புதன், 26 ஜூலை, 2017

தத்துவம் -1

நான் என்பதை துலைத்தவரிடம் தான் காதல் முழுமையான பங்குவகிக்கும் தன் முழுப்பரிணாமத்தை காண்பிக்கும்....... இல்லாவிட்டால் அது இருக்கும் ஒரு ஓரமாய் தன் காதலுக்கு துன்பம்வந்தால் பக்கத்தில் நிற்கும் அந்த நேரம்....
இன்பம்வந்தால் மகிழும் அந்த நேரம்.....
சிக்கல் வந்தால் தீர்க்கவும் உதவிடும் அந்த நேரம்.......
இப்படியாக மட்டுமே பங்குவகிக்கும்.....
நான் என்பது தன் காதல் முன் அழியுமானால் அங்கு இடையிராத அமைதி மட்டுமே எல்லாம் சமர்ப்பனமே....... பேசாவிட்டாலும் புரியும்....... சொல்லாவிட்டாலும் அறியும் .......இல்லாவிட்டாலும் காதல் இருப்பது போலவே இருக்கும்.....-.பூவிழி

வேண்டல்


பஞ்சம் வந்ததடி பராசக்தி
பஞ்சம் வந்ததடி
மனிதனுக்கு
மனிதம் மேல்
பஞ்சம்  வந்ததடி
பஞ்சத்திற்கு தஞ்சமிடுவாய் என
இருக்க நான்
நின்  கொடையின்
தஞ்சமென  அளித்ததையும்
பிரித்திட நினைக்கின்றாயே
பாரினில்
பஞ்சத்தின் பரிசாய்
மனிதனின் வெற்றிக்கு
மடி ஏந்துகிறேன் காலபைரவி
கருணை காட்டிட்டு
மனிதம் வளர

பயணம்

கடந்துவந்த பயணம்
வளரும் பாதை
கரடுமுரடாய்
கற்கள்
கடந்துவந்தால் பக்கம் ஓடும்
பதம் பார்க்கும்
சுடுநீர்கால்வாய்
விளையாட்டாய் தாண்டி வந்தால்
கொளுத்தும் வெயில்
மணல் பாதை
போகட்டும் என்று
தப்பிதாவி கடந்தும்
முன்னாள் ஒரு மேடு பள்ளம்
வீழ்வேனோ என்று
பலம் திரட்டி
பாதையை பிடித்தால்
கால் உபாதை
இளைப்பாறலாமென்றால்
இடைவிடாத  மழை
நனைந்தே வந்தும்
கால் முழுவதும் சகதி
பக்கம் ஓர் ஓடை
சுகமாய் குளிர்ந்து
உறவாடி எழுந்த பின்
ஒட்டி கொண்டன மண்ணும் தூசியும்
காய்ந்த பின்பும் அதன் வாசனை
நேர்கோட்டில் பாதை
பாதை முழுவதும்
பசுமையும் ஆங்காங்கே
எங்கிருந்தோ ஓர் பாடல்
மனதிற்கும் உடலுக்கும்
இதமாய்
ஏற்று கொள்ளும்
கொல்லும் விதமாய்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
சொல்வடிவம்

அமரர் சுஜாதா நேரடியாக பாராட்டிய முத்துக்குமாரின் கவிதை ஒன்று...

தூர்
—-

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநிர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

காலக்கடத்தி

காலக்கடத்தி
இறந்த காலத்தின் கசடுகளை
கசக்கி எரித்துவிடும்
நிகழகாலத்தின்  உதவியிருந்தால்
எதிர்காலத்தின் சுபிட்ஷம்
தெரியும்
நிகழ்காலத்தின் நினைவிருந்தால்
இருவருக்கும்

நாயகனாய்

மீன் முள்ளாய்
சிக்கி கொண்ட
அவஸ்தை
மனக்குழியில்
உன் நினைவுகள்
முழுங்க நினைத்தேன்
முடியவில்லை
எடுக்க நினைத்தேன்
முடியவில்லை
மனத்திரையில் என்
கேள்வியின் நாயகனாய்
சிம்மாசனமிட்டு நீ

கோடுகள்

இருவரின் கோடுகள்
நேற்று நீ உனகிட்ட
கோடுகள்
தாண்டவிடவில்லை
உன்னை
இன்று நீ உனகிட்ட
கோடுகள்
உன்னை வழி
நடத்தும் பாதையாய்
கோடுகளும் பாலமாகும்
இருவர் ஒருவராக்கும்


வாழ்கையின் இரண்டு பொன்மொழி
*உசுபேத்துரவன் கிட்ட
உம்முனும்
*
கடுப்பேத்துரவன் கிட்ட
கம்முனும்
இருந்தா
நம்ம வாழ்கை ஜம்முனு இருக்கும் 

