புதன், 24 ஏப்ரல், 2013

பல் போன சொல் போச்சு- ஞானப் பழம் நீ

பல்  போன சொல் போச்சு 
அப்படின்னு பழ மொழி கேள்வி பட்டு இருப்பீங்க நம் உடம்புல பல் அவ்வளவு முக்கியாமான விஷயங்க பல் இருந்தால் தான் நாம உணவை மென்னு சுவைத்து சாப்பிடுவதால் போன  பதிவுல சொன்னஞானப் பழம் நீ -அஜீரணம் அஜீரனமும் வராம வயிற்றையும் பாதுகாக்க  முடியும் .


அந்த காலத்திலெலாம் பல்லை  சுத்தம் செய்வதற்கு இயற்கை வழியை முயற்சித்தனர் அதாவது 
'ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி ' என்ற பழமொழியையும் கேள்வி பட்டு இருப் பீங்க இன்றைய நாகரீக உலகத்தில் அன்றைய மக்கள் ஆலமர குச்சியிலும் வேப்பமர குச்சியையும் பிள்ளை சுத்தம் செய்ய உபயோகித்தார்கள்  என்று சொன்னால் சிரிப்பாங்க அந்த குச்சிகளில் உள்ள மருத்துவ பயனை  அறிந்து அதை ஏற்று கொண்டார்கள்

ஆனால் இன்று  விதவிதமாய் விதமாய் பல்லை  சுத்தம் செ ய் ய பிரஷ் வந்து விட்டது வித விதமாய தினமும் ஒரு விளம்பரத்துடன் பற்பசை வந்து விட்டது அதன் கூடவே பல் மருத்துவ கிளினிக்கும் வந்து விட்டது 

பல் வலி வந்தால் மனித்னுங்கு மூளையே வேலை செய்ய முடியாத அளவிற்கு போயிடுங்க அவ்வளவு சித்தரவதை யாக இருக்கும் இந்த பல் வலி

 இந்த பல்வலி வராம  பாதுகாக்க இந்த பழ வைத்தியத்தில் வழி இருக்கானு  பார்க்க போனா ஒரு வழி சொல்றாங்க 
எலுமிச்சை பழத்தை நறுக்கி பல்லைத் தேய்க்க பற்களில்லுள்ள 
நச்சுக் கிருமிகள்நீங்கும் , 
பற்களில் படிந்துள்ள கரை நீங்கும்,
பற்களில் சில பேருக்கு இரத்தம் கசியும் அவையும் நிற்கும் , இந்த இரத்தம் கசிவது விட்டமின்' சி ' குறைபாடினால் தான் இந்த குறை பாடு  நீங்க 
நாம் அன்னாசிபழம் ,ஆரஞ்சு பழம், திராட்ச்சை பழம்
,எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை எடுத்து கொள்ள வேண்டுமாம் இந்த பழங்களில் விட்டமின் சி அதிகம் காணபடுகிறது 
பல் சாதரணாமா நினைச்சிடாதீங்க இது  காதலுக்கு எதிரியாகிவிடும்

பல்லு சுத்தமா இல்லைனா  .........................விவாகரத்து கூட நடக்குதாம் இதற்காக உதட்டில் முத்த மிடுவது..........அதுமட்டுமா பல்லுகாக ஒரு   நாள் கூட  கொண்டாட படுகிறது Feb, 28 National Tooth Fairy Day என்று உங்களுக்கு தெரியுமா
 

30 கருத்துகள்:

 1. அட ஆமாம் பல் ரொம்ப முக்கியம்..ஆனாலும் வலி வர வரைக்கும் நிறைய பேர் கண்டுகொள்வதில்லை..நல்ல குறிப்பு பூவிழி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்பவே முக்கியம் தோழி பல் வலி வந்திடுச்சி அவ்வளவுதான் வருகைகும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 2. பற்களை பாதுகாக்க உதவும் பழங்களை பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல தோழி .

