வியாழன், 30 நவம்பர், 2017

படித்தில் பிடித்தது.....

                                                                 
                                

தன் தோள்களில் தாங்கியதை இறங்குவதே இல்லை கடைசிவரை....... சுகமாய் பயணித்ததை உணரும் தருணம் எப்போது .......



                தஞ்சையில் இருந்து சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, 
“ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)
அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)
மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.
ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.
ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.
மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.
ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.
அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.
அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.
அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.
“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.
அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.
அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.
அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.
அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.
மறுநாள் காலை.. அலுவலகத்தில்
இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.
இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.
செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.
அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான் என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.
முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.
யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.
ஆனால், அப்பாக்கள் வரம்...
  

செவ்வாய், 28 நவம்பர், 2017

தேவதை என்னும் அரக்கன்-நிஜம்

நடப்பது என்ன ?

                                                                    

தேவதை என்னும் அரக்கன் செய்யும்  விபரீதத்தை பாருங்க இந்த செல்போன் என்னும் அரக்கன் செய்யும் அட்டுழியங்கள் பல என்று   முன்பே பதிவு போட்டு இருக்கிறேன் கொஞ்சம் கவன குறைவாய் இருந்தாலும் சரி நம்  இழப்பை  ஈடு செய்ய முடியாமல் போய்விடும்.
இதை  பற்றி ஒரு நிஜம் இங்கே...................

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கருப்பையா நகரைச் சேர்ந்தவர் ஜெயம்.இவர் ஒரு  ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை, இவருடைய மகன் செந்தில், டிகிரி முடித்துள்ளார்.


கடந்த சில தினங்களாக. செந்திலின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. நாள் செல்ல செல்ல, பெற்ற தாய் என்றும் பாராமல் ஜெயத்தை அடித்து துன்புறத்தத் துவங்கியுள்ளார்.காரணம் புரியாமல் அந்த தாய் தவித்துள்ளார்


செந்திலின் கொடுமை உச்சக்கட்டம் அடைய, வேறு வழி அற்று ஜெயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் .

போலீசும் நடவெடிக்கையில் இறங்கியது, 



செந்திலிடம் போலீசார் விசாரிக்கையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், கடந்த சில தினங்களாக புளூவேல் விளையாட்டை விளையாடியதாகவும், விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்ததாகவும் செந்தில் கூறினார்.
தொடர்ந்து, புளூவேல் விளையாட்டில், தாயை அடிக்கச் சொல்லி கட்டளை வந்ததாகவும், அதன்படி தாயை அடிதத்தாகவும் கூறியுள்ளார்.


இவனை போல் மாக்கான்கள் இருக்கும் வரை சைக்கோ தனமாய் விளையாட்டுகளை உற்பத்தி பண்ணும் சைக்கோக்களுக்கு வசதிதான்......


விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைக்காக, பெற்ற தாயையே மகன் அடித்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் அனைவரையும் அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது.இப்ப அதிர்ச்சி ஆகி என்ன செய்வது முதலிலேயே கவனித்து இருக்கனும் நம்ம வீட்டுது  சைக்கோ ஆகிறதா என்று .......

ஞாயிறு, 26 நவம்பர், 2017

மனிதனின் கற்பனை சாலைகளில்.

                 எனக்கு புதியதகவல்..... இது என்னை போல் யாருக்கெல்லாம் இது புதிதோ தெரியவில்லை... அதனால் படித்ததை  பகிர்கிறேன், தெரிந்து கொள்ளுங்கள்..... இப்படியும் நம்பப்படுகிறது 
சாலைகளில் பேய்கள் நீண்ட நெடுஞ்சாலைகளில்  மனித பேய்கள்தான் தொல்லை கொடுக்கிறது என்றால் கொள்ளைகாக.... கொலை என்றெல்லாம் பார்த்தால்...... இங்கு நிஜமாகவே பேய்களின் தொல்லையாம்... சில சாலைகளில் அவை எவையென்று பார்க்கலாமா பயம்மாதான் இருக்கு ஆனா தெரிந்து கொள்ளாமல் விடலாமா ? மனிதனின் கற்பனைகளின் எல்லைகளில் பயணம் செய்வோம் வாங்க 
                                                       


பங்கார்க் கோட்டை.சாலை
பெயரை பார்த்தாலே இங்கு எதோ இருக்கிறதோ என்றபயத்தை கொடுக்கிறது அல்லவா 
பங்கார்க் கோட்டையானது அமானுஷ்ய சக்திகள் நிறைந்ததாக நம்பப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் போது யாருக்கும் லிபிட்  கொடுக்க கூடாதாம்  ஏனென்றால் லிப்ட் கேட்பது  பேய்யாக இருக்கலாம்   என்பது இந்த சாலையில் பயணித்தவர்கள் கூறும் தகவல்.அதுக்கு எந்த ஊருக்கு போணுமோ பாவம் ஒட்டும் போது டிஸ்ரப் செய்யலைனா பராவாயில்லை 
                                                 
     
கெசாடி காட் சாலை 
சந்தோஷமா சுற்றலா போகலாமென்று கிளம்பினால் இது என்னடா இப்படி ஒரு குண்டு என்று நினைக்காதீங்க  நினைத்தீர்கள் என்றால் எங்கேயும் போகமாடோம் கடைசிவரை  இப்ப பார்ப்போம்....
கோவாவிலிருந்து மும்பை போகணும்னா  கெசாடி காட் நெடுஞ்சாலை வழியை உபயோகிக்க வேண்டி இருக்குமாம் இரவு நேரத்தில் இந்த பக்கம் பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது  அப்படி போக  வந்துவிட்டால் .வழியில் வாகனங்களை நிறுத்துவது அறிவுரைக்கத்தக்கதல்ல என்றும்  ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இந்த பகுதி பார்ப்பதற்கு மிகப் பயங்கரமானதாக இருக்குமாம்
                                                     
டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை.
நீங்கள் ஆல்வார் வழியாக ஜெய்ப்பூருக்கு செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் எச்சரிக்கை நீங்கள் தே நெ எ 11 வழியாக செல்லுங்கள். அல்லது நீங்கள் ஆல்வார் வழியாகத்தான் செல்வீர்களென்றால் பேயுடன்தான் பயணிக்கவேண்டியிருக்குமாம் .என்று நம்புகிறார்கள் அப்படி போனா எக்ஸ்ரா ஸ்னேக்ஸ் எடுத்து கொண்டு போங்கள் பேய்க்கு பிடித்ததை கூகிளில் சர்ச் பண்ணவிட்டு 
                                       
கசாரா காட் சாலை.
சுற்றிலும் பசுமையான, இரண்டு புறங்களிலும் புற்கள் நிறைந்த ஒரு சாலை இது. மும்பை - நாசிக் இடையேயான இந்த சாலை மராட்டிய மாநில நெடுஞ்சாலைகளில்  ஒன்று. இது பேய்களின் நடமாட்டம்  இருப்பதாக நம்பப்படுகிறது அடுத்தது 
                                                   
சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை.
தேசிய நெடுஞ்சாலை எண் 209ல் சத்தியமங்கலம் காடுகள் வழியாக பயணம் சென்றிருக்கிறீர்களா? பொதுவாக காட்டு வழிப் பயணம் என்பது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியாகவும். ஒருவித சாகச உணர்வை தருவதாகவும் இருக்கும்.கூடவே திக்  திக்கையும்  கொடுக்கும்   இந்த சத்தியமங்கலம் காட்டு பாதை கேட்கவே வேண்டாம் திகைக்க வைக்கும் திக்திக் நிமிடங்களாக இருக்குமாம் . இந்த காட்டுவழி நெடுஞ்சாலை தமிழகத்தின் மிக அதிக அமானுஷ்யம் பாதிக்கப்பட்ட பகுதியாக கூறுபடுகிறது .

ஐ!! ஜாலி  நாம ஊரில் இல்லையே இப்படியெல்லாம் அப்படினு சந்தோஷ் பட முடியவில்லையே இதோ ......
                                                   

கிழக்கு கடற்கரைச் சாலை.
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் பல்லாயிரம்பேர் பயணிக்கிறார்கள். இங்கே என்னடா  பேய் வந்துவிடப் போகிறது என்று உங்களுக்கு தோன்றலாம். பேயாலதான என்று புதிர் விளங்கவில்லை . ஆனால் தமிழகத்தில் அதிக அளவில் விபத்து நடக்கும் பகுதி என்று எடுத்துக்கொண்டால், அதில் இந்த சாலை முதலிடத்தில் வந்து உட்கார்ந்துவிடும். ஏன்னென்ற மர்மம் பிடிபடவில்லையாம்  இன்னமும் பல காரணங்களை கற்பித்து கொண்டும் .

படிச்சீங்களா தோழமைகளே நீங்க  இந்த மார்கத்தில் எல்லாம்  பயணித்து இருக்கறீர்களா உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள் இவை உண்மையா ?
காத்திருக்கிறேன் உங்கள் கருத்துக்களை அறிய .....




