செய்தி தொகுப்பு பூவிழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி தொகுப்பு பூவிழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

10 ஆண்டுக்கு பின்

                புதன் கோள் சூரியனை கடந்து போக போகிறதாம்....
ஒரு  நூற்றாண்டுக்கு 8 முறைதான் புதன் கோள் சூரியனை கடந்து செல்லும் . புதன் சூரியனைவிட சிறிய வட்டம் என்பதால் இது ஒரு சிறு கரும் புள்ளியாக மட்டுமே தெரிய உள்ளது
ஆனாலும் இந்த நிகழ்வை வெறும் கண்களால்பார்க்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
               இந்த நிகழ்வு 9 -8-2017தேதி அன்று மாலை 4.15 மணியிலிருந்து மாலை 6.20 வானில் பார்க்கலாம் என்று சென்னை  பிர்லா கோளரங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
               இதை வடமெரிக்கா ,தென்மெரிக்கா ,ஆஸ்ரேலியா ,ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்கள்

புதன், 2 ஆகஸ்ட், 2017

சாப்பிடுவதற்கு இப்படி

மனுஷன் வகைதொகையா சாப்பிடுவதற்கு என்றே பண்டிகைகள் பூஜைகள் ஏற்படுத்தி இருக்க வேண்டும் அதற்கு என்று ஏதாவது காரணங்களை கொண்டு வருவதில் கில்லாடி
இங்கு இப்படி ஒரு காரணம்
நாமகிரி பேட்டையில், 250 ஆண்டுகளுக்கு முன் பொங்களாயி என்ற பெண்ணுக்கு, பெண்கள் யாரும் உதவி செய்யாததால், இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனால், அந்த பெண் விட்ட சாபத்தால், இப்பகுதியில் பஞ்சம், பட்டினி ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டும், தவறுக்கு மன்னிப்பு கேட்டதுடன், அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த ஆண்கள் மட்டும் விழா எடுப்பதாக கேட்டுக்கொண்டதால், விழா கொண்டாடப்படுகிறது
ஒவ்வொரு ஆண்டும் ஆடி18க்கு முன்பாக கிடா வெட்டி பூஜை நடக்கும். இந்த விழாவில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.
அதே போன்று இந்த ஆண்டும் ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது.
இவ்விழாவில், மொத்தம், 145 கிடாக்கள் பலியிடப்பட்டன. நேற்று அதிகாலை, சமைக்கப்பட்டு, 3,000த்துக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பரிமாறப்பட்டன.
மனுஷன் மட்டும் தான் ஆண்டவன் படைப்பா ....
அந்த ஆடு கோழி பன்றி எல்லாம் சாபம்விட்டா ......அதற்கு என்ன .இன்னொரு பூஜை சாப்பிடுவதற்கு ஏதுவாக .....

விந்தை திருவிழா

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்லுக்கு  எதிர்ப்பதமாய் ஒரு சடங்கு
விந்தையாக இருக்கிறது பயம் என்ற உணர்வுக்கு அப்பாற்படடவர்களா இவர்கள்
பாம்பு திருவிழா  பிகாரின் சமஸ்திபூரில் நடை  பெறுகிறது ஒவ்வொரு ஆண்டும் நாகபஞ்சமியின்போது, பாம்புகளை கையில் ஏந்தியபடி மக்கள் ஊர்வலமாக செல்கின்றனர் மகிழ்ச்சியாக கொண்டாடி .சின்னசிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்கிறார்கள்
இதற்காக இவர்கள் ஒரு மாத்திற்கு முன்பே இருந்து பாம்புகளை பிடிக்கின்றனர், பாதுகாக்கின்றனர்.... அவற்றின்  நச்சுக்கள் நீக்கப்படுகின்றன
நாகபஞ்சமியின்போது போது  பாம்புகளுக்கு பால் கொடுக்க வேண்டும் என்னும்  சடங்கு ,நம்பிக்கை
பார்வதி அம்மனை வணங்கி..... பாம்புகளுடன் நதிக்கு சென்று பூஜை செய்து அங்கிருந்து காட்டுக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள் இந்த பாம்புகளை.....
பூஜையில் பாம்புகளுக்கு பாலும் பொரியும் கொடுக்கப்படுகிறது ....
பாம்புகளை வாழ்வில் ஒரு அங்கமாய் இவர்கள் உணர்கிறார்கள் .....இயற்கைக்கும் தமக்குமிடையே இருக்கும் நெருங்கிய சொந்தமாகவே இதை அவர்கள் பார்க்கிறார்கள் ....
Image result for பாம்பு திருவிழா





செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இதோ ஒரு காதல் மன்னன்

பணக்காரன் காதல் எல்லாம் காதலா என்று புறம் பேசும் மனங்களிடையே இதோ ஒரு சினிமாவை மிஞ்சும் நிஜக்காதல்
முகேஷ் அம்பானி  தெரியாதவர் யாராவது இருக்க முடியுமா இன்று ......இந்தியா மட்டுமின்றி, உலகளவில் சிறந்த தொழிலதிபராக திகழும் நபர். ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போனவர் முகேஷ் அம்பானி தான் எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் வென்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
வியாபாரத்தில் மட்டுமல்ல, காதலிலும் இவர் கெட்டி தானாம் . தனது காதல் மனைவிக்கு ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் யோசிக்க முடியாத அளவில் ஒரு வியக்கத்தக்க பரிசை கொடுத்து அசத்தும் சூப்பர் காதலனுமாம் நம்ப முடிகிறதா.....
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் பிறந்த நீத்தா அம்பானி ஒரு பரத நாட்டிய தாரகை  ஒருசமயம் ஒரு விழாவில் நாட்டியம் நிகழ்ச்சியை வழங்கும்போது  முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி அவரின் நாட்டிய  திறமை கண்டு தன் மகனுக்கு மணமுடிக்க கேட்டாராம்
இது தொடர்பாக  முகேஷ் அம்பானியும் நீத்தாவும் சந்தித்து பேச்சுக்கள் நடந்ததாம் ஒருமுறை இருவரும் காரில் சென்றுக் கொண்டிருந்த போது. ட்ராபிக் சிக்னலில் கார் நின்றுக் கொண்டிருக்கையில், "நீத்தா நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாயா?” என கேட்டுள்ளார் முகேஷ். இதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்ற பிடிவாதம் தோன்றியுள்ளது
சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. பின்னடி நின்ற அனைவரும் ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தனர். நீத்தா நீ பதில் கூறாமல் நான் வண்டியை எடுக்க மாட்டேன் என அடம் பிடித்துள்ளார் முகேஷ். ....... மணிரத்தனத்திற்கே டிப்ஸ் கொடுப்பார் போல இருக்கே
"எஸ். நான் உன்னை திருமணம் செய்துக் கொள்வேன்" என நீத்தா கூறிய பின்பு தான் வண்டியை எடுத்துள்ளார் முகேஷ்.
இனிதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது காதல் பயணம் இன்றுவரை தன் காதல் மனைவிக்கு அவர் வியக்கும் வண்ணம் பரிசுகள் வழங்குவதில் கில்லாடியாம் பணமிருந்தாலும்  அதிலும் காதலை தனித்துவமாக நிரூபிக்க திறமை வேண்டுமே முகேஷ்  அம்பானி தன்வியாபாரத்தில் மட்டுமல்ல தன் காதலிலும் கிரியேட்டிவ் மைன்ட்  உபயோகித்து சாதிக்கிறாராம்
 நீங்கள்  கேள்வி பட்ட  கதையாக இருக்கலாம்

கூகுள் வரம்

                       கூகுளுடன் வேலை செய்ய நான்..... நீ என்று போட்டி  இருக்க கூகிள் வரம் ஒரு 16 வயது பருவத்திற்கு பட்டு சாமரம் விரித்துள்ளது. இந்திய சிறுவர்கள் இன்னும் முழுமதியுடன் இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு இளம் குருத்து இங்கே தன் வெற்றியை முழங்கி இருக்கிறது அரசு பள்ளியில் படித்த கல்வியும் உயர்ந்தவை என்று மீண்டும் நிரூபணம் .
                       சண்டிகர் மாநிலத்தின் செக்டார் 33 பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் ஹர்ஷித் சர்மா அடுத்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் இருக்கும் கூகிள் நிறுவனத்தின் பணியாற்ற உள்ளார்.
தன் திறமையை கிராபிக்ஸில் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்   இந்த இளம் வாலிபன்  அதற்கு அவன் வாங்க போகும் சம்பளம் பயிற்சி காலத்தில் 1 வருடத்திற்கு 4 லட்ச்மும் பயிற்சி முடிந்த பின் மாதம்ம்ம்ம்ம்ம்ம்ம் 12 லட்சம் வழங்கப்படவுள்ளது .

