வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சொல்லுறதை சொல்லிப்புடேன்


நாம எதிர் நீச்சலில் இன்னிக்கு பார்க்க போவது காத்திருப்பு ஐயோ காத்திருப்பதா காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி ..........அப்படின்னு பாட ஆரம்பிக்காதீங்க

காத்திருனு யாரவது சொல்லிடா அல்லது எதற்காவது காத்திருக்கனும்னா நாம் டென்ஷன் ஆயிடுவோம் ஆனா .....

நாம வாழ்க்கை முழுவதும் எதற்க்காவது காத்து கொண்டுதான் இருக்கிறோம் 5 வயது புள்ளை 10 வயது சைக்கிள் ஓட்டுகிரவனை பார்த்து எப்ப நமக்கு 10 வயதாகும் என்று காத்திருக்கிறது 12வயது பையன் 16 வயதுல்ல தன் அண்ணனின்அல்டாப்பை  பார்த்து அவனை மாதிரி நான் எப்போ ஸ்டையில் பண்ணிப்பேன் என்று காத்திருக்கிறான் 19 வயது எப்பட நானும் இந்த படிப்புலருந்து விடுதலை ஆவேன் என்று வேலைக்கு செல்லும் 23 வயது வாலிபனை  பார்த்து காத்திருக்கிறான் வேலை கிடைச்சா கல்யாணத்திற்கு... கல்யாணம் ஆனா குழந்தைக்கு.... இப்படி சொல்லிகிட்டே போகலாம் ஆனா பாருங்க நமக்கு வாழ்க்கையில் வெற்றியோ அல்லது சரியான விஷயமோ அமையனும் நினைத்தால்  கொஞ்சம் காத்திருந்து அமைக்கனும் 
கொக்கு மாதிரி

இந்த கொக்கு இருக்கு பாருங்க அது தனக்கான மீன் வரும் வரை ஒற்றைகாலில் எவ்வளவு நேரம் காத்திருக்குது  உங்களுக்கு சின்ன வயசிலேயே இந்த கதையெல்லாம் சொல்லிருப்பாங்க கொக்கு ஒரு பழமொழியே இருக்கு

ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும் 
வாடியிருக்குமாம் கொக்கு

 ஓடுமீன் ஓட என்றால் எத்தனையோ மீன்கள் ஓடிக்கொண்டிருக்க அவற்றைக் கொத்தாமல் ஏன் காத்திருக்கிறது கொக்கு? உறு மீன் வருமளவும் காத்திருக்கும். ஆமாம், அந்தக் கொக்கின் வயிறு நிரம்பும் அளவுக்கு கொழுத்த மீன் வரும் வரையில் அந்தக் கொக்கு காத்திருக்கும்
.அது போலத்தான் நாமும் நமக்குத் தேவையான, தகுதியான வாய்ப்பு
 வரும் வரையில் காத்திருக்கத்தான் வேண்டும்.

ஆனால் ஐந்தறிவு கொண்ட கொக்கே இப்படி அறிவுத் தவம் செய்கிறதே,
ஆறரிவு கொண்ட மனிதர்களாகிய நாம் முயற்சி என்னும் தவத்தை மேற்கொண்டுநல்லவாய்ப்புகளை நல்ல ப் பெற காத்திருக்க வேண்டும்
ஒரு காலில் காத்திருக்கட்டும் நாம் 2 காலில் காத்திருப்போம் நமக்கான மீன் வரும் வரை காத்திருக்க வேண்டும்
(யாரும் எடக்குமுடக்க திங் பண்ண கூடாது நான் சொல்லும் மீன் வெற்றியை குறிக்குது )

சரி வேற சொல்லறேன் இந்த மாம்பழம் இருக்கு பாருங்க அது இயல்பா பழுத்து சாப்பிட்டால் எவ்வளவு சுவை ஆனா காத்திருக்காமல் அதை கல் போட்டாம் கெமிகல் போட்டும் பழுக்க வைக்கும் பழம் அவ்வளவு சுவை தருவதில்லை மேலும் உடம்புக்கும் கெடுதல் தருகிறது நல்ல பழ சாப்பிடனும் என்றால் காத்திருகனும்

‘புலி பசித்தாலும் புல்லை தின்னாது ‘அப்படின்னு சொல்லுவாங்க அதுகான இரை வந்ததும்  அதை அது நேரம் பார்த்து குறிவைத்து தன் உணவை புசிக்கும் இது தான் வெற்றி இலக்கு

விதை விதைக்கவேண்டுமென்றால்  ஆடிபட்டம் வரை காத்திருக்கணும் சொல்வாங்க அடைமழைக்கு ஐப்பசி வரை காத்திருக்கத்தான் வேண்டும் வேற வழியே இல்லை

சரி நம்ம புள்ளையாரை எடுத்துகோங்க அவரு பிரம்மசாரின்னு தெரியும் ஏன்? தன் தாய் பார்வதி போல் ஒரு பெண் வேண்டும் என்று காலம் காலமா காத்திட்டு இருக்கார் இதுக்கு அர்த்தம் என்ன சொல்றாங்கனா நல்லதா கிடைக்கனும்ணா கொஞ்சம் காத்திருக்கணும் என்ற கோட்பாட்டை விளக்குவதற்கு தான் பிரம்சாரியான புள்ளையார் உருவம் கதையெல்லாம்

சூப்பரான மட்டுமல்ல மிக நல்ல காதலி கிடைக்கனும்னா ‘தி பெஸ்ட்டுகாக காத்திருக்கத்தான் வேண்டும் சும்மாவே வயசு வந்திடுச்சி லவ்னா அது ‘அட் ஃபஸ்ட் சைட் ‘அப்படி இப்படினு பேத்தினால் ரஜினி டயலாக்தான்
'கிடைக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காம இருக்கறது கிடைக்காது'


நம்ம சூர்யா ஜோதிக்கா காதலையே உதரணாமா சொல்லலாமா அவங்க லவ் சக்சஸ் ஆகா ரொம்பநாள் காத்திருந்ததாக சொல்லிகிறாங்க   ஒன்றை நல்லதாக அடைய வேண்டுமென்றால் காத்திருக்கணும் தப்பில்லை அவசரபட்டு ஒரு முடிவெடுப்பதை விட காத்திருப்பது மேலானதுன்னு நான் நினைகிறேன் அவசரத்தில் செய்யும் காரியம் அலங்கோலம் ஆகும் என்று நம்ம பெரியவங்க சொல்லி இருகாங்க

அதுக்கு உதாரணமா நம் அவுரங்கசிப்பை எடுத்துகோங்க அப்பா ஷாஜகானிடமிருந்து நாட்டை பிடுங்கி அப்பாவையும் சிறையில் அடைத்து அண்ணனையும் கொன்றுவிட்டு அவசரமா அரியணை ஏறியதால் இன்றுவரை அவன் பழிக்க படுகிறான் சரித்திரத்தில்சரி அவ்வளவு ஏங்க உங்களுக்கு பூனை குட்டி வேணுமா? யானை குட்டி வேணுமா? நீங்கதான் முடிவெடுக்கணும் யான குட்டி வேண்டுமென்றால் 20 மாதம் காத்திருக்கத்தான் வேண்டும் பூனை குட்டி என்றால் 40 நாளில் கிடைத்து விடும்

பங்குகளின் விலை குறையும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் முதலீடு செய்ய வேண்டுமென்றால் விற்க வேண்டுமென்றால் அதன் விலை உயரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் அப்பதான் லாபம் எப்பவோ படித்ததை எல்லாம் நியாபக படுத்தி எனக்கு தெரிந்த அளவில் சொல்லிடேன் அவ்வளவுதான்

நியாயமான வெற்றிக்கு காத்திருத்தல் அவசியம் அதுதான் நிலையானதாக  இருக்கும்

சொல்லுறத்தை சொல்லிப்புடேன்
செய்யறதை செஞ்சிடுங்க
நல்லதுனா கேட்டுகோங்க
கெட்டதுனா விட்டுடுங்க

முன்னால வந்தவங்க
என்னனமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்ச்சியும் செஞ்சாங்க

குடியிருந்தும் மூட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
வெளியிருந்தும் கொட்டைகளாய்
விழுந்து கிடக்க போறீங்களா

முறையை தெரிஞ்சு நடந்து
பழைய நெனப்ப மறந்து
உலகம் போற பாதையை
உள்ளம் தெளிஞ்சு வாரீகளா

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையுள்ள ஞானிகளும்
எத்தனையோ எழுதி எழுதி
வச்சாங்க
எல்லாதான் படிச்சீங்க
என்ன பண்ணி கிழுச்சீங்க

ஒண்ணுமே நடக்காமே
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னால ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க    

41 கருத்துகள்:

 1. ///சூப்பரான மட்டுமல்ல மிக நல்ல காதலி கிடைக்கனும்னா ‘தி பெஸ்ட்டுகாக’ காத்திருக்கத்தான் வேண்டும்///
  அசுக்கு பிசுக்கு காதலிக்காக காத்திருக்கனுமா? நாங்க எல்லாம் கொஞ்சம் விவரமான ஆளுங்க எல்லா காதலியும் முதல் ஒரு வருஷத்திற்குமட்டும் நல்லவங்க அதனால நாங்க வருஷத்திற்கு ஒரு காதலி மாத்துவோம்ல அதனால எங்களுக்கு எப்பாவும் நல்ல காதலி இருந்து கொண்டடே இருப்பாங்க அதனால் வெயிட் பண்ணுற பழக்கம் எல்லாம் இல்லேங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரி நம்பிடோம்( பூரி கடையை எடுக்கும்போதே இப்படி ஆசை உங்க பதிவுல சொன்னதுதான் )

   நீக்கு
 2. ///நமக்கு வாழ்க்கையில் வெற்றியோ அல்லது சரியான விஷயமோ அமையனும் நினைத்தால் கொஞ்சம் காத்திருந்து அமைக்கனும்
  கொக்கு மாதிரி///

  உங்களின் இந்த சொல்படி எந்த பொண்ணாவது தனக்கு Mr.Rightதான் வாழ்க்கை துணைவரா வரணுமுனு நினைச்சா அவங்க வெயிட் பண்ணிக் கிட்டே இருக்கணும் காரணம் இந்த உலகத்தில் Mr.Righ என்று யாரும் இல்லை Mr.Righ வரானோ இல்லையோ எமன் கண்டிப்பா வந்து உயிரை எடுப்பானுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகம் முழுவதும் ராவணன் தானா நம்பிக்கைதான் வாழ்க்கை நல்லது வரும் நல்லது மட்டுமே வரும் வந்ததையும் நல்லதாக பக்குவமும் வரும் இதுவும் காத்திருத்தல் தான்

   நீக்கு
 3. இன்று உங்களை கலாய்க்க முடிவு செஞ்சுதான் பின்னுட்டம் போடுகிறேன் அதனால சீரியஸா எடுத்துகாதீங்க. ஒகேவா நகைச்சுவையாய் எடுத்துக்கோங்க

  பதிலளிநீக்கு

 4. ///ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும்
  வாடியிருக்குமாம் கொக்கு”///

  இது தமிழ்நாட்டு கொக்குங்க

  அமெரிக்கா கொக்கு எல்லாம் வெயிட் பண்ணாதுங்க எங்க மீன் இருக்குதோ அங்க வந்து கொத்திட்டு போயிடுமுங்க இது அமெரிக்க கொக்குக்கு மட்டுமல்ல அமெரிக்க மக்களுக்கும் பொருந்துமுங்க....அதனால தான் எங்க எல்லாம் ஆயில் இருக்குதோ அல்லது ரீடெயில் பிஸினஸ்க்கு மார்க்கெட் இருக்குதோ அங்கெல்லாம அமெரிக்க கொக்கு போல நுழைஞ்சிடுமுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது என்ன புது கதை என்னக்கு தெரிந்து கடவுள் படைப்பில் மிருகமெல்லாம் ஒரே மாதிரிதான்சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு கொஞ்சம் மாறுபடுமே அன்றி குணம் மாறாது உலகம் முழுவதும் மனுஷனுக்கு தான் வேறு பாடெல்லாம்

   நீக்கு
 5. // பூனை குட்டி வேணுமா? யானை குட்டி வேணுமா?///

  அட அட இதெல்லாம் யாருக்குங்க வேணும் எங்களுக்கு வேண்டியதெல்லாம் பெண் குட்டிங்க(குழந்தை அல்ல ) அதுக்கு வழிய நீங்க சொல்லவே இல்லை(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிமே மதுரை தமிழன் போட்டுகாதீங்க அமெரிக்கன் போட்டுகோங்க உங்க ப்ளாகில்

   நீக்கு
 6. நான் எனக்கு தெரிந்ததை சொல்லிப்புடேன் நான் கிண்டல் பண்ணதுதப்புன்னா நான் சொன்ன கருத்தை டெலீட் பண்ணிக்குங்க இல்லைன்னா பப்ளிஷ் பண்ணிகுங்க


  அப்ப வரட்டாங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முறத்தால் புலியை விரட்டின தமிழச்சிங்க உள்ள உறங்குது

   நீக்கு
 7. காத்திருத்தலுக்கு இம்புட்டு கதைகள் இருக்கா.....ரசித்தேன்....

  பதிலளிநீக்கு
 8. நல்லதொரு பகிர்வு பூவிழி. படிச்சு ரசிச்சுப்புட்டேன். காத்திருப்பின் அருமையை உணர்ந்து விட்டேன். அடுத்த பூவியிழின் நல்லதொரு பதிவுக்காக காத்திருக்கவும் ஆரம்பிச்சுட்டேன்!

  பதிலளிநீக்கு
 9. //ஒரு காலில் காத்திருக்கட்டும் நாம் 2 காலில் காத்திருப்போம் நமக்கான மீன் வரும் வரை காத்திருக்க வேண்டும்//- சரிங்க!

  பதிலளிநீக்கு
 10. நால்லாத்தான் இருந்திச்சு
  நாளெல்லாம் கேட்டாலும்
  பொல்லாத அவசரம்
  பொறுமை ஆருக்கு இருக்குதுங்க...:)

  நல்ல பதிவு. அருமையாக நகைச்சுவைகலந்து தந்தீர்கள்.
  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சமே கொஞ்சம் மெனகேட்டால் போதும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி

   நீக்கு
 11. எல்லாசெயலுக்கும் ஒரு காலம் , நேரம் வேண்டும் என்பார்கள்.
  காத்திருந்தால் நன்மைகள் உண்டு என்று அழகாய் சொல்லிவிட்டீர்கள்.
  வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 12. அப்பப்பா எவ்வளவு எடுத்துக்காட்டுகள்..அருமை..மன்னிக்கவும் தோழி..சொல்லுறத்தை என்பது ஏதோ புரியாததுபோல் உள்ளது.சொல்லுறதை என்பது சரியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்..எதற்க்காவது அல்ல எதற்காவது., முயர்ச்சி அல்ல முயற்சி.தயவு செய்து திருத்தவும்..நான் ஒரு ஆசிரியர்..குறை சொல்கிறேன் என்று கோபம் வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிநண்பரே கவனத்திற்கு மாற்றிவிடேன் தவறு இருந்தால் திருத்தி கொள்வது தான் சரி அல்லவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 13. அட அட அட.. நீங்க என்ன ஒரே தத்துவ மழையா பொழியிறீங்க. "காத்திருந்தவன் பெண்டாட்டி..."னு எதிர் பழமொழியும் நம்மஆளு சொல்லி வச்சுட்டு போயிருக்கான், பாருங்க, பூவிழி.

  நம்மாளுக்ச்கிட்ட பழமொழிக்கு மட்டும் பஞ்சமே இல்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்பான். இன்னொரு பக்கம் மின்னுவதெல்லாம் பொன் அல்ல ம்பான். அப்போனா அகத்தில் எல்லாம் தெரியாதும்பான்.

  எல்லாத்துக்குமே ஒரு லிமிட் சில லிமிட்டேஷன்களும் இருக்கு. காத்திருப்பதுக்கும்தான். என் பின்னூட்டத்துக்காக உங்களை கொஞ்சம் காக்க வச்சுட்டேனோ? :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லியது போல் லிமிடேஷன் இருக்கு அதை தான் சொல்லி இருகிறேன் நினைக் கிறேன் அவசரம் அலங்கோலம் ஆகா வாய்ப்பு இருக்கிறது பழமொழிகள் ஏராளம் நம் வாழ்க்கைக்கு உகந்ததைதான் எடுத்து கொள்ள வேண்டும் அன்னம் போல்

   நீக்கு
 14. காத்திருப்பு எவ்வளவு மென்மையான
  மேன்மையான விஷயம் என்பதை உணர்த்தும்
  அழகுப் பதிவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 15. காத்திருப்பு என்பது எப்போதுமே அழகானதுதான்...

  பதிலளிநீக்கு
 16. காத்திருப்புக் கதைகளுடன் சேர்ந்த கவிதையையும் அழகாக கூறியுள்ளீர்கள்...

  பதிலளிநீக்கு
 17. காத்திருப்புக் 'கதை'களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தனபாலன் சார் எப்பவும் உங்க கருத்து முதலில் வந்து மகிழ்ச்சியும் ஊக்கமும் கொடுக்கம் இந்த முறை நீங்க மிக சுருக்கமாக சொல்லிவிடீர்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 18. உங்கள் பதிவைப் படித்ததும் தோன்றியது
  "பொறுமை உடையார், பூமி ஆள்வார்"என்பதும் தான்.
  காதலில் மட்டுமல்ல எதிலுமே காத்திருப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

  பதிலளிநீக்கு
 19. காத்திருபு பற்றி மிகவும் அருமையான பதிவு. பாராட்டுக்கள். ;)

  -=-=-=-=-=-=-=-=-=-

  அன்புடையீர்,

  வணக்கம்.

  இன்று நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன்னுடைய வெற்றிகரமான 900th POST ஐ, வெளியிட்டுள்ளார்கள்.

  தலைப்பு:

  ”ஸ்வர்ண குண்டல அனுமன்”

  இணைப்பு:

  http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_4256.html

  தாங்கள் மேற்படி வலைத்தள இணைப்புக்கு அன்புடன் வருகை தந்து, அவர்களை வாழ்த்தி சிறப்பிக்க வேண்டுமாய், அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

  மிக்க நன்றி,

  இப்படிக்குத்தங்கள்,

  வை. கோபாலகிருஷ்ணன்
  gopu1949.blogspot.in

  பதிலளிநீக்கு
 20. காத்திருத்தல் பற்றி இத்தனைக் கதைகளும் கவிதையும் ..எனக்குப் பிடித்தது பூவிழி..உங்கள் அடுத்தப் பதிவிற்கும் காத்திருக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 21. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 22. கதை சொல்லும் உண்மை அருமை பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் !
  இன்று உங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ,அதற்க்குத்
  தங்களின் வருகையைத் தெரிவியுங்கள் .மிக்க மகிழ்ச்சி எனக்கும் தங்களைஇங்கே அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பிதற்க்கு .
  http://blogintamil.blogspot.ch/2013/07/2_24.html

  பதிலளிநீக்கு
 24. அன்புடன் பூவிழி, வாழ்க வளமுடன். உங்களுக்கு என் வலைத்தளத்தில் விருது இருக்கிறது. பெற்றுக் கொள்ளுங்கள் அன்புடன். கோமதிஅரசு.

  http://mathysblog.blogspot.com/2014/09/blog-post.html

  பதிலளிநீக்கு

 25. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 26. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  பதிலளிநீக்கு