புதன், 22 நவம்பர், 2017

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது உங்களோடயும் பகிர்ந்து கொள்கிறேன்  ........      

எப்படியெல்லாம் மனசை தேத்தறாங்க பாருங்க 

"என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!"
"பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?" 

காலத்தின் கோலம் ......
.
“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி” 


 எல்லா கணவமாரும் பூவாங்கும் ரகசியம் ......

"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"

"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!" 



நீங்க என்ன ஆல்டாப்பு நாங்க அதுமேல பாருங்க .......


கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம். 


விளம்பரங்கள் செல்லாது 

செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கல்கிரயம் இல்லைன்னு நகை வாங்கினது தப்பா போச்சு!"

"என்னாச்சு?" 

"பேங்க்ல அடகு வைக்கப் போனப்ப இது தங்கமே இல்லைனு சொல்லிட்டாங்க" 

எப்படி சொன்னாலும் நாங்க மூளையை கசக்கி பிழிவோமில்ல இந்த மாதிரி கேள்விகள்ல.........

"எங்க கடைல துணி வாங்குனா கிழியவே கிழியாது சார்!" 

"அப்படியா? அப்போ எனக்கு 2 மீட்டர் வேணும்னா எப்படி கிழிச்சு குடுப்பீங்க?"          

அறிவாளியாம்.......

"என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?"
"இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!" 


கல்வி  கண்ணை துறக்கும் .......

நம்ம அப்பா முட்டாளாம்மா?"

"எதுக்குடா இப்படி கேகிறே?"

"எங்க வாத்தியார் என்னை 
முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே" 

அன்பு பொங்குது  ........

மனைவி:- நேற்று நான் பார்த்து முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.

கணவன்:- 
இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன் 


 அமைதிதான் இதுதான் அமைதி.........                                  


                                                                
(இதை பார்த்துவிட்டு இந்த பிளாக் பக்கமே தலைவச்சி படுக்க மாட்டேன் சொல்லிடுவாங்களோ எது வம்பு நிறுத்துடுவோம் டார்ச்சரை )

வெள்ளி, 17 நவம்பர், 2017

நான்தான் கொசுடா கொசு

நான்தான் கொசுடா கொசு ஹா ஹா என்னை பார்த்தியா நான் எங்கே இருக்கேனு 


இப்ப இருப்பதிலேயே மனிதனை சித்திரவதை செய்ய அனுப்பட்ட மிகச்சிறிய ராட்ஷசன் ஏழை பணக்காரன் நல்லவன், கெட்டவன், கொள்ளைக்காரன் கொலைகாரன் என்று பாகுபாடு இல்லாமல் எல்லாரையும் ஒன்றாகவே   பார்ப்பேன் 

எல்லா  இடத்துக்கும் போவேன் என்னை உன்னால் தடுக்கமுடியாது மனிதா நீ வாழும் போதே  அந்நியன் படத்தில் வருமே கருட  புராணத்தில் கூறிய எல்லவிதமான கொடுமையும் நான் உனக்கு  இங்கேயே காட்டுறேண்டா நீ பய பட  வேண்டியது எனக்கு எனக்கு   மட்டும் தான் என்னை  பார்த்து பயந்து எல்லா பிகாஷ்னும் நீ செய்துக்கணும் உன்னை ஒளிச்சிக்கணும்......


நீ எங்க? எப்படி? இருக்கேனுயெல்லாம்  பார்க்கமாட்டேன் நீ கொஞ்சிகிட்டு இருந்தாலும் சரி புலம்பிகிட்டு இருந்தாலும் சரி எனக்கு அதை பற்றியெல்லாம் கவலையில்லை ....பிரச்சனையில்லை..... ஐயோ! பாவம் என்றெல்லாம் பார்க்கமாட்டேன் அடங்காபிடாரியாய் ஆடவே வந்துள்ளேன்.


ராட்ஷன் என் வாழ்வு நிலை கம்மிதான் ஆனால் போவதற்க்கு முன் உன்னை டம்மியாகம போகமாட்டேன் என்ற  சாபத்துடனே பிறப்பெடுக்கிறேன் நீயென்னடா மமமதையோடு  அலைவது உன் மயிர்கால்களையும் தாண்டி உன் உயிருக்கும் உலைவைத்திடுவேன். 


என்னை வைத்து எத்தனை கிண்டலாய் மீமிஸ்போட்டுக்கோ ஜோக் போட்டுக்கோ  எல்லாம் போட்டு கொண்டாலும் உன் மாமிசத்தையே உருக்க வைக்கும் திறமை  எனக்கு இருக்குடா சொடுக்கு போடும் நேரத்தில் செய்திடுவேன் ஹா ஹா என்று கொக்கரிக்கும்.
  

வேப்பிலை போட்டாலும்சரி  சுத்தினாலும் சரி சுட்டாலும் சரி  அப்பிடியா என்று  பதுங்கிக்கொள்கிறது எவ்வளவு  நேரம் இது உனக்கு துணையிருக்கும் நீ வெளியில வந்துதான் ஆக்கணும் மச்சி என்னாலதாண்டா உன் நேரத்தை ஒதுக்கி நீயிதையெல்லாம்  செய்துகிட்டு இருக்கே என்கிட்ட இருந்து தப்பிக்க நீ கசப்பை முகர்வ உனக்கு ஆகாததையெல்லாம் செய்து பார்ப்ப ......நக்கலாய்  கொக்கரிக்கிறதே 



இப்படியாக  பயமுறுத்தி அலையும் சிறிய ராட்ஷனுக்கு பயந்து உலகின்  வல்லரசு அமெரிக்க கூட பயந்துடுச்சினா பார்த்துக்கோங்க  எதை எதையோ கண்டுபிடிக்கும் நேரத்தில் இதனுடைய டிஸ்ரேபென்ஸ்  தாங்கலையாம் அதுக்குன்னு உடனே நீயென்ன ஆடுவது  உனக்கு  ஒரு எதிரியை  உன்னை போல் ஒருவனை உருவாகிறேன் பாருன்னு சாவல் போட்டு கொண்டதுதாம் 
களத்தில் இறங்கியதாம் அது என்னனா .....


அமெரிக்க விஞ்ஞானிகள் மரபணு மாற்றத்தின் மூலம் மூன்று கண்களுடன்(நெற்றி கண் திறப்பினும் குற்றமே என்று இதுவும் அதுகூட ஒத்துழைக்க போயிட போகுதய்யா  பார்த்து கோங்க)  இறக்கை இல்லாத கொசுவை உருவாக்கியுள்ளனர்.



அமெரிக்காவின் கலிஃபோர்னிநா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பறக்க முடியாத, மூன்று கண்கள் கொண்ட கொசுவை உருவாக்கியுள்ளனர். இந்த கொசுக்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளன.
        eferve

CRISPR/Cas9 என்ற மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த கொசுவின் மரபணுக்களில் மாற்றம் செய்துள்ளனர். இவ்வாறு கொசுக்கள் உருவாக்கப்படுவது ஏன் என்று கேட்டால் அதற்கு சற்றும் யூகிக்க முடியாத பதில் அவர்களிடம் உள்ளது.
                                         

இந்த மாதிரி கொசுக்களை உற்பத்தி செய்தால் அவற்றின் மூலம் பெருகும் கொசுக்களும் இதேபோல குறைபாடு உள்ளவையாக இருக்கும் என்றும் உயிரைப் பறிக்கும் பயங்கர நோய்களைப் பரப்பும் கொசுக்களின் பெருக்கத்தை இது கட்டுப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.(ஹா ஹா ஹா  தலையை சுற்றி மூக்கை  தொட்டிடுவோமில்ல )



என்னடா இவளுக்கு  இவ்வளவு சந்தோஷமா இதை பார்த்து  என்னை  கோபத்தில் இப்போதும் வந்து பதம் பார்த்துவிட்டு போகிறது என் ரத்தத்தில் உப்பு இருக்கா ,கரி இருக்கா, சுகர் இருக்கா என்று ???
                                                             என் நாட்டுக்கு 
                                                             உன் நாட்டுக்கு 
                                                             எதிரி நாட்டுக்கு 
                                                             எல்லா நாட்டுக்கும் 
                                                             இருக்கும் 
                                                             ஒரே போராளி 

செவ்வாய், 14 நவம்பர், 2017

கேட்டிங்களா கேட்டிங்களா கதையை


                        மகாத்மா காந்தினாலே  அவர் கண்ணாடியை  தாம் முதலில் நினைவு கொள்வோம் ஏதாவது புதிர் காம்படீஷன் வந்தால் கூட  அந்த கண்ணாடியை வைத்தே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு மகத்துவம் பெற்ற அவர் கண்ணாடி அடையாள சின்னம்- இது தூய்மை இந்தியாவின் அடையாள சின்னமாக உள்ளது.



