வியாழன், 28 டிசம்பர், 2017

காஃபி பிரியர்களுக்கு.....ஃபிடேன் காஃபி ரெசிபி  


காஃபி  பிரியர்களுக்கு ஒரு புது காஃபியாம் 
இது என்ன பார்ப்போமா 
அதுவும்  இப்போ குளிர்காலம் எல்லோருக்கும் சூடா காஃபி, டீ  குடித்தால்  நன்றாக இருக்கும் என்று தோன்றும்.... அப்படி இரண்டு மூன்று முறை காஃபி குடிப்பவர்கள் இந்த முறையை ஒரு முறை பயன்படுத்தி  பாருங்கள் 
போதும் போதும்  எப்பதான் குறிப்பை சொல்ல போற மாலை காஃபி குடிக்கும் நேரம் வந்துவிடுவதற்க்கு முன் எல்லோரும் பார்க்கட்டும் ........சரி குறிப்புக்கு போவோமா

காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன், 
பால் - 1/2 கப் 
கொதிக்கும் நீர் - 1/2 கப், 
சர்க்கரை - தேவையான அளவு

செய்யும் முறை.;- (இது ரொம்ப அளப்பறையா இருக்கே) 

முதலில் ஒரு கப்பில் அல்லது சின்ன கிண்ணத்தில்  காபி பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு ஸ்பூன் பால் விட்டு முட்டை அடிப்பது போல் (முட்டை அடிப்பதுனா ஆம்பிலேட் போடுவதற்க்கு அடிப்போமே (பீட்) அது) ஐந்து நிமிடம் தொடர்ந்து அடிக்கவேண்டும்.  அப்பொழுது அது நிறம் மாறி ஒரு பேஸ்ட் போல் வரும், வர வேண்டும்.

ஒருபக்கம் அடுப்பில் பாலை எவ்வ்ளவு தண்ணீர் நீங்க  காஃபிக்கு சேர்ப்பீர்களோ அந்த அளவு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் .
பிறகு கொதிக்க வைத்த பாலை அடித்து வைத்துள்ள  காஃபி பேஸ்டுடன்  (பசையில் ) கலக்க வேண்டும் .

இப்போ உங்க  காஃபி தயார் இது எப்போவும் நாம் குடிக்கும் காஃபி போல் இல்லாமல் வித்யாசமான சுவையுடன் அட்டகாசமாய் இருக்குமாம் காஃபி பிரியர்கள் செய்து பாருங்கள். சுவைத்து மகிழுங்கள்  

ஒரு காஃபிக்கு இவ்வளவு பில்டப்பா 
பின்ன வேண்டாமா 
இந்த காஃபி திரவம் காலையிலும்  மாலையிலும் உள்ளே செல்லவில்லையென்றால் நிறைய பேருக்கு பீபீ யே வந்துவிடும். ....
அன்று அவர்கள் மூட் அவுட் ஆகிவிடுவார்கள். 
கொஞ்சமா சாப்பிடுவதால் ஒன்றும் தப்பில்லை உடல் நலத்திற்க்கு கேடு வந்துவிடும் என்ற பயமே மனிதனை நிம்மதி இழக்க செய்யும் ....   மன நிம்மதி முக்கியமில்லையா ............... 


42 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஹா ஹா வாங்க ஜி கண்டுக்க கூடாது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
  2. இன்றுதான் கணினியை திறந்து ஓட்டுப்போட்டேன் ஏற்கனவே போட்டு விட்டதாக பொய் சொல்கின்றதே....

   உங்களது தளம் செல்வழி இடமுடியவில்லை பிறகு வருகிறேன்.

   நீக்கு
 2. // (இது ரொம்ப அளப்பறையா இருக்கே) //


  உங்க சொந்த ஊர் மதுரையா?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஆலின் ஆல் அடக்கிவைத்திருக்கும் இருக்கும் சென்னையாகும் எல்லாத்தையும் பிச்சி பிச்சி போடுவோம் கொஞ்சம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம் ஜி

   நீக்கு
 3. இது போல செய்ததில்லை. காபிப்பொடி நன்றாகக் கொதிக்க வேண்டாமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் காபி பொடி இல்லை அது இன்ஸ்டன்ட் காபி பௌடர்....இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்....செய்வதுண்டு வீட்டில்...பல காஃபி பிரிப்பரேஷனுக்கும்....கோல்ட் காஃபியாக இருந்தாலும்...அதுவும் நாம காஃபி பிரியை ஆச்சே...!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. ராம் ஜி கீதா சிஸ் சொல்லிட்டாங்க பதிலை
   கீதா சிஸ் நீங்க எல்லாத்தையும் டெஸ்ட் ,டேஸ்ட் செய்து பார்த்துட்டீங்களா சூப்பர்
   உங்களுக்கு புதுசா ஏதாவது சொல்லணுமே நீங்க செய்யாதது இருங்க கண்டுபிடிச்சிட்டு வரேன்

   நீக்கு
  3. வாங்க பூவிழி புதுசா கொண்டு வாங்க!! ஹா ஹா ஹா...நான் நிறைய நெட்ல தெரிஞ்சுக்கறதுதான் பூவிழி...புதுசா செய்வதில் ஆர்வம் அதிகம்...அதனால் இப்படித் தேடிக் கண்டுபிடிப்பேன்...