விடா  முயற்சி விஸ்வரூப வெற்றி தரும் என்ற வாக்குகேற்றப  10 வருடகாலம் கிராபிக்ஸ் டிசைனில் தேர்ச்சி  பெற்று தன் திறமையை வெளிப்படுத்தி கூகிள் இணைத்துவிட்டார்..... இதை தவிர கற்க்கும் காலத்திலேயே போஸ்டர்கள் தயாரித்து பாலிவுட் மற்றும் ஹாலிவுடில்  விற்று தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ....இவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள்..... ஆசிரியர் பிள்ளை மக்கு என்ற வாக்கை பொய்யாகியவர் ஹர்ஷித் சர்மா!

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.என்பதை நிரூபித்துள்ள இந்த இளம் குருத்தை பாராட்டுவோம் 

திங்கள், 11 மார்ச், 2013

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

இங்கு ஒரு மனிதம் தன்னை வழங்கி தேவனாகியதோ படித்தீர்களாநான் பத்திரிகையில்  படித்ததை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்  இதை பற்றி கல்விக்கு புகழ் சேர்க்கும் மற்றும் ஒரு தலைமகன் யார் இவர் ?




புதுக்கோட்டையை அடுத்த நெடுவாசல் வடக்குப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கருப்பையன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது முதல் சமூக சேவைக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். சமூக சேவை..? கருப்பையன் மாற்றியிருப்பது ஒரு பள்ளியை மட்டுமல்ல... ஒரு கிராமத்தை, ஒரு சமூகத்தை! 

ஆம் வியப்பாக இருக்கிறது இப்படியெல்லாம் மனிதன் நினைக்கிறானா ,இருக்கிறானா ?இவரு சொல்லறாரு நம்ம  அரசாங்கம்,

 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைவான ஊதியம், ஒரு மாதம் வரலைன்னாலும் சம்பளம், மழை பெய்தால் விடுமுறை, சம்பளத்துடன் கூடிய பயிற்சி, பெண் ஆசிரியர்களுக்குப் பேறுகால விடுமுறை ஆறு மாதம்... இவ்வளவும் கொடுக்குது. அது போக, மாணவர்களுக்கு நாலு முறை சீருடை, பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், காலணினு படிப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செஞ்சு கொடுக்குது. இவ்வளவு சலுகை, வசதிகளுக்குப் பிறகும் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கலைன்னா, தப்பு அரசாங்கம் மேல இல்லை. நம்ம மேலதான்!' 

எப்படி இப்படியெல்லாம் உண்மைய் உரைக்க முடியுமா? இதோ ஒரு சாட்ச்சி நம்ம நாட்டுமேலே பற்று வர வைக்கிறார்  கல்வி மட்டுமல்ல சாப்பாடு துணி இலவச அரிசி இப்படி எத்தனையோ தரும்அரசாங்கம் மேல நல்லதை நினக்க வைக்க கூட இந்த மாதிரி வள்ளல்கள் தேவைபடுகிறார்கள் 
இவரும் கஷ்ட்டபட்டு படித்து முன்னேறியவர் முதலில் அரசு ஆசிரியாராக இருந்து   செய்ய நினைத்ததை செய்ய  மற்றவர் களிடமிருந்து ஒத்தொழைப்பு  கிடைக்கவில்லையாம் உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்ய முதலில் நிற்பார்கள்
தலைமை ஆசிரியாராக பொறுப்பேற்றவுடன் இந்த கிராமத்திற்கு பணி செய்ய இவரே கேட்டு வந்திருக்கிறார் முதல்நாளே இவருக்கு ஒரு சினிமா காட்ச்சியை காட்டி இருகங்க இவருக்குன்னு இருகிற நார்காலியைதான் செத்து  போனவங்களை ஊட்காரவைக்க பயன் படுத்திவந்தங்கலாம் அங்குள்ளவர்கள் அட தெய்வமே !

