செவ்வாய், 9 ஏப்ரல், 2013

சிப் சிப் சிப் –பசிக்கு ......என்னனமோ எதைஎதையோ கண்டுபிடித்து கொண்டேதான் இருக்கிறான் மனிதன் தோன்றின காலம் தொட்டு இன்னிக்கு தேதியில் உடலை கச்சிதமாய் வைத்து கொள்வதுதாங்க பெரிய பிரச்சனை 'ஓபிசிட்டி' என்று உலகமே அலறுது உடல் இளைக்க என்ன  என்ன மருந்துங்க தினமும் ஒரு கண்டு பிடிப்பு நித்தம்  ஒரு விளம்பரம் அதுக்குன்னு
ஜிம்முக்கு போறது கடுமையான உடற்பயிற்சி வாக்கிங்கு ரன்னிங்கு இப்படி அடுக்கிட்டே  போகலாம் உடல் பருமன் குறைய அதற்கான அறுவை சிகிச்சையும் கூட மக்கள் செய்து கொள்கிறார்கள்
இங்க பாருங் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனம் போல் விசனம்  சரி இதுகெல்லாம் எது காரணம் பசி சில பேர் உண்மையில் பசிக்காக சாபிட்டால் சில பேர் ருசிகாகவே பசியை வளர்ப்பவங்க இப்படி சாப்பிடால் வயிறு பெருத்துதான் விடும்
அவ்வையும் கூட இதை பற்றி இப்படி பாடி இருக்கிறார் 'உண்டி சுருங்கினால் அழகு' என்றும் சொல்லிருக்கிறார் 'உண்டி' என்றால் 'உணவு'  
இப்படியான நிலைமையில் இப்படி ஒரு கண்டு பிடிப்பு பசியையே கட்டுபடுத்த ஒரு மைக்ரோசிப் ஒன்றை கண்டு பிடித்து இருகிறார்களாம்   ஒரு சிறிய சிப் மூலம் நாம வயிற்று பசிக்கு மூடு விழ கொடுக்கமுடியுமா? முடியும் என்று கண்டுபிடித்து இருக்காங்களாம்  உடல் இளைக்க உதவும் விதமான உடலில் பொருத்தவல்ல மைக்ரோச்சிப் மின்னனுக் கணினிச் சில்லு

ஒன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து

ஆய்வுகளை மேற்கொள்ளும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூளைக்கு பசியை உணர்த்துவதிலும் உடலின் வேறு பல வேலைகளைக்

கட்டுப்படுத்துவதிலும் உதவுகின்ற  வேகஸ் நவ்ர்ஸ் எனப்படும் நரம்பிலே

சேர்ந்து இருப்பதுபோல இந்தச் சில்லு உடலில்பொருத்தப்படும்


'.
இன்னமும் இது விலங்குகள் மேல் பரிசோதித்து பார்க்க

படவில்லை என்றும் கூறி அதன் பின்னரே மனிதர்களிடத்தில்

பரிசோதித்து பார்க்கபடும் என்று கூறுகின்றனர்


மேலும் வேகஸ் நரம்புகளில் பொருத்தப்பட்ட இந்தச் சில்லுகள் பசி

தொடர்பான இரசாயன அறிகுறிகளை புரிந்துகொள்ளும் என்றும்

அதிகமான பசியை உணர்த்தாத வகையில் மூளைக்கு மின்னனு

சமிக்ஞைகளை அனுப்பும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.சரி தான்

அப்பவும் இதை யாருங்க வாங்க முடியும்? யாருங்க அதை பொருத்திக்க

முடியும்  இவங்கலாலேயா?
சீக்கீரம் கண்டு பிடிசசி நம்ம ஊர் ரேஷனில்

 இலவச அரசி மற்ற பொருட்களுக்கு பதிலா இதை கொடுத்தால் எப்படி ?

22 கருத்துகள்:

 1. அப்படியான சிப் வந்தா ரொம்ப நல்லாத் தான் இருக்கும்

  பதிலளிநீக்கு
 2. போச்சிடா... இது வந்து விட்டால் மனித இனம் குறைவதற்கு "நல்ல வழி"...! முழு விலங்குகள் ஆகும் வரை விட மாட்டார்கள் போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாய் விடமாட்டங்க இன்னும் எவ்வளவோ இருக்கு நாம் கடக்க

   நீக்கு
 3. இயலாத குழந்தையின் அருகே தகுந்த சமயத்திர்க்காக காத்திருக்கும் கழுகு...படம் பயங்கரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க... பயங்கரத்தை பயங்கரம் சாப்பிடும் காலம் வரபோகுது குடுப்பைகாரன் சொல்லிட்டானில்ல நம்பிள்கி

   நீக்கு
 4. பசியே இல்லைன்னா.. நிறைய வேலை இல்ல..ரொம்ப அநியாயமா கண்டுபிடிக்கறாப்பா..! உடல் பருமனுக்கு காரணம் இன்று நிறைய உடலுழைப்பு குறைந்ததே..! நானும் கூட கொஞ்சம் வெய்ட் போட ஆரம்பித்தவுடன் உடனே விழித்து கொண்டேன்.. அடுத்ததா வீட்டு வேலைக்காரியை ஸ்டாப் பண்ணிட்டேன். கொஞ்சம் டயட், வீட்டு வேலைகள்+ அலுவலகம் என்று ஓடுவதில் ஸ்லிம். என் தோழிங்கல்லாம் நீ இப்படி இருக்கிறது நல்லாவே இல்லைன்னு உசுப்பேத்துவாங்க.. அவங்க சொல்றது பொறாமையில்தான்னு சட்டையே பண்ணிக்க மாட்டேன். எடை மெயின்டெய்ன் பண்றது அவசியம்ங்க..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குமா இந்த உடம்பை கன்ரோல்ல வைப்பது இருக்க யப்பா .......

