புதன், 30 ஜனவரி, 2013

.மழைVs பயம்


மேகம் கருக்குது, மழ வர பாக்குது
வீசி அடிக்குது காத்து........... ,மழை காத்து
எதோ காத்து கருப்பு வந்திட்டாபோல பயப்படுவோம்
மழைனா  என்ன தெரியுங்களா ?
வானம் என்ற ஆண்
பூமி என்ற பெண்ணிடம்
நடத்தும் காதல் தாங்க நாம் காண

திங்கள், 28 ஜனவரி, 2013

அம்மாவின் பெருமுச்சு


இன்று ஒரு தகவல் 
நான் உன் அம்மா 
என்ற அறிவிப்பு பலகை 
உணவு மேசையில் 
முன்று வேளையும் 
நன்றி என்ற சொல்லை
எப்பொழுது எழுதுவது 
இன்று ஒரு தகவலில் 

ஏன் பெற்றாய் ?
என்ற கேள்விக்கு 
விடை தேடியபோது 
அது வெய்டிங் லிஸ்டில் ...........
பரலோகம் போன 
என் ஏழாம் தலைமுறையை 
காணவில்லை .......
பதில் அளிக்க 
தொடரும் ...........

தாறுமாறாய் சிந்திகிறாய் 
உன் சிந்தனைக்கு 
கடிவாளமிடும் அவசரத்தில் .....
விழுந்துவிட்டேன் 
உன் கோபகுளத்தில் 
தகிகின்றன என் மனம் 
தாங்கவொன்னா 
உன் சுடும் மூச்சில் .......

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

கசப்புVs இனிப்பு


பாகற்காய் சர்க்கரையை  குறைக்குமா ?  


வர வர உணவு கசக்குதையா 
இந்த இனிப்பு நோயால 
வரவர இந்த உணவு கசக்குதையா .....
மனம் தான் இனிப்பு இனிப்பு அடிக்கும் 
சாப்பிட முடியலைன துடிக்கும் 
உணவு கசக்குதையா இந்த இனிப்பு நோயால..........
தினமும் பாகற்கை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும் என்பது சரிதானா?


இது ஓரளவு உண்மைதான் .

பாகற்காயிலுள்ள இரண்டு வேதி பொருள்களுக்குச்(அல்கலாய்ட்ஸ்) சர்க்கரையை குறைக்கும் திறன் உள்ளது. இதில் காணப்படும் ஒரு புரதத்தின் வேதிஇயல் அமைப்பு இன்சுலினை ஓரளவிற்கு ஒத்ததாகவும் உள்ளது .

பாகற்காயில் மிகுந்து காணப்படும் நார்ச்சத்து சர்க்கரையை குறைக்க உதவுகிறது .இதிலுள்ள தாதுச்ச்த்துக்கள் மற்றும் வைட்டமின்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பயன்படுகின்றன .

புதன், 23 ஜனவரி, 2013

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறி கண்டுபிடிப்புசெவ்வாய் கிரகத்தின் மேல் பகுதி
செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் தாதுக்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.
லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபெர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் ஜியோசயன்ஸ் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கிரகங்களை விண்கற்கள் மோதும்போது, நிலப்பரப்புக்கு அடியில் இருக்கின்ற பாறைகள் மேற்பரப்புக்கு கொண்டுவரப்படுகின்றன.
செவ்வாய்க் கிரகத்தில் அவ்வாறு விண்கல் மோதி ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் காணப்படும் பாறைகளில் உள்ள தாதுக்களை ஆராயும்போது அங்கே உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று இன்னும் தெரியாத நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் நிலத்துக்குள்ளே நுண்ணியிர்கள் வாழ்ந்தது உறுதிசெய்யப்படுமானால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய விதத்தை புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான டாக்டர் ஜோசஃப் மிச்சால்ஸ்கி கூறுகிறார்.

திங்கள், 21 ஜனவரி, 2013

ஸ்கிப்பிங் Vsஉயரம்


‘ஸ்கிப்பிங் கயிறு ‘ ஆடினால் உயரம் அதிகரிக்குமா ?‘ஸ்கிப்பிங் கயிறு ‘ ஆடினால் உயரம் அதிகரிக்குமா ?

ஆமாங்க இந்த உயரம் எல்லாதிற்கும்  எல்லாருக்கும் வேணும் தான் உலகமே ஆளா பறக்குது .

ஸ்கிப்பிங் கயிறு ஆடினால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொல்வது உண்மையா ?

