செவ்வாய், 16 ஜனவரி, 2018

பொங்கியதை ................

காணும் பொங்கலாம் பதிவுகள் காண வந்துவிட்டேன்




போகி  என்று போகிளால்
புகையின் புலம்பல் பாடி பொங்கிட 
பொங்கல் வந்தது இங்கு ....
பொங்கிய மக்கள் எல்லாம்
சுவைக்க பட்டார்களா, உணரப்பட்டார்களா 
யாம் அறியோம் பராபரமே ....
பொங்கிட அரிசியும் 
சுவைத்திட கரும்பையும்  
கொடுத்தவர்கள் சுகப்பட்டார்களா  
யாம் அறியோம்  பராபரமே 
கட்டிய சுவருக்குள் வைத்திட்ட பொங்கலின் வாசம் 
அடுத்தவர் வீட்டின் சுவர் நுகர்ந்ததா 
யாம் அறியோம் பராபரமே
தை வரும்  , பொங்கல் வரும், தொடர் விடுமுறை வரும் 
தொல்லை செய்யும்  தொலைக்காட்சி முன் 
பல்லிளித்து ,முன் நெற்றி சுருங்கி, 
வாய் குவித்து, கண்விரித்து , தலையாட்டி
நடு நடுவே  அலங்காரமாய் 
பொங்கல் வாழ்த்து 
கைபேசியில் கலைநயத்துடன் 
பொங்கல் ருசித்து, கரும்பு சக்கை குவித்து 
பொழுது முடிந்தது பராபரமே 

செவ்வாய், 9 ஜனவரி, 2018

மழை ஆடிய மங்காத்தா


மழை ஆடிய மங்காத்தா என் வீட்டுடன் 
தோற்று போயி முகம் தூக்கி 
முகாந்திரம் பாடி  கொண்டிருந்தது 
என் வீடு

முகாரியுடன் என்னை பார்த்து 
வரும் பண்டிகையெல்லாம் கொண்டாடுகிறாயே............
என் சுகவீனத்திற்கு மருத்துவம்  பார்த்தாயா ????
இண்டு ஈடுக்கெல்லம் என்னுள்ளே உன் செல்ல மழை 
தன் சிங்காரத்தை காண்பித்திருக்கிறது..... 
நான் ஈர சட்டையுடன் சளி பிடித்து ஒழுகினேனே
இனியும் என்னை நீ கவனிக்காமல் இருந்தால் 
அதிக தும்மல் வந்து  ஆபத்தை கொடுத்துவிடும் எச்சரிகிறேன் 
பயந்து மருத்துவம் துவங்கினால்...

வீடு வாசல் கதவு கோபித்து கொண்டது
என்ன ???என் மேல் மரியாதையில்லையா ......
என்னை மூட கஷ்டப்பட்டது  மறந்துவிட்டதா? 
நான் உனக்கு காவல்காரனாய் உழைக்கிறேன்
என்னையும் கவனி என்று 
சரி தான் இங்கும் கோபத்தை குறைக்க ஆயுதமானால்...

வீடு சுவர்கள் நீ மட்டும் புதுசு புதுசாய் போட்டு அலைவாய் 
நான் மழையில் நனைந்து  நனைந்து 
நயந்த துணியுடுத்தி இருப்பது 
உன்கண்ணுக்கு குளிர்ச்சையாய் இருக்கிறதோ 
என்று அதுவும் முகாரி  பாடுகிறது ...

இதோ என் நேரங்களையெல்லாம் 
தனதாக்கி கொண்டு தன் சுகாதாரத்தை நோக்கி 
வீறு நடை நடந்து கொண்டிருக்கிறது .....
என் சுகவீனத்திற்கு ஆப்பு வைத்து 
இடையறா வேலையின் தயவை கொடுத்து 

வலைபூவின் வாசல் கதவை கூட திறக்கமுடியவில்லை
வலைப்பூ நண்பர்களின் வாசலையும் எட்டி  பார்கவில்லை இன்னும் 
தொடரும் பணிமழையால்
                                                                                                                      பூவிழி 

படம் கூகிள்

சனி, 30 டிசம்பர், 2017

புத்தாண்டு .... ஆங்கில புத்தாண்டு


புத்தாண்டு .... ஆங்கில புத்தாண்டு  மக்களின் மகிழ்ச்சியை    கொண்டாடி வருகிறதா இல்லை அப்பாடா இந்தாண்டு  போயிற்று இந்த உலகத்தில் என்ற   நோக்கத்தில் கொண்டாட படுகிறதா புரியவில்லை இருந்தும் எனக்கு தெரிந்து  40  வருஷங்களுக்கு  மேல் இருந்து கொண்டாடப்பட்டுத்தான் வருகிறது....
 அதற்க்கு முன்னர் எப்படியோ தெரியவில்லை அவரவர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தினரோ ? 

இப்பொது இன்றைக்கு நாம் நமக்கு மட்டும்   திடிரென்று அதில் மாற்றம்   கொண்டு வர வேண்டுமென்பது எதிர்பார்க்காத வருத்தத்தை கொண்டு வரத்தான் செய்யும் மக்கள் மனதில் .....
இந்த ஒரு நாள் கொண்டாட்ட  நாள் என்று மனதில்  பதிந்து போய்விட்டது.