பிறகு அங்குள்ளவர்களுக்கு மெல்ல விழிப்புணர்வை கொண்டுவர முயற்சி செய்து வெற்றியும் கண்டுவிட்டார் 

இங்கேயும் நம் அரசாங்கம் இவருக்கு கை கொடுத்துள்ளது ஒரு கிராமம் சுகாதாரமாக இருந்தால் அந்த கிராமத்திற்கு 3 லட்ச்ச பணம் கிராம வளர்ச்சிகாக கொடுகிறதாம் வாழ்வியலில் முக்கிய  விஷயமான கழிபறை வசதிக்கு 2000 ரூபாய் வழங்குகிறதாம் இவர் அரசாங்கத்தின் பல நல்ல திட்டங்களை பயன் படுத்தி அங்கு மறு மலர்ச்சியை  கொண்டுவந்து இருக்கிறார்  
வாழ்க நம் அரசாங்கம் வாழ்க நல்லவைகள் செழிதொங்கட்டும் 

இவரல்லவோ மனிதன்     வாங்கி தான் ஏப்பம் விடாலாம் என்று நினைக்கும் மனித  கூட்டத்தில் நடுவே 

 நல்லவர்கெல்லாம் சாட்ச்சிகள் 2 ஒன்று மனசாட்ச்சி 
ஒன்று தெய்வத்தின்  சாட்ச்சியம்மா 
இது தான் உள்ளத்தின் சாட்சி உண்மையின் சாட்சி 

இவர் சொல்லறதே கேட்கும் போது மனம் சிலிர்கிறது
"படிப்பு வராத மாணவன்னு யாருமே இல்லை. ஒரு ஆசிரியருக்கு விவரம் தெரியாம இருந்தால், அவருடைய மாணவர்களுக்கும் எதுவும் தெரியாது. கற்பிக்கும் முறை மூலமா எந்த மாணவனையும் வல்லவனா, நல்லவனா மாத்தலாம். அதைத்தான் நான் பண்றேன்."அரசாங்கம் எல்லா வசதிகளும் தந்திருக்கு. அதை மாணவர்களுக்கு வாங்கித் தரும் பொறுப்பு மட்டுமே நம்முடையதுனு ஒவ்வோர் ஆசிரியரும் உணர்ந்தாலே, அடுத்த தலைமுறை கம்பீரமாக நிமிரும்!''

இப்படியும் மனிதன் வாழத்தான் செய்கிறான் நாம் வாழும் காலத்திலேயே 

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் 
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
ஊரவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம் 
மனம் மனம் அது கோவிலாகலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையைய் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்

ஞாயிறு, 10 மார்ச், 2013

குப்பையும் கோபுரம் ஆகுதாம்





உலகத்து சுற்றுசுழலுக்கு   பெரிய பிரச்சனை இந்த பிளாஸ்டிக் குப்பைதாங்க இதை ஒழிக்க ரொம்பவே முயற்சி நடக்குது 

நம்ம நாட்டை  பற்றி  இருக்கற பிரச்சனையில் இது ரொம்பவே முக்கிய இடம் பிடிச்சி இருக்கு நாம் நாட்டிற்க்கு வர வெளி நாட்டு டூரிஸ்ட் -ங்க வந்து போன பிறகு சொல்லற முக்கிய குறையே இது தாங்க எங்கு பார்த்தாலும் அங்கு குப்பை  இதை  சரி பண்ண முடியுமா ?

இதோ இந்த விஷயத்தில் ஐடியா திலகமா திகழுதாம் தைவான் நாடு எப்படினா?   மனிதர்கள் உருவாக்கும் பல்வேறுவகையான கழிவுகள், மனிதர்களுக்கு மாபெரும் தலைவலியாக மாறியிருக்கிறது இல்லையா . இந்த தலைவலி, தைவான் நாட்டை கடுமையாக பாதித்ததன் விளைவு, 

அந்த நாட்டு அரசாங்கம் அந்த கழிவுகளையே தங்களின் தேவைகளுக்கான மூலப்பொருளாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருகாம் உலக புகழ்பெற்ற மின்னணு தொழில் நிறுவனங்கள் பலவும் தங்களின் உற்பத்தி நிலையங்களை தைவான் நாட்டில் வைத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், தைவான் நாட்டு மக்கள், உலக அளவில் மின்னணு சாதனங்களை அதிகம் உபயோகிப்பவர்களாம் இதன்  காரணமாக ஏற்படும் கழிவுகளை எல்லாம்   வெறுமனே நிலத்தின் மிகப்பெரிய பள்ளங்களில் இட்டு நிரப்பிவந்த தைவான் நாட்டு அரசுக்கு கடந்த சில ஆண்டுகளாக அதில் பெரும் சிக்கல் உருவானது. இருக்கும் பள்ளங்களையெல்லாம் நிரப்பிவிட்ட நிலையில், இந்த குப்பைகளை கொட்டுவதற்கு தைவானில் புதிய நிலமோ பள்ளங்களோ இல்லை.எவ்வளவுதான் பள்ளம் தோண்டுவது இதுவோ ஒரு குட்டித்தீவு
 