                          சரித்திரம் படைத்த இந்த கண்ணாடியை மாற்ற சொல்லி இந்தியாவிற்கு பயணம்  வந்த ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி லியோ ஹெல்லர்   சொல்லிட்டார் எப்படின்னா  "தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமான மகாத்மா காந்தியின் கண்ணாடியைப் பார்த்தேன். இது மோசமான நிலைமை. விரைவில் காந்தியின் கண்ணாடியில் மனித நேயத்தின் லென்ஸை மாட்ட வேண்டும்" 

                           தூய்மை படுத்த ஐடியா கொடுப்பாங்கனு பார்த்தா இவங்க கண்ணாடியை மாற்று வேஷ்டியை மாற்று என்று டிரெஸ் சென்ஸ்க்கு  சொல்விட்டு போயிருக்காரு ... 



                          இது பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது  நாமதான் சர்ச்சயை கொண்டாடுவதில் வல்லவர்கள்  ஆச்சே 



                          அரசு தரப்பில் இருந்து "மகாத்மா காந்தி மனித உரிமைகளுக்கு(இதபாருங்க ஜோக்கு மனித உரிமையாம் இதுதான் புரியமாட்டேங்குது இதெல்லாம் நல்ல சொல்றாங்க ஆனா பின்பற்றுகிறார்களா  இதைமட்டும் கேட்க கூடாது )  முன்னுரிமை அளித்தவர் என்பது உலகத்தில் அனைவருக்கும் தெரியும். சுகாதாரதைப் பேண தனி கவனம் செலுத்தினார். தூய்மை இந்தியா திட்டத்திற்கு அவரது கண்ணாடி மிகவும் பொருத்தமானது" என்று பதிலை கொடுத்து இருக்கிறது. இதுமாதிரி ஒண்ணுமில்லாத விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லனும்னா தெளிவா உடனே சொல்லுவோமில்ல  


ஞாயிறு, 12 நவம்பர், 2017

புதுமை என்பது இதுதான்

புதுமை என்பது இதுதானா .....




                    இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலை கழகங்களில் ஒன்று பூனே பல்கலை கழகம்  இங்கு நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். திடிரென்று இந்த  பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்க, பல்கலைக்கழக நிர்வாகம் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளதாம் .                     

                 

                     அது என்னவென்றால்  இங்கு படிப்பை மட்டும் அடிப்படையாக கொண்டு தங்கப்பதக்கம் இனி வழங்கப்படமாட்டாது 


பின்னர் எப்படி  தங்க பதக்கம் வாங்குவது ?

                    


                       தங்க பதக்கத்தை  விரும்பும் மாணவர்கள், படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாதாம்...... அவர்கள்  அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டுமமாம் ...... அதுமட்டுமில்லை மிக முக்கியமான புதுமை , மாணவர்கள் மது அருந்தாமல் டீடோட்டலர்களாக இருக்க வேண்டும் என்றும் புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாம்  இப்படித்தாங்க மாற்றத்தை கொண்டுவரனும் .ஆனா அப்படி மதுவே அருந்தவர்கள் எப்படி கண்டுபிடிப்பாங்க மருத்தவம் காண்பிக்குமோ? 


                  மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தங்கப்பதக்கம் வழங்கப்படாது என்றும் மாணவர்களின் பழக்க வழக்கங்களை பொறுத்தே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதால் பழக்கவழக்கம் என்பது நெறிமுறை படுத்தபடுமா? இப்பொழுதே அங்கே போயி இதை பற்றி  ஆராயவேண்டுமென்று வேகம் வருகிறதே....... எப்படி இதை கண்காணிக்க போகிறர்கள் என்று ...


                    இதுமட்டுமல்ல பதக்கம் வாங்கும் மாணவர்கள் ஷெலர் மாமா.! என்று பட்டபெயரும் கொடுக்கப்படுமாம் இந்த விதிகளுக்கு உட்படடவர்கள் இங்கு சேர்வதற்க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 15ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறதாம்   ஏன் இப்படி திடீரென்ற முடிவு குற்றங்களை குறைக்கவா ?மாமிசம் என்பது மதுவுடன் சம்பந்த படுகிறது என்ற நோக்கத்திற்காகவே இப்படி மாமிசத்தையும் சேர்த்து தடை செய்திருக்கிறார்களா??

                     

                     இதை பெற்றோர்களே வரவேற்பார்களா என்பது சந்தேகமாகவே  இருக்கிறது ஏனென்றால் மாமிசம் மட்டுமே சாப்பிட்டு வாழும்  சமூகதினரிடமிருந்து இதற்கு  வரேவேற்பு நிச்சியம் இருக்காது.   

                    

புனே பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியிருக்கிறதாம் . மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல் என்று பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


உணவு என்பது பிளவை கொடுக்குமா? 
    

நீங்களும் சொல்லுங்களேன்......... 


வியாழன், 9 நவம்பர், 2017

தவறு செய்துவிட்டேனா?

தோழமைகளே உங்களிடம் இப்பொழுது திணறலாய் தோன்றும் விஷயத்தை பகிர போகிறேன் உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து கொள்ளுங்கள் ....


என் மகன் கல்லூரி இப்பொது தான் முடித்தார்.... அவரின் சிறு வயதில் இருந்து அவருடன் பலவறறையும்  டிஸ்கஸ் செய்வேன்.  நானே அவனின் முதல் தோழியாக இருக்கவேண்டுமென்ற பேராசையும் ....அவனின் குறை நிறைகளை அவனின் கஷ்ட்ட துக்கங்களை என்னிடம் அவன் பகிர வேண்டும் கலந்தாய்வு  செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்...... சினிமா, சமூகம்,  அரசியல் எல்லாவற்றையும் பற்றி குறித்து  டெயிலி செய்திகளில் வருவதை  விவரிப்பேன், பேசுவேன். 


அவரின் 14, 15 வயது வரை அவர் கருத்துக்களை கேட்பார் நானும் அவரின் தந்தையும் அவரின் கேள்விகளுக்கு முடிந்தவரை   பதில் அளிப்போம். எப்பொழுது அவர் ஒட்டு போடும் வயது வந்ததோ அப்பொழுது முதல் எல்லாவிஷயங்களும் விவாதமாய்  மாறிவிட்டது. அவரும் கருத்து சொல்ல கிளம்பி இதில் எதை பேசினாலும் நாட்டை  பற்றியே போயி முடிவுற்றது. எல்லா விஷயங்களும் அவரும் அதிகம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார் தனிச்சையாக சமீபமாக நடக்கும் விஷயங்கள் சூடு பரப்பும்  விவாதங்களாக மாறுகிறது.

 

இன்றைய  இளைய தலைமுறை பற்றி பேச போனால் பயங்கர விவாதம் பெரியவர்கள் நாம் தான் சரி வர வளர்க்க தெரியவில்லை என்று குற்ற சாட்டை முன் வைப்பார்  இன்னறய அரசியலை பற்றி பேசினால் புலம்பினால் அவருக்கு பயங்கர கோபம் வருகிறது  "  நாட்டில் நடக்கும் குற்றங்களை தட்டி கேட்க  நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்கிறீர்களா?  ஒற்றுத்தான் கொள்கறிர்களா? இல்லை.......  நல்லா படி  நல்லா சம்பாதி...... எந்த பிரச்னைக்கும் போகாதே நியுண்டு உன் வேலையுண்டு என்று இரு...... இப்படித்தானே சொல்லி சொல்லி வளர்க்கறீங்க" 


"இது என்ன சினிமாவா  தனியொருவன் கேட்க" என்று கேட்டால்



 "கும்பலாய் கேட்டாலும் போலீசை காட்டி பயம்புறுத்துகிறீகள்" போன தலைமுறையெலாம் இரண்டாங்கெட்டானாய் வாழ்ந்துவரும் தலைமுறைகள் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று சாடுகிறார் .
"யார் சொல்லி தருகிறீர்கள்...... இது தப்பு என்ற சொல்லி தந்தவர்கள்......  அதை தட்டி கேள் என்று சொல்லி தரவில்லை..... ஒதுங்கி போ...  படி படி..... நீ பெரியஆள்  ஆகு பணம்.... பணம் தேடி ஓடு..... காசுகொடுத்து எல்லா வேலைகளையும் முடித்து கொள்ளலாம் இது தான் நிலைமை..... என்று தவளை போல் கத்தி கொண்டு இருக்கும் கூட்ட்மாய் இருக்கிங்க"


  "நாடு இப்படித்தான் இருக்கும் அப்போ..... பக்கத்தில் தப்பு செய்யும் ஒரு பையனை கூட கேட்க முடியாமல் தான்  நிறைய பேர் வெறுப்புடன்....... ஏன்னா  வீட்டில் உனகெதுக்கு  பிரச்னை நாளைக்கு போலிசு கேஸுன்னு வந்தா படிப்பு கெட்டுவிடும் சொந்தக்காரங்களாம் ஒருமாதிரி பார்ப்பாங்க இப்படி பயமுறுத்தியே வாழ சொல்லி கொடுக்கறீங்க...... ஏன்? நீங்க விடுவிங்களா   உங்க பிள்ளையை?" கோபமாய் கேள்வி கேட்க   திணறித்தான் போகிறேன். 


