செவ்வாய், 12 மார்ச், 2013

என் வீட்டு சுவர் போல் வருமா ?உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் 
இருந்தாலும்........
என் வீட்டுசுவர்  போலவருமா ?
என் சுவாசக்  காற்றை 
முழுதாய் உள்வாங்கி 
திரும்பி உரசிச் செல்லும்
என் நவரசத்தை 
நான்கு பக்கமும் நடுவராய் 
எடிட் செய்யாமல்  பார்க்கும் 

சுத்தி நின்ற எத்தனையோ சொந்தங்கள் 
தராத ஆறுதலை தோல் கொடுத்து 
தாங்கி நிற்க்கும் தோழன் 
யாரும் அறியா 
என் ஆழ்மனதின் 
நிர்வாணத்தை பொக்கிஷமாய் ............
பாதுகாக்கும் பெட்டகம் 

என் காதலின் நேசமுத்தத்தை 
முதலில் அனுபவித்த 
என் செல்ல சுவர்கள் 

பகிரமுடியா குமுறல்களை 
அள்ளி வைத்திருக்கும் அலங்காரப்பெட்டி 

என் சந்தோஷ சிரிப்பலைகளை 
எதிரொலிக்கும் என்னிடம் பிரதிபலிக்கும் 

என் வாழ்க்கை நாடகத்தை 
அமைதியாய் பார்க்கும் 
அரங்கம் 
மூன்றாம் கண்ணாய் 
என் மனதை ஊடுருவும் 
மனசாட்சி 

என் வலிகளை எல்லாம் 
வழக்காடாமல் வாங்கி நிற்கும் வங்கி
என் பச்சைரணங்களுக்கு இளைப்பாறும் 
போதிமரமாய் என்வீட்டு சுவர்கள் 

என் ஏக்கங்களை எல்லாம் 
ஏளனம் செய்யாமல் ஏந்தி நிற்கும் 

என் மன விகாரங்களுக்கு 
பாவமன்னிப்பு  வழங்கும் 
பாதிரியார் 

இறைவா........
நீ இருப்பது உண்மையானால் 
உன்னிடம் எனக்கோர் வேண்டுதல் 
உயிர் தா ........ 
என் வீடு சுவர்களுக்கு 
என் உணர்வோடு உறவாட 
என் விருப்பத்தையும் விருப்பமின்மையும் 
விவாதிக்க விமர்சிக்க 
அதற்க்கான கடவுச்  சொல்லை 
என்னிடம் மட்டும் தா 

என் ரகசியங்களை தாங்கிய தாரகை 
என் வீட்டு சுவர்கள் 
ஈடாகுமா ?எதற்கேனும் இந்த உலகத்தில் 

உங்களுக்கும் தானே ??????????????


10 கருத்துகள்:

 1. அருமையான சிந்தனை. அழகிய படைப்பு.
  நல்ல கற்பனை வளத்துடன் பொழிந்துதள்ளிவிட்டீர்கள்...:)

  சிறப்பு. வாழ்த்துக்கள்! தொடருங்கள் தோழி!

  பி.கு: சற்று எழுத்துப் பிழைகளையும் கவனியுங்கள். சிலசமயம் அதனால் சொல்லின் கருத்தே மாறிவிடும்... நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ நிச்சயமாய் மாறிதான் விடும் சரி செய்துவிட்டேன் முன் பார்வை இடாமல் விட்டுவிடேன் அவசரத்தில் மீண்டும் நன்றி

   நீக்கு
 2. வித்தியாசமான சிந்தனை... பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 3. அருமையான கவிதை.... நிறைய பெண்களுக்கு வீடு தான் உலகம் ... அந்த வீட்டுச் சுவர்கள் ஆயிரம் கதை சொல்லும்....உயிர்க்கட்டும் உங்கள் தோழி....

  பதிலளிநீக்கு
 4. எல்லோருக்கும் அவர்கள் வீடு சொர்க்கம் தான்.

  பதிலளிநீக்கு
 5. என் வீட்டு சுவர் எனக்கும் சுவர்க்கம் தான்.
  ஆனால் நான் வீட்டு சுவர்களுடன் விவாதிக்கவோ விமர்சிக்கவோ விரும்பவில்லை. சுவர் ஒன்று தான் நான் சொல்வதை எந்த எதிர்ப்பும் இல்லாமல் கேட்கிறது. அதையும் கெடுத்துக் கொள்வானேன்!அதனால் எனக்கு கடவுச்சொல் வேண்டாம்.

  நல்ல அருமையான சிந்தனை.
  ஆமாம் அந்த ஊஞ்சலில் உற்சாகமாய் ஆடுவது மலர் தானே!

  பதிலளிநீக்கு
 6. நான் சொல்லும் விவாதமும் விமரசனமும் எந்த சாயமும் எந்த நிழலும் இல்லாததாக இருப்பது தோழி, விசராந்தியாக ஏதோ சிந்தனையில் ஊஞ்சலில் ஆட ஆசைதான் ..........
  நன்றி வருகைக்கு

  பதிலளிநீக்கு