எனவே 2010 ஆம் ஆண்டு முதல் தைவானில் உருவாகும் குப்பைகளை நிலத்தில் புதைக்கும் பழக்கத்தை அந்நாட்டின் அரசாங்கம் முற்றாக தடை செய்து உத்தரவிட்டது. அன்று முதல் தைவானில் உருவாகும் மின்னணு குப்பைகளும் முழுமையாக மறுசுழற்சி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படி பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்களின் இருக்கைகள் என்று பல உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் உச்சகட்டமாக, துணிகள் கூட மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய துணிவகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 வாவ் !!வாட் அன்  கிரெட் ஐடியா சர்ஜி 

இது மட்டுமா இதோட அடுத்த கட்டத்தையும் பாருங்க ........
மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டே கட்டும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறதாம் . இதில் மறுசுழற்சி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு ஒட்டுமொத்த கட்டிடமும் கட்டப்பட இருப்பதாக கூறுகிறார் இந்த கட்டிட வடிவமைப்பில் ஈடுபட்டிருக்கும் தைவானின் பிரபல கட்டிடகலைஞர் ஆர்தர் ஹவுங்.
இந்த கட்டிடத்தின் சுவர்கள் வெளியில் இருக்கும் சூரியஒளியை உள்ளே விடும்படியானதாக இருக்கும் மேலும் இந்த கட்டிடம் கடும்புயலை தாங்கும் அளவுக்கு உறுதியாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

எவ்வளவு முக்கியாமான கண்டுபிடிப்புங்க இது மட்டும் சக்சஸ் ஆயிடுச்சின்னு வச்சிகோங்க குப்பை கூட தங்கம் விலைக்கு விக்கற நிலைமை வரலாம் நாம அப்பவும் முன்னேறுவோமா நம்ம நாட்டின் அழகை பாதுகாத்து பணம்  பார்ப்போமா  இல்லை குப்பையை ஏற்றுமதி செய்துகிட்டு  இருப்போமா தெரியாது ?

புதன், 20 பிப்ரவரி, 2013

கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் -பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன்


காலம் மாற்றதின்  இதோ மற்றோர் உதாரணம்
 
  நம் சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் இருண்ட, ஆனால் முக்கியமான ஒரு நிகழ்வு இது  காலனிய ஆட்சி காலத்தின் போது 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று, ஜாலியன்வாலா பூங்காவில் கூடியிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக் கணக்கானோர் மரணமடைந்தனர்.(வாழனும் என்பதற்க்காக இறந்தவர்கள்)

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கேமரன்-பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் பூங்காவிற்கு சென்ற போது டேவிட் கேமரன் அங்குள்ள வருகையாளர் ஏட்டில் இந்தக் கருத்துக்களை எழுதியுள்ளார்.

இந்தச் சம்பவம் பிரிட்டனின் வரலாற்றில் 'மிகவும் அவமானகரமான ஒன்று' என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.ஜாலியன்வாலா பாக் படுகொலையை மறக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார் .(மறப்போம் மன்னிப்போம் என்ற சொல்லுக்குள் மறைந்து வாழ்பவர்கள் நாங்கள்) 
 
 அதே நேரம் இந்தச் சம்பவம் தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தும் அவர் மன்னிப்பு கோரவில்லை.

பஞ்ச் -( அவங்கல்லாம் அவங்க கிட்டேயே பாவ மன்னிப்பு கேட்டுகிடுவாங்க இல்ல.)

நம்ப முடியவில்லை .....