என் அம்மாவோ  அவனது பாட்டி என்னை எப்போதும் சமீபமாய் அதிகம் திட்டுகிறார் நீதான் காரணம் எல்லாத்துக்கும் எல்லவரையும் அந்த பையனிடம் பேசி குழப்பி வச்சு இருக்க....  அவன் தோழர்களுக்கு ஏதாவது பிரச்னைனா முதல இவனை தான் கூப்பிட்டு போறானுங்க இவன்தான் பேசுவானு...... ஜல்லிக்கட்டு போராடம்  நடந்த அப்ப எல்லா நாளும்  பழியா கிடந்தது உனக்கு  கொஞ்சம் கூட பயமே இல்லை என்னா  புள்ளையை  வளர்க்கற' உனக்குத்தான்  இந்த மாதிரி இருந்தேனே நாளைக்கு கஷ்ட்ம் வாழக்கையில என்று சொன்னா...   கல்யாணமெல்லாம் பன்னிக்கமாட்டேன் இந்தமாதிரி தட்டி கேட்க  போயிட்டேனா' என்று பேசுது எல்லாம் உன்னால தான் என்று கொஞ்சி  தள்ளறாங்க   2015 வெள்ளத்தில் உதவ போனபோதும் இப்படித்தான் வீட்டில் உள்ளோரிடம் திட்டு அவனுக்கு ஏதாவது ஆச்சி பாரு என்று பயமுறுத்தல்

 

அவனுடைய தோழர்கள்  திட்டுகிறார்கள்  என்ன ஆன்டி ஒரு சினிமா பார்த்த கூட இவன் அதுலயும் இப்படி இருக்கனும் இது சரியில்ல இது நொல்லைனு நுணுக்கமா ஆராயச்சி  பண்ணிட்டே இருக்கான்

 இதில்சமீபமாய்  2 மாதம் முன்பு ஒரு தோழனின் புல்லட் பைக் திருடு  போய்விட்ட்டது  விடியற்காலையில் போன் இவன் கிளம்பிவிட்டான் அப்படியே போட்டிருக்கும் பனியன் ஷார்ட்ஸோடு ...... போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்க இழுத்து போயிட்டான் அங்கே இவனை யாரு நீ என்று கேட்க விஷயத்தை சொல்லி இருக்கான் ஷார்ட்ஸோடு எல்லாம் போல்ஸ்  ஸ்டேஷன் வரகூடாது என்று சொல்ல இவனுக்கு கோபம் வண்டி காண்வில்லையின்னு பதறி ஓடிவந்தா இப்படித்தான் வரமுடியும் என்று சொல்லி இருக்கிறான் அவங்க அஸ்யுஷ்வல்  CSR  போடவே   இப்பவா அப்பவா என்று இழுத்து அடிச்சு இருக்காங்க அதையும் முடிச்சா மற்ற பார்மாலிட்டிஸ் முடித்து FIR போட இழு இழு என்று இழுக்க எல்லாம் காசுக்காகத்தான். இவன் கொடுக்கமுடியாது என்று முரண்டு.... 2 மாதம் ஆகிவிட்டது அவன் தோழன் புலம்புகிறான் இன்னும் அந்த வண்டிக்கு டியூவே (கடன்)  முடியலை இன்ஷுரன்ஸ் கிளைம் பண்ணாலும்  எனக்குதான் நஷ்டம் FIR போட்ட பிறகுதான் எதுவும் முடியும் சொல்றாங்க காச கொடுத்து முடிக்கலாம்டான்னு சொல்றேன் இவன் விடமாட்டேங்கிறான் ஆண்டி....  என்று இப்பொழுதும் வீட்டில் திட்டு......


 
என்ன செய்யட்டும்?

எப்படி வளர்த்திருக்கணும்? 

நான் தவறு செய்துவிட்டேனா?


அவனின் கேள்விகள் தவறாய் இல்லையென்போது முன்னுக்கு முரணாய் நான் பேச தயக்கமாய் இருக்கிறது .


செவ்வாய், 7 நவம்பர், 2017

விலைவாசி

மழையில் நடக்கும் நிகழ்வுகளில் மீண்டும் அதை பற்றி


ஏங்க .....


குமார் சீரியஸா டீவியில் நியூஸ்   பார்த்து கொண்டிருக்கிறான் சாப்பிட்டு கொண்டே…….  மழையின் தாக்கம் சென்னையில் என்ன செய்து இருக்கிறது என்ற செய்திகள் பீதியை கிளப்பி கொண்டு இருக்கிறது.


ஏங்க ...திரும்பவும்  ராதியின் குரல் பெட்ருமில்  இருந்து வருகிறது


இப்பொழுது தான் அரைமணி நேரமுன்னாடிதான்   வேலையில் இருந்து கொட்டும் மழையில் தன் வீடு இருக்கும் சாலை மழை நீரில் மூழ்கி இருக்க நீந்தி வந்து சேர்ந்து அழுக்காய் நாற்றமடித்த  தண்ணீரின் சுவடு போக குளித்து வந்து உடகார்க்கிறான் உடம்பு சில்லிட்டு இருக்கிறது .


குமார் என்னடா இது என்பது போல் மணியை பார்க்கிறான் மணி 9.30 வெளியே மழை சத்தம் நாளைக்கு நிலவரம் என்ன ஆகும் என்ற  கவலையெல்லாம் பின்னோக்கி ஓடிவிடுகிறது. மெதுவாய் சில்லிப்பு தாங்காமல் இறுக்கமாய் மடித்து வைத்த  கால்கள பிரித்து டிவியை அணைத்துவிட்டு ஒரு பரபரப்புடன் படுக்கையறை செல்கிறான்.


அங்கே ராதி தன் இரண்டாவது கைகுழந்தையை தொட்டிலில் ஆட்டி   கொண்டு இருக்கிறாள் மூன்றுவயது வருண் உறங்கி கொண்டு குமாரின் வரவு தெரியாமல் மீண்டும் “ஏங்க”…..என்று கூப்பிடுகிறாள். குழந்தை விழித்துவிடுமோ என்ற குரலை உயர்த்தாமல் அவள் அருகில் நெருக்கத்தில் குமார் திடுக்கிட்டு திரும்புகிறாள் என்னவென்று குமாரின் முகத்தை பார்த்து முறைக்கிறாள்.


நியூஸ்ல என்ன சொல்லறாங்க மழை நின்னுடுமா நாளைக்கு என்று கடு கடுவென முகத்துடன்


இல்லயாம் நாளைக்கும் மழை இருக்காம்


ஐயோ இப்பவே ரோடு மூழ்கியாச்சு தண்ணி ஏறிடுச்சினா  இன்னமும் ....கொஞ்சம் போயி இரண்டு பெக்கெட் பால் வாங்கிட்டு வந்துடுறிங்களா அப்படியே பிரட் முடடை சிலவற்றை பட்டியலியிடுகிறாள்.


நேரத்தை பாரு ஏண்டி அப்பவே போன்ல சொல்லி தொலைக்கவேண்டியது தானே சே இதுக்குதான் ஏங்க ஏங்க னு ஏங்கிட்டு இருந்தியா….. இந்த மழையில  நீந்திக்கிட்டு திரும்பவும் போ சொல்லற


பிளீஸ் பிளீஸ் கொஞ்சம் வாங்கிட்டு வாங்க வருணுக்கு உடம்பு சுடர மாதிரி இருக்கு சாப்பிடாமலே படுத்துட்டான் சின்னத்துக்குத்தான் பால் இருக்கு நாளைக்கு தேவை படும் பால்காரன் நீந்திக்கிட்டு எப்ப வருவானோ ?


அவனை  இப்பொது கவலை  தொற்றி கொள்கிறது
மருந்தெல்லாம் இருக்கா கையில சட்டையை எடுத்து மாட்டி கொண்டே  

ம்அதெல்லாம்  இருக்கு  இப்போதைக்கு லேசா சுடர மாதிரிதான் இருக்கு உங்களுக்கு நாளை லீவ் விடுவாங்களா?


ம்கூம் அவன் ஏன்டி லீவ் விட்டுறான் அங்கேயா மழை கார்ப்ரெட்லலாம் நாம கஷ்ட்டத்துக்குகெல்லாம் லீவ் விடமாட்டான் படிச்சவ மாதிரி பேசு……

.
பெருமூச்சுவிடுகிறாள் சே இப்படி மழை விடாம பெய்யுதே நாளைக்கு சப்போஸ் டாக்டர்கிட்ட போகணும்னா என்ன பண்ணுவது என்ற யோசனை அவள் மனதில்
சே நல்ல வந்து மாட்டிகிட்டோம் என்று மறந்து போயி சத்தமாய் சொல்லிவிடுகிறாள் .