கொஞ்ச வருஷத்திற்கு முன்வரை  புத்தாண்டுக்கு பட்டாசு வெடிப்பார்கள் ,புது சினிமா ரிலீஸ் ஆகும் அதற்க்கு முந்தி அடித்து போவார்கள், கோவிலுக்கு போவார்கள் .

இன்று நிலை மாறிவிட்ட்டது கலாச்சரா சீரழிவு என்ற போர்வையை போர்த்தி கொண்டது ஆங்கில புத்தாண்டு .இதன் காரணமாய் பல குற்றங்கள் புதிது புதிதாய் அலங்கரிக்கிறது சமீபமாய் ஒவ்வொரு வருஷமும். 

இன்றைய இளைய  தலைமுறையினர் வரைமுறையற்று கொண்டடாத்தை திண்டாட்டமாய் ஆகிவிடுகிறார்கள் ஆண் பெண் பேதமின்றி 
கண்ணுக்கு தெரிந்து சில குற்றம்  கண்ணுக்கு தெரியாமல் பல ....

அதனால் இந்த நாளை கொண்டாட  கூடாது என்று தடை விதிக்க படுகிறது. 
பல மாநிலங்களில் இதற்க்காக  பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினாரால் நடத்தப்பட போகின்றனவாம் 
தலைக்கு தலை நாட்டாமையாகிவிட்டால் என்னவாகுமோ என்ற பயமும் வருகிறது.  அதே சமயம் கொஞ்சம் ஒழுங்கு படுத்த படுமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது   
இதை எந்த அளவு மக்கள் ஏற்று கொள்வார்கள் என்பது கவலை அளிக்கிறது அப்படி ஏற்று கொள்ளாமல் இருந்தால் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்தால் கஷ்டப்பட போவது நாமே 
உற்சாகத்தை கொண்டு வருவதற்கு  பதிலாய் வருத்தத்தை தாங்கி விடுமோ இந்த நாள்  என்ற அச்சம் வருகிறது...... 
எந்த பிரச்னைகளும் குற்றங்களுமற்று இந்த நாள் கடந்திட வேண்டுமென்று பிராத்தனை எழுகிறது 

தோழமைகளும் பிராத்தனை செய்து கொள்ளுங்கள் இந்த புத்தாண்டு இனிய  புத்தாண்டாய் கடந்து வர, மலர்ந்துவர...... 



வியாழன், 28 டிசம்பர், 2017

காஃபி பிரியர்களுக்கு.....



ஃபிடேன் காஃபி ரெசிபி  


காஃபி  பிரியர்களுக்கு ஒரு புது காஃபியாம் 
இது என்ன பார்ப்போமா 
அதுவும்  இப்போ குளிர்காலம் எல்லோருக்கும் சூடா காஃபி, டீ  குடித்தால்  நன்றாக இருக்கும் என்று தோன்றும்.... அப்படி இரண்டு மூன்று முறை காஃபி குடிப்பவர்கள் இந்த முறையை ஒரு முறை பயன்படுத்தி  பாருங்கள் 
போதும் போதும்  எப்பதான் குறிப்பை சொல்ல போற மாலை காஃபி குடிக்கும் நேரம் வந்துவிடுவதற்க்கு முன் எல்லோரும் பார்க்கட்டும் ........சரி குறிப்புக்கு போவோமா

காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன், 
பால் - 1/2 கப் 
கொதிக்கும் நீர் - 1/2 கப், 
சர்க்கரை - தேவையான அளவு

செய்யும் முறை.;- (இது ரொம்ப அளப்பறையா இருக்கே) 

முதலில் ஒரு கப்பில் அல்லது சின்ன கிண்ணத்தில்  காபி பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு ஸ்பூன் பால் விட்டு முட்டை அடிப்பது போல் (முட்டை அடிப்பதுனா ஆம்பிலேட் போடுவதற்க்கு அடிப்போமே (பீட்) அது) ஐந்து நிமிடம் தொடர்ந்து அடிக்கவேண்டும்.  அப்பொழுது அது நிறம் மாறி ஒரு பேஸ்ட் போல் வரும், வர வேண்டும்.

ஒருபக்கம் அடுப்பில் பாலை எவ்வ்ளவு தண்ணீர் நீங்க  காஃபிக்கு சேர்ப்பீர்களோ அந்த அளவு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் .
பிறகு கொதிக்க வைத்த பாலை அடித்து வைத்துள்ள  காஃபி பேஸ்டுடன்  (பசையில் ) கலக்க வேண்டும் .

இப்போ உங்க  காஃபி தயார் இது எப்போவும் நாம் குடிக்கும் காஃபி போல் இல்லாமல் வித்யாசமான சுவையுடன் அட்டகாசமாய் இருக்குமாம் காஃபி பிரியர்கள் செய்து பாருங்கள். சுவைத்து மகிழுங்கள்  

ஒரு காஃபிக்கு இவ்வளவு பில்டப்பா 
பின்ன வேண்டாமா 
இந்த காஃபி திரவம் காலையிலும்  மாலையிலும் உள்ளே செல்லவில்லையென்றால் நிறைய பேருக்கு பீபீ யே வந்துவிடும். ....
அன்று அவர்கள் மூட் அவுட் ஆகிவிடுவார்கள். 
கொஞ்சமா சாப்பிடுவதால் ஒன்றும் தப்பில்லை உடல் நலத்திற்க்கு கேடு வந்துவிடும் என்ற பயமே மனிதனை நிம்மதி இழக்க செய்யும் ....   மன நிம்மதி முக்கியமில்லையா ...............