ஆம் நம்ப முடியவில்லை இரட்டைமாடுவண்டி அச்சாணிகள்  கழலாமல் ஒரே விஷயத்தில் ஒத்து போனது 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான விஷயத்தில் நம்முதல்வர் ஜெயலலித்தாவும் முன்னால் முதல்வர்  கலைஞ்சர் கருணாநிதியும்   (எதிர்கட்சி தலைவரும் )ஒத்துமையாய் கருது வெளியிட்டுள்ளது மிகவும் வியப்பு வரவேற்க  தக்கது 
தமிழக முதல்வர் ஜெயலலிதா ,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் புரிந்ததை உறுதிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஐ.நா அவையில் கண்டனத்தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும். அதுகுறித்த அமெரிக்க முயற்சிகளில் இந்தியாவும் ஒத்துழைக்கவேண்டும் மேலும் தமிழர்கள் இலங்கையில் கண்ணியமாக வாழவகைசெய்யப்படும்வரை இலங்கைமீது பொருளாதாரத்தடை விதிக்கப்படவேண்டுமன அவர் இன்று புதன் கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே போன்று திமுக தலைவர் கருணாநிதியும் இலங்கை மீது போர்க்குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்துவரும் முயற்சிகளுக்கு இந்தியா வலு சேர்க்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.(தூங்கறவங்களை எழுப்ப முடியும் தூங்குவது போல் நடிபவனை எப்படி எழுப்புவது விழித்தவர்களே கண்ணைகசச்கி கொண்டு இருக்கும் போது )

பாலகன் பாலச்சந்திரன் சேனல் 4 வெளியிட்டிருப்பதைப் போல, கொடூரமாக கொல்லப்பட்டிருந்தாலும், போரின் போது ராணுவத்தினரால் கொல்லப்பட்டிருந்தாலும் எப்படியும் அது கொலைதான். அப்படி கொலை செய்யப்படும் அளவிற்கு, அந்தப் பாலகன் செய்த குற்றம் என்ன? அதற்கு சிங்கள அரசு உலகத்திற்குப் பதில் சொல்லித் தானே ஆக வேண்டும் என சுட்டிக்காட்டுகிறார் கருணாநிதி.(ஹிட்லரின் வழியை தேர்ந்தெடுத்த பின் பாலகன் என்ன பாரியாள் என்ன) 

கடந்த ஆண்டே, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கை அரசு கடந்த ஓராண்டு காலத்தில் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறைகூறுகிறார் கருணாநிதி.(புகை அடங்க நேரமாகுமோ) 

திங்கள், 18 பிப்ரவரி, 2013

மதில் மேல் பூனையாய்

உலகில் 
மரண தண்டனை இன்று மதில் மேல் பூனையாய் எப்பொழுதும் அல்லாடி 
(இந்த பக்கம் மா அந்த பக்கமா) கொண்டு  இருக்கிறது 
ஆம் உலகில் 140 க்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை முற்றாக ஒழிந்துவிட்டனாவாம்,

இந்தியாவில் ,1455 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி, ஆசிய மனித உரிமைகள் மையம் என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மரண தண்டனைகள் மூலமாக குற்றங்கள் தடுக்கப்படுகின்றன என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் கிடையாது என்றும் அது கூறுகிறது.

 இந்தியா அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனைகளை அளிப்பதாகக் கூறுகிறது. இருந்தும் நாட்டில் மூன்று நாட்களுக்கு ஒருவருக்கு என்ற வகையில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 132 பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது.
மேலும் கடந்த 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 4,321 தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பளிக்கப்பட்டு, அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


மகாத்மா காந்தியை கொன்ற நாத்துராம் கோட்சேவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட போதிலும் அதனால் பிற அரசியல் கொலைகளை தடுத்து நிறுத்தமுடியவில்லை.
இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பஞ்சாபின் முதல்வர் பியாந்த் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் லலித் மாகேன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.


ஆனால் கடந்த 2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் 36,202 பேர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 34,305 ஆக குறைந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 19 கோடியாக உயர்ந்தும் கொலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.(அப்படியானால் நாட்டில் மூன்று நாட்களுக்கு  ஒன்று என்ற மரண தண்டனையை  மாநிலத்திற்கு  ஆறு நாடகளுக்கு  ஒன்று என்று சட்டம் வந்தால் கொடூரகொலைகளின் சாயல் நிற்க்குமோ )