உண்மையில்லை.

ஒருவருடைய உடல் உயரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அவருடைய மரபணுக்கள் (Genes)தான் அதாங்க .ஜீன் ஜீன் -ங்க (ஜின் இல்ல போட்டுகிற ஜீனும் இல்ல ஒன்னு வயிருகுள் போடறது ஒன்னு காலில் போடுறது )

அம்மா,அப்பா ,தாத்தா ,பாட்டி, ஆகியோரின் உடல் உயரத்தைப் பொறுத்துதான் உயரம் அமையும்
 (அதுசரி அதுக்குன்னு ஷ்ரேயா போல பொண்ணையும் அசின்போல பொண்ணையும் பார்க்கம இருக்கமுடியுதா ) .உடலில் சுரக்கும் வளர்ச்சி இயங்குநீர் உயரவளர உதவுகிறது .

அவரவர் சாப்பிடும் உணவுகள், உடற்பயிற்சிகள்    நோய் வராமல்  உடல்நலனைக் காக்கும் முறைகள் ஆகியவற்றை பொருத்தும் உயரம் அமையும் . 18 வயதிற்க்குப் பிறகு உடலின் உயரம் வளராது .அதன்பின்பு எந்தவொரு சக்தியினாலும் உயரத்தை அதிகரிக்க முடியாது(இது என்னாங்க காலில் இரண்டு அடிக்கு மேல இருக்கற காலணியை போட்டுகிட்டா போச்சி)

  எனவே ஸ்கிப்பிங் கயிறு ஆடினால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு தவறு என்றாலும், இது ஒரு ஏரோபிக் பயிற்சி ஸ்கிப்பிங் கயிறு ஆடினால் உடலின் வளர்ச்சியை தூண்டுகிறது மேலும் இந்த பயிற்ச்சியின் போது கை,கால்,மார்பு,வயிறு,தொடை போன்றவற்றின் தசைகள் இயங்குகின்றன .இதனால் அவை இரத்தத்திலிருந்து அதிக அளவு பிராணவாயுவை பெற்று கொண்டு அங்கு சேர்ந்துள்ள கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றி விடுகின்றன. இதனால் உறுப்புகள் சுறுசுறுப்பு அடைகின்றன .
மேலும் உடல் இடையையும் , உடல் எடையை குறைக்கவும் (முக்கால் வாசி எடையே இடையில்தான் )இப்பயிற்சி உதவுகிறது .(அப்படினா இது ரொம்ப முக்கியமான விஷயம்தாங்க) 

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

புரியாது பூசணிக்கா! - சிறுகதை

 கனம் உள்ள கதை பெருங்கதையை  சிறுகதையாய்  அருமை ....................


அந்த ஆல்பத்தைப் புரட்டியதும் சந்தோஷம் என்னை தொட்டிலில் இட்டு ஆட்டியது போல் தோன்றியது. சில நினைவுகள் தரும் சந்தோஷத்தை எந்தப் பணத்தாலும் விலைக்கு வாங்கவே முடிவதில்லை. ஆல்பத்தை மூடியதும் ஏனோ எனக்கு இன்றைக்கு இந்திராகாந்தி ஞாபகமாகவே இருந்தது.

கூகுல் நாலெட்ஜ் கிராஃப் - வியக்க வைக்கும் புதிய வசதி!

'ராஜா' என்று இணையத்தில் தேடுகிறோம் என்றால், அது ராஜ ராஜ சோழனா அல்லது இளையராஜாவா இல்லை ஏ.எம் ராஜாவா, இல்லை என்றால் ஆ.ராசாவா?

இது போன்ற கேள்விகளுக்கான விடையை தேடல் முடிவாக அளிக்கும் புதிய வசதியை தான் முன்னணி தேடியந்திரமான கூகுல் அறிமுகம் செய்துள்ளது.'கூகுல் நாலெட்ஜ் கிராஃப்' என்று குறிப்பிடப்படும் இந்த வசதி, தேடலில் அடுத்த அத்தியாயம் என்று வர்ணிக்கப்படுகிற‌து.தேடல் கலையை மேலும் புத்திசாலித்தனமானதாக மாற்றக்கூடியது என்றும் கருதப்படுகிறது.