மனிதம்

மனிதம் எங்கே
மனிதம் எங்கே
மனிதம் காக்க
மனிதம் மிதிப்படுமாம்
மண்ணின் பாதுகாப்பு
மன்றாடி  கேட்டும்
மதிப்பிழந்து தவிக்கின்றன
மன உணர்வுகள்
மரணத்தை நோக்கி
மறியலில் 
மானம் காத்திட 
சட்டம் ஓட்டை
பெண்களின் 
சட்டையும்
பிஞ்சுகளும் 
பசியாறப்படுகின்றன
மனிதமற்ற மிருங்களால் 
வந்திடுமாம் சட்டம்
மாட்டை  காக்க  
தாக்கிடுமாம் சாட்டையால் 
மனிதத்தை   
கொன்று குவித்து 
தின்றுவிட்டு 
இரக்கம் பேசும் 
மனம் அற்ற 
மனித மிருங்கள்
மாட்டையும்  நாட்டையும்
மானம் காக்கும்
நாட்டின் மைந்தனுக்கும் 
மனம் குளிர   
உணவிடாது 
மனிதம் பேசும் 
மாண்புமிகுகள் 

மன குமுறல்  

வாதங்கள்
வாய் வார்த்தையாகட்டும்
என் விருப்பமாய்
உன் வலிகள் கூடட்டும்
இங்கிதமற்ற
நாட்களும்
இசைவு இல்லா
நிகழ்வுகளும்
இருந்தும்
என் மன சுவடுகள்
உன் நிழலை ஒட்டியே.......


சொல்லிவிட்டாய்
அந்த வார்த்தையை 
சொல்லாமல்விட்ட 
எல்லா உணர்வுகளையும் 
அது கூட்டி 
கரை சேர்த்துவிட்ட்து 

சோம்பேறிகள் சங்கம்

பால்கனியின் திண்டிலே சாய்ந்து
அம்மாவின் திட்டுகள்
தினந்தோறும் ..
சோம்பேறி ..
சோறுண்ணவும் மறக்கும்
கைபேசியின் கைப்பிள்ளையானாய்
கைவிடாமல் உழைக்கும்
கைவிரல்களுக்கு
நேர்ந்த அவமானம் 
கைகளுக்குள் உலகத்தை 
காட்டியிடும் மாயனை 
மதிப்பிழக்க செய்யும்
சொற்களின் வீரியம் 
என்று புரியுமோ    
இணையத்தை இடைவிடாமல் 
இயக்கி ஆண்டு 
பல பேரை வாழவைக்கும்
வள்ளல் என்று 
பணிக்கு செல்லுமுன் அவரின் 
கைப்பையின் முன் 
கையேந்தும் நிலை 
உலகை காக்க 
இப்படிக்கு 
சோம்பேறிகள் சங்கம்  

பயமாய் .இருக்கிறதே ...

கோவிலுக்கு சென்ற போது  ஒரு கிராஸ் டாகின் உபயம்
வரிசை கட்டி நிற்கிறதே
ஏற்றத்தாழ்வும் இல்லாமல்
நரகத்தின் சிகரத்தையும்
தொட்டு சாதனையாயிற்று
முதுமையின் முகாரி
சுற்றி சுற்றி
அறியாத வயதில்
பக்கத்து பென்சிலின் முனை உடைத்து
அதன் காரணமாய் தலையுடைத்தும்
எட்டாத  உயராது  ஜிலேபிடப்பாவில்
பிசுபிசுப்பு  கைகள் உணர்கிறதே இன்றும்
கணக்கில் திறமையில்லை 
எண்ணிக்கையின் விவரமில்லை
செய்க்கைகளுக்கோ பஞ்சமில்லை 
அறிந்த வயதில்
அஞ்சறை பெட்டியின் சில்லறைகளின்
மணத்தை நாசியில் இன்றும்
தோழமையுடன் நடத்திய துகிலுரிப்புகள்
வார்த்தைகளில்
சிரிக்கிறதே என்னை பார்த்து
படிப்பின் பொய்யுரைத்து
பத்திரமாய் சுற்றி திரிந்த
கால்களின் வலி இன்றும்
குத்துகிறதே நெஞ்சினில்
விக்கரமாதித்தியன் ஆனேனே 
விடலை பருவத்தின்
விதிமீறல்களோ விடையில்லை
பதுங்குகுழியில் ஒளிந்து கொண்ட தீவிரவாதியாய்
மனசாட்சி
பச்சோந்தியின் பஞ்சாங்கம் படி
வாழ்க்கையின் போக்கு
நாட்டுக்கு தீமையில்லை ......
வீட்டுக்கு??? தெரியவில்லை ???
இன்று
எத்தனையோ  செய்த கைகளும் கால்களும்
பசையின்றி விசை போன பின்பும்
நிமிர்வில்லா முதுகெலும்பும்
அகக்கண்ணே புறக்கண்ணாய் ஆனா போதும்  
சே தொல்லை என்று
தொலைவே கேட்டும்
புனர்வாழ்வு ஆசை வந்தும்
செய்யும் தவறுகளின் கர்மவினை
தொடரும் என்று திடமாய் நம்பும்
இந்த புண்ணிய பூமியில் பிறந்த பயன்
மடிந்துவிட பயமாய் இருக்கிறதே