கடந்த 15 ஆண்டுகாலப் பகுதியில் 4 பேர் இந்தியாவில் தூக்கிலிடப்பட்டுள்ளனர் அவர்களில் இருவர் கடந்த நான்கு மாதங்களில் தூக்கிலிடப்பட்டனர்.
கே ஆர் நாராயணன், அப்துல் கலாம், பிரதீபா பாடில் ஆகிய மூன்று ஜனாதிபதிகளும் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.(என்ன செய்யவது குற்றத்தின் கொடூரம் மனித நேயத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறதே )

பிரணாப் முகர்ஜி பதிவியேற்ற 7 மாதங்களில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட 7 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இவர்களில் இருவர் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் 9 பேரின் கருணை மனுக்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதிலும் சில பாரபட்சங்கள் காட்டப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. (குற்றங்களுக்கும் விலை போகும் விமர்சனங்கள் )
மனிதன் அல்லது மனிதர்கள் காட்ட தவறிய தனிமனித ஒழுக்கத்தையும் மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் சட்டம் காட்ட வேண்டுமாம் 


வியாழன், 14 பிப்ரவரி, 2013

சந்தனக் கடத்தல் வீரப்பனின் ''வனயுத்தம்''



சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட ''வன யுத்தம்'' படத்தின் தயாரிப்பாளர்கள், வீரப்பனின் மனைவிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க ஒத்துக் கொண்டுள்ளனர்.
வீரப்பனின் வாழ்க்கையை பற்றிய வன யுத்தம் என்ற  இந்தப்படம் இன்று முதல் திரையிடப்படுகிறது. இந்தப் படம் வீரப்பனின் குடும்பத்தின் அந்தரங்கத்தை மீறுவதாக இருப்பதுடன் வீரப்பனின் மகள்களின் திருமணத்துக்கும் பிரச்சனைகளைத் தரக்கூடியது என்று கூறி, அவரின் மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

முதலில் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 4 காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட அனுமதி அளித்தது.ஆனால் வீரப்பனின் மனைவி முப்பதுக்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்ட வேண்டும் என்று சொல்லியிருந்தார்.இதன் காரணமாக இவர் மேலும் இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இரு தரப்பும் இந்த விஷயத்தைகுறித்து பேசி ஒரு உடன்பாட்டுக்குவருமாறு சொன்னார்கள். 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டும் பட்சத்தில் வழக்கை திரும்பப் பெறுவது என்று முடிவு எடுக்க பட்டது .

இந்தப் படம் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளவைகள  நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

இந்த படத்தின் இயக்குனர் ரமேஷ், ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள வீரப்பனின் 4 கூட்டாளிகள் உட்பட பலரை நேரில் சந்தித்துப் பேசி இந்தப் படத்தை எடுத்துள்ளதாகக் கூறி நடந்த சம்பவங்களை அப்படியே மக்கள் முன் கொண்டு வருவதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார். மேலும் பணம் பெற மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவதாகக் கூறியுள்ளார் .

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

இரண்டு விரலில் ஒன்றை தொடு


வினோதம் நத்தை தத்தி தத்தி வித்தை  காட்டுகிறதாம்  நாம தான் அதை கூர்ந்து கவனிக்க வேண்டுமாம்.

ஆமாம் இனிமே இந்த இரண்டு விரலில் ஒன்றை தொடு என்ற நகை சுவைக்கு வேலையில்லையாம்

மழை வருமா வராத ?என்று வானிலை அறிவிப்பாளரை கலாய்க வேண்டாமாம். 

நாமே கண்டுபிடித்து விடமுடியுமாம் எப்படி ?இப்படிதான்
அதாவது இந்த நத்தை இருக்கு பாருங்க ((நத்தை இனங்களில் பல வகை  இருக்கின்றன. அவை தரையிலும், குளம், குட்டைகளிலும், ஆறுகளிலும், கடல் நீரிலும் பார்க்கமுடியும் மேலும் நத்தையின் உடலுக்குள் எலும்புகள் கிடையாது. உடம்பின் பெரும் பகுதி தசையினால் ஆனது. ஆபத்துக் காலத்தின் போது உடற்பகுதியை முதுகில் காணப்படும் திமில் போன்ற ஓட்டினுள் இழுத்துக்கொள்ளும் .
நத்தைகள் தமது வயிற்றுப் பகுதியில் காணப்படும் தசையினாலேயே மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இப்பகுதியே பாதம் எனப்படும்.
நத்தைகள் தமது வாழ்நாளில் பெரும்பகுதியை உணவு தேடுவதிலேயே கழிக்கின்றன. உணவை அவை வானை மூலம் அறிகின்றன.))

