ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

இராமாயணமும் கேள்விகளும்

இராமாயணமும் என் கேள்விகளும்
இராமாயணத்தை பற்றி எப்பொழுதும் விவாதங்கள் ஆண்டு ஆண்டாண்டு  காலமாய் வந்து கொண்டே இருக்கிறது எனக்கும் அதை படித்ததிலிருந்து கேள்விகள் உண்டு
இராமாயணம் உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கியதா எக்காலத்திலும் ஏற்று கொள்ள  படுவதாயிருக்கிறதா .....
எந்த  தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டினார் ....
இதுவரை பல விளக்கங்கள்  விவாதங்கள் கேட்டாலும் படித்தாலும் சொல்வது ஒருபுறம் ஏற்புடையதாக இருந்தாலும் தவிர்க்க முடியாத கேள்விகள் எழத்தான் செய்கிறது என்னுள் இராமன்  மனிதனாக காண்பிக்க பட்ட  ஒரு அவதார  புருஷன்    தந்தை சொல் மீறாதவன் அரசனானவன் நல்லாட்சி புரிந்தவன் ஹான்  இங்குதான் கேள்வியே எழும்பியது மேதாவியான எனக்கு 
ராமன் நல்லாட்ச்சி புரிந்தான் என்றிருந்தால் ஏன்  மக்கள் கீழான எண்ணப்போக்குக்கு உட்பட்டவர்களாக ஆளாக வேண்டும் ஸீதையும்  ஒரு பிரஜை தான் அங்கு அப்படி பார்த்தல் மற்றவருக்காக அவளுக்கு துரோகம் இழைத்து போல்தோற்றம்  ஆகவில்லையா தீர்ப்பு என்பது ஒரு பட்சமாக  ஆகலாமா என்னதான் பெருந்தன்மையாக சீதை கணவனுக்கு உதவ வந்தாலும் (காட்டுக்கு போவது தீக்குளித்தல தள்ளிவைக்கப்படுவது) அப்பொழுது  நாட்டில் ஆண்மக்கள் பிறன் மனைவியை சந்தேகிக்கும் உரிமையும் எல்லோரும் தீக்குளித்து நிரூபிக்க உட்படுத்த பட வேண்டும் என்பது நிர்பந்தமாகிறது அல்லவா  அதையும் ஒரு அரசன் கைக்கொள்ளும் போது
சந்தேகம் என்னும் மாய பிசாசை வளர்த்து கொண்டே போகலாம் என்று மீண்டும் கருவுற்ற பெண்ணை தள்ளிவைக்கிறான் எப்படிஇது சரியாகும் நல்லாட்ச்சி என்பது அறிவற்ற செயல்களுக்கு எண்ணங்களுக்கும் உடன்படுவதா இது தியாகமா ?
சரி மற்றோரு பெண்ணை காதலிக்கவில்லை காமம்  கொள்ளவில்லை என்பது உயர்வாக  காண்பிக்க படுகிறது ஏன் ஆண்  என்றால் இவையெல்லாம் எப்போது கைக்கொள்ளத்தான் வேண்டுமா பிடிக்கவில்லை  தோன்றவில்லை என்ற உணர்வு ஆட்படுபவர்களாக இருக்க கூடாதா எப்போதும் இந்த உணர்வுகளை கொண்டேதான் வாழ வேண்டுமா

வால்மீகி அவனை சாதரண மனிதனாகவே சித்தரித்து இருந்தாலும் அவதரமாக சித்தரித்து இருந்தாலும் தவறு தவறுதானே....

எங்கே நீயோ நானும் அங்கெ உன்னோடு என்று பின் பற்றி வருகிறாள்  இன்னொரு அரசன் சிவ தவம்  இருப்பவன் அழகுக்காக தன்னிலை இழப்பனாம் மேஜிக் செய்து அவளை கவர்ந்து செல்வானாம்  லாஜிக்கே இல்லாமல்..... 
கலியுகத்தில்தான் படங்கள்  கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்று சாபாமேற்றுள்ளோம்  என்று பார்த்தல் ......
திரேதா யுகத்திலும் லாஜிக் இல்லாமல் தான் வாழ்ந்து இருக்கிறார்கள் போல்.....
இவனும் தன் சொந்த விருப்பத்திற்காக போர் என்ற செயலில் இறங்குகிறான். மக்களை பணயம் வைக்கிறான். இது போதிக்கும் நூல் என்றால் எதை போதிக்கின்றது என்ற  குழப்பம் வருகிறது இன்றைய வளர்ந்துவரும் இளைய சமுதாயத்திற்கு சுருக்கமாக நல்லவை என்று சொல்வதற்கு ஏதேனும் உள்ளதாக மறுக்க முடியாமல் என்றால் எனக்கு தோன்றியவரை இல்லை என்பதுதான். 
அரசர்கள் நெறிமுறையற்றவர்களாகவே  காண்பிக்கப்பட்டுள்ளார்கள். மக்களை பற்றிய தனியாக உயர்வாக சொல்லும் படி எதுவும் வருவது போல் இல்லை துதி பாடுவதும் சாபம் விமோசனமும் மட்டுமே பிரதானமாக கான்பிக்கப்படுள்ளது. போர் என்பதே முக்கியமாக கான்பிக்கப்பட்டுள்ளது. 
தனிப்படட ஒருவனுக்காக எல்லோரும் போரில் இறங்குவதாக காண்பித்தது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை...... 
கடவுள் ஸ்தானத்தில் காண்பிக்க பட்ட இராமனுடன் ஏன் சீதை வாழ்வில்லை பூமி பிளந்து புவியன்னையை  ஏன் சரண் அடைய வேண்டும்????? 
என்ன மாரல்........காண்பிக்கிறது இங்கு  இது போல் இன்னும் கேள்விகள் பல உண்டு இங்கு நான் அரசன் என்பவன் பற்றி மட்டுமே காண்பித்துளேன் இராமனுக்கு போரில்  உதவியவர்கள் எல்லாம் ஆறறிவு படைத்தவர்கள் இல்லை ஏன் இவ்வாறாக எழுதப்பட்ட்து   என்ன உள்  நோக்கம்


கடைசியாக பெண் என்பவள் எல்லா யுகத்திலும் சோதனைக்கு உட்படுத்தப்படுபவளாகவே.... சமூகத்தினரால் பிரச்னை உட்படுத்தப்படுபவளாகவே.......
இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது இத்துடன் .... இங்கு.இன்று முடிக்கிறேன் . 

7 கருத்துகள்:

  1. Super regarding views on Ram sending Seetha to forest...like if someone doubts then what is the way to prove your wife ask her to come through fire???
    Actually when he asks her to come through fire for second time, she goes into the earth... actually I like that part, his ego must have hurt and must have realized his mistake later....(But whether the epic bringsout that part properly??? )
    Here, on her free will seetha leaves him instead of having a second innings of life after going through fire... here needs to appreciate seethe for her decision...யாராலும் ஆட்டுவிக்கப்படும் ஒருவனிடம் இல்லாமல் தன் சுயமரியாதையை காப்பாற்ற அவனை விட்டு செல்கிறாள்

    பதிலளிநீக்கு
  2. இப்படிலாம் கேள்வி கேட்டா உங்களை தேஷ்துரோகி ஆக்கிடுவோம்.

    நல்ல கேள்விகள்.. ஆனா, பதில் சொல்வார்தான் யாருமில்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா சந்தேகம் sis... நல்லாட்சி என்ற வார்த்தியில்.... நன்றி.

      நீக்கு
  3. கடவுள் என்று காட்ட நினைத்திருந்தால் அந்தக் காவியத்தைப் படைத்தவர் கதையை மாற்றி வேறு மாதிரி எழுதி இருக்கலாம். மனித பலவீனங்களுடன் படைக்கப்பட்டிருக்கும் காவியம் அது.

    சரி போகட்டும். இந்த சப்ஜெக்ட்டைத் தொட்டு விட்டீர்கள். நீங்கள் ஏன் ங்கள் பிளாக்கின் கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு இது பற்றியே கதை எழுத்தாக கூடாது? இப்போது செவ்வாய் தோறும் ஓடிக்கொண்டிருக்கும் "சீதை ராமனை மன்னித்தாள்" என்று முடியும் வரியைக் கொண்ட கதை எழுதுங்களேன். எழுதி sri.esi89@gmail.com என்கிற என் மெயிலுக்கு அனுப்புங்கள்.

    பதிலளிநீக்கு