  பதிலளிநீக்கு
 3. பல்லுக்கு ஒரு தினமே கொண்டாடப்படுகிறதா? புதுத் தகவல் எனக்கு பூவிழி! நீங்க சொன்ன பழங்கள்ல இருக்கற வைட்டமின் -சி கண்ணுக்கும் நல்லது. அந்நாளில் நம் முன்னோர் சொன்ன பல ஆரோக்கிய விஷயங்களை நாம் கவனிக்காமல் புறக்கணித்து, நாகரிகத்தின் பின்னால் சென்று பிரஷ்ஷும் பேஸ்டும் பயன்படுத்தி வருகிறோம். பல்வலியால் அவஸ்தைப் பட்டவர்களுக்கு பல்லின் அருமை புரியும். அழகாய் எடுத்துச் சொன்ன அருமையான பகிர்வு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா உண்மையை கண்டு பிடிச்சிடீங்க பல் வலி வந்தவங்களுக்குதான் தெரியும் பல்லின் அருமை

   நீக்கு
 4. //பல் போன சொல் போச்சு அப்படின்னு பழ மொழி கேள்வி பட்டு இருப்பீங்க//

  அது பழமொழிங்க

  பவர் போனா பேஸ்புக்கு ஸ்டேடஸ் போச்சு
  அப்படின்னு புது மொழி கேள்வி பட்டு இருக்கீங்களா?

  பதிலளிநீக்கு
 5. ///பல்லு சுத்தமா இல்லைனா .........................விவாகரத்து கூட நடக்குதாம்//
  அப்படியா அது எந்த நாட்டுலேன்னு சொன்னா எனக்கு உதவியாக இருக்குமுங்க அந்த நாட்டுக்கு போய் பல்விளக்காமா இருக்கலாம் கொஞ்சநாள்

  ஹீ..ஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட உங்களுக்கு தெரியாதா நம்ம நாட்லேயே நடந்துதே டில்லியில் நியூஸ் கொஞ்சம் ஓல்ட் பெயரை மறந்துவிட்டேன்

   நீக்கு
 6. (பல்)வலி வரும் போது தான் பலரும் வலிக்கான காரணங்களை அறிந்து கொள்ள முற்படுகிறார்கள்...

  பயன்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்

   நீக்கு
 7. கொய்யா இலை கூட பல்வலிக்கு நல்ல மருந்து என்று எங்கேயோ படித்த நினைவு ,மலர்.

  பல்வலைப் பதிவு ஜோர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்வி பட்டு இருகிறேன் ராஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 8. பல் வலி வரும்போதுதான் பல்லை பற்றி நினைப்போம். கண்ணாடியில் முகத்தை பார்க்கும் அளவு பற்களையும் பார்க்க வேண்டும். (பற்களின் சுத்தத்திற்காக சொன்னேன்)

  'அன்பே' அய்யோ கடைசி படம் ஹா... ஹா...!

  பதிலளிநீக்கு
 9. பல்லை ஆரோக்கியமா வைத்திருக்கும் வழிகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி பூவிழி. சொத்தை, எனாமல் தேய்வு, வலி, கூச்சம் போன்ற பிரச்சனைகள் வர வரைக்கும் நாம் பல்லுக்கென்று (பல் துலக்குவது தவிர) தனிப்பட்ட சிரத்தை எதுவுமே எடுத்துக்கொள்வதில்லை என்பது உண்மைதான். இனியேனும் கவனம் வைக்கணும். வைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. பல் பராமரிப்பு யோசனைகள் அருமை.

  பதிலளிநீக்கு
 11. பல் பாதுகாப்பு பற்றிய மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.
  .

  “பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?” என்று நான் ஒரு நகைச்சுவைத்தொடரே எழுதியுள்ளேன். முடிந்தால் படியுங்கோ. இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா படித்துவிட்டு வருகிறேன்

   நீக்கு
  2. http://gopu1949.blogspot.in/2015/07/33_3.html இந்த இணைப்பில் தங்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. முடிந்தால் வருகை தாருங்கள், மேடம்.

   நீக்கு
 12. பல் பற்றி இவ்வளவா வியந்தேன்

  பதிலளிநீக்கு
 13. பல் வலியும் .. தலை வலியும்
  நமக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள்...
  பற்களுக்கான ஒரு சர்வதேச நாள் என்பது
  இப்போதுதான் நான் அறிந்துகொண்ட செய்தி..
  அருமையான ஆக்கம்...

  பதிலளிநீக்கு
 14. பற்களுக்கான ஒரு சர்வதேச நாள் என்பது இப்போதுதான் நான் அறிந்துகொண்ட செய்தி..அருமையான ஆக்கம்.. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பல் சம்பந்தமாக என் நகைச்சுவைச் சிறுகதையினைப்படிக்க இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html

  பதிலளிநீக்கு
 15. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  பதிலளிநீக்கு