அது மழை வருவதை  உணர்ந்து கொள்வதில் கண்டு பிடிப்பதில் கில்லாடியாம்  இது  ((தலைப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு ஜோடி உணர்கொம்புகளைக் கொண்டு இருக்கின்றன.
இந்தக் கொம்புகள் தேவையான போது வெளியே நீட்டவும், உள்ளே இழுக்கவும் ஏற்றவகையில் உள்ளன.))
நத்தை கம்பத்தையோ ,தாவரங்களையோ நோக்கி நடந்தால் மழை வர போகிறது என்று அர்த்தமாம்.

இனிமே மழை வருமா என்று தெரிஞ்சிக்கணும்னா நத்தை பின்னால் போகவும் குடையுடன்!  

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

கடல் திரைப்பட முத்தக் காட்சி ஏற்புடையதா?


கடல் திரைப்பட முத்தக் காட்சி ஏற்புடையதா?

பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் ஆக்கத்தில் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் கடல் திரைப்பட வெள்ளோட்ட வீடியோவில் கதாநாயகி, 15 வயதே ஆன துளசி, கதாநாயகனை உதட்டில் முத்தமிடுவது போல ஒரு காட்சி வருகிறது.

இவ்வளவு இளம் வயதில் பாலியல் உணர்வுகளைத் தூண்டும்வகையில் நடிக்க வைப்பது அறமா என ஒரு சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். (அட என்னபா இது நாமதானா ? ஒரு  சிலராமே  சில்லறையாய் இருப்பவர்களோ ?)

எழுத்தாளர் ஞானி இது பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். அவர் திரைப்பட இயக்குநர்களுக்கு சமூகப்பொறுப்பு வேண்டுமென்கிறார்.(ஹ ஹ ஹா ....இதுதான் இந்த வருஷத்தோட பெஸ்ட் ஜோக்-ஆ  இருக்கும் சமூக பொறுப்பு வேண்டுமாம் யாரை பார்த்து அரசை  பார்த்து என்ன தைரியம் அதாங்க சினிமா வேற அரசியல் வேறயா இன்னைக்கி )  

பிரபல இயக்குநர் பாக்கியராஜ் நடக்காததை ஒன்றும் அப்படிப்பட்ட காட்சிகள் காட்டிவிடவில்லை, ஆனாலும் அவ்வளவு வெளிப்படையாக இல்லாமல் இருந்திருக்கலாம் என்கிறார்.(இவரு பாருங்க நாம ஸ்க்ரீனுக்கு வெளியேவே நகர் வலம் வந்து பாலியல் வல்லுரவைஎல்லாம்காட்ட வழி  வகுத்துவிட்டு திருவள்ளுவர்  இவரு மேல வந்தது  போல பேசறாரு )

இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா


தில்லி பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகளை 

மறுத்துள்ளனர்  

( அப்படி போடு இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா) 


இந்தியாவை உலுக்கிய தில்லி பாலியல் வல்லுறவு சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர் நீதிமன்றத்தில் தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை முறைப்படி மறுத்துள்ளனர்
 குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட வாகனம் (கோப்புப் படம்)                                                                        
23 வயது மாணவியை ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர் மீது இந்த வழக்கை விசாரிப்பதற்கென்று விசேடமாக உருவாக்கப்பட்டுள்ள விரைவு விசாரணை நீதிமன்றம், முறைப்படி குற்றப் பத்திரிகையை வாசித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட வாகனம் நீதிமன்றம் வந்து குற்றச்சாட்டுகளைக் கேட்ட ஐந்து பேரும் தாம் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.(பின்ன காந்தி சொல்லிடாரு இல்ல அதை யாருனா கடை பிடிக்கிறோமா மூன்று  குரங்கு பொம்மையை காமிச்சி கண்ணை காது  வாயை முடிக்கனும் எப்பவோ சொல்லி கொடுத்துடாரே இனியாவது பின்பற்றுங்கள் நாடு சுபிட்சம் அடைய )

இந்திய குற்றவியல் சட்டத்தின் 13 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஐந்து பேர் மீதும் நீதிபதி யோகேந்திர கன்னா வாசித்தார்.