழுந்து வெளியே தலை நீட்டி  பாருங்க  இதனால் திருடன் மட்டுமல்ல வேற எல்லா விஷமங்களும் கூட கொஞ்சம் பயப்படும். இப்ப பிக்  பாஸ்னு ஒன்று நடந்தது பாருங்க ரோடே ஜிலோன்னு இருந்தது என்ன கொடுமை நடந்தாலும் தெரிஞ்சுச்சு இருக்காது மக்களுக்கு இவ்வளவு அடிக்ட்டா ஆகுவது

    பிள்ளைகளுக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே இதை பழக்கிவிடுங்கள்.   பள்ளியில் ஏதாவது சம்பவம் நடந்தால் சொல்ல வந்தால் உங்கள் அவசர வாழ்க்கையில் 'நீயேன்  அதயெல்லாம் பார்கிற.. நீ எதிலேயும் தலையிடாதே.. மிஸ் மார்க் குறைச்சிடுவாங்க உனக்கு  பிளாக் மார்க் வைத்துவிடுவார்கள்' என்று பட படத்து அந்த பிள்ளையை டம்மி பீஸ்ஸா  வளர்காதிங்க.. என்ன நடந்தது? விஷயம் என்ன? என்று கேட்டு புரிய வைங்க.. பிரச்னை இருந்தா  அணுகும்முறை, ஒத்துழைப்பு தாருங்கள்.

       இப்ப பாருங்க’ ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு’ ஒரு சொல் வழக்கு இருக்கு. அது என்னனா ஒரு சின்ன உதாரணம் படிச்சதை  சொல்லுறேன் உதாரணத்திற்கு ....
        தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் விரைந்து கொண்டிருந்தது. எத்தனையோ கனரக வாகனங்களை முந்திக்கொண்டு ,சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டிருந்தார் ஓட்டுனர் . , திடீரென்று சாலையின் குறுக்கே ஒரு வயதானவர் ஓடினார்சடாரென பிரேக் பிடித்தும், வண்டி நிலை தடுமாறி, அந்த பெரியவரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்க .. எப்படியோ சமயோசிதமாக நிலமையை சமாளித்து,பெரியவரை மோதாமல் காரை நிறுத்திவிட்டு, பெருமூச்சிவிட்டார் ஓட்டுனர்அதன் பின்
கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு இறங்கி ஓடி" யோவ்! சாவுகிராக்கி. . . இந்நேரம் செத்து பரலோகம் பொயிருப்ப. நீ செத்து ஒழியரதுமில்லாம என்னையுமில்ல கோர்ட்டு கேசுன்னு அலைய வச்சு சாகடிச்சிருப்பே ! " அடிக்குரலில் கத்திக்கொண்டே வந்த கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல்,அந்த பெரியவரை ஓங்கி ஒரு அரைவிட்டார்அடுத்த நொடி அந்த பெரியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

       இப்ப என்ன ஆயிற்று விபத்து என்னமோ நடக்கல.. கொஞ்சம் கார் இருந்த தண்ணிய குடிச்சி இருக்கலாம் பட படப்பு குறைய ..ஆனா அந்த ஆத்திரகார மட்டு  அவன் கோப கூற்றை அவனே உண்மையாகிட்டான் அவன் ஆத்திரத்தால்........ இனி சமயோசித்தமவும் இருங்க நியாமான விஷயத்துக்கு கண்டும் காணாம இருப்பதையும்  விடுங்க

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சொல்லுறதை சொல்லிப்புடேன்


நாம எதிர் நீச்சலில் இன்னிக்கு பார்க்க போவது காத்திருப்பு ஐயோ காத்திருப்பதா காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி ..........அப்படின்னு பாட ஆரம்பிக்காதீங்க

காத்திருனு யாரவது சொல்லிடா அல்லது எதற்காவது காத்திருக்கனும்னா நாம் டென்ஷன் ஆயிடுவோம் ஆனா .....