தேடியந்திர உலகில் கூகுல் எப்போதோ நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டாலும், தன்னை நாடி வருபவர்களின் தேடல் அனுபவத்தை மேம்படுத்தித் தரும் வகையில் இன்னும் சிறப்பாக தேடல் முடிவுகளை வழங்க முயன்று கொண்டே இருக்கிறது கூகுல். புதிய புதிய வசதிகளையும் அம்சங்களையும் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் கூகுலின் லேட்டஸ்ட் அறிமுகம் நாலெட்ஜ் கிராஃப் வசதி.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

வெண்டைக்காய் Vsஅறிவு
வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளருமா ?

இது இன்னைக்கு நேத்திக்கு குழப்பமில்ல ரொம்பநாளா தாய்மாருங்க தகப்பன்மாருங்க நம்மளோட 5வயசிலேயே எத்திவிட குழப்பங்க
பார்த்துபிடுவோம்ங்க அது என்னான்னு .............

புதன், 16 ஜனவரி, 2013

இந்தியனின் கால்கள் எங்கெல்லாம் ......


ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 4000-வருட மரபணுத் தொடர்பு
ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடைய மரபணுக்கூறுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய கண்டத்துக்கு நாலாயிரம் ஆண்டுகள் முன்னரே குடியேற்றம் நடந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகக் கூறுகின்றனர்.

மனிதனின் அறிவு பசிக்கு மனிதனின் பலி.....

                                 ற்றும் ஓர் கொடுமைகளுக்கு வித்திட்டவுள்ளது அறிவியல் முன்னேற்றம் . 
மனிதன் மனிதனை வேட்டையாட புதிய கண்டு பிடிப்புகள் .
மனிதனின் அறிவு பசிக்கு மனிதனின் பலி நடக்காமல் இருந்தால் சரி .............(எத்தனையோ  கொடுமைகள் பார்த்துவிட்டோம் இது என்ன ஜுஜுபி )
பிரிட்டனின் முதலாவது கை-மாற்று அறுவை சிகிச்சை

திங்கள், 14 ஜனவரி, 2013

புது கணவன்

புது கணவன் தேடுகிறான் நம்பிகையோடு கூகிளில்  
'  மனைவியை  எப்படி சாமாளிப்பது '?

கூகுள் தேடல் முடிவு  அறிவிப்பு 
'இன்னும் தேடல் நடக்கிறது '

வெறுத்துவிட்டான்  


கூகுள்  ,...........
கூகுள்  ............
பண்ணி  பார்த்தேன் கிடைக் கவில்ல 
 யாகூ.... யாகூ....... பண்ணி பார்த்தேன் தெரியவில்ல 

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

உலகத்தின் கடைசிநாள் !லகத்தின் கடைசிநாள் !      
சலசலப்புக்கு 
ஓர் முற்றுபுள்ளி
மாயமாய் போனதே 
மாயனின் மதிப்பீடு 

கிறிஸ் மஸ் தாத்தாவின்
மணியோசையும் வந்து போனதே 
"13"ன் கரகோஷம் 
கரையை கடந்ததே  
.
இன்று புதிதாய் பிறந்தோமோ 
கண்பட்டு விட்டதே !!!!!
இந்த பூமிகிரகதிற்கு 
சுத்தி போட்டுவிடுவோம் 
நம் சந்தோஷ கூக்குரலால் ......

'பொங்கலோ பொங்கல் '
வான் எட்டட்டும் ,முட்டடும் 
கிரகங்களுக்கு வாழ்த்து  
சொல்லட்டும்
கரும்பின் இனிமை 
கயிலாயத்தை எட்டுதே 
'தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா'!!
என்ற பொன்மொழியை 
உணர்ந்திடுவோம் ,உணர்த்திடுவோம் .
   
தொடரட்டும் ..........
இந்த வையகம் உள்ளவரை 
தமிழின் புகழ் 
தமிழரின் புகழ் 
இது
தமிழ்   திருநாளின் 
உறுதிமொழியாகட்டும்.

முறைதவறிய முறைகேடுகள் 
முறிந்து போகட்டும் 
பொங்கி எழுவோம் புயலாய்
களைந்திடுவோம் கசடுகளை 
கைகொள்வோம் நல்லொழுக்கத்தை 
வந்ததே இனிய நாள்!
தருமே  இனிய வாழ்க்கை  !!!!!

வியாழன், 10 ஜனவரி, 2013

புதிய கண்டுபிடிப்பு ....... ஸ்டெம் செல்
புதிய கண்டுபிடிப்பு ....... ஸ்டெம் செல் அணுகுமுறை எலிகளின் பார்வை மீண்டும்.............

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ஸ்டெம் செல் வைத்து குருட்டு  எலிகளின் மேல் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது அதன் விளைவு,

உதட்டில் முத்த மிடுவது..........


