ஞாயிறு, 31 மார்ச், 2013

இதுவும் நல்ல தான் இருக்கு !!!


புதிய கீதை
எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்
எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?
எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!
கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!
ஆகவே கேட்காமல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!
இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!
சம்பவாமி யுகே! யுகே!

13 கருத்துகள்:

 1. கிடைப்பதன் அருமை.......
  புதிய கீதை அருமை..!

  பதிலளிநீக்கு
 2. ஹா..ஹா .இந்த புதிய கீதை மிக அருமை

  பதிலளிநீக்கு
 3. //கிடைப்பதன் அருமை
  அது கிடைக்கும் நொடி வரைதான்
  அடுத்த நொடி
  நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!//
  அதென்னவோ நிஜம்தான்.

  பதிலளிநீக்கு
 4. புதிய கீதை மிக மிக தெளிவு.
  நல்ல பல விஷயங்களை நகைச்சுவையாக உணர்த்துகிறது.

  பதிலளிநீக்கு
 5. நல்ல சிந்தனை தோழி!
  உனக்கென விதிக்கப் பட்டது உனக்கேதான்...:)
  எதுவாயினும்...

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. ஆகவே கேட்காமல் இரு!
  இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!
  இதுவே கிடைப்பதின் நியதியும்
  பெறுவதின் சாரம்சமும் ஆகும்!//

  மிக நன்றாக இருக்கிறது புதிய கீதை.

  பதிலளிநீக்கு
 7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அனைவருக்கும் வருகைக்கும் கருத்துகும் அரசியல்வாதி போல நன்றி சொல்லிடேனா
   நன்றி தனபாலன் சார் தெரிவித்தமைக்கு

   நீக்கு
 9. // எதை நீ கேட்காமலிருந்தாய்?//

  ஆசையே அலைபோலே ... நாமெல்லாம் அதன் மேலே

  நாகூர் அனிபா அவர்களின் பழைய பாடல் ஒன்று. இறைவனிடம் கையேந்துங்கள் . அவன் இல்லையென்று
  சொல்லுவதில்லை என்று. இதை நம்மில் எல்லோருமே கேட்டு இருப்போம்.

  உண்மையே. இறைவன் நமக்கு எது தேவை எப்பொழுது தேவை என நன்கறிந்து நாம் கேட்காமலே நாம்
  அவன் தான் தருகிறான் என்று உணராமலே கொடுப்பவன்.

  இந்த ஆன்மீக பாடகர் அதே சீரியலில் மூன்றாவது பாடலாக இன்னொன்றும் பாடி இருக்கிறார்.

  இறைவா, நீ கொடுத்ததற்கு நன்றி சொல்வதற்கே இனி இருக்கும் வாழ்வில் இருக்கும் நாட்கள் போதாவே !!
  அப்படி இருக்கையில் இன்னும் என்ன நான் கேட்பதற்கு ? என்று மனமுருகி நாம் பெற்றதெற்கெல்லாம்
  ஒரு பக்கம் நன்றியையும், இனி பெற்றதை வைத்தே திருப்தி அடையவேண்டும், பெறாததை எண்ணி உருகி
  வருந்தி, கிடைத்ததையும் அனுபவிக்காது செல்லும் மன நிலை துறக்கவேண்டும் என்பதனையும் சொல்லுகிறார்.

  // எது இன்று கிடைத்ததோ
  அது நாளையே உனக்கு அலுத்து விடும்
  அடுத்த நாள் உனக்கு
  அது வெறுத்து விடும்!//

  உனக்கு அது வெறுத்து விடும் என்று சொல்லியிருப்பது உண்மை.
  அது என்று நீங்கள் குறிப்பிடுவது உன்னையும் வெறுத்து விடும். உன்னை விட்டு அகன்று விடும் என்பதும் உண்மை.

  நிற்க.

  உங்கள் அறிமுகம்

  . //கற்றது கை அளவு கல்லாதது என்னுள் அதிகம் கல் ஆகாமல் இருக்க நாடி கொண்டிருக்கிறேன் கற்பதை //

  கல்லாதது என்னுள் அதிகம்.
  கல் ஆகாமல் இருக்க நாடி கொண்டிருக்கிறேன் கற்பதை. I am searching to read more and more in order that I never become rigid.
  A mindset or a bias develops only when one understands that whatever one knows is not full and exhaustive.
  இங்கே கல் என்பதை ரிஜிடிடி அல்லது பையாஸ்டு மைன்ட் செட் என்று பொருள் கொண்டால் இன்னும் அதிக‌
  பொருள் கிடைக்கிறது.

  இன்னொரு விதமாகவும் படிக்க இயலுகிறது.

  கல்லாதது என்னுள்.
  அதிகம் கல் ஆகாமல் இருக்க நாடி கொண்டிருக்கிறேன்.
  கல்லாதது என்னுள் இருக்க, கற்றது என்னை கல்லாக ரிஜிட் ஆக மாற்றிவிடக்கூடாதே என்ற எண்ணத்தில் இன்னும்
  கற்கவேண்டியதை நாடிக்கொண்டே இருக்கிறேன்.

  ஸுபர்ப் தின்கிங். உயரிய எண்ணங்கள்.

  வாழ்த்துக்கள். ஆசிகள்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in
  www.vazhvuneri.blogspot.in

  பதிலளிநீக்கு
 10. ஒரு சிலர் இந்தமாதிரி நினைப்பதில் (உங்க கவிதை) தப்பில்லை! ஆனால் உலகில் உள்ள ஒவ்வொருவரும் இதே மாரி இருந்துட்டா, அப்புறம் நம்ம புத்தர், காந்தி, தெரசாவுக்கெல்லாம் இப்போதுள்ள "பெயர்", புகழ்" எல்லாம் கிட்டி இருக்காது! :))) நீங்க ஏன் பாவம் அவங்க தலையில் கை வைக்கிறீங்க, பூவிழி? :)))

  பதிலளிநீக்கு