இப்ப சொல்லு  உங்க அப்பனை சொல்லணும் எங்க வந்து வாங்கியிருக்கார் பார் சின்ன மழைக்கே தண்ணி வந்து நிக்கிற இடத்தில ஒரு எமெர்ஜென்சினாகூட ஒரு டாக்டர் கிடையாது இங்க ஒரு போக்குவரத்து வசதி வேணுமின்னா கிலோமீட்டர் நடந்து போகணும் கேப்காரன் கூட உடனடியா வரமுடியாத இடத்தில ……


சும்மா எங்க அப்பாவை  சொல்லுங்க உங்க அம்மாதான் என் புள்ளைக்கு பிளாட்டு வாங்கணும் பிளாட்டு வாங்கணும் சும்மா அவரை போட்டு நச்சரிச்சாங்க.... சரி மாப்பிளைக்கு வேலைக்கு போக ஈஸியா இருக்கும் என்று இங்கே வாங்கினார் டெவலப்பு  ஆகிற ஏரியா தானேனு இப்படி ஆகும் யாரு கண்டா கவர்மெண்டு எதுவும் செய்யாம இருக்கே

 
இது ஏரியா இல்லடி  ஏரியில வீடு  கஞ்சன் காசுக்கு பார்த்து இங்கே வாங்கி தள்ளிட்டார். இதோட பின்புலம் எதையும் கேட்காம வாங்கினது நம்ம தப்புதானே கவர்மெண்டு என்னாடி செய்யும் எவனோ எதையாவது ஆசை காட்டி வித்தா அதுக்கு  விலை போனது நாம….. மாமாங்கம….. மழை,  தாக்குதல் அளவுக்கு இல்லை இப்பமாதிரி……. என்ன பிரச்சனை வந்திட போகுதுனு நினைச்சிருப்பான்…… இதை இப்ப விக்கணும்னா கூட  ப்ரோகர்க்காரன்தான் சாப்பிடுவான்……..


சரி நான் போய்ட்டு வரேன் கதவை சாத்திக்கோ என்று ரெயின்  கோட்டையை மாட்டிக்கொண்டு வெளியி வருகிறான் கீழே கார் பார்கிங்கில் எதிர் பிளாட் கோபி சிகரெட்டுடன் 


என்னயா எங்க? …


ம் பால் வேணுமாம் ….


சரி  வா நானும் வரேன் கொஞ்சம் இரு போயி ரெயின் கோட்டு எடுத்துட்டு வரேன்.


அவர்கள் பிளாட்டின் உள்ளேயே தண்ணீர்  கணுக்கால் முழுகும் அளவுக்கு  கீழ் பகுதி முழுவதும்
கோபி வந்தவுடன் இருவரும் கவனமாய் தெருவில் நடக்கிறார்கள் டார்ச்  லைட்டை  பிடித்த படி


பச் இந்த ஸ்ட்ரீட் லைட்டை வேற இரண்டுநாளாய் போடல இன்னும் கரண்டை எப்ப ஆப் பண்ண போறாங்கலோ  நாளைக்கு விடாம  பெய்தால் கட் பண்ணிடுவான்


இருக்கட்டும் ப்ரோ ஸ்ட்ரீட் லைட்டால ரிஸ்க்கு வருதாம் நான் தான் தெரியாம இங்க வந்து மாட்டிகிட்டேன்  நீங்க ஏன் ப்ரோ விசாரிகளையா?


என்னமோ கையில காசு அவ்வ்ளவுதான் தேர்ச்சி அப்ப நாமளும் சொந்தமா வீட்டு வெச்சிருக்கோம்னு காண்பிச்சிக்கணும்னு ஒரு ஆசை நான் வந்த அப்ப இப்படி இல்ல கிரி தண்ணி ஓடிடும் கொஞ்சத்துக்கு கொஞ்சம் இப்பதான் ஏன் புரியலை.... இன்னொரு ஏரி இருந்தது  இரண்டு ஸ்டாப்பிங் தள்ளி பார்த்திருப்பியே அங்கே ஓடற மாதிரி இருந்தது இப்ப என்னடானா அதையும் முடி அங்கேயும் பிளாட் போட்டு கட்டிட்டான் எல்லா வழியையும் அடஞ்சிடுச்சி மெயின் ரோடு வழியா தான் போயாகணும் எங்க இங்கே பள்ளமா இருக்கறதால டக்குனு போக வழியில்ல மழை நீர் சேகரிப்பு டிரைனேஜ்ல போயி சேர மாட்டேங்குது லெவல் சரியா வைக்காம விட்டு இருக்காங்க  போல எவ்வளவோ வாட்டி  எழுதி வச்சுட்டு வந்துருக்கேன் எங்க வரானுங்க வந்தாலும் சரியா வாட்டம் கொடுக்க மாட்டேங்கிறானுக……….
விடிவுகாலம் இருக்கா தெரியல இந்த ஏரியாக்கு….. இதேமாதிரினா என்ன பண்ணுவதுன்னு புரியலை…… வீடு வாங்கினா லோனே இன்னுமும் முடியல…… 

  
எப்படியோ ரோடு முனைக்கு வந்துவிடுகிறார்கள் முனையில் இரண்டுமூணு சிறிய கடைகள் வரிசையாய்  ஒரு சின்ன மளிகை கடை அதனுள்ளேயே சின்ன பேக்கரியும் , பக்கத்தில்  பால் கடை ஒரு ஜெராக்ஸ் ஒரு மெக்கானிக் ஷெட்டு கூட இருக்கிறது

 
ஸ்ப்பா நல்ல காலம் கடைய முடாம வைத்திருக்கானே


இன்னும் மணி 11 ஆகலேயே


வாங்க சார் என்ன மழை போதுமா...... படிக்கட்டிலேயே செருப்பை விட்டுட்டு  ஏறுங்க சார்  கசகசன்னு ஆயிடுது இங்கே


கிண்டலயா உங்களுக்கு தண்ணி நிக்கலை இங்கேன்னு

 
என்ன கிண்டலு போனதடவை புயலு வந்து முன்னாடி எல்லாத்தயும் துகிடுச்சு  அதுக்கு முந்திதான் அபாயத்தில மாட்டி தப்பிச்சது வரலாறு இந்த தடவை இப்படி இருக்கு


சரி பிரெட்டு இருக்கா?..... உள்ளே பார்த்து விட்டு சொல்கிறார் இரண்டுதான்  இருக்கு 

சரி கொடுங்க அரை கிலோ ரவை, ஊறுகாய் ருசியா மாங்காய் தானே…. குட்டே பிஸ்கெட் 2 தாங்க ,சக்கரையும் ஒரு கிலோ கொடுங்க.................


கோபி  எனக்கும் ஒரு கிலோ சக்கரை எடு 


முதலில் கிரி 500/- எடுத்து கொடுக்கிறான் மீதி சில்லறை கொடுக்கிறார் 70/- ரூபாய்  கிரி வெய்ட் பண்ணுறான் மேல் கொண்டு தருவார் என்று.....


கடைக்காரர் கோபியிடம் ஒருகிலோ சக்கரையை பேக் பண்ணி கொடுத்துட்டு வேற சார் என்கிறார் நுறு ரூபாய் கொடுத்து விட்டு  கிங் இருக்கா


இருக்கு சார் லூசிலதான் ஒன்னு  25/-

   
யோவ் என்னயா…….


என்ன சார் பண்றது சரக்கு வர வரைக்கும் ஓட்டணுமே 


யோவ் நான் விலையே பத்தி கேக்கறேன்


அதுவும் தான் சார் மழை விட்டவரைக்கும் கொஞ்சம் ஏத்தம் ஏரகமாத்தான் இருக்கும்


கிரி பரிதாபமாய் கோபியை பார்க்கிறான் 

அநியாயம் பண்ணுங்க  இந்த ஜிஎஸ்டி போட்டதெல்லாம் பத்தலயா இப்ப இதுவேறயா

 
சரி 2 கொடு மீதி எவ்வ்ளவு தரணும்


நுறு சார்

 
முதலேயே நுறு கொடுத்துட்டேனே சக்கரை 100 சார் 50 கிங்


என்னது! திகைத்து போகிறான்.


அப்போ எனக்கும் மீதி அவ்வளவுதானா ?


