திங்கள், 4 மார்ச், 2013

விழிகாதீர்கள்இன்றைய இளைய தலைமுறையின் ஆரோக்கிய பிரச்ச்னையில் ஒன்றான  ஒன்றுக்கு விடை  இதோ

இன்றைய நவீன உலகத்தில் இளை  தலைமுறையினரின்  வாழ்க்கை முறையில்
  
நிறைய மாற்றங்கள் அதன் பயன்  அவர்களின் உடல் கூற்றிலும்  மாற்றம்

முக்கியமாய் கார்பரேட் என்ற மிக பெரிய கடலில் மூழ்கி வாழும் தலைஎழுத்து
  
இன்றைய தலைமுறையின் தலையில் இந்த வாழ்வினால் அவர்கள் இழந்த

ஆரோக்கியங்கள் அதிகம் அதில் மிகவும் தலையான ஒன்று  தூக்கமின்மை இது

என்ன பாதிப்பெல்லாம் கொடுக்கிறதோ அதில் முக்கியமான ஒன்று இதோ

தூக்கமின்மை மரபணுக்களை பாதிக்கும் என்று   ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். தூக்கமின்மையானது மனித உடலின் செயற்பாட்டை கடுமையாக பாதிக்கவல்லது என்று இவர்கள் கூறுகின்றனர் எப்படி என்றால்?
ஒரு ஆய்வு நடத்தினர் இதற்காக  26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர்களின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். அடுத்து இவர்களை ஒரு வாரகாலத்துக்கு ஆறுமணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.
இதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்படி செய்யப்பட்டவர்களின்   மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவற்றில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தூக்கமின்மையானது, மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்
இதன் காரணமாக என்ன என்ன பிரச்சனைகள் தலைதூக்குகின்றன என்று பார்த்தல் தேவைக்கு அதிகமான உடல் பருமன் ,குறைவான மூளைதிறன்
செயல்பாடு ,இதய நோய்கள் ,சர்க்கரை நோய் ஆகியவி என்று கூறுகின்றனர் .
எனவே ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் தூங்கவேண்டும் என்பது இவர்களின் அறிவுரை.

7 கருத்துகள்:

 1. துாக்கம் வந்தால் நல்லா து்ாங்கலாம் தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தூங்கதான் வேண்டும் ஆராய்சசியும் அதை தான் காட்டுகிறது நன்றி நன்றி வருகைக்கு கருத்துக்கு

   நீக்கு
 2. ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் கவனிக்கவேண்டிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. எனக்கு, தூக்கம் மிக குறைவு, இனி கவனமாக இருக்கவேண்டும்போல.

  நல்ல பகிர்வு தோழமையே..

  பதிலளிநீக்கு
 4. ஆரோக்கியமான வாழ்வுக்கு தூக்கமும் அவசியம் என்பதை வலியுறுத்தும் பதிவு அருமை மலர் பாலன்.

  பதிலளிநீக்கு