உதட்டில் முத்த மிடுவது பாதிக்குமா ?காதலின் சின்னம் உயிர் மூச்சு இதை பற்றி கொடுத்துவிட்டேன் என்று வருந்துவோ சங்கத்திற்கு தெரியாமல் போகட்டும் இந்த பதிப்பு (தப்பிகனுமில்ல )மிதி பேர் பாருங்கப்பா என்னதான் சொல்ல வரோமுனு .......

திங்கள், 7 ஜனவரி, 2013

இரத்த கொதிப்பு


உணவில் உப்பை குறைத்து கொண்டால் இரத்த கொதிப்பு கட்டுப்படுமா?


உணவில் உப்பை குறைத்து  கொண்டால் மட்டும் போதும் இரத்த கொதிப்பு நோய் கட்டுப்பட்டுவிடும் என்று சொல்வது சரியா?

சரியில்லை .
உணவில் உப்பை குறைத்து கொள்வதால் மட்டும் இரத்த கொதிப்பை முழுவதுமாக கட்டுபடுத்திவிட முடியாது .உப்புக்கும் இரத்த கொதிப்புக்கும் தொடர்பு உள்ளது உண்மைதான் .

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

உடல் சூடாகி


உடல் சூடாகி  வாய்புண் வருகிறதா ?


மாத்திரை ,மருந்துகளை நிறைய சாப்பிடால் உடல் சூடாகி வாயில் புண் வந்து விடும் என்று கூறிகிறார்களே இது சரியா?

இல்லை.    
மாத்திரை மருந்து சாப்பிடுவதால் உடம்பு சூடாவதில்லை.
ஆண்டிபயாடிக்ஸ்(Antibiotics) என்று அழ்க்கப்படுகிற நுண்ணயிர் கொல்லி மருந்துகளை அளவுக்கதிகமாக சாப்பிடும் போது நம் குடலிலும்,வாயிலும் புண் ஏற்பட வாய்ப்பு இருகிறது.

சனி, 5 ஜனவரி, 2013

தாவர எண்ணைய்கள் கொழுப்பு


தாவர எண்ணைய்கள்  கொழுப்பு அற்றவையா ?
இது உண்மையா ?


முழு உண்மையில்லை

பாதி உண்மை

தாவர எண்ணைய்கள் எல்லாமே உடல் நலத்திற்கு நல்லது  என்று கூறிவிட முடியாது அதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.

புதன், 2 ஜனவரி, 2013

இரத்த தானம்


இரத்த தானம் செய்தால் உடல் பலவீனம் ஆகுமா ?


இரத்த தானம் செய்தால் உடல் பலவீனம் அடைந்து விடும் என்று கூறுகிறார்கள் .இது சரிதானா?

இல்லை இப்படி கூறுவது சரியில்லை.

    நம் உடம்பில் சராசரியாக 5 லிட்டர் இரத்தம் உள்ளது .இதில் ஒருவரிடம் இருந்து சுமார் 350 மி.லி. இரத்தம் தான் எடுக்கமுடியும் .இதனால் உடம்பு பலகீனம் அடைய வாய்ப்புஇல்லை .

கத்திரிக்காயால்


கத்திரிக்காயால் சொறி சிரங்கு வருமா ?


அடிகடி கத்திரிகாய் சாப்பிட்டால் சொறிசிரங்கு வந்துவிடும் என்று கிராமங்களில் சொல்வதுண்டு இது உண்மையான தகவலா ?


இல்லை

கத்திரிகாய்க்கும் சொரிசிரங்குக்கும் துளி கூட தொடர்பில்லை.
சொறி சிரங்கு ‘சார்க்கோப்டிஸ் ஸ்கேபி(Sarcoptes Scabiei) என்னும் ஓட்டுன்னிக்கிருமிக்ளால் ஏற்படுகிறது .இது தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் தொற்றுநோய் சிரங்கு உள்ளவர்களின் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதாலே இந்த நோய் பரவுகிறது கத்திரிகாய்க்கு இதற்கும் சம்பந்தமில்லை .

சிவப்புநிற காய்கறிகள் ...


சிவப்புநிற காய்கறிகள் இரத்தவிருத்தி செய்யுமா ?இரத்தம் போல் சிவப்பாக உள்ள பீட்ருட் போன்ற காய்கறிகள் இரத்த அபிவிருத்திக்கு அவசியம் என்பது உண்மையா?சொல்வது சரியா ?

உண்மையில்லை .