நாம வாழ்க்கை முழுவதும் எதற்க்காவது காத்து கொண்டுதான் இருக்கிறோம் 5 வயது புள்ளை 10 வயது சைக்கிள் ஓட்டுகிரவனை பார்த்து எப்ப நமக்கு 10 வயதாகும் என்று காத்திருக்கிறது 12வயது பையன் 16 வயதுல்ல தன் அண்ணனின்அல்டாப்பை  பார்த்து அவனை மாதிரி நான் எப்போ ஸ்டையில் பண்ணிப்பேன் என்று காத்திருக்கிறான் 19 வயது எப்பட நானும் இந்த படிப்புலருந்து விடுதலை ஆவேன் என்று வேலைக்கு செல்லும் 23 வயது வாலிபனை  பார்த்து காத்திருக்கிறான் வேலை கிடைச்சா கல்யாணத்திற்கு... கல்யாணம் ஆனா குழந்தைக்கு.... இப்படி சொல்லிகிட்டே போகலாம் ஆனா பாருங்க நமக்கு வாழ்க்கையில் வெற்றியோ அல்லது சரியான விஷயமோ அமையனும் நினைத்தால்  கொஞ்சம் காத்திருந்து அமைக்கனும் 
கொக்கு மாதிரி

இந்த கொக்கு இருக்கு பாருங்க அது தனக்கான மீன் வரும் வரை ஒற்றைகாலில் எவ்வளவு நேரம் காத்திருக்குது  உங்களுக்கு சின்ன வயசிலேயே இந்த கதையெல்லாம் சொல்லிருப்பாங்க கொக்கு ஒரு பழமொழியே இருக்கு

ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும் 
வாடியிருக்குமாம் கொக்கு

 ஓடுமீன் ஓட என்றால் எத்தனையோ மீன்கள் ஓடிக்கொண்டிருக்க அவற்றைக் கொத்தாமல் ஏன் காத்திருக்கிறது கொக்கு? உறு மீன் வருமளவும் காத்திருக்கும். ஆமாம், அந்தக் கொக்கின் வயிறு நிரம்பும் அளவுக்கு கொழுத்த மீன் வரும் வரையில் அந்தக் கொக்கு காத்திருக்கும்
.அது போலத்தான் நாமும் நமக்குத் தேவையான, தகுதியான வாய்ப்பு
 வரும் வரையில் காத்திருக்கத்தான் வேண்டும்.

ஆனால் ஐந்தறிவு கொண்ட கொக்கே இப்படி அறிவுத் தவம் செய்கிறதே,
ஆறரிவு கொண்ட மனிதர்களாகிய நாம் முயற்சி என்னும் தவத்தை மேற்கொண்டுநல்லவாய்ப்புகளை நல்ல ப் பெற காத்திருக்க வேண்டும்
ஒரு காலில் காத்திருக்கட்டும் நாம் 2 காலில் காத்திருப்போம் நமக்கான மீன் வரும் வரை காத்திருக்க வேண்டும்
(யாரும் எடக்குமுடக்க திங் பண்ண கூடாது நான் சொல்லும் மீன் வெற்றியை குறிக்குது )

சரி வேற சொல்லறேன் இந்த மாம்பழம் இருக்கு பாருங்க அது இயல்பா பழுத்து சாப்பிட்டால் எவ்வளவு சுவை ஆனா காத்திருக்காமல் அதை கல் போட்டாம் கெமிகல் போட்டும் பழுக்க வைக்கும் பழம் அவ்வளவு சுவை தருவதில்லை மேலும் உடம்புக்கும் கெடுதல் தருகிறது நல்ல பழ சாப்பிடனும் என்றால் காத்திருகனும்

‘புலி பசித்தாலும் புல்லை தின்னாது ‘அப்படின்னு சொல்லுவாங்க அதுகான இரை வந்ததும்  அதை அது நேரம் பார்த்து குறிவைத்து தன் உணவை புசிக்கும் இது தான் வெற்றி இலக்கு

விதை விதைக்கவேண்டுமென்றால்  ஆடிபட்டம் வரை காத்திருக்கணும் சொல்வாங்க அடைமழைக்கு ஐப்பசி வரை காத்திருக்கத்தான் வேண்டும் வேற வழியே இல்லை

சரி நம்ம புள்ளையாரை எடுத்துகோங்க அவரு பிரம்மசாரின்னு தெரியும் ஏன்? தன் தாய் பார்வதி போல் ஒரு பெண் வேண்டும் என்று காலம் காலமா காத்திட்டு இருக்கார் இதுக்கு அர்த்தம் என்ன சொல்றாங்கனா நல்லதா கிடைக்கனும்ணா கொஞ்சம் காத்திருக்கணும் என்ற கோட்பாட்டை விளக்குவதற்கு தான் பிரம்சாரியான புள்ளையார் உருவம் கதையெல்லாம்

சூப்பரான மட்டுமல்ல மிக நல்ல காதலி கிடைக்கனும்னா ‘தி பெஸ்ட்டுகாக காத்திருக்கத்தான் வேண்டும் சும்மாவே வயசு வந்திடுச்சி லவ்னா அது ‘அட் ஃபஸ்ட் சைட் ‘அப்படி இப்படினு பேத்தினால் ரஜினி டயலாக்தான்
'கிடைக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காம இருக்கறது கிடைக்காது'


நம்ம சூர்யா ஜோதிக்கா காதலையே உதரணாமா சொல்லலாமா அவங்க லவ் சக்சஸ் ஆகா ரொம்பநாள் காத்திருந்ததாக சொல்லிகிறாங்க   ஒன்றை நல்லதாக அடைய வேண்டுமென்றால் காத்திருக்கணும் தப்பில்லை அவசரபட்டு ஒரு முடிவெடுப்பதை விட காத்திருப்பது மேலானதுன்னு நான் நினைகிறேன் அவசரத்தில் செய்யும் காரியம் அலங்கோலம் ஆகும் என்று நம்ம பெரியவங்க சொல்லி இருகாங்க

அதுக்கு உதாரணமா நம் அவுரங்கசிப்பை எடுத்துகோங்க அப்பா ஷாஜகானிடமிருந்து நாட்டை பிடுங்கி அப்பாவையும் சிறையில் அடைத்து அண்ணனையும் கொன்றுவிட்டு அவசரமா அரியணை ஏறியதால் இன்றுவரை அவன் பழிக்க படுகிறான் சரித்திரத்தில்



சரி அவ்வளவு ஏங்க உங்களுக்கு பூனை குட்டி வேணுமா? யானை குட்டி வேணுமா? நீங்கதான் முடிவெடுக்கணும் யான குட்டி வேண்டுமென்றால் 20 மாதம் காத்திருக்கத்தான் வேண்டும் பூனை குட்டி என்றால் 40 நாளில் கிடைத்து விடும்





பங்குகளின் விலை குறையும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் முதலீடு செய்ய வேண்டுமென்றால் விற்க வேண்டுமென்றால் அதன் விலை உயரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் அப்பதான் லாபம் எப்பவோ படித்ததை எல்லாம் நியாபக படுத்தி எனக்கு தெரிந்த அளவில் சொல்லிடேன் அவ்வளவுதான்

நியாயமான வெற்றிக்கு காத்திருத்தல் அவசியம் அதுதான் நிலையானதாக  இருக்கும்

சொல்லுறத்தை சொல்லிப்புடேன்
செய்யறதை செஞ்சிடுங்க
நல்லதுனா கேட்டுகோங்க
கெட்டதுனா விட்டுடுங்க

முன்னால வந்தவங்க
என்னனமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்ச்சியும் செஞ்சாங்க

குடியிருந்தும் மூட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
வெளியிருந்தும் கொட்டைகளாய்
விழுந்து கிடக்க போறீங்களா

முறையை தெரிஞ்சு நடந்து
பழைய நெனப்ப மறந்து
உலகம் போற பாதையை
உள்ளம் தெளிஞ்சு வாரீகளா

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையுள்ள ஞானிகளும்
எத்தனையோ எழுதி எழுதி
வச்சாங்க
எல்லாதான் படிச்சீங்க
என்ன பண்ணி கிழுச்சீங்க

ஒண்ணுமே நடக்காமே
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னால ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க