   நீக்கு
 5. அதிகமான பசியை உணர்த்தாத வகையில் மூளைக்கு மின்னனு

  சமிக்ஞைகளை அனுப்பும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.//

  எல்லாமே வயிற்றுக்கு தாண்டா என்ற சொல்லை இனி கேட்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட சாப்பிடாதது எல்லாம் ஒரு வாழ்க்கையா சகோதரி ஏதோ இந்த மாதிரியெல்லாம் வரபோகுதாம் என்று பகிர்ந்து கொண்டேன் ,ஆனா எனக்கு வேண்டாம் பா

   நீக்கு
 6. தோழி... நல்ல்ல நல்ல விடயங்களாகத் தேடித்தேடிப் போடுகின்றீர்கள்.
  இருக்கட்டும் இருக்கட்டும். கொஞ்சக்காலம் போனபின்பு இதன் பக்கவிளைவுன்னு வரும் அதுக்கு இதை உபயோகப்படுதாமல் இருக்கிறது நல்லதோன்னு இருக்கும்....

  யோசிக்கணும்.
  நல்ல பதிவும் பகிர்வும். மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை சொல்லுங்க பக்கவிளைவுக்கு ஒன்னு கண்டு பிடிப்பாங்க நிற்காத ஓட்டம்

   நீக்கு
 7. //சீக்கீரம் கண்டு பிடிசசி நம்ம ஊர் ரேஷனில்

  இலவச அரசி மற்ற பொருட்களுக்கு பதிலா இதை கொடுத்தால் எப்படி ?//

  what an idea Malar ji!

  பசி குறைவதற்கு நல்ல வழி. அப்புறம் யாராவது உழைப்பார்களா? அது தான் சந்தேகம்.

  பதிலளிநீக்கு
 8. வேகஸ் நரம்புகளில் பொருத்தப்பட்ட இந்தச் சில்லுகள் பசி
  தொடர்பான இரசாயன அறிகுறிகளை புரிந்துகொள்ளும் என்றும்,
  அதிகமான பசியை உணர்த்தாத வகையில் மூளைக்கு மின்னனு
  சமிக்ஞைகளை அனுப்பும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.///உணர்ச்சியை கட்டுப்படுத்த கருவியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்தீங்களா பார்தீங்களா கேட்டீங்க கேட்டீங்களா
   நாமெலாம் சாமிக்கு அடுத்தபடி ஆகா போகிறோம் நீங்க என்ன விசனப்படுறீங்க

   நீக்கு
 9. பசி வந்தால் பத்தும் பறந்திடுமாம்...
  பசியே வரவில்லையென்றால்....????????

  பத்தும் சேர்ந்திடும் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்!

  பதிலளிநீக்கு
 10. இயற்கைக்கு மாறான எந்த செயலுமே நிச்சயமாக விரும்பத்தகாதப் பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இயற்கையாகவே உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இருந்தால் உடல் பருமனாகவே இருந்தாலும் நோய்நொடி அண்டாது. ஆரோக்கிய உடல்தானே அமைதியான வாழ்க்கைக்கு ஆதாரம்.

  தகவல் பகிர்வுக்கு நன்றி பூவிழி.

  பதிலளிநீக்கு
 11. என்ன என்னதான் கண்டுபிடிப்பாங்களோ...நான் இன்னும் ஒரு சிப்பைப் பற்றிப் படித்தேன்...அதைப் பொருத்திக்கொண்டால் எங்கு வேண்டுமானாலும் ஒரு திரை போல பார்க்கலாமாம், கணினி, தொலைக்காட்சி தேவை இல்லையாம்..பாதி புரிஞ்சுது, பாதி புரியலே.. :)
  போற போக்கப் பார்த்தா சில சமயம் பயமாதான் இருக்கு..

  பதிலளிநீக்கு
 12. இந்த 'சிப்'பை விட உஷா அன்பரசு சொல்லும் டிப்ஸ் நல்ல யோசனை.

  பதிலளிநீக்கு
 13. சிப்ஸ்-ஆல் வந்த கொழுப்பை - சிப் கொண்டு நீக்க நினைக்கிறார்கள்.....

  ம்ம்ம்....

  பதிலளிநீக்கு
 14. கிரேஸ் காலம் போகும் போக்கு மிக பய உணர்வை எப்போதும் தக்க வைக்கிறது நம்முள்
  ஆமாம் நண்பரே உஷா சொல்வதே சரி இயற்கைக்கு மாறான ஒன்று எப்போதும் ஆபத்து
  வாங்க வெங்கட்ஜி வித விதமாய் சிப்ஸ் வரும் போது வித விதமாய் சிப் வரும் போல

  பதிலளிநீக்கு