செவ்வாய், 7 நவம்பர், 2017

விலைவாசி

மழையில் நடக்கும் நிகழ்வுகளில் மீண்டும் அதை பற்றி


ஏங்க .....


குமார் சீரியஸா டீவியில் நியூஸ்   பார்த்து கொண்டிருக்கிறான் சாப்பிட்டு கொண்டே…….  மழையின் தாக்கம் சென்னையில் என்ன செய்து இருக்கிறது என்ற செய்திகள் பீதியை கிளப்பி கொண்டு இருக்கிறது.


ஏங்க ...திரும்பவும்  ராதியின் குரல் பெட்ருமில்  இருந்து வருகிறது


இப்பொழுது தான் அரைமணி நேரமுன்னாடிதான்   வேலையில் இருந்து கொட்டும் மழையில் தன் வீடு இருக்கும் சாலை மழை நீரில் மூழ்கி இருக்க நீந்தி வந்து சேர்ந்து அழுக்காய் நாற்றமடித்த  தண்ணீரின் சுவடு போக குளித்து வந்து உடகார்க்கிறான் உடம்பு சில்லிட்டு இருக்கிறது .


குமார் என்னடா இது என்பது போல் மணியை பார்க்கிறான் மணி 9.30 வெளியே மழை சத்தம் நாளைக்கு நிலவரம் என்ன ஆகும் என்ற  கவலையெல்லாம் பின்னோக்கி ஓடிவிடுகிறது. மெதுவாய் சில்லிப்பு தாங்காமல் இறுக்கமாய் மடித்து வைத்த  கால்கள பிரித்து டிவியை அணைத்துவிட்டு ஒரு பரபரப்புடன் படுக்கையறை செல்கிறான்.


அங்கே ராதி தன் இரண்டாவது கைகுழந்தையை தொட்டிலில் ஆட்டி   கொண்டு இருக்கிறாள் மூன்றுவயது வருண் உறங்கி கொண்டு குமாரின் வரவு தெரியாமல் மீண்டும் “ஏங்க”…..என்று கூப்பிடுகிறாள். குழந்தை விழித்துவிடுமோ என்ற குரலை உயர்த்தாமல் அவள் அருகில் நெருக்கத்தில் குமார் திடுக்கிட்டு திரும்புகிறாள் என்னவென்று குமாரின் முகத்தை பார்த்து முறைக்கிறாள்.


நியூஸ்ல என்ன சொல்லறாங்க மழை நின்னுடுமா நாளைக்கு என்று கடு கடுவென முகத்துடன்


இல்லயாம் நாளைக்கும் மழை இருக்காம்


ஐயோ இப்பவே ரோடு மூழ்கியாச்சு தண்ணி ஏறிடுச்சினா  இன்னமும் ....கொஞ்சம் போயி இரண்டு பெக்கெட் பால் வாங்கிட்டு வந்துடுறிங்களா அப்படியே பிரட் முடடை சிலவற்றை பட்டியலியிடுகிறாள்.


நேரத்தை பாரு ஏண்டி அப்பவே போன்ல சொல்லி தொலைக்கவேண்டியது தானே சே இதுக்குதான் ஏங்க ஏங்க னு ஏங்கிட்டு இருந்தியா….. இந்த மழையில  நீந்திக்கிட்டு திரும்பவும் போ சொல்லற


பிளீஸ் பிளீஸ் கொஞ்சம் வாங்கிட்டு வாங்க வருணுக்கு உடம்பு சுடர மாதிரி இருக்கு சாப்பிடாமலே படுத்துட்டான் சின்னத்துக்குத்தான் பால் இருக்கு நாளைக்கு தேவை படும் பால்காரன் நீந்திக்கிட்டு எப்ப வருவானோ ?


அவனை  இப்பொது கவலை  தொற்றி கொள்கிறது
மருந்தெல்லாம் இருக்கா கையில சட்டையை எடுத்து மாட்டி கொண்டே  

ம்அதெல்லாம்  இருக்கு  இப்போதைக்கு லேசா சுடர மாதிரிதான் இருக்கு உங்களுக்கு நாளை லீவ் விடுவாங்களா?


ம்கூம் அவன் ஏன்டி லீவ் விட்டுறான் அங்கேயா மழை கார்ப்ரெட்லலாம் நாம கஷ்ட்டத்துக்குகெல்லாம் லீவ் விடமாட்டான் படிச்சவ மாதிரி பேசு……

.
பெருமூச்சுவிடுகிறாள் சே இப்படி மழை விடாம பெய்யுதே நாளைக்கு சப்போஸ் டாக்டர்கிட்ட போகணும்னா என்ன பண்ணுவது என்ற யோசனை அவள் மனதில்
சே நல்ல வந்து மாட்டிகிட்டோம் என்று மறந்து போயி சத்தமாய் சொல்லிவிடுகிறாள் .

இப்ப சொல்லு  உங்க அப்பனை சொல்லணும் எங்க வந்து வாங்கியிருக்கார் பார் சின்ன மழைக்கே தண்ணி வந்து நிக்கிற இடத்தில ஒரு எமெர்ஜென்சினாகூட ஒரு டாக்டர் கிடையாது இங்க ஒரு போக்குவரத்து வசதி வேணுமின்னா கிலோமீட்டர் நடந்து போகணும் கேப்காரன் கூட உடனடியா வரமுடியாத இடத்தில ……


சும்மா எங்க அப்பாவை  சொல்லுங்க உங்க அம்மாதான் என் புள்ளைக்கு பிளாட்டு வாங்கணும் பிளாட்டு வாங்கணும் சும்மா அவரை போட்டு நச்சரிச்சாங்க.... சரி மாப்பிளைக்கு வேலைக்கு போக ஈஸியா இருக்கும் என்று இங்கே வாங்கினார் டெவலப்பு  ஆகிற ஏரியா தானேனு இப்படி ஆகும் யாரு கண்டா கவர்மெண்டு எதுவும் செய்யாம இருக்கே

 
இது ஏரியா இல்லடி  ஏரியில வீடு  கஞ்சன் காசுக்கு பார்த்து இங்கே வாங்கி தள்ளிட்டார். இதோட பின்புலம் எதையும் கேட்காம வாங்கினது நம்ம தப்புதானே கவர்மெண்டு என்னாடி செய்யும் எவனோ எதையாவது ஆசை காட்டி வித்தா அதுக்கு  விலை போனது நாம….. மாமாங்கம….. மழை,  தாக்குதல் அளவுக்கு இல்லை இப்பமாதிரி……. என்ன பிரச்சனை வந்திட போகுதுனு நினைச்சிருப்பான்…… இதை இப்ப விக்கணும்னா கூட  ப்ரோகர்க்காரன்தான் சாப்பிடுவான்……..


சரி நான் போய்ட்டு வரேன் கதவை சாத்திக்கோ என்று ரெயின்  கோட்டையை மாட்டிக்கொண்டு வெளியி வருகிறான் கீழே கார் பார்கிங்கில் எதிர் பிளாட் கோபி சிகரெட்டுடன் 


என்னயா எங்க? …


ம் பால் வேணுமாம் ….


சரி  வா நானும் வரேன் கொஞ்சம் இரு போயி ரெயின் கோட்டு எடுத்துட்டு வரேன்.


அவர்கள் பிளாட்டின் உள்ளேயே தண்ணீர்  கணுக்கால் முழுகும் அளவுக்கு  கீழ் பகுதி முழுவதும்
கோபி வந்தவுடன் இருவரும் கவனமாய் தெருவில் நடக்கிறார்கள் டார்ச்  லைட்டை  பிடித்த படி


பச் இந்த ஸ்ட்ரீட் லைட்டை வேற இரண்டுநாளாய் போடல இன்னும் கரண்டை எப்ப ஆப் பண்ண போறாங்கலோ  நாளைக்கு விடாம  பெய்தால் கட் பண்ணிடுவான்


இருக்கட்டும் ப்ரோ ஸ்ட்ரீட் லைட்டால ரிஸ்க்கு வருதாம் நான் தான் தெரியாம இங்க வந்து மாட்டிகிட்டேன்  நீங்க ஏன் ப்ரோ விசாரிகளையா?


என்னமோ கையில காசு அவ்வ்ளவுதான் தேர்ச்சி அப்ப நாமளும் சொந்தமா வீட்டு வெச்சிருக்கோம்னு காண்பிச்சிக்கணும்னு ஒரு ஆசை நான் வந்த அப்ப இப்படி இல்ல கிரி தண்ணி ஓடிடும் கொஞ்சத்துக்கு கொஞ்சம் இப்பதான் ஏன் புரியலை.... இன்னொரு ஏரி இருந்தது  இரண்டு ஸ்டாப்பிங் தள்ளி பார்த்திருப்பியே அங்கே ஓடற மாதிரி இருந்தது இப்ப என்னடானா அதையும் முடி அங்கேயும் பிளாட் போட்டு கட்டிட்டான் எல்லா வழியையும் அடஞ்சிடுச்சி மெயின் ரோடு வழியா தான் போயாகணும் எங்க இங்கே பள்ளமா இருக்கறதால டக்குனு போக வழியில்ல மழை நீர் சேகரிப்பு டிரைனேஜ்ல போயி சேர மாட்டேங்குது லெவல் சரியா வைக்காம விட்டு இருக்காங்க  போல எவ்வளவோ வாட்டி  எழுதி வச்சுட்டு வந்துருக்கேன் எங்க வரானுங்க வந்தாலும் சரியா வாட்டம் கொடுக்க மாட்டேங்கிறானுக……….
விடிவுகாலம் இருக்கா தெரியல இந்த ஏரியாக்கு….. இதேமாதிரினா என்ன பண்ணுவதுன்னு புரியலை…… வீடு வாங்கினா லோனே இன்னுமும் முடியல…… 

  
எப்படியோ ரோடு முனைக்கு வந்துவிடுகிறார்கள் முனையில் இரண்டுமூணு சிறிய கடைகள் வரிசையாய்  ஒரு சின்ன மளிகை கடை அதனுள்ளேயே சின்ன பேக்கரியும் , பக்கத்தில்  பால் கடை ஒரு ஜெராக்ஸ் ஒரு மெக்கானிக் ஷெட்டு கூட இருக்கிறது

 
ஸ்ப்பா நல்ல காலம் கடைய முடாம வைத்திருக்கானே


இன்னும் மணி 11 ஆகலேயே


வாங்க சார் என்ன மழை போதுமா...... படிக்கட்டிலேயே செருப்பை விட்டுட்டு  ஏறுங்க சார்  கசகசன்னு ஆயிடுது இங்கே


கிண்டலயா உங்களுக்கு தண்ணி நிக்கலை இங்கேன்னு

 
என்ன கிண்டலு போனதடவை புயலு வந்து முன்னாடி எல்லாத்தயும் துகிடுச்சு  அதுக்கு முந்திதான் அபாயத்தில மாட்டி தப்பிச்சது வரலாறு இந்த தடவை இப்படி இருக்கு


சரி பிரெட்டு இருக்கா?..... உள்ளே பார்த்து விட்டு சொல்கிறார் இரண்டுதான்  இருக்கு 

சரி கொடுங்க அரை கிலோ ரவை, ஊறுகாய் ருசியா மாங்காய் தானே…. குட்டே பிஸ்கெட் 2 தாங்க ,சக்கரையும் ஒரு கிலோ கொடுங்க.................


கோபி  எனக்கும் ஒரு கிலோ சக்கரை எடு 


முதலில் கிரி 500/- எடுத்து கொடுக்கிறான் மீதி சில்லறை கொடுக்கிறார் 70/- ரூபாய்  கிரி வெய்ட் பண்ணுறான் மேல் கொண்டு தருவார் என்று.....


கடைக்காரர் கோபியிடம் ஒருகிலோ சக்கரையை பேக் பண்ணி கொடுத்துட்டு வேற சார் என்கிறார் நுறு ரூபாய் கொடுத்து விட்டு  கிங் இருக்கா


இருக்கு சார் லூசிலதான் ஒன்னு  25/-

   
யோவ் என்னயா…….


என்ன சார் பண்றது சரக்கு வர வரைக்கும் ஓட்டணுமே 


யோவ் நான் விலையே பத்தி கேக்கறேன்


அதுவும் தான் சார் மழை விட்டவரைக்கும் கொஞ்சம் ஏத்தம் ஏரகமாத்தான் இருக்கும்


கிரி பரிதாபமாய் கோபியை பார்க்கிறான் 

அநியாயம் பண்ணுங்க  இந்த ஜிஎஸ்டி போட்டதெல்லாம் பத்தலயா இப்ப இதுவேறயா

 
சரி 2 கொடு மீதி எவ்வ்ளவு தரணும்


நுறு சார்

 
முதலேயே நுறு கொடுத்துட்டேனே சக்கரை 100 சார் 50 கிங்


என்னது! திகைத்து போகிறான்.


அப்போ எனக்கும் மீதி அவ்வளவுதானா ?


ஆமாம் சார் பிரெட் ஒன்னு 50 , ஊறுகாய் 100 ரவை 5௦, 2-பிஸ்கெட் 80 சக்கரை 100


என்னது இது இவ்வளவு ஏத்திடிங்க


ஆமாம் சார் மழை விடற வரைக்கும் தான் அப்புறம் கொறஞ்சுடும் சார் நானும்  எக்ஸ்ராவா டெம்போ காரனுக்கு மழையில துட்டை கொடுத்துதான் வாங்கிறேன்


யோவ் என்னயா என்ன கதை விடற அப்படியே நீ சூப்பர் மார்கெட் ஆரம்பிக்க நான் முதல் போடணுமா என்று கத்துகிறான் கோபி


சார் பொருள் வேண்டாம் நா கொடுத்துடுங்க சார் சத்தம் போடாதீங்க கடையில 


நீ இந்த ஏரியாக்குத்தான் கடைய வச்சு இருக்க நியாபகம் வச்சுக்கோ


புரியுது சார் நான் என்ன பண்ணட்டும்  .........


ப்ரோ வாங்க போலாம் மழை வேற பெரிசாகுது வாங்க அப்புறம் பார்க்கலாம்


பக்கத்தில் பால் கடையிலும் இதே நிலைமை
பால் கடையில் சில காய்ங்க வெங்காயம் தக்காளி விக்கறாங்க இங்க இருக்கறவங்க வந்து வாங்குவதற்கு எப்போதுமே மார்கெட்டையை விட அதிகமாகத்தான் இருக்கும் இப்போ இன்னும் அதிகமாய் சொல்கிறான் வெங்காயம் எல்லா இடத்திலும் 50 னா இவன்கிட்ட 75 தக்காளியும் அப்படியே பச்சைமிளகாய் கூட காய்விலைக்கு சொல்கிறான். என்ன பண்ணவது இப்ப இருக்கற நிலைமையில் தேவைக்கு கொஞ்சம் வாங்க வேண்டியதாய் இருக்கு 

கிரி  கையில் பணமில்லாமல்  வாங்கினதுக்கு கார்ட் தேய்கிறான்

இனிமே நின்னா  அவ்வளவுதான் வீட்டையே எழுதி கொடுக்க சொல்வானுங்க வா கிரி


என்ன அநியாயம்  பாருங்க ப்ரோ  சம்பாதிப்பத்துக்கு நேரம் பார்த்தாங்க  ஐந்து நாள் மழையில குபேரனாயிடணும்னு பார்கிறாங்க….. என்று புலம்புகிறான்


இதுதான் இன்னைக்கி மனுஷன் புத்தி எதோ பொங்கலுக்கு தீபாவளிக்கி ஜாஸ்தியா வித்தானா நாமும் சந்தோஷத்தில் தானேனு சந்தோஷத்தில் தெரியவும் தெரியாது கொடுக்கலாம் ஆனா இப்படி துக்கத்தில் சம்பாதிக்கணும், வயித்தில் அடிக்கணும்னு நினைக்கிறான் பாரு இவனெல்லாம் உருப்படறான் என்ன கடவுள் போ அடுத்த வருஷம் அவன் சூப்பர் மார்கெட் வச்சிடுவான் நான் சொன்ன மாதிரி …….


இவனுங்களை வாழவைக்கணும்னே கடவுள் மழையை கொடுக்கிறாரோ 

இன்னும் நிவாரணம் கொடுக்கணும் கோடி கோடியா கேட்டு வாங்கி பிரியாணி பொட்டலத்தை கொடுத்து ஒப்பேத்திடுவாங்க அவங்க தேத்திக்குவாங்க……நீயும் நானும் கத்தி கொண்டாவது இதை வாங்க முடியும் நிலையில் அந்த வெல்டிங்கை கம்பெனில வேலை செய்யும் சீனியெல்லாம் எப்படி கஷ்டப்படுவான் இந்த விலைவாசியை தாங்குவானா…….


இதுல இவன் மனுஷன் இல்லை இவனில்லைனு யாரை குறிப்பிட்டு சொல்வது என்ன? அவன் பெரிசா செய்யறான்…. இவன் சிறுசா செய்யறான் சொல்லிக்கலாம்


என்ன ப்ரோ? நானெல்லாம் வேலைகிடைச்சி சம்பளம் வாங்கினத்தில் இருந்து இப்பவரைக்கும் மாசம் பொறந்தா எப்போ சாப்பிட போனாலும் எங்க ஆபிஸ் எதிர்க்க இருக்கிற ஹோட்டலில் டொனேஷன் பாக்சில் நுறு இரநூறுன்னு போட்டுடுவேன். கோவிலுக்கு போகும் போதெல்லாம் கடவுளே நானா செய்யமுடியாடியும் நீ பார்த்து செய்யினு உண்டியலில் போட்டுட்டு  வருவேன் இப்ப கூட ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த அப்ப என்னால முடிஞ்சது டிபனுக்கு  எல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டேன்  உட்கார்ந்தா சம்பளம் எப்படி வரும்  எப்படி ஹெல்ப் பண்ணமுடியும் அதனால டைம் கிடைக்கும் போது போனேன்.


சரிதான் கிரி ஆனா ஆபத்தில் உதவற மனசு இல்லை நமக்கு நேற்றிக்கு ஒரு நாயி நாம பிளாட்டுகுள்ள படிக்கட்ல வந்து படுத்துக்க பார்த்தது மழையினால் நாம விட்டோமா இல்லையே துரத்திவிட்டுட்டோம் இது தொல்லைனு....... நாம தொல்லையில்லன்னு நினைக்கிற விஷயத்திற்கு மட்டும் உதவுவோம். சிலசமயம் கும்பலோடு கோவிந்தா போடும் மிராக்களும் நடக்கும் அதற்கு அப்புறம் எதோ நினைவு தப்பி  நினைவு திரும்பியது போல் பழையநிலைக்கு வந்துவிடுவோம் அப்படியானது தான் 2015 வந்த உதவிகள் . ….. அதை உதவி செய்துவிட்டோம்னு நம் தோளில் நாமே தட்டி கொள்வோம் புண்படுத்தறேன் நினைச்சிக்காத கிரி எனக்கென்னமோ இப்படித்தான் தோன்றுகிறது. நூற்றில் 75% தைரியமா நான் மனிதன் தான் சொல்லிக்க முடியாமத்தான் வாழறோம்.


27 கருத்துகள்:

  1. வடை எனக்குதான் நாந்தான் முதலில் வந்தது பதிவை இன்னும் படிக்கலை வடைக்காக இந்த கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க truth மழை நேரத்திற்கு ஏற்றத்தை தான் கேட்டு இருக்கீங்க

      நீக்கு
  2. நாட்டு நிலமையை அழகாக எடுத்து சொல்லீட்டுங்க

    பதிலளிநீக்கு
  3. நான் இந்தியாவிற்கு வந்து செட்டில் ஆகலாம் என்று நினத்தாலும் இந்த மாதிரி விஷயங்கள்தான் மனதில் வந்து தடை போடுகின்றன.

    இங்கு ஒரு விஷ்யத்தை நான் கண்டிப்பாக சொல்ல வேண்டும் முதலில் 9/11 ல் தீவரவாதிகள் வோர்ல்ட் டிரேட் செண்டரை தாக்கும் போது என் மனைவி 8 மாதம் கர்ப்பம். அவள் அந்த இடத்தை கடந்து செல்லவேண்டும் ஆனால் கொஞ்சம் லேட் அதனால் அன்று தப்பித்துவிட்டார். ஆனால் அவள் நீயூயார்க்கில் இருந்து திரும்பி வர வழியே இல்லை நிறை மாத்துடன் இங்கே அங்கே என்று அழைய வேண்டியிருந்தது அப்போது அவர் அங்குள்ள கடைகளின் டாய்லெட்டை உபயோக்கி வேண்டியிருந்தது யாரும் ஏதும் சொல்லவில்லை அதுமட்டுமல்ல அங்குள்ள கடைகளில் ஒரு கடைகளிலும் கூட பொருட்களின் விலையை ஏற்றவில்லை பணம் இல்லையா பரவாயில்லை என்று பல இடங்களில் இலவசமாகவே கொடுத்தார்கள் கடைசியில் அங்குள்ள ஹோட்டலி ரும் எடுத்து தங்கி அதன்பின் இரவு நேரத்தில் நீய்யூயார்க்கில் இருந்து போக்குவரத்து சிறிது தொடங்கியதும் அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அந்த ஹைடிமாண்ட் இருந்தாலும் ஹோட்டல்களின் வாடகை ஏறவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதம் என்பதை எங்கே தவறவிட்டுவிட்டோம்எப்போது என்று புரியவில்லை உங்களை விடுங்கள் அங்கேயே வளர்ந்த பிள்ளைகள் இங்குள்ள நடைமுறை சூட்சமத்தை புரிந்து கொள்ள காலமெடுக்கும்
      நன்றி உங்கள் அனுபவத்தை பகிர்ந்தற்க்கு
      இந்த சின்ன கடைகளின் விலைவாசி பற்றி 2 நாட்கள் முன்பு டீவியில் செய்தியில் சொல்லியது.. நாங்கள் அனுபவிப்பதும்

      நீக்கு
  4. அது போல சில வருடங்களுக்கு முன் நீயூஜெர்ஸியை சாண்டி புயல் தாக்கியது மிக பெரிய சேதம் எங்கள் மாநிலத்திலும் நீயூயார்க்கிலும் ஆனால் பெட் ரோலுக்கு மிகுந்த தட்டுபாடு ஏற்பட்டாலும் எங்கும் விலை ஏறவில்லை நானும் வீட்டிற்கு வேண்டிய வாட்டர் பாட்டிலை வாங்க கடைக்கு சென்றேன் முதல் நாள் ஸ்டாக் இல்லை அடுத்த நாள் ஸ்டாக் வந்ததும் விலை சற்று அதிகமாக இருக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் அவர்கள் அந்த வாரத்தில் அந்த வாட்டர் சேல் போட்டு இருந்ததால்மிக டிமாண்டாக இருந்தாலும் அதே சேல் விலைக்கு விற்றார்கள்...


    அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள மிகப் பெரிய பள்ளிக்கூடங்களை திறந்து வீட்டில் பவர் இல்லாதவர் வீடு பாத்தித்தவர்கள் எல்லாம் அவர்களின் வீட்டு நாய் பூணை எல்லாவாற்ரையும் அங்கு கொண்டு வந்து தங்கினார்கள் அங்கு வந்து தங்குபவர் பொழுது போக்கிற்காக பெரிய டிவிகளை வைத்தனர் அங்கு மருந்து உணவு வாட்டர் எல்லாம் கொடுத்தார்கள் இது போல பிரச்சனைகள் வரும் போது அரசாங்கம் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு உதவுகிரது என்பதுதான் உண்மை கடந்த மாதத்தில் புளோரிடாவில் ஏற்பட்ட புயலின் போதுதான் இந்த நூற்றாண்டிலே அதிக மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி செல்டரில் தங்க வைக்கப்பட்டனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க truth உண்மையை படித்தாலும் விதண்டாவாதம் செய்துவிட்டு போய்விடுவோம் ஆனால் அனுபவித்தவர் சொல்லும் போது ஆ என்று வாய் பிளக்கத்தான் தோன்றுகிறது.... பெருமூச்சு வருகிறது இங்கே நிலைமை நினைத்து
      உங்கள் அனுபவத்தை பகிர்ந்தற்கு நன்றி

      நீக்கு
  5. ஆம்.. நம்மை பாதிக்கும் விஷயங்களுக்கு மட்டுமே கோபப படுகிறோம். இந்த நாய்க்கு இடம் கொடுக்காத குற்ற உணர்வு எனக்கும் உண்டு. கஷ்டப்படும் காலத்தில் விலை ஏற்றினால் கோபப படும் நாம், விழாக் காலங்களில் கண்டுகொள்வதில்லைதான். வியாபாரிகளும் இதைப் புரிந்து நடந்து கொள்ளலாம்! எப்படியோ, இந்த நேரம் தாண்டிய உடன் இதையும் மறந்து விடுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா உண்மை அதுதான் மறந்துவிடுவதே வாடிக்கையாய் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  6. //நூற்றில் 75% தைரியமா நான் மனிதன் தான் சொல்லிக்க முடியாமத்தான் வாழறோம்.//

    உண்மையான வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அப்படித்தான் தோன்றுகிறது இன்றைய நிலைமை கருத்துக்கு நன்றி

      நீக்கு
  7. நிகழ்கால நிகழ்வுகளை அழகாக சொன்னீர்கள் யாருக்கும் இறைபயம் இல்லையா ? இல்லை இறைவனே இல்லையா ? என்ற ஐயம் எழுகிறது மனதில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இறைபயம் இப்பதான் அதிகமா இருக்கு ஏன்னா மடியில் கனமிருக்கே அது பணமோ பாவமோ இறைஞ்சும் நிலையில்தான்
      கருத்துக்கு நன்றி

      நீக்கு
  8. மழை வெள்ளத்தை சாக்கிட்டு விலை உயர்த்தும் சின்ன வியாபாரிகளை சொல்வதா :( இல்லை நகரமே நீரில் முழ்கி அவதிப்பட்டு மீண்டாலும் அடுத்த வெள்ளம் வரும்போது பார்த்துக்கலாம்னு பழைய குருடி கதவை திறடி எனும் சாமான்ய மக்களின் மனப்போக்கை குறை சொல்வதா :( எல்லாத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்று தெரிந்தும் இன்னமும் திருந்தாத நம் மக்களை என்ன சொல்வது .
    இங்கே வெளிநாட்டில் எல்லாருக்கும் ஒரே நீதி பிரபலங்களின் மரணமோ அல்லது இயற்கை பேரழிவுகளோ எதுவும் இப்படி அநியாயம் செய்ய மக்களை தூண்டுவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுபோன்ற மனநிலைக்கு நாமும் எப்போது போவோம் என்று தோன்றுகிறது சில குற்றங்களை சில பிரச்னைகளை வேரறுக்க மக்கள் தான் முன் வரவேண்டும் எதிர்ப்பை விட்டு ஆக்க செயலில் போய்விடுவதே மேல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி

      நீக்கு
  9. இது தான் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது என்று முன்னோர்கள் சொன்னார்கள் போல! நாட்டு நடப்பு பற்றி அழகான பகிர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பழமொழி கருத்துக்கும் நன்றி தோழரே

      நீக்கு
  10. பூவிழி முதலில் என் ஜொந்தக் கதை யோகக்கதை கேளுங்க:) ளு கரிட்டுத்தானே?:).. என் செக்கரட்டரிக்கு வேலை வைக்காமல் நானே பிழை திருத்தம் பார்த்திடுறேன்:)..

    விடியக் காலையிலேயே உங்கள் போஸ்ட் படிச்சு மையும் வச்சிட்டு.. கீழே மொய் வைக்க வந்தேனா.. உங்கள் பக்கமும் ட்றுத் பக்கமும் ஓபின் ஆகவே இல்லை கொமெண்ட்ஸ் பொக்ஸ்... ரீஈஈஈஈஈஈஈ பிரெஸ்ஸ்ஸூஊஊஊஊ பண்ணிக் களைச்சுப்போய்ப் போயிட்டேன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா நீங்கள் வந்தே ஆகணும் பின்னுட்டத்தில் கூட நகைசுவை சேர்க்க உங்களால்தான் முடிகிறது மிகவும் ரசிக்கிறேன் எங்கும் உங்கள் கமெண்டு பார்கும் பொழுதும் இரண்டுமுறையாவது படித்து சிரித்துவிடுவேன்

      நீக்கு
  11. அருமையான கதை வடிவில் நிஜத்தைச் சொல்லிட்டீங்க. ஊருக்குள் வரும் பிரச்சனையை வச்சே... அப்பா அம்மா.. சீதனப் பிரச்சனை எல்லாம் கிளறுப்பட்டவிதமும் அழகு.. ரசிச்சேன்.. உண்மைதானே சில குடும்பங்கள் அமைதியாக நல்லபடி போய்க் கொண்டிருக்கும், ஏதும் வெளிப்பிரச்சனையை சாட்டா வச்சு குடும்பம் பிரியுமளவு குழப்பம் வந்துவிடும்...

    விலைவாசி... குறை சொல்லவும் முடியவில்லை... அந்த நேரத்தில் அவர்களும் கஸ்டப்பட்டுத்தானே பொருட்களை எடுத்து வந்து விக்கிறார்கள்.. அப்படிப்பட்ட நேரம் நமக்கும் காசை விடப் பொருள் கிடைச்சால் போதும் எனத்தான் இருக்கும்... ஆனாலும் ஓவரா மனச்சாட்சியே இல்லாமல் விலையை உயர்த்தும்போது... எங்கேயும் பணம் இருப்போர் தப்பிகொள்ளுவினம்.. கஸ்டப்படுவோர் நிலைமை துன்பம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அவர்களும் ஏய்க்கப்படுகிறார்கள் மற்றோருவனிடம் ஆனாலும்நேரத்தை பயன்படுத்தி தன் இழப்பை சரிக்கட்ட அதிகமாய் லாபம் என்பதை விடாமல் தொங்கும் போதுதான் வருத்தம் வருகிறது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா

      நீக்கு
  12. துளசி: நல்ல கருத்துகள் உண்மை நிலையை சொல்லிவிட்டீர்கள் சகோதரி..

    கீதா: தாமதமாக வந்ததால் தனியாகக் கருத்திட வேண்டியதில்லை போல ஏனென்றால் ஸ்ரீராமின் கருத்தையும், மதுரையின் கருத்தையும் வழிமொழிகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உங்கள் இருவருக்கும்

      நீக்கு
  13. பதில்கள்
    1. வாங்க சார்... எப்பொழுதும் உங்களை போல் உள்ளவர்கள் வழி நடத்தி சொல்லுங்கள் நிறை குறைகளை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு