செவ்வாய், 9 ஜனவரி, 2018

மழை ஆடிய மங்காத்தா


மழை ஆடிய மங்காத்தா என் வீட்டுடன் 
தோற்று போயி முகம் தூக்கி 
முகாந்திரம் பாடி  கொண்டிருந்தது 
என் வீடு

முகாரியுடன் என்னை பார்த்து 
வரும் பண்டிகையெல்லாம் கொண்டாடுகிறாயே............
என் சுகவீனத்திற்கு மருத்துவம்  பார்த்தாயா ????
இண்டு ஈடுக்கெல்லம் என்னுள்ளே உன் செல்ல மழை 
தன் சிங்காரத்தை காண்பித்திருக்கிறது..... 
நான் ஈர சட்டையுடன் சளி பிடித்து ஒழுகினேனே
இனியும் என்னை நீ கவனிக்காமல் இருந்தால் 
அதிக தும்மல் வந்து  ஆபத்தை கொடுத்துவிடும் எச்சரிகிறேன் 
பயந்து மருத்துவம் துவங்கினால்...

வீடு வாசல் கதவு கோபித்து கொண்டது
என்ன ???என் மேல் மரியாதையில்லையா ......
என்னை மூட கஷ்டப்பட்டது  மறந்துவிட்டதா? 
நான் உனக்கு காவல்காரனாய் உழைக்கிறேன்
என்னையும் கவனி என்று 
சரி தான் இங்கும் கோபத்தை குறைக்க ஆயுதமானால்...

வீடு சுவர்கள் நீ மட்டும் புதுசு புதுசாய் போட்டு அலைவாய் 
நான் மழையில் நனைந்து  நனைந்து 
நயந்த துணியுடுத்தி இருப்பது 
உன்கண்ணுக்கு குளிர்ச்சையாய் இருக்கிறதோ 
என்று அதுவும் முகாரி  பாடுகிறது ...

இதோ என் நேரங்களையெல்லாம் 
தனதாக்கி கொண்டு தன் சுகாதாரத்தை நோக்கி 
வீறு நடை நடந்து கொண்டிருக்கிறது .....
என் சுகவீனத்திற்கு ஆப்பு வைத்து 
இடையறா வேலையின் தயவை கொடுத்து 

வலைபூவின் வாசல் கதவை கூட திறக்கமுடியவில்லை
வலைப்பூ நண்பர்களின் வாசலையும் எட்டி  பார்கவில்லை இன்னும் 
தொடரும் பணிமழையால்
                                                                                                                      பூவிழி 

படம் கூகிள்

9 கருத்துகள்:

  1. அடடே கவிதையில் வலைப்பூ நட்பூக்களும் வந்து விட்டனரே...

    பதிலளிநீக்கு
  2. ஓ.... கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனா அங்கே பெரிய கொடுமை காத்திருந்ததாமே அப்பூடி இருக்கே இந்நிலைமை... அதானே பார்த்தேன் பூவிழி எப்படியும் ஓடி வருவா காணல்லியே என... ம்ம்ம் வீட்டில் வருத்தங்களை எல்லாம்ம் ஆவி பிடிச்சூஊஊஊ இது வேற ஆவி:) சுகப்படுட்த்ட்டு வாங்கோ.. ஒண்ணும் அவசரமில்லை.

    பதிலளிநீக்கு
  3. மழை நேரத்தில் கவனித்து கொள்ள வேண்டியது உடலைதான் வலைத்தளம் அதுபாட்டுல பாதுகாப்பாக இருக்கும் அதனால் உடலை கவனித்து கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  4. என்ன ஆச்சு? பணிகள் முடிந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. பணிச்சுமையா? மழையா??!! சென்னையிலா?!!! ஓ!! பனி பொழிவதைச் சொல்றீங்களா?!!! ஓகே ஓகே!!! அத்தனை பனியா?!!! சென்னையில்? முந்தைய வருடங்களை விடக் கொஞ்சம் கூடுதல்தான்...என்றாலும் ..
    ஆமாம் பனியால் கதவுகள் எல்லாம் முரண்டு பிடிக்கிறது தான். அவசரமா எழுதிட்டீங்களோ?!!! ஹா ஹா ஹா..பரவால்ல நிதானமா வாங்க பூவிழி!!! வலைக்கதவு எப்பவுமே திறந்தேதானே இருக்கும்! ஹாஹாஹா...மற்றபடி நலம்தானே?!! உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வேலை பளுவை கூட அழகிய கவிதையில்....அழகு

    பதிலளிநீக்கு
  7. வீட்டு வாசல் வேலை முடிந்தபின்...

    வலைபூவின் வாசல் கதவை திறக்கலாம்...

    வலைப்பூ நண்பர்களின் வாசலையும் ...

    உங்கள் வரவுக்காக காத்திருக்கும்

    அந்த அன்பு வாசல்கள்...

    பதிலளிநீக்கு
  8. வீடு கட்டும்போது ஆன செலவை விட புதுப்பிக்கும் போது ஆகிவிடுமே

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரி!

    பொங்கல் திருநாளின் பூந்தமிழ் வாழ்த்துக்கள்!
    எங்கும் மலர்க எழில்!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு