புதன், 27 பிப்ரவரி, 2013

டீக்கா –டாக்கா ?–பர்சனாலட்டி


டீக்கா –டாக்கா ?–பர்சனாலட்டி வெற்றிக்கு

பர்சனாலட்டி இருந்தால் போதுமா ?

ஆம் பிர்சனால்ட்டி இருந்தால் போதுமா வெற்றிக்கு இன்னைக்கு தேதிக்கு நிறைய இளஞ்சர்கள் இந்த கண்ணோட்டத்தில் தாங்க அலையறாங்க
ப்ர்சனால்ட்டினா என்னங்க அழகாக இருப்பதா ?
இல்ல ரொம்ப முக்கியமானது வெள்ளையாக  இருப்பதா ?
இல்லை உடம்பை டிரிம்மாக பாடி பில்டாக   வைத்து கொள்வதா?
டீக்கா ஸ்டைலா டிரஸ் பண்ணுவதா ?இப்படி குழப்பம் இருக்கு இல்லையா
சரி சொல்லுங்க அன்னை தெரசா சிறந்த அழகியா ?பெரியார் பாடி பில்டரா ?
அண்ணா ட்ரிமானவரா?காமராஜர் டீக்காவா டிரஸ் போட்டிருந்தாரா?
இவங்கலாம் சிறந்த ப்ர்சனால்டிகள் தானே நமக்கு அப்ப ப்ர்சனால்ட்டினா எது ?
ப்ர்சனாலட்டி என்பது கண்ணாடி மாதிரி இருப்பதை காட்டும் இருக்கிற மாதிரி  காட்டும்  ப்ர்சனால்ட்டி என்பது மனித பண்புகளை படம் போட்டு காட்டும் கேமரா உங்கள் அக உணர்வுகளையும் இது காட்டும் எக்ஸ்ரே  கருவி

நீங்க எல்லாம் இந்த விளம்பரத்தை பார்திருக்கீங்களா?ஒரு சிக்னலில் ஒரு
காருக்கு அருகே ஒரு பையன்  சைக்கிளில் வந்து நிற்பான் அவனுடைய டிரஸ்  கசங்கியும் மடித்து விடபட்டும் கொஞ்சம் முகம் சோர்ந்தும்இருப்பான் அப்போ அந்த காரில் இருந்தவர் அவனை கொஞ்சம் அருவருப்போடு பார்ப்பார் உடனே அவன் தன் உடைகளை சரி செய்து கழுத்திலும் ட எடுத்து கட்டி கொள்வான் அப்போது அந்த கார்காரனின் முகம் மாறிவிடும் இந்த கார்காரனை போல் தான் பல பேர் இருக்கிறார்கள் எது உண்மை உடையில் மட்டுமா இருக்கிறது பர்சனாலட்டி  
ப்ர்சனால்ட்டி என்றால் ஆளுமை மூளை சாதிக்க முடியாததை கூட ப்ர்சனால்ட்டி சாதிக்கும் அதற்கு காரணம் ஆளுமை செய்பவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருப்பது அவசியம்
அது எது?
வசீகரமான தோற்ற பொலிவு (காந்தியை போல் )

மக்களை மகிழ்விக்கும் ஆற்றல் (ரஜினியை போல் )

தன் உணர்வுகளோடு தனக்கு தானே நல்லிணக்கம் கொண்டிருத்தல்
 
குறிகோளில் குறியாகவும் நேர்மையாகவும் இருத்தல்

பொருத்தமான முறையில் ஆடை அழகான  உடல் மொழி கொண்டிருப்பது

பேச்சில் நிதானம் கனிவான் குரல் வளர்ப்பது

நகைசுவையும் உணர்வும் ஆக்கபூர்வமான சிந்தனையும்

தன்னலமற தன்மை பிறரை உற்சாகமூட்டும் தன்மை

கற்பனைவளம் ,மற்றவர் பேசுவதை கவனமுடன் கேட்டல்

மிக முக்கியமானது பிறருக்கு நம்பிக்கையூட்டும் செயல்கள்

இது எல்லாவற்றையும்  கொண்டி இருந்தவர்கள் , கொண்டிருப்பவர்கள், கொள்பவர்கள் , சூப்பர் ப்ர்சனால்ட்டியாக பார்க்க படுகிறார்கள் உண்மையான மனிதராக நாம் இருந்தா நம்மளை சுற்றி மற்றவர்களை  இழுக்கும்  நம்ம பேச்சை கேட்கவைக்கும்  நம்ம ப்ர்சனாலட்டி.

இதையெல்லாம் இருப்பதாக காண்பித்து சிலர் இருப்பார்கள் நடிப்பார்கள் அது பாருங்க பல நாள் திருடன் ஒருநாள் அகபட்ட கதையாகிவிடும் அப்புறம் மூன்றாபிறை படத்தில் ஒரு கதை பாட்டு வரும் கமல் ஸ்ரீதேவிக்கு சொல்லுவாரு படம் பார்த்து தெரிஞ்சிகோங்க(ம்க்கும்....... இது வேறயா)

ஒரு  தந்திர நரி நீல சாயத்தில் விழுந்து நீல நரி மாறி  போய் பண்ண அட்டகாசங்கள் ஒரு நாள் மழையில் கொஞ்சம்  நனைத்து , சாயம் வெளுத்து   வேசம் கலைந்து  ஓடிய கதை போல் ஆகிவிடும் 

7 கருத்துகள்:

 1. //தன் உணர்வுகளோடு தனக்கு தானே நல்லிணக்கம் கொண்டிருத்தல்//

  அப்டினா?கொஞ்ச விளக்கமா சொல்லுங்க ப்ளீஸ்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் உணர்வுகளுக்கு எதிர்மறையாக செல்லாமல் இருப்பதே நல்லிணக்கம்
   எ.கா படிக்கறது பகவத் கீதை இடிக்கறது ராமர் கோயில்

   நீக்கு
 2. பர்சனாலிட்டிக்கு அர்த்தமே மாறிவிட்டது போல் தான் தெரிகிறது.
  வெளித் தோற்றத்தை தான் எல்லோரும் நம்புகிறார்கள்.
  how you carry yourself அது தானே முக்கியம்.

  நல்லதொரு பதிவு.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தோழி இன்று இளைய தலைமுறையின் தலையைய பிரச்சனை இதுதான் நினைக்கிறேன் நான் பார்த்தவரை
   நன்றி வருகைக்கு

   நீக்கு
 3. அருமையா ரொம்ம்ம்ப டீப்பா சிந்திச்சிருக்கீங்க... சூப்பர்.

  வாழ்த்துக்கள்...
  தொடரட்டும்...:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் படித்ததை தான் கொஞ்சம் கிளறி கொடுத்து இருக்கேன்
   வருகைக்கு நன்றி

   நீக்கு