ஆமாம் சார் பிரெட் ஒன்னு 50 , ஊறுகாய் 100 ரவை 5௦, 2-பிஸ்கெட் 80 சக்கரை 100


என்னது இது இவ்வளவு ஏத்திடிங்க


ஆமாம் சார் மழை விடற வரைக்கும் தான் அப்புறம் கொறஞ்சுடும் சார் நானும்  எக்ஸ்ராவா டெம்போ காரனுக்கு மழையில துட்டை கொடுத்துதான் வாங்கிறேன்


யோவ் என்னயா என்ன கதை விடற அப்படியே நீ சூப்பர் மார்கெட் ஆரம்பிக்க நான் முதல் போடணுமா என்று கத்துகிறான் கோபி


சார் பொருள் வேண்டாம் நா கொடுத்துடுங்க சார் சத்தம் போடாதீங்க கடையில 


நீ இந்த ஏரியாக்குத்தான் கடைய வச்சு இருக்க நியாபகம் வச்சுக்கோ


புரியுது சார் நான் என்ன பண்ணட்டும்  .........


ப்ரோ வாங்க போலாம் மழை வேற பெரிசாகுது வாங்க அப்புறம் பார்க்கலாம்


பக்கத்தில் பால் கடையிலும் இதே நிலைமை
பால் கடையில் சில காய்ங்க வெங்காயம் தக்காளி விக்கறாங்க இங்க இருக்கறவங்க வந்து வாங்குவதற்கு எப்போதுமே மார்கெட்டையை விட அதிகமாகத்தான் இருக்கும் இப்போ இன்னும் அதிகமாய் சொல்கிறான் வெங்காயம் எல்லா இடத்திலும் 50 னா இவன்கிட்ட 75 தக்காளியும் அப்படியே பச்சைமிளகாய் கூட காய்விலைக்கு சொல்கிறான். என்ன பண்ணவது இப்ப இருக்கற நிலைமையில் தேவைக்கு கொஞ்சம் வாங்க வேண்டியதாய் இருக்கு 

கிரி  கையில் பணமில்லாமல்  வாங்கினதுக்கு கார்ட் தேய்கிறான்

இனிமே நின்னா  அவ்வளவுதான் வீட்டையே எழுதி கொடுக்க சொல்வானுங்க வா கிரி


என்ன அநியாயம்  பாருங்க ப்ரோ  சம்பாதிப்பத்துக்கு நேரம் பார்த்தாங்க  ஐந்து நாள் மழையில குபேரனாயிடணும்னு பார்கிறாங்க….. என்று புலம்புகிறான்


இதுதான் இன்னைக்கி மனுஷன் புத்தி எதோ பொங்கலுக்கு தீபாவளிக்கி ஜாஸ்தியா வித்தானா நாமும் சந்தோஷத்தில் தானேனு சந்தோஷத்தில் தெரியவும் தெரியாது கொடுக்கலாம் ஆனா இப்படி துக்கத்தில் சம்பாதிக்கணும், வயித்தில் அடிக்கணும்னு நினைக்கிறான் பாரு இவனெல்லாம் உருப்படறான் என்ன கடவுள் போ அடுத்த வருஷம் அவன் சூப்பர் மார்கெட் வச்சிடுவான் நான் சொன்ன மாதிரி …….


இவனுங்களை வாழவைக்கணும்னே கடவுள் மழையை கொடுக்கிறாரோ 

இன்னும் நிவாரணம் கொடுக்கணும் கோடி கோடியா கேட்டு வாங்கி பிரியாணி பொட்டலத்தை கொடுத்து ஒப்பேத்திடுவாங்க அவங்க தேத்திக்குவாங்க……நீயும் நானும் கத்தி கொண்டாவது இதை வாங்க முடியும் நிலையில் அந்த வெல்டிங்கை கம்பெனில வேலை செய்யும் சீனியெல்லாம் எப்படி கஷ்டப்படுவான் இந்த விலைவாசியை தாங்குவானா…….


இதுல இவன் மனுஷன் இல்லை இவனில்லைனு யாரை குறிப்பிட்டு சொல்வது என்ன? அவன் பெரிசா செய்யறான்…. இவன் சிறுசா செய்யறான் சொல்லிக்கலாம்


என்ன ப்ரோ? நானெல்லாம் வேலைகிடைச்சி சம்பளம் வாங்கினத்தில் இருந்து இப்பவரைக்கும் மாசம் பொறந்தா எப்போ சாப்பிட போனாலும் எங்க ஆபிஸ் எதிர்க்க இருக்கிற ஹோட்டலில் டொனேஷன் பாக்சில் நுறு இரநூறுன்னு போட்டுடுவேன். கோவிலுக்கு போகும் போதெல்லாம் கடவுளே நானா செய்யமுடியாடியும் நீ பார்த்து செய்யினு உண்டியலில் போட்டுட்டு  வருவேன் இப்ப கூட ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த அப்ப என்னால முடிஞ்சது டிபனுக்கு  எல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டேன்  உட்கார்ந்தா சம்பளம் எப்படி வரும்  எப்படி ஹெல்ப் பண்ணமுடியும் அதனால டைம் கிடைக்கும் போது போனேன்.


சரிதான் கிரி ஆனா ஆபத்தில் உதவற மனசு இல்லை நமக்கு நேற்றிக்கு ஒரு நாயி நாம பிளாட்டுகுள்ள படிக்கட்ல வந்து படுத்துக்க பார்த்தது மழையினால் நாம விட்டோமா இல்லையே துரத்திவிட்டுட்டோம் இது தொல்லைனு....... நாம தொல்லையில்லன்னு நினைக்கிற விஷயத்திற்கு மட்டும் உதவுவோம். சிலசமயம் கும்பலோடு கோவிந்தா போடும் மிராக்களும் நடக்கும் அதற்கு அப்புறம் எதோ நினைவு தப்பி  நினைவு திரும்பியது போல் பழையநிலைக்கு வந்துவிடுவோம் அப்படியானது தான் 2015 வந்த உதவிகள் . ….. அதை உதவி செய்துவிட்டோம்னு நம் தோளில் நாமே தட்டி கொள்வோம் புண்படுத்தறேன் நினைச்சிக்காத கிரி எனக்கென்னமோ இப்படித்தான் தோன்றுகிறது. நூற்றில் 75% தைரியமா நான் மனிதன் தான் சொல்லிக்க முடியாமத்தான் வாழறோம்.


சனி, 4 நவம்பர், 2017

பாரிஸ் கார்னர்

மழையின் தாக்கம் பாரிஸ் கார்னர்  பூக்கடையின் பிளாட்பாரங்களில் அவர்கள் மொழியில் கோபத்தில் என்ன நடக்குது பார்ப்போம் முகம் சுளிக்கவைக்கும் சில இடங்கள் தவிர்க்க முடியாதவை இங்கே மன்னிக்கவும் படிப்பவர்கள் என்னடா இது இப்படி எழுதபட்டு இருக்கு  நினைக்க வேண்டாம் அவர்களின் வழியில் வலியில் ஓரு கற்பனை

பாரிஸ் கார்னர்


காலை ஏழு மணி பாரிஸ் கார்னர் பூக்கடையை அருகில்.......

என்ன சோறு ஆக்கிட்டியா  ?

வாய்யா  எங்கிருதுனு வரே…..

இங்கித பக்கத்து ஸ்டேஷன்ல  இருந்தேன்……..

நேத்திக்கு வுடலைனு சொன்ன…….
 
செக் பண்ண வரும் போது போக்கிகாட்டிட்டு எப்படியோ  ராவியை ஒட்டிட்டேன்…….

அமைதியாக  தொடர்கிறாள் முத்து அவள் வேலையே, வைத்திருக்கும் ஸ்டவ்வை பம்பண்ணி கொண்டு இருக்கிறாள். அந்த பிளாட்பாரம் ஓரத்தில் உள்ள ஷீட்களால்  செய்த டெண்டுக்கள் லைனில் முதல் அந்த டெண்டுக்குள் மூன்று  பிள்ளைகள் ஒரு கிழவி ஒரு ஓரமாய் ஷீட்டை  விரித்து மேலே ஷீட்டை போர்த்தி உட்கார்ந்த நிலையில் உறங்கி கொண்டு ஒருவர்மேல் ஒருவர்  சாய்ந்து.

உள்ளே அங்கங்கே மழை நீர்  ஒழுகி கொண்டு இருக்கிறது .

என்னையா இந்த சனியன்  புடிச்ச மழை நிக்கே மாட்டேங்குது இந்த தபாவும்  மாட்டிக்குவோமா ?

என்ன புரியலமே..... பஸாண்டு கிட்டயெல்லாம் தண்ணி எரிகினே போகுதுதான் பாப்போம்.... இந்த  வளவு கொஞ்சம் மேடு  பஸாண்டு கிட்ட தண்ணி வலிக்கிட்டு போயிடுச்ச்னா இங்கே ஏறாது.....

எங்கே பஸான்டைகூட  சரி பண்ணமாட்டாங்க  களவாணி நாயிங்க …..

இப்பதிக்கு மைய வுடறமாதிரி தெரியலையா……வுடாம  கொட்டிக்கினு இருக்கு உன்னைய ஷீட்டு  வாங்கியா மேல போடுவோம் ரொம்ப ஒயிவுதுனு சொன்னேனில்ல......

க்கும் உங்க ஆத்தா கடவச்கினு இருக்கு பாரு நீயி கேட்டவுடனே குடுக்க அந்த பாயி அத்த பழசையே எழுநூறு, எட்டுநூறு  சொல்லுவான் போனதபா வாங்கின காசையே முழுசா குடுக்கல......

பாவம்யா புள்ளைங்க  கால நீட்டக்கூட முடியமா குறுகினு கிடக்குதுங்க....

பீடியை இழுத்து கொண்டே தலையில் பிளாஸ்டிக் கவரை போடு உட்க்கார்ந்து
வெறித்து பார்க்கிறான்.

முத்து ஸ்டேஷனாண்ட ஒருத்தன் சொன்னா அண்ணா நகர் ஸ்டேஷன் சும்மா காலியாதான் இருக்காங அங்கெ போய்டு நாலு நாளுனு…… என்ன சொல்லுற.....

யோவ் வியாவரத்த பார்கிளனா சோத்துக்கு என்ன பண்ணுவ அந்த பெரிய  கடையாண்ட போயி குந்திக்குவோம்  போனவாட்டி மாதிரி  அவனே எம் எல் எக்கு போனபோட்டு வழி பண்ணவுடுவான்..... நாம சொன்னாதான் கழிச்சட நாயிங்க  ஒன்னு கேக்காதுங்க....  அவனுக்கெல்லாம் கேட்ட, பிரச்சனைனா உடனே செய்யுங்க......

எங்கே அவனிங்க இந்த தடவ யாரையோ ஆளுங்களையெல்லாம் நிறுத்தவச்சு இருக்கானுங்க வரும்போது  பார்த்துட்டு வரேன்...

நீயி லோடு ஏத்த போவேனவா.....

எங்க மைய பெய்துன்னு சரக்கு நனைஞ்சிடுமுன்னு இப்பவேணா நிறுத்தி வச்சிருக்கானுங்க....

அதற்குள் அங்கு .........யக்கா………..

வா ரசியா என்னா எங்க கிளம்பிட்டா ரேஷனுக்கா இந்த தடவ போடுவான இல்ல நிறுத்தி  வச்சிட்டானுகளா
ம்க்கும் எதோ அத்வச்சி கொஞ்சம் பொழப்பு ஒடுக்கினு இருந்தது அத்தையும் பொறுக்கல இவனுங்களுக்கு என்ன இழவுக்கு அவன் வந்தான் தெரியல்ல இப்படி போட்டு சாவடிச்சிகினு இருக்கான் எதுனா ஒன்னு போயி ஒன்னு  கொண்டு வந்துகினு……….

பிளாட்பாரம்  சுவரில் பிரதமர் அழகாய் புன்னைகையுடன் கையாட்டுகிறார்.

அத்த சொல்லு......

நாங்க  எங்க ஆளுங்க கொஞ்சம் பேர மசூதிக்கு போறோம் உள்ளே இருக்க விட்டு இருக்காங்க மழவுடவரை......

அப்படியா போ...... உங்க ஆளுங்க இந்த வசதியாவது டக்குனு செய்றாங்க எங்குளுக்கு எந்த கோயில துறந்துவிடுவாங்க ஸ்கொல தான் திறக்கணும் இன்னும் எதுவும் சேதி வரல்ல…… சோறு……..

ஆங் மொத்தமா ஒரு வேளைக்கு  ஆக்கிக்க சொல்லி  இருக்காங்க இந்த மழ கொஞ்சகூட குறையாம பெஞ்சிக்கினே இருக்கே புள்ளைங்க பாவம் இப்படி சுருண்டு கிடக்கு நீயெனக்கா பண்ண போற……..

இந்தாளு என்னமோ அண்ணாநகரு ஸ்டேஷன்னு காலி அங்க போலாம் சொல்லுது

பார்த்துக்கா   போனவாட்டி மாதிரி ஆயிட்ட போது....

அதுதான் எனக்கும் பயமா இருக்கு ரசி..... போனவாட்டி மேல ஸ்டேசனு  காலி இப்பதான் கட்டினு இருக்கானுங்க தங்க போயிடலாம் வெள்ளம் போன பெறவு வரலாம் இஸ்துகினு போச்சி ஒரு புள்ளய தூக்கி கொடுத்தாச்சு லோல்பட்டு....

இப்பொது பிடியை கீழே போட்டுவிட்டு மணி ஏய்........  அங்க  வந்த போலீஸ்கார நாயிங்க இப்படி தொல்ல பண்ணுவாய்ங்கனு   நான் கண்டேனா தே......பசங்க  என்று கத்துகிறான்.

ம்ம்  இப்ப கத்து உனக்கென்னயா அந்த புள்ள எவ்வ்ளவு சீக்காயி போச்சு ஒருவேளை சோத்துக்குக்கூட வழியில்லாத இடத்தில உட்டுபுட்டு வந்து இருக்கேன் ஊருல அங்கெ வேற தண்ணியில மருந்து கலந்து போயிடுச்ச்சாம் சனங்க சீக்குஆயி செத்து போதுங்கலாம்

ஐயோ ஏன்கா?

அதென்ன இழவோ எதோ மீத்தேனு ஒன்னு எடுக்குறாங்களாம் அத்த எடுக்கும் போது நல்லதண்ணி கெட்டு  போகுதாம் மருந்து தண்ணி நல்லதண்ணியில கலக்குதாம் பேசிக்குதுங்க சனங்க  அதனால ஊருக்குள்ள தண்ணியே எடுக்க முடியாம சனங்க தவிக்குதாம் என்னமமோ போ  மனுசனுக்கு நல்லது செய்யமுடியாடியும்   இந்த கவருமெண்டு இப்படி போட்டு சாவடிக்கமலாச்சும் இருக்கலாம் பணம்தின்னி கழுங்க அவனுக்கென்ன அவன் நிம்மதியா சொகுசா வாழறான் திருட்டு கமனாட்டிங்க அவன் வீட்டு புள்ளங்களாம் வாந்தி பேதி வந்து சாவட்டும் இப்படி கஸ்டப்படறோம் ரவ யோசிச்சி பாக்கிறானா.......

 தே சும்மா கூவிக்கினு வேலைய பாரு யார்ட்டு  பக்கம் போயி கண்டுக்கினு வரேன் வேல எத்ன இருக்கானு....... பெரிசா படிச்சவனுங்களும் விஷயம் தெரிஞ்சுச்சு கத்தரவானுங்களே  பல்புவாங்கினு இருக்கானுக நாம பேசித்தான் தீர போதா ???

சரியாய் சொண்ணேனே ஆனா பார்த்து இத தடவையும்  எங்கனாச்சும் போயி மாட்டிக்கிடாதீங்க.......யக்கா எல்லோரும் கெட்டவாய்ங்களா இல்லக்கா ..... இங்கே வருவாரே ஏட்டு எவ்வ்ளவு உதவி பண்ணுவாரு நமக்கெல்லாம்.....

நான் எங்கயும் வரமாட்டேன் என்று எழுத்து கத்துகிறாள் 12 வயது ஜோதி

எல்லவரையும்  கேட்டுக்கொண்டு  இருந்திருக்க வேண்டும்
பெரியவர்கள் எல்லோரும்  அமைதியாய் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள்.

மழை தாக்கம் அதிகரிக்கிறது.

ஏன்டி  எரும  உன்ன இந்த அரசிய நல்ல இரண்டு கவரு போடு சுத்தி வாயினு சொல்லிட்டுதானே போனேன் எப்படி நனைச்சி போச்சி பாரு இத்த  வச்சி எப்படி நாளைக்குள்லாம் ஒடடறது

சரி ரசியா நீ கிளம்பு மழலை நின்னுகினு

யம்மா நிசமாலும் சொல்லிட்டேன் நான் எங்கேயும் வரமாட்டேன் யக்காக்கு ஆனா மாதிரி எனக்கும்  ஆவணுமா நான் முதலியார் அம்மாவீட்டு கார் ஷ்ட்டுல  இடம் கேட்டு உக்கார்ந்துக்குறேன் என்னவுட்டுட்டு இந்த ஆள நம்பி நான் எங்கேயும் வரமாட்டேன் …….உன்னையும்……..  என்று வீறிட்டு கத்துகிறாள்.

இத கேட்டு மணி தலை தலையாய் அடிச்சிக்கிறான்.

யோவ்……. என்று முத்துவின் குரலடைக்க குரல்....

சோதி சரிதப்புள்ள சரி   பாரு அப்பாரு எவ்வ்ளவு கஸ்டப்படறாரு வேணுமின்னா நடந்தது அந்த சாக்கடைப்பயலுவங்க அப்படி செய்வாங்கனு தெரியாத போச்சுதேடா ஐயே யக்கா  அயிவாத நடந்து முடிஞ்சி போச்சி அல்லா  நல்ல கூலித்தரட்டும் அந்த பன்னாடைங்களுக்கு......

 என்னத்த கூலி தருவாரு போ ரசி....... எம்புள்ள நொந்தது நொந்ததுதானே அந்த ராவிலவானம் பொத்துக்கிட்டு  கொட்டுது ரவுண்டு வந்தவனுங்க ஸ்டேஷனுல இருக்க கூடாதுனு சட்டம் பேசிக்குனு  இந்தாள புடிச்சி வச்கிட்டு அடி அடின்னு போடு தள்ளனானுக …….விடுறேன்.... அந்த புள்ளையை  அனுப்புனு ரவுசு  பண்ணி  அட்டகாசம் பன்னானுங்க,  நான் வரேண்டா என்று சொன்னாலும் கெக்கலியே அந்த பிஞ்சை கேட்டானுங்களே…….  அந்த 11 வயசு  சின்ன புள்ளைகிட்ட  என்னத்த கண்டானுங்க......

ம்ம் நீயி பெத்து இறக்கி துறந்து கிடக்க அது துறக்காத பையி  வெறி நாயிங்களுக்கு பேராசை என்று கிழவி எழுந்து நீட்டி மொழக்கி புலம்புது

தே ச்சீ சும்மாகிட்ட பொணமே சின்ன புள்ளைங்க இருகோசொல்ல என்னத்த பேசற……

அடி போடி………

ரசியா கண்ணதுடைத்து கொள்கிறாள். மணி எழுந்து கொட்டும் மழையில் நடக்கிறான் .வெறுத்து போயி

அப்போ ஒரு 10 வயது சிறுவன் டேய் பலனி……… எங்கக்கா பலனி மாதா கோயில பிரட்டு, பாலு, கேக்கு த்ரங்களாம் மையைக்கு  காளி கோயிலையும் வெளியே சாம்பார்  சோறு கொடுக்க  போறாங்களாம் .....
அப்புறம் ஸுகூளையும் திறந்துவிட சொல்லிட்டாங்களாம் சோத்து பொட்டலத்தோட வந்து சொல்லிட்டு போயிக்கினு இருக்காங்க கிளம்பிடலாமா அம்மா கேக்க சொல்லிச்சி….

யா அல்லா ஸலாம்  நல்லது நடக்கட்டும்சரியக்கா  நானும் கிளம்புறேன் நீயும் கிளம்பு  தண்ணி பாரு எறிகினே போது இத தடவையும் பெரிசா ஆவம அல்லா காப்பாத்தட்டும்……… 



                                                                                                                                       by-  பூவிழி


வெள்ளி, 3 நவம்பர், 2017

தன் இருப்பிடங்களை தேடி..

மழை தன் இருப்பிடங்களை தேடி அலைகிறது .....
எங்கேடா??? என் குளங்கள்....... 
எங்கேடா???? என் ஏரிகள் ......
தன்  இருப்பிடம் கிடைக்காத  சோகத்தில்....... 
தெருக்களில்  அலைந்து கொண்டு இருக்கிறது ........
யாரோ  நம்மை போல் இதை பகிர்ந்திருந்தார் முகநூலில் கவிதையாய் பெயரை படிக்காமல் விட்டுவிட்டேன் .....எவ்வ்ளவு உண்மை இந்த வரிகளில் ....
அந்த சோகமே கோபமாய் தாக்கிடுமோ என்பது போல் கண்ணுர்றேன் இன்று



மழையின் போக்குவரத்து இன்று சென்னையில் இன்று நான்  காலையில் பிராட்வே வரை செல்ல வேண்டி வந்தது போகும் போது கண்டது  மழையின் தாண்டவம்  என்று சொன்னால் கடவுள் இறங்கி வந்து பளாரென்று அறைந்துவிடுவார்......  மக்களின் மேம்போக்குத்தனம் ஆடுகிறது ஆடிவிட்டது எல்லா பக்கமும்  இரண்டு மாதத்துக்கு  முன் தண்ணீருக்கு காக்காயை போல்  பறந்தது பறந்து ஆடியது கொடுமையை அனுபவித்தது ....இன்று தண்ணீரை கண்டு பயந்து நடுங்குகிறது எங்கே செல்கிறோம்     சரி செய்யமுடியாத இடத்தை நோக்கி நகர்ந்துவிட்டோமோ என்று பயம் வருகிறது.

மழை  நீர் சேகரிப்பு நல்ல திட்டம் ஆனால் அது முழுவதும் எல்லா இடத்திலும் சரியாக பராமரிக்க படவில்லை என்பது தான் கண்முன் பார்க்கும் உண்மை நிலவரம்  இதற்கு  யார் காரணம்? மக்களாகிய நாம் தான் நாமே நம்மை கவலைக்கிடமாக  வைத்து கொள்கிறோம் ஆக்கிவிட்டோம். மேலும் அதில் முழுவதும்மண் சேர்ந்து  அடைத்து கொள்கிறது கடலில் போயி சேர்வதற்கு  பதிலாய் ஒவ்வொரு நகரிலும் பொதுவாய் ஒரு அல்லது இரு  பொது  இடத்தை தேர்ந்தெடுத்து   பெரிய அளவில் மழை நீர் சேகரிப்பு கட்டி பராமரிக்கலாம் என்று தோன்றுகிறது .தண்ணீர் கஷ்டமும் கொஞ்சம் குறையும்


இன்னுமொன்று  குப்பை அதுவும் மார்கெட் என்று ஒன்று இருக்கும் இடங்களில் நடக்கும் அடடாகாசம் தாங்கவில்லை எவ்வ்ளவு தான் இடங்களை அவர்களுக்க ஒதுக்கி வைத்தாலும் அவர்கள் அந்த இடத்தை சரிவர பயன் படுத்துவதில்லை நடை பாதையிலேயே  போட்டுவிடுவதில் அவர்களுக்கு என்ன சந்தோசம் வருகிறது என்று புரியவில்லை குப்பை லாரிகள் வரவில்லையென்றால் அந்த இடத்து மக்கள் படும் அவதி சொல்லி வடிக்க முடியாதவையாக இருக்கிறது   ஒழுங்கீனம் ஒழுங்கீனம் என்பதை வாசல்களாக ஆகி  கொண்டோம் இதற்கு சப்பைக்கட்டாய் அரசியல் சூதாடங்கள் மேற்கோள்கள்


அடுத்து அவர் அவர்கள் வீட்டு  வேலைகளுக்கு  நோண்டப்படும்  ரோடுகளை திரும்பவும் செப்பனிட மெனக்கெடுவதில்லை இது சுயநலம் தானே ஒவ்வொருவருக்கும் தோன்ற வேண்டும். தன் வீடு  இருக்கும் ரோட் நல்ல இருக்க வேண்டுமென்று.  வீட்டினுள்ளே  மட்டும் சுத்தம் பத்தம் வெளியே நாற்றம் பற்றி கவலையில்லை வெறுமனே புலம்பல் நாட்டை  குறை கூறி அடுத்தவரை குறை கூறி ....


மேம்பாலங்கள் கட்டி போக்குவரத்தை வழிநடத்தப்பட்டது பலன்களுக்கு பாலத்தின் அடியில் என்ன நிலை இன்று எல்லோருமே பாலத்திலே செல்ல முடியுமா ? நாம் புலம்பும் புலம்பல் எல்லாத்துக்கும் வரிகட்டுறேனே அப்புறம் திரும்பவும் நானே என்னை பார்த்து கொள்வதா ? என்ற கோபமான அலட்சியம்....... சரி இதற்கு முடிவு இப்படித்தான் ஒன்று கூடி  அனுபவிப்போம்..... ஆனால் ஒன்று கூடி  போராடமாட்டோம் நிற்கமாட் டோம் உண்மையாக.... யாரவது பார்த்து கொள்ளட்டும் நான் கை  மட்டும் தூங்குகிறேன் எனக்கு நேரமில்லை என்று ஒதுங்கி ஓடுவோம். ஆம்உங்களுக்கு  நேரமில்லை வாழ........ உன்னை நோக்கி நோயிகளின் அணிவகுப்பு உன் நேரமின்மைக்கு பரிசாய்


பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
 நானும் ஒதுக்கிட்டு வழிவிட  வேண்டும்
என்ற நிலை இனி  வருமா .................
சிறுவயதில் மழை  வந்தால் குதித்து  நனைந்து காகித கப்பல்விட்டு மகிழ்ந்த காலமெல்லாம் போய்விட்டது....... இன்று மழை வந்தால் ஐயோ! மழை நீர் வடியாதே..... அதனுடன் எந்த சாக்கடை நீர் கலக்கிறதோ பயம் ஐயோ கூரையில்லாத  மக்கள் என்ன செய்கிறார்களோ...... என்ற பயம் மட்டுமே இன்று சென்னைவாசியாய் ஆகி  போனதில் பலபேருடைய ஆதங்கம் ,ஏக்கம் .....மழை புலம்பலில் இருந்து விடிவு  வருமா....... யார்? தரவேண்டும் என்ற கேள்வியை தாங்கி  நானும்.......