சனி, 30 டிசம்பர், 2017

புத்தாண்டு .... ஆங்கில புத்தாண்டு


புத்தாண்டு .... ஆங்கில புத்தாண்டு  மக்களின் மகிழ்ச்சியை    கொண்டாடி வருகிறதா இல்லை அப்பாடா இந்தாண்டு  போயிற்று இந்த உலகத்தில் என்ற   நோக்கத்தில் கொண்டாட படுகிறதா புரியவில்லை இருந்தும் எனக்கு தெரிந்து  40  வருஷங்களுக்கு  மேல் இருந்து கொண்டாடப்பட்டுத்தான் வருகிறது....
 அதற்க்கு முன்னர் எப்படியோ தெரியவில்லை அவரவர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தினரோ ? 

இப்பொது இன்றைக்கு நாம் நமக்கு மட்டும்   திடிரென்று அதில் மாற்றம்   கொண்டு வர வேண்டுமென்பது எதிர்பார்க்காத வருத்தத்தை கொண்டு வரத்தான் செய்யும் மக்கள் மனதில் .....
இந்த ஒரு நாள் கொண்டாட்ட  நாள் என்று மனதில்  பதிந்து போய்விட்டது.


கொஞ்ச வருஷத்திற்கு முன்வரை  புத்தாண்டுக்கு பட்டாசு வெடிப்பார்கள் ,புது சினிமா ரிலீஸ் ஆகும் அதற்க்கு முந்தி அடித்து போவார்கள், கோவிலுக்கு போவார்கள் .

இன்று நிலை மாறிவிட்ட்டது கலாச்சரா சீரழிவு என்ற போர்வையை போர்த்தி கொண்டது ஆங்கில புத்தாண்டு .இதன் காரணமாய் பல குற்றங்கள் புதிது புதிதாய் அலங்கரிக்கிறது சமீபமாய் ஒவ்வொரு வருஷமும். 

இன்றைய இளைய  தலைமுறையினர் வரைமுறையற்று கொண்டடாத்தை திண்டாட்டமாய் ஆகிவிடுகிறார்கள் ஆண் பெண் பேதமின்றி 
கண்ணுக்கு தெரிந்து சில குற்றம்  கண்ணுக்கு தெரியாமல் பல ....

அதனால் இந்த நாளை கொண்டாட  கூடாது என்று தடை விதிக்க படுகிறது. 
பல மாநிலங்களில் இதற்க்காக  பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினாரால் நடத்தப்பட போகின்றனவாம் 
தலைக்கு தலை நாட்டாமையாகிவிட்டால் என்னவாகுமோ என்ற பயமும் வருகிறது.  அதே சமயம் கொஞ்சம் ஒழுங்கு படுத்த படுமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது   
இதை எந்த அளவு மக்கள் ஏற்று கொள்வார்கள் என்பது கவலை அளிக்கிறது அப்படி ஏற்று கொள்ளாமல் இருந்தால் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்தால் கஷ்டப்பட போவது நாமே 
உற்சாகத்தை கொண்டு வருவதற்கு  பதிலாய் வருத்தத்தை தாங்கி விடுமோ இந்த நாள்  என்ற அச்சம் வருகிறது...... 
எந்த பிரச்னைகளும் குற்றங்களுமற்று இந்த நாள் கடந்திட வேண்டுமென்று பிராத்தனை எழுகிறது 

தோழமைகளும் பிராத்தனை செய்து கொள்ளுங்கள் இந்த புத்தாண்டு இனிய  புத்தாண்டாய் கடந்து வர, மலர்ந்துவர...... 36 கருத்துகள்:

 1. உங்களுக்கும் உங்கள் குடும்பதாருக்கும் புத்தாண்டு தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 2. //இன்றைய இளைய தலைமுறையினர் வரைமுறையற்று கொண்டடாத்தை திண்டாட்டமாய் ஆகிவிடுகிறார்கள் ஆண் பெண் பேதமின்றி
  கண்ணுக்கு தெரிந்து சில குற்றம் கண்ணுக்கு தெரியாமல் பல ....///

  இன்றைய இளைய தலைமுறையினர் இப்படி ஆனதற்கு அவர்களை வளர்த்த முந்தைய தலைமுறையினரும் ஒரு காரணம் என்பதை மட்டும் நாம் மரந்துவிடுகிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியான கருத்து தான் ஆனாலும் புலியை பார்த்து பூனை சுட்டு போட்டு கொள்ள நினைப்பதை தடுக்க முடியாமல் போகிறது வலிக்கும் வரை பேஷன்,டிரெண்ட் என்ற போதை தலைக்கேறி கிடக்கின்றன இளைய தலைமுறை

   நீக்கு
 3. உங்களுக்கும் நம் அனைவருக்குமே புத்தாண்டு ஆசீர்வாதமான சந்தோஷங்களை தரும் ஆண்டாக அமைய பிரார்த்திப்போம் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அஞ்சு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 4. இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
  எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
  அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ நானும் வேண்டி கொள்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 5. புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் நிறைய அத்துமீறல்கள். குறிப்பாக தலை / பெருநகரங்களில்தான் இந்நிலை. இவை இல்லாமல் வாழ்த்து பரிமாறிக்கொண்டு நாளைக் கொண்டாடுவதில் தவறில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியான வார்த்தை அத்துமீறல்கள் இதை தவிர்த்துவிட்டால் எதுவும் உறுத்தாது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 6. நமது வளர்ப்பு முறையில் தவறுகளை செய்து விட்டு சமூகத்தையும் அரசாங்கத்தையும் குற்றம் சுமத்தி விட்டு தப்பிக்கப் பார்க்கிறோம்

  எது எப்படியோ... உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் எமது,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பும், கட்டளையும் இன்று கால்காசு பெறாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்று நினைகிறேன் .
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி வாழ்த்துக்கும்

   நீக்கு
 7. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம+1

  பதிலளிநீக்கு
 8. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  தலைநகரில் நிறையவே கொண்டாட்டம் என்ற பெயரில் விபரீத விளையாட்டுக்கள் உண்டு. என் வீட்டினருகில் இருக்கும் கன்னாட் ப்ளேஸ் மற்றும் இந்தியா கேட் பகுதிகளில் இன்று இரவு முழுக்க கொண்டாட்டம் தான்! நிறைய கட்டுப்பாடுகள் இருந்தும் பிரச்சனைகள் வருவது வருடா வருடம் நடக்கும் கூத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ
   யாரோகோ நடக்கிறது என்று மனம் சும்மா இருக்காமல் வருத்தப்படும் பதறும் செய்தியில் கேட்டால்
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 9. // அதற்கு முன்னர் எப்படியோ தெரியவில்லை அவரவர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தினரோ ? //

  பிரிட்டிஷ் ஆட்சி எங்கெல்லாம் இருந்ததோ அல்லது இருக்கின்றதோ அங்கெல்லாம் ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாக பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று நினைக்கிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு – 2018 நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழக்கம்தான் காரணம்..... 2 புத்தாண்டு கொண்டாடுபவர்களாக இருந்துவிட்டு போவோம்
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 10. எல்லோருக்கும் இனிதான புத்தாண்டாக மலரும் ஆண்டு
  நன்மைகளைத் தரட்டும்!

  வாழ்த்திற்கு நன்றியுடன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தோழி நன்றி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 11. தெரிந்த பலருக்கும் அஞ்சலில் வாழ்த்துகள் அனுப்பினேன் உங்களுக்குஇங்கே முகவரி தெரியாததால்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பூவிழி... நல்லதை நினைப்போம்ம் நல்லதே நடக்கும் என நம்புவோம்..

  பதிலளிநீக்கு
 13. பூவிழி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ தங்களுக்கும் வாழ்த்துக்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. பெண்களும் குடித்துவிட்டு ஆடுவதுதான் இப்போதைய புத்தாண்டின் வளர்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறியாமை தான் எங்கே எதை எதற்க்கு செய்ய வேண்டுமென்ற நிலை தெரியாமல் சில இடங்களில் நடக்கிறது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 15. போதை ஆசாமிகள் பாதையை அடைத்துக்கொண்டு போவதுதான் என் தேசத்தின் புத்தாண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு நாள் தானே என்ற அறிவாளித்தனம் ஆட்டு மந்தையில் தனியாக தெரியமாட்டோம் என்ற கோட்பாடு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 16. ஆங்கிலப் பத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 17. ரசனை வேறு வெறி வேறு.. அது அரசியல், சினிமா, ஆன்மீகம், கலாச்சாரம் என பல வழிகளிலும் ரசனை வெறியாக மாறி மக்களுடைய வாழ்க்கையை பாதிக்கிறது. எதுவுமே அளவோடு இருக்கவேண்டும். எதையுமே அளவோடு ரசிக்கவேண்டும். சரியான அலசல். இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தோழி.

  பதிலளிநீக்கு

 18. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...

  பதிலளிநீக்கு
 19. பூவிழி உங்களை தொடர்பதிவு ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் .என் பிளாக் வாங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருந்துகிறேன் அஞ்சு தாமதமான பதிலுக்கு முயற்சிக்கிறேன் அஞ்சு

   நீக்கு