   கீதா

   நீக்கு
 4. இந்த முறையை நான் எங்கள் நார்த் இண்டியன் நண்பரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் ஆனால் இப்படி செய்ய எனக்கு எல்லாம் பொறுமை இல்லை காரணம் நான் காபியை நாள் முழுவதும் குடித்து கொண்டே இருப்பேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன நாள் முழுவதுமா மன நிம்மதி தேவைதான் அதற்கென்று உடம்பை கெடுத்து கொள்ளவும் கூடாது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 5. அதாவது முதலில் காஃபி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும் நன்றாக இருக்குமா செய்து பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க G.M.B சார் செய்து பாருங்க புதுசா ஏதாவது கண்டுபிடிங்க உங்க பாணியில் அதை பதிவை போட்டுடுங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
  2. குறீப்பில் இன்ஸ்டண்ட் காஃபி தூள் என்று கூறி
   இருக்கலாமோ

   நீக்கு
 6. காபி வித் பூவிழியா? குடிச்சிதான் பாப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ வருகைக்கு சந்தோஷம் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 7. வணக்கம் சகோதரி பூவிழி!

  கமகமக்கும் காஃபி என்னை ஈர்க்க ஓடி வந்தேன்!..
  என் உடலும் நீயே உயிரும் நீயே உணர்வும் நீயே காஃபி!..
  இப்போ இங்கே எமை வாட்டும் குளிருக்கு இப்படி
  காஃபியை ஒரு அடிஅடித்துச் சுவைக்க வேண்டுமெனக்
  கையும் நாவும் துருதுருக்கிறதே!..:)

  நான் ஒரு காஃபிப் பிரியை! நாள்முழுக்கச் சாப்பிடாமலும் இருப்பேன்.
  காஃபி இல்லையெனில் நாக்கு வெளியே தள்ளீடும்....;)

  உங்களின் செய்முறை விளக்கம் அளப்பறை அல்ல அட்டகாசம்!..:))
  செய்முறை புதிது எனக்கு.
  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் பூவிழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தோழி வாங்க ரொம்ப சந்தோஷம் வருகைக்கு நீங்களும் காஃபி பிரியரா செய்து குடித்து மகிழுங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 8. செஞ்சு பாத்துடறேன். குடிப்பதா வேண்டாமா என்று என் சகதர்மிணி முடிவு செய்வாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ வாங்க வருகைக்கு சந்தோஷம் ஹா ஹா சோதனை எலியா அவங்கதான் உங்களுக்கு ,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 9. அம்பாணி மனைவி குடிக்கும் காஃபியின் விலை மூணு லட்சத்தை தாண்டுதாம். அது என்ன காஃபின்னு விசாரிங்க பூ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா கண்டு பிடிச்சிடலாம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 10. பூவிழி! நான் வீட்டில் காஃபி லாட்டே, மோக்கா எல்லாத்ஹ்டுக்குமே இப்படி...அப்படி இல்லைனா மிக்சில அடிச்சாலும் செமையா இருக்கும்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்சியில் அடிக்கலாமா நீர்த்து போய் விடாது சிஸ் செய்து பார்கிறேன் நானும்

   நீக்கு
 11. காபி நினைவு படுத்திட்டீங்க...இன்னுரு கப் காஃபி..இதோ...

  கீதா

  பதிலளிநீக்கு
 12. இது இன்ஸ்டன்ட் காஃபிக்கு தான் செயணுமா ?
  ..எனக்கு காபியில் பால் சேர்க்காமல் தான் குடிக்கிற பழக்கம் :)
  இன்ஸ்டன்ட் பவுடர் இருக்கு செஞ்சி பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பால் போடாத காஃபி நானும் டிரை பண்ணனும் நினைப்பேன் ஆனா இதுவரை செய்ததில்லை ஆனால் அதுதான் நல்லதா ? இந்த முறையில் எப்போவது ஒரு நேரம் குடித்து பாருங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஞ்சு

   நீக்கு
  2. எஞ்சல் ஆமாம் இன்ஸ்டன்ட்லதான் செய்யணும்

   கீதா

   நீக்கு
 13. தில்லியில் இப்படி நிறைய கடைகளில் கிடைக்கும். இது இன்ஸ்டண்ட் காஃபி பொடியில் தான் இப்படிச் செய்ய முடியும். க்ரீம் போல வந்த பிறகு சூடான பாலில் கலந்து குடிக்கலாம்! அலுவலகத்தில் இப்படி குடிப்பதுண்டு. ஆனால் எனக்குப் பிடிப்பதில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் குடித்து பார்த்திருக்கிறீர்கள் பில்டர் காஃபி குடிப்பவராக இருந்தால் இதெல்லாம் இஷ்டமாக இருக்காது .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 14. ஆகா
  ஒருமுறை அருந்திப் பார்க்க வேண்டும்
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து பாருங்கள் சகோ விருப்பமானதாய் ஆகவும் ஆகலாம்
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 15. பதில்கள்
  1. பார்த்து விட வேண்டும் எப்படி என்று
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 16. பதில்கள்
  1. என்னை போலவே நினைக்கறீர்கள் ஐயா
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 17. சிந்திக்க வைக்கும் பதிவு
  தொடருங்கள்

  இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
  எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
  அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்த்துக